திருச்சி திருவெள்ளறை கல்வெட்டு (S.I.I Vol XII, No. 48), பல்லவ மகாராஜா நந்திவர்மனை "பரத்வாஜ கோத்திரம் பிரம்ம க்ஷத்ரிய குலோத்பவம்" என்று குறிப்பிடுகிறது. அதாவது பல்லவ அரசர்களை "க்ஷத்ரிய குலோத்பவம்" (க்ஷத்ரிய குலத்தவர்கள்) என்று குறிப்பிடுகிறது.
மேலும் அக் கல்வெட்டு ".....ல்லவ மாமறைத் தொன்றி வனி வெந்தன்" என்று குறிப்பிடுகிறது. இதற்கு சரியான விளக்கம் என்பது "பல்லவ மாமறைத் தோன்றிய வன்னி வேந்தன்" என்பதாகும். இதன் மூலம் பல்லவ அரசர்கள் "வன்னியர்கள்" என்பதும் "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்பதும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது.
மேலும் அக் கல்வெட்டு பல்லவர்களின் உறவினர்களாக கீழ்கண்ட அரசர்களைப் பற்றி தெரிவிப்பதை குறிப்பால் உணரமுடிகிறது :-
"மாற்பிடுகிளங்கொவெளான் சாத்தன் செ. . . . . . தன் மாமன் பரசிராமன் திருமருமான் பெரு . . . . . . செல்லிக்கொமான் மல்லவாந் தொண்மறவ"
{மாற்பிடுகு இளங்கோ வேளான் சாத்தன் தன் மாமன் பரசுராமன் திருமருமகன் கொல்லிக் கோமான் மழவன் தொண் மறவன்}
கொடும்பாளூர் இருக்குவேளிர் "மாற்பிடுகு இளங்கோ வேளான் சாத்தனுடைய" மாமன் பரசுராமன் என்றும், பரசுராமனுடைய மருமகன் "கொல்லிக் கோமான் மழவன் தொண் மறவன்" என்றும் குறிப்பிடுகிறது.
இதன்மூலம் தெரியவருவது என்னவென்றால், கொடும்பாளூர் இருக்குவேளிர்களும், கொல்லி மழவர்களும் உறவினர்கள் என்பதாகும். கொல்லி மழவர்கள் தங்களை "தொண் மறவன்" என்று அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது வீரன் என்று.
கேரள அரசர்களான பழுவேட்டரையர்களும் தங்களை "கண்டன் மறவன்" என்று அழைத்துக்கொண்டனர். பழுவேட்டரையர்களின் உறவினர்களாக கொல்லி மழவர்கள் இருந்துள்ளனர் என்பதை சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. பழுவேட்டரையன் மறவன் கண்டனின் மாமன் என்று "மழவர் கொங்கணி சென்னி நம்பியார்" என்பாரைக் கிழப்பழுவூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது :-
"பழுவேட்டரையர் மறவன் கண்டநார்
மாமடிகள் மழவர் கொங்கணி
செந்நி நம்பியார் வைத்த விளக்கு ஒன்று" (S.I.I. Vol-XIX, No.237)
மாமடிகள் மழவர் கொங்கணி
செந்நி நம்பியார் வைத்த விளக்கு ஒன்று" (S.I.I. Vol-XIX, No.237)
----- xx ----- xx ----- xx -----
No comments:
Post a Comment