சேர குல மன்னன் "வல்வில் ஓரி" அவர்கள், சங்கத் தமிழ் இலக்கியமான நற்றிணையில் "மழவர் பெருமகன் மாவள் ஓரி" என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
உண்மையில் நற்றிணையில் இடம்பெற்றிருந்தது என்பது "மழவர் பெருமகன் மாவேள் ஓரி" என்பதே ஆகும். அதாவது "மழவர் குடியின் பெருமகனான மாபெரும் வேளிர் ஓரி" என்பதாகும்.
வேளிர் குல சேரர்கள் தங்களை "யது வம்ச யாதவர்கள்" என்று குறிப்பிடுகிறார்கள். எனவே சேரர்களின் கிளை மரபினர்களான "கொல்லி மழவர் வல்வில் ஓரியும் வேளிர் குடி வழிவந்தவரே ஆவார்கள்". ஆனால் சிலர் "சங்கத் தமிழ் நற்றிணையில் மாறுதல் செய்திருக்கிறார்கள்" என்பது தெரியவருகிறது.
இது உண்மைதான் என்பதனை நமக்கு புறநானூறுப் பாடல் குறிப்பிடுகிறது. புறநானூறு வன்னிய குல சேர மன்னனான அதியமான் நெடுமானஞ்சியை "நெடுவேல் மழவர் பெருமகன்" என்று "வேளிர் குலத்தவனாக" குறிப்பிடுகிறது. இதைப்போலவே "நெடுவேள் ஆவியையும்" வேளிர் குலத்தவன் என்றே அகநானூறுப் பாடலும் குறிப்பிடுகிறது.
எனவே சான்றுகளை அடிப்படையாக கொண்டு "மழவர் பெருமகன் மாவள் ஓரி" என்பதனை "மழவர் பெருமகன் மாவேள் ஓரி" என்றே குறிப்பிடவேண்டும்.
எனவே வன்னியர்களான மழவர்கள் "வேளிர் குலத்தவர்கள்" (அக்னியில் தோன்றிய க்ஷத்ரியர்கள்) ஆவார்கள்.
மழவர் பெருமகன் மாவேள் ஓரி, அசல் அக்மார்க் வன்னிய குல க்ஷத்ரிய மன்னர் ஆவார்கள்.
வல்வில் ஓரி மன்னருக்கும், "வேட்டுவ கவுண்டர் இன மக்களுக்கும்" எந்த ஒரு குல தொடர்பும் இல்லவே இல்லை என்பது மேற்குறிப்பிட்ட சான்றுகளின் மூலம் உண்மையாகிறது.
எங்களது வன்னிய இன மக்கள், எங்கள் குல வேளிர் மன்னன் "வல்வில் ஓரிக்கு" விழா கொண்டாடாமல் விட்டது என்பது காலத்தின் கோலமாகும். இனி வரும் காலங்களில் எங்கள் மன்னருக்கு வெகு விமர்சையாக விழா எடுப்போம்.
வாழ்க எங்கள் வேளிர் குல கோமான் "மழவர் பெருமகன் மாவேள் ஓரியின் புகழ்".
----- xx ----- xx ----- xx -----
No comments:
Post a Comment