Wednesday 26 October 2016

அமராவதிபுரவேஸ்வரா நிகலாங்கமல்லா மகாமண்டலேஸ்வர வன்னி குல கர்க்கராசா

கல்யாணி சாளுக்கிய மன்னர் ஆறாம் விக்கிரமாதித்தியனின் (கி.பி.1076 - 1126) கன்னட மொழி கல்வெட்டுகள் மகாராஷ்டிரா மாநிலம், நந்தேத் மாவட்டம், கரத்கேள் என்னும் ஊரில் உள்ளது. அக் கல்வெட்டுகளில் ஒன்று (A.R.E No.184 of 1958 - 59) சாளுக்கிய வம்சாவழி மன்னர்கள் திருபுவனமல்லா வரைக்கும் குறிப்பிட்டுவிட்டு வன்னிய குல மன்னர்களின் வம்சாவழியையும் குறிப்பிடுகிறது.














அந்த வன்னிய குல வம்சாவழி மன்னர்களில் ஒருவரான "அமராவதிபுரவேஸ்வரா நிகலாங்கமல்லா மகாமண்டலேஸ்வர கர்க்கராசா" என்பவர் கரத்கேள் என்னும் ஊரில் இருக்கும் சோமேஸ்வர கடவுளுக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளார்கள்.
வன்னிய குல மன்னர் மகாமண்டலேஸ்வர கர்க்கராசாவின் மற்றொரு கல்வெட்டில் (A.R.E No.187 of 1958 - 59), அவர் பல கோயில்களை கட்டியுள்ளார்கள் என்பதை குறிப்பிடுகிறது. குறிப்பாக :-
"சுயம்பு சோமநாததேவர் கோயில்"
"தோரேஸ்வரதேவர் கோயில்"
"கலிச்சோரேஸ்வரதேவர் கோயில்"
"பிரசன்ன பைரவதேவர் கோயில்"
போன்றவைகளாகும். இதில் "தோர ராஜா", "கலிச்சோர ராஜா" போன்ற பெயர்கள் அக்னி குல மகாமண்டலேஸ்வர கர்க்கராசாவின் முன்னோர்களது பெயர்களாகும். இக் கோயில்களின் வழிப்பாட்டிற்கும், நிவேதனத்திற்கும், பராமரிப்பு பணிகளுக்கும், சன்யாசிகளுக்கும் மற்றும் பிராமணர்களுக்கு உணவளிக்கவும், பிராமணர்களின் கல்விக்கும், நிலங்களை கொடையாக கொடுத்துள்ளார் வன்னிய குல மன்னர் மகாமண்டலேஸ்வர கர்க்கராசா அவர்கள்.
"மகாமண்டலேஸ்வர கர்க்கராசா" அவர்களை, மகாராஷ்டிரா மாநிலம், நந்தேத் மாவட்டம், தேகுலூர் தாலுக்காவில் இருக்கும் கல்யாணி சாளுக்கிய மன்னர் புவனேகமல்லா இரண்டாம் சோமேஸ்வரனின் கல்வெட்டு (கி.பி. 1070) ஒன்று "அமராவதிபுரவேஸ்வரா" (Amaravatipuravesvara) என்றும் "நிகலாங்கமல்லா" (Nigalankamalla) என்றும் குறிப்பிடுகிறது.
இந்த "அக்னி குல வன்னிய பரம்பரை மன்னர்களை", ஆய்வாளர்கள் கல்யாணி சாளுக்கியர்களின் வம்சாவழியினர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்கள் கல்யாணி சாளுக்கியர்களிடம் குறுநில மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களுடைய ஆட்சிப்பகுதியில் 20,000 கிராமங்கள் அடங்கியிருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள் :-
The Karadkhel inscriptions shows that the chiefs of the "Fire Family" were the subordinates of the Later Chalukya Kings of Kalyana and that they were ruling over the territory including the area around Karadkhel and Hottal probably called "the Yerga district" or "Yerga-1000" in our epigraph. The entire terriroty of the "Fire Race" chiefs, stated to have consisted of twenty thousand villages, probably contained several vishayas like Yera. (Epigraphia Indica, Vol-XXXV, No.21, Page-163)
----- xx ----- xx ----- xx -----
மேலை சாளுக்கியர்கள் மற்றும் கீழைச் சாளுக்கியர்கள் என்பவர்கள் ஒருவரே ஆவார்கள். சோழப் பெருவேந்தன் முதலாம் குலோத்துங்கச் சோழன் கீழைச் சாளுக்கிய மரபினன் ஆவான். இவர்களுடைய மரபினர்களுக்கு (பிச்சாவரம் சோழர்கள்) தான் சென்ற நூற்றாண்டிலும் தில்லை வாழ் அந்தணர்கள் திருமுடிச்சூட்டினார்கள். தில்லை திருநகரில் திருமுடிச்சூடிய இரண்டாம் குலோத்துங்கச் சோழனை, கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் பெருமானார் அவர்கள் "தீக்கோன்" என்று குலோத்துங்க சோழன் உலாவில் குறிப்பிடுகிறார்கள். சோழப் பெருவேந்தன் மூன்றாம் ராஜ ராஜ சோழனை, அண்ணமங்கலம் கல்வெட்டு "வன்னிய மணாளன்" (வன்னிய மாப்பிள்ளை) என்று குறிப்பிடுகிறது. சாளுக்கியர்கள் தங்களை "வேள் குல சாளுக்கியர்கள்" (வேளிர் குலத்தவர்கள்) என்று கல்வெட்டுகளில் குறிப்பிடுகிறார்கள். எனவே சாளுக்கியர்கள் என்பவர்கள் பண்டைய வேளிர் குலத்தவர்கள் ஆவார்கள். இவர்களை தான் சங்கத் தமிழ் புலவர் கபிலர் அவர்கள் புறம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள். வடபால் முனிவனின் ஓமகுண்டத்தினில் தோன்றிய வேளிர் மன்னர்கள் என்று.
----- xx ----- xx ----- xx -----

1 comment: