Wednesday 26 October 2016

சோழர்களும் சாளுக்கியர்களும் தொன்று தொட்டு உறவினர்களே !

முதலாம் குலோத்துங்கச் சோழனது காலத்தில் இருந்தே சாளுக்கியர்கள் சோழப் பேரரசில் இருக்கிறார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது அவ்வாறு இல்லை என்பதை கீழ்காணும் சான்றுகள் உறுதிசெய்கின்றன :-




முதலாம் அதித்த சோழன் (கி.பி.871 - 907), பட்டத்தரசிகள் 

===================================================

"காடுவெட்டிகள் திரிபுவன மாதேவி வயிரியக்கன்". (இவள் ஒரு பல்லவ அரசி மற்றும் காடவ கோப்பெருஞ்சிங்கனின் முன்னோர்கள்).
"இளங்கோப்பிச்சி" என்பவள் இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன் மகள்.

முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907 - 955)

========================================
"பராந்தக சோழனின் புதல்வி வீரமாதேவி இராஷ்டிரகூட மன்னன் நான்காம் கோவிந்த வல்லவரையனை மணந்தாள்"
"பராந்தக சோழனின் மற்றொரு புதல்வி அனுபமா கொடும்பாளூர்ச் வேளிர் அரசனை மணந்தாள்"


கண்டராதித்த சோழன் (கி.பி. 950 - 957) பட்டத்தரசி

==============================================

"மழவர் குலத்து செம்பியன் மாதேவியார்"


இரண்டாம் பராந்தக சோழனான சுந்தர சோழன் (கி.பி. 957 - 970)
===================================================
"அரிஞ்சயனுக்கும் வைதும்பக் குடியில் வந்த கல்யாணிக்கும் பிறந்தவர் சுந்தர சோழன்"
"சுந்தர சோழன் பட்டத்தரசியான வானவன் மாதேவி திருக்கோவிலூர் மலையமான் மகள்".
"சுந்தர சோழன் தன் மகள் குந்தவையைக் கிழைச் சாளுக்கிய மரபினன் வல்லவரையன் வந்தியதேவனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்".
உத்தம சோழன் (கி.பி. 973 - 985) பட்டத்தரசிகள்
===========================================
"இருங்கோளர் மகள் வானவன் தேவி"
"விழுப்பரையர் மகளாகிய கிழானடிகள்"
The "Vilupparaiyar" are "Vanniyas". The present "Viluppuram District" got the name from the "Vanniyar Chieftains Vilupparaiyar", who ruled that area during imperial cholas times. "விழுப்புண் பெற்ற அரையர்கள் (விழுப்பரையர்கள்)". The inscription evidences for the same :-
"This epigraph contains two portions, one in Sanskrit and the other in Tamil. The former engraved in Grantha characters records that Kotacholaka Vimana originally built of brick was now rebuilt of stone by Sendan (Jayantan) Poyakapati. The Tamil portion which is incomplete while recording the same fact describes him as Kumari Sendan alias Jayangondasola Vilupparaiya Nadalvan, a kudippalli of Poypakkam in Panaiyur-nadu in Rajendrasola-valanadu". (S.I.I. Vol-XVII, No.227), (Tiruvakkarai, Viluppuram District, Varadaraja Perumal shrine in the Chandramaulisvara temple), (Adhirajendra Chola, 1068-69 A.D).
"This seems to record some gift made by Kudippalli Sendan Nagan alias Rajendrasola Viluppadirasan of Poygaipakkam, in Panaiyur-nadu in Rajendrasola-valanadu for the merit of his younger brother Sendan Karanai alias Kidarattaraiyan" (S.I.I. Vol-XVII, No.223), (Tiruvakkarai, Viluppuram District, Varadaraja Perumal shrine in the Chandramaulisvara temple), (Kulottunga Chola-I, 1096-97 A.D).
முதலாம் ராஜ ராஜ சோழன் (கி.பி. 985 - 1012)
=========================================
"ராஜ ராஜ சோழன் தன் மகள் குந்தவையை கீழைச் சாளுக்கிய மரபினனும் வேங்கி நாட்டின் அரசனுமான விமலாதித்தனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்"
முதலாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1012 - 1044)
===========================================
"ராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கைதேவி. அவள், ராஜ ராஜ சோழனின் மகளும் தன் தந்தை ராஜேந்திர சோழனின் உடன்பிறப்புமான குந்தவை, விமலாதித்தன் ஆகியோரின் மகன் இராஜ ராஜ நரேந்திரன் என்னும் இளவரசனை மணந்தாள். வேங்கி நாட்டில் வாழ்ந்த இவளுடைய மகன் தான் முதலாம் குலோத்துங்க சோழன்"
இரண்டாம் குலோத்துங்க சோழன் "தீக்கோன் நிகழ்நிலா அன்று நிருப குல துங்கன்" என்று குலோத்துங்க சோழனுலாவில் குறிப்பிடப்பட்டுள்ளான். அதாவது அவன் "அக்கினியில் தோன்றிய க்ஷத்திரிய குலத்தவன்" என்று உலா குறிப்பிடுகிறது. "நிருப குலம்" என்பது "அரச குலம்" அதாவது "க்ஷத்திரிய குலம்".
----- xx ----- xx ----- xx -----

No comments:

Post a Comment