இரண்டாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு ஒன்று (கி.பி. 1137) பெண்ணாகடமான முடிகொண்ட சோழச் சதுர்வேதிமங்கலத்துப் "பள்ளிச் சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்" பற்றி குறிப்பிடுகிறது. அது :-
"வடகரை விருதராஜபயங்கர வளநாட்டு மேற்கானாட்டு பெண்ணாகடமான முடிகொண்ட சோழச் சதுர்வேதிமங்கலத்துப் பிடாகை கோட்டையில் இருந்து திருமுந் கைப்படி திருமுக காணி பெற்ற பள்ளிச் சேந்தந் சுத்தமல்லனாந வாணகோவரையந்" (Line - 16 to 21).
மேற்குறிப்பிட்ட கல்வெட்டு மிகத் தெளிவாக "பள்ளி சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்" பற்றி குறிப்பிடுகிறது. இவர் பள்ளி என்பதால், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த கல்வெட்டைப் பற்றி முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அது :-
"An officer of Palli caste named Sendan Suttamallan alias Vanakovaraiyan received land called Tirumugakani from the king and he also made a gift of land to the Sennivanam temple in A.D. 1137" (Historical Archaeology of the Ariyalur Region upto A,D. 1817 - A Study, Page - 11).
"பள்ளி ஜாதியை சேர்ந்தவர் தான் சேந்தன் சுத்தமல்லன் வாணகோவரையன்" என்று முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
No comments:
Post a Comment