Tuesday 29 December 2020

சோழர் படை வீரர்களாக இருந்த பள்ளி வன்னிய ஜாதியினர்

 தொண்டை மண்டலப் பகுதிகளை ஆட்சி செய்துவந்த சம்புவராயர்கள் பள்ளி(வன்னியர்) குலத்தவர்.

நடு நாட்டின் வலிமை மிகுந்த சிற்றரசர்களான காடவராயர்களும் வன்னியர் இனத்தவரே.இவர்கள் கல்வெட்டுக்களில் தம்மை பள்ளி இனத்தவராகவே குறிப்பிட்டுள்ளனர்(ARE 137 of 1900; S.I.I vol.7, No.150).

 கி.பி 12 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சிலை எழுபது நாயக்கர் காலத்திற்கு முன் சோழ, பாண்டிய மன்னர்களின் காலத்தில்தான் எழுதப்பெற்றது.வன்னிய குலத்தவரின் பெருமைகளைக் குறிப்பிடும் இந் நூல் வன்னியர்களை ஆட்சி செய்யும் மன்னர் இனத்தவராகக் குறிப்பிடுகின்றது.

பல்வேறு கல்வெட்டுக்கள் மூலம் வன்னிய குலத்தவர் சோழர் காலத்தில் பெற்றிருந்த செல்வாக்கும் அதிகாரமும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.வன்னிய குலத்தவருக்கு அரசரால் கொடையளிக்கப்பட்ட நிலங்கள் "பள்ளிப் பேறு" எனப்பட்டன.(ARE 200 of 1904)

மேலும் வன்னியர் குலத்தவர் விற்போர் வீரர்களாக விளங்கினர். இவர்கள் "வில்லிகள்" என்றும் அழைக்கப்பட்டனர்(ARE 360 of 1902)(ARE 394 of 1921).பள்ளி குல மக்கள் வாழ்ந்த பகுதி பள்ளி நாடு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது(ARE 35 of 1913).

விஜயநகர வேந்தர் படையெடுப்பின்போது அவர்களை எதிர்த்து முதலில் போரிட்டது தமிழ் குறு நில மன்னர்களான சம்புவராயர்கள்தான்.இவர்கள் வன்னியர் குலத்தவர்.(ARE 267 of 1919)

 சோழர்களின் தலைநகரமான கங்கைகொண்ட
===========================================
சோழபுரத்து குறுநில மன்னர்களும் படை வீரர்களும்
================================================
முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் "அரியலூர்" பற்றி ஆங்கிலத்தில் எழுதிய சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் எடுத்து நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இது நான் எழுதியது அல்ல.
----- xx ----- xx ----- xx -----
முதலாம் இராஜ ராஜ சோழனின் மகனான முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் வரலாற்றில் ஒரு புதிய அத்யாயம் தமிழகத்தோடு மட்டுமல்லாமல் இன்றைய அரியலூர் மாவட்டத்திலும் பிரதிபலித்தது. அதற்கு மிக முக்கிய காரணம் அவனால் அம்மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் தாலுக்காவில் புதியதாக நிர்மாணிக்கப்பட்ட சோழர்களின் தலைநகரமான கங்கைகொண்ட சோழபுரமே ஆகும்.
படையாட்சிகள் என்று புகழோடு அழைக்கப்படும் வன்னியர்களே அரியலூர் மாவட்டத்தின் பெரும்பான்மை மக்களாவார்கள். இவர்கள் சோழர்கள் காலத்தில் பள்ளிகள் என்றும் அழைக்கப்பட்டனர். அரியலூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்து கிடைக்கும் சுமார் ஐம்பது சோழர்கள் காலத்து கல்வெட்டுகள் வன்னியர்களைப் பற்றி குறிப்பிடுகின்றன.
அரியலூர் மாவட்டத்தில் இருந்த "காரைக்காடு", "துண்டநாடு", "சென்னிவளக் கூற்றம்" போன்ற பகுதிகளில் இருந்த ஊர்களில் பல பள்ளிகள் இருந்திருக்கிறார்கள் என்பதை சோழர்கள் காலத்து கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
வீர நாராயண சதுர்வேதிமங்கலத்தில் இருந்த 11 சேரிகளில் பள்ளிகளின் (வன்னியர்கள்) வாழ்விடங்கள் இருந்ததை முதலாம் இராஜேந்திர சோழனின் கி.பி. 1022 ஆம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது.
சோழர்கள் காலத்து பல கல்வெட்டுகளில் பள்ளிகள் பெற்றிருந்த பட்டங்களை பற்றி குறிப்பிடுகின்றன. அவை :-
"அரையன்",
"பெரியரையன்" (பேரரையன்),
"நாடு உடையான்",
"நாடாழ்வான்",
"காணி உடையான்",
"ஊர் உடையான்"
போன்றவைகளாகும். இப்பட்டப் பெயர்கள் சோழ அரசர்களின் பெயர் அல்லது பட்டங்களுடன் முன்னிட்டு சேர்த்து வழங்கப்பெற்றிருப்பது என்பது பள்ளிகள் (வன்னியர்கள்) எத்தகைய நிலையில் சோழர் அரசாங்கத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இப்பகுதி கல்வெட்டுகளில் இடம்பெற்றிருந்த பள்ளிகளின் சில பட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :-
"சோழேந்திர சிங்க பெரியரையன்",
"சிங்களாந்தக பெரியரையன்",
"மதுராந்தக பெரியரையன்",
"சுந்தர பெரியரையன்",
"முடிகொண்ட சோழ முத்தரையன்"
"கடாரம் கொண்ட சோழ பெரியரையன்"
"மாணிக்க பெரியரையன்",
"ஜெயம்கொண்ட சோழ துண்ட நாடாழ்வான்",
"துண்டநாடு உடையான் கல்யாணபுரம் கொண்டான்",
"தேனுரில் காணி உடையான் துண்டராயன்"
"ஆய்க்குடியில் காணி உடைய பள்ளிகளில் பொன்னநான முடிகொண்ட சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"
"ஓலைப்பாடியில் காணி உடைய பள்ளிகளில் காரி கிரிச்சன் விக்கிரம சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"
"தொங்கபுரத்தில் காணி உடைய பள்ளிகளில் அழகந் அம்பலவன் குலோத்துங்க சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"
"மகதை மண்டலத்து தொழுவூர் பற்றில் குறுக்கையில் காணி உடைய பள்ளிகளில் பாண்டியன் சொக்கன் மரகத சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"
மேற்குறிப்பிட்ட பட்டங்கள், வன்னியர்கள் சோழ அரசர்களுக்கு கொடுத்த ராணுவ வீரதீர பங்களிப்பையும் மற்றும் வன்னியர்களின் நிலவுடமை நிலையையும் மற்றும் சோழ அரசாங்கத்தில் வன்னியர்கள் பெற்றிருந்த அதிகார நிலையையும் காட்டுகிறது.
சோழர்களின் பல கல்வெட்டுகளில் பள்ளிகள் வில் வீரர்களாக இருந்துள்ளனர் என்றும் அவர்கள் வில்லாற்றலில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள் என்றும் குறிப்பிடுகிறது. மேலும் சோழர் கல்வெட்டுகள் பல "விற் படை" வில்லாளிகள் பற்றி குறிப்பிடுகின்றன (வில்லிகள் படை). அவ் விற்படைகளில் வன்னிய ஜாதியை சேர்ந்தவர்களையே சோழர்கள் நிலைப்படுத்தினர்.
கி.பி. 1045 மற்றும் 1050 ஆம் ஆண்டினைச் சேர்ந்த விருத்தாச்சலம் கல்வெட்டுகள், ஜெயங்கொண்ட சோழபுரம் நகரம் (ஜெயங்கொண்டாம், உடையார் பாளையம் வட்டம்) உருவானதைப் பற்றியும், பள்ளி ஜாதியைச் சேர்ந்த சிலர் ஜெயங்கொண்ட சோழபுரம் மற்றும் விசயபுரத்தின் ராணுவ அதிகாரிகளாய் இருந்ததையும் குறிப்பிடுகின்றன.
பள்ளி ஜாதியைச் சேர்ந்த ஒரு குறுநில வேந்தன் "கூத்தன் பக்கனான ஜெயங்கொண்ட சோழ துண்ட நாடாழ்வான்", கி.பி. 1067 ஆம் ஆண்டின் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார். அவரது பெயர் "துண்ட நாட்டுப்" பகுதியின் அரசியல் அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது.
விக்கிரம சோழன் (கி.பி. 1118 - 1136) மற்றும் அதன்பிறகு வந்த சோழ மன்னர்கள் காலக் கல்வெட்டுகளில் "பள்ளி" மற்றும் "சுருதிமான்" ஜாதியைச் சேர்ந்தவர்களே சோழ அரசாங்கத்திற்கு படைவீரர்களையும், அதிகாரிகளையும், குறுநில மன்னர்களையும் வழங்கி சமகாலச் சமூதாயத்தில் மேன்மையான நிலையை அடைந்தார்கள்.
பள்ளி ஜாதியைச் சேர்ந்த அதிகாரி "சேந்தன் சுத்த மல்லனான வாணகோவரையன்" என்பவர் இரண்டாம் குலோத்துங்கச் சோழனிடம் "திருமுகக் காணி" என்னும் நிலங்களைப் பெற்றிருக்கிறார். அவர் சென்னிவனம் கோயிலுக்கு கி.பி. 1137 ஆம் ஆண்டில் நிலதானம் கொடுத்திருக்கிறார்.
சோழ மன்னன் இரண்டாம் இராஜாதிராஜ சோழனின் ஆட்சி காலத்தில் (கி.பி. 1166 - 1182) வன்னாடு உடைய இராஜராஜ தேவனான இராஜாதிராஜ மகதை நாடாழ்வான், துண்ட நாடு உடையான் திருவிராடனான துண்டராய வர்மன் அரியவாயன், கடந்தை சேந்தன் ஆதித்தனான இராஜராஜ வங்கார முத்தரையன், ஸ்ரீராமன் சுத்தமல்லனான விக்கிரம சோழ மலையகுலராயன் போன்ற குறுநில மன்னர்கள் "இராசகுலவர்" (அரச குலத்தவர், Royal Families) ஆவார்கள். இந்த இராசகுலத்தவர்கள் கோயில்கள் மற்றும் இன்னபிற நில உரிமைகளை ஆக்கிரமித்து தனதாக்கிக்கொண்டனர்.
கி.பி. 1216 ஆம் ஆண்டு கல்வெட்டு "சுருதிமான் இராஜேந்திர சோழ தெரிந்த வில்லிகள்" (வில்லாளிகள்) என்ற இராணுவ படைப் பிரிவைப் பற்றி குறிப்பிடுகிறது. இப் படைப் பிரிவில் சுருதிமான் ஜாதியைச் சேர்ந்த "படை முதலிகள்" (இராணுவ தலைவர்கள்) இடம்பெற்றுள்ளனர். குன்றக்குறம், மேல்கரைக்காடு உள்ளிட்ட சுருதிமான் அஞ்சுநாடு படைப்பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.
வன்னிய ஜாதியைச் சேர்ந்த பல பட்டங்களுடைய குறுநில மன்னர்களான "கடந்தையார்கள் (என்கிற) வங்கார முத்தரையன்", "துண்ட நாடு உடையார் / துண்டராயன் ", "வாணகோவரையர்" மற்றும் "கச்சியராயர்கள்" ஆட்சி அதிகாரம் பெற்ற பாடிக்காவல் அதிகாரிகளாய் அரியலூர் மற்றும் அதன் பிற பகுதிகளிலும் இருந்துள்ளனர்.
போர்குடிகளைச் சேர்ந்த "பள்ளி" மற்றும் "சுருதிமான்" ஜாதியைச் சேர்ந்தவர்கள் சோழ இராணுவத்தில் சேர்ந்து உயர்ந்து பல உயரிய பதவிகளைப் சோழ அரசாங்கத்தில் பெற்று அரியலூர் பகுதியில் குறுநில மன்னர்களாக கோலோச்சியவர்களில் :-
"துண்ட நாடு உடையார்"
"கடந்தையார் (என்கிற) வங்கார முத்தரையன்"
"வாணகோவரையர்"
போன்றோர்கள் மிக மிக முக்கியமானவர்கள் ஆவார்கள்.
----- xx ----- xx ----- xx -----
நன்றி : முனைவர் இல. தியாகராஜன் அவர்கள்.





===================================================
Chieftains Warriors of Gangaikonda Cholapuram in Ariyalur Region
===================================================
The reign of Rajendra Chola-I, son of Rajaraja Chola-I, opened a glorious chapter not only in the history of Tamil Nadu but also of Ariyalur Region because of his foundation for a new capital called Gangaikondacholapuram in Udaiyarpalayam Taluk.
Vanniyar, popularly called Padaiyatchis are one of the major communities living in Ariyalur region. During the medieval period they were called as Palli. Some fifty records of the Chola period are available in Ariyalur region and in the adjoining area which refer to the Vanniyas. The inscriptions show that many Pallis hailed from the villages located in Karaikkadu, Tunda Nadu and Sennivala Kurran which existed in Ariyalur region. A record of Rajendra Chola-I in 1022 A.D. refers to Palli (Vanniyar) settlement in the 11 cheris of Viranarayana Chaturvedimangalam.
Many inscriptions show that the Pallis had the titles of Araiyan, Periyarayan, Nadu Udaiyan, Nadalvan, Kani Udaiyan, Ur Udaiyan etc., which were prefixed with the name or surname of Chola Kings indicating their position in Chola Government. The following were a few titles of individual Pallis of this area as shown in inscriptions.
Cholendrasinga Periyaraiyan.
Singalandaka Periyaraiyan.
Madurandaka Periyaraiyan.
Sundara Periyaraiyan.
Mudikondachola Muttaraiyan.
Kadarankondachola Periyaraiyan.
Manikka Periyaraiyan.
Jayankondachola Tunda Nadalvan.
Tundanadu Udaiyan Kalayanapuramkondan.
Tenuril Kani udaiaya Tundarayan.
Aykkudiyil Kani udaiya Palligalil Ponnan (alias) Mudikonachola Muttaraiyan.
Olaippadiyil Kani udaiya Palligalil Karitirichchan Vikramachola Muttaraiyan.
Tongapurattil Kani udaiya Palligalil Alagan Ambalavan Kulothungachola Muttaraiyan.
Kurukkaiyil Kani udaiya Palligalil Pandyan Sokkan Maragadachola Muttaraiyan.
The above titles show their participation in the military exploits of Chola Kings and their landholding status and official position in Chola Government. Many Chola records refers to the Pallis as Bowmen and adept in archery (Vil, Villigal). Records name several regiments of archers (villigal padai) composed of the people of Vanniya caste by the Cholas.
Two records of 1045 A.D. and 1050 A.D. in Vriddachalam indicate the emergence of Jayankondacholapuram nagaram (Jayankondam, Udaiyarpalaiyam Taluk) and some individuals of palli caste of Jayankondacholapuram and Visayapuram as army personnel.
A chief of palli caste named Kuttan Pakkan (alias) Jayankondachola Tunda Nadalvan figures in the record of 1067 A.D. His name indicates his political status in Tunda Nadu area.
During the reign of Vikramachola (1118-36) and of his successors, inscriptions give enough information to show that the Palli and Surutiman castes of this region supplied soldiers, officials and generals to the Chola Government and enjoyed status in the contemporary society.
An officer of Palli caste named Sendan Suttamallan (alias) Vanakovaraiyan received land called tirumugakani from the king and he also made a gift of land to the Sennivanam temple in 1137 A.D.
In the reign of Rajadhiraja Chola-II (1166 - 1182 A.D), Vannadu Udaiyan Rajarajadevan (alias) Rajadhiraja Magadai Nadalvan, Tundanadu Udaiyan Tiruviradan (alias) Tundarayapanman Ariyavayan, Kadandai Sendan Adittan (alias) Rajaraja Vangara Muttaraiyan, Siraman Suttamallan (alias) Vikramachola Malayakularayan, etc. It seems these chiefs who had the status of "Rasukulavar" (Royal Families) had become aggressive by appropriating for themselves landholdings of temples, etc.
A record of 1216 A.D. refers to an army wing called Surutiman RajendraChola Terinda Villigal (archers) which comprised of Padaimudaligal (army generals) of Surutimans of anju nadu including Kunra Kurram and Melkaraikkadu.
The number of Chieftains of Vanniya caste with the titles of Vangara Muttaraiyan also called Kadandaiyar, Tunda Nadu Udaiyar/Tundarayan, Vanakovaraiyar and Kachchiyarayar held sway as Padikaval officers over parts of Ariyalur region.
The people of martial communities such as Palli and Surutiman castes joined the Chola Militia and rose to high status in the Chola Government and dominated as chiefs in Ariyalur region. Of them Tundanadu Udaiyar, Kandandaiyar (also called Vangara Muttaraiyar) and Vanakovaraiyar were important chiefs.
Thanks to : Prof Dr. L. Thiyagarajan.



Friday 17 January 2020

வரலாற்றில் வன்னியர்கள் நாடும் வன்னியர்கள் ஆட்சி செய்த காலமும்

முரளி நாயக்கர் பதிவிலிருந்து



வன்னியர் நாடு (திகுலர் பூமி)
-----------------------------------------------

வேலூர் மாவட்டம், அகரத்தில் இருக்கும் விஜயநகர வேந்தர் மல்லிகார்ஜுன தேவ மஹாராயரின் கல்வெட்டு ஒன்று (கி.பி.1469) :-

"அகரம் பெருமாள் ஆனைகாத்த அப்பன் சிரிகாரியம் பாற்கும் வன்னிய திம்மய நாயக்கர்"

என்று குறிப்பிடுகிறது. இவரை "வன்னிய திம்மு நாயக்கர்" என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் இக் கல்வெட்டு "வன்னிய நாட்டு நாயகஞ் செய்வார்" என்று தெரிவிக்கிறது. இந்த "வன்னிய நாடு" என்பது வன்னியர்கள் அரசாட்சி செய்த நாடாகும்.

விஜயநகர காலத்திய கி.பி.1519 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று, திருக்கோயிலூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய "வன்னிய வட்டத்தில்", குதிரை காணிக்கை என்கிற வரியை வசூலித்து, அதை கோயில் நற்பணிக்காக தன்னுடைய மூத்த சகோதரி வயிச்சம்மன் பெயரினில் திம்மப்ப நாயக்கர் அவர்கள் கொடுத்தார்கள் என்றும் இவர் வாசல் மல்லப்ப நாயக்கரின் மகனாவார் என்றும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

ஆண்டு குறிப்பிடாத மற்றொரு கல்வெட்டு ஒன்று, திம்மப்ப நாயக்கர் அவர்கள், "வன்னியர் அரசாட்சி காலத்தில்" பெறப்படும் வரியை தன்னுடைய சகோதரி வயிச்சம்மன் அவர்களின் பெயரினில் ஒரு நற்கட்டளை ஏற்படுத்தினார்கள் என்பதை தெரிவிக்கிறது. எனவே, கல்வெட்டுகளில் இருந்து :-

"வன்னிய நாடு"

"வன்னிய வட்டம்"

"வன்னியர் அரசாட்சி காலம்"

என்று தெரியவருகின்றன. "திகுலர் பூமியை கைப்பற்றியவர்கள்" என்று விஜயநகர அரசர்களை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இதை அறிஞர் பெருமக்கள் "தமிழர் பூமியை கைப்பற்றியவர்கள்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்கள் என்பதாகும். ஆனால், இந்த விளக்கம் என்பது மிகப்பெரும் பிழையாகும். எந்த ஒரு சான்றும் தமிழர் பூமி/நாடு என்று சொல்லவே இல்லை என்பதாகும்.

கி.பி.1233 ஆம் ஆண்டின் ஓய்சாள கன்னட கல்வெட்டு ஒன்று, காடவராயரிடம் இருந்து மூன்றாம் ராஜராஜ சோழனை மீட்ட தளபதிகளான அப்பண்ணா மற்றும் கோப்பையா ஆகியோரைப் பற்றி குறிப்பிடுகிறது. இதில் மிக குறிப்பாக அப்பண்ணா அவர்கள் "திகுல மண்டலத்தை கொள்ளையிட்டவர்" என்று குறிப்பிடப்பட்டார்கள் என்பதாகும்.

இந்த கன்னட கல்வெட்டு குறிப்பிடும் "திகுல மண்டலம்" என்பது வன்னியர்களான காடவராயர்கள் அரசாட்சி செய்த பகுதியாகும். இந்த கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக, கி.பி.14 ஆம் நூற்றாண்டின் "மதுரா விஜயம்" ஒன்பதாம் காண்டம் சுலோகம் - 28, வன்னிய அரசர்களை பற்றி தெரிவிக்கிறது :-

சுலோகம் - 28 : "வீர கம்பண்ணரின் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் ஸர்ப்பங்களைப்போல் சீறிக்கொண்டு பாய்ந்து வந்தன. அவ்வாறு அவை பாய்ந்து சென்றபோது கேரள மக்களின் மூச்சுக் காற்றையும், வன்னிய மன்னர்களின் நாட்டை நாசம் செய்த தீயைப் போலவும், ஆந்திர தேசத்தை தகிக்கும் சூரியன் போலவும் காணப்பட்டன"

மதுரா விஜயத்தின் மேற்குறிப்பிட்ட சுலோகம் - 28, மிகத் தெளிவாக "கேரள மக்களின் நாட்டையும்", "தமிழக மக்களின் நாட்டையும்", "ஆந்திரா மக்களின் நாட்டையும்" என்று குறிப்பிடுகிறது. இதில் "தமிழ்நாடு" என்று குறிப்பிடுவதற்கு பதிலாக "வன்னிய மன்னர்களின் நாடு" என்றே குறிப்பிடுகிறது.

கன்னட நாட்டில் இருந்த சோழர்களின் தலைக்காட்டுப் (தழைக்காடு) பகுதியை அரசாட்சி செய்த சோழ சாமந்தர்களான "தகடூர் அதியமான்", "திகுல தாமன்", "நரசிம்ம வர்மன்" ஆகியோரை ஓய்சாளர்களின் தளபதியான வீர கங்கன் அவர்கள் வெற்றிகொண்டார் என்பதாகும். இவரை கன்னட கல்வெட்டுகள் :-

''திகுலர் படையை வென்ற கண்டன்"

"திகுலர் கூட்டுப்படையை வென்ற கண்டன்"

"கங்கவாடி திகுலரை வென்ற வீர கங்கன்"

என்று குறிப்பிடுகின்றன. சோழ தளபதியான தகடூர் அதியமான் அவர்களை கன்னட கல்வெட்டுகள் "காடவ குல அதியமான்" (வன்னியர்) என்று குறிப்பிடுகின்றன. சோழ தளபதி திகுல தாமன் என்பவர் வன்னியர் என்பது அவரின் பெயரான "திகுலர்" (வன்னியர்) என்பதிலிருந்தே தெரியவருகிறது. சோழ தளபதி நரசிம்ம வர்மன் அவர்கள் "நுளம்ப பல்லவர்" (வன்னியர்) என்று தெரியவருகிறது. இதன் காரணமாகவே, ஒய்சாள தளபதி வீர கங்கன் அவர்கள் "திகுலரை வென்றவர்" (வன்னியரை வென்றவர்) என்று குறிப்பிடப்பட்டார்கள் என்பதாகும்.

திகுலர் என்பவர்கள் வன்னிய வம்சத்தவர்கள் ஆவர். இவர்கள் கர்நாடகத்தில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதாகும். தர்மராஜா கோயிலின் திரௌபதி அம்மன் கரகவிழா என்பது வன்னிய வம்சத்தவர்களான திகுலர்கள் எடுக்கும் மிகச் சிறப்பான விழாவாகும். இந்த திரௌபதி அம்மன் கரகவிழாவானது கர்நாடக மாநிலத்தின் சிறப்பு மிக்க ஒரு விழாவாகும். 

கி.பி.1125 ஆம் ஆண்டின் கன்னட கல்வெட்டு ஒன்று, சோழர் என்று குறிப்பிட "திகுலர்" என்ற பெயரினை பயன்படுத்தியுள்ளது என்பதாகும். ஒய்சாள வேந்தர் வீரராமநாத தேவரின் கோலார் பகுதி மடிவளாகத்தில் இருக்கும் தமிழ் கல்வெட்டு ஒன்று, உலகுய்யவந்த பெருமாளுக்கு "முன்னாள் வன்னியர் காலம்" முதல் இருந்த கொடைகள் தொடர்வதாக குறிப்பிடுகிறது. இந்த முன்னாள் வன்னியர் காலம் என்பது "சோழர் காலம்" என்பதாகும்.

எனவே, திகுலர் பூமி/நாடு/மண்டலம் என்பது "வன்னியர் பூமி/நாடு/மண்டலம்" என்பதாகும். இதுவே மேற்குறிப்பிட்ட சான்றுகளின் அடிப்படையினில் மிகச் சரியானதாகும்.

வரலாற்று அறிஞர்கள் மேற்குறிப்பிட்ட சான்றுகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் ''திகுலர் பூமி/நாடு/மண்டலம்'' என்பதை ''தமிழர் பூமி/நாடு/மண்டலம்'' என்று பெரும் பிழையாக பதிவு செய்திருக்கிறார்கள் என்பதாகும்.
முரளி நாயக்கர் பதிவிலிருந்து






வன்னியர் நாடு (திகுலர் பூமி)
-----------------------------------------------

வேலூர் மாவட்டம், அகரத்தில் இருக்கும் விஜயநகர வேந்தர் மல்லிகார்ஜுன தேவ மஹாராயரின் கல்வெட்டு ஒன்று (கி.பி.1469) :-

"அகரம் பெருமாள் ஆனைகாத்த அப்பன் சிரிகாரியம் பாற்கும் வன்னிய திம்மய நாயக்கர்"

என்று குறிப்பிடுகிறது. இவரை "வன்னிய திம்மு நாயக்கர்" என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் இக் கல்வெட்டு "வன்னிய நாட்டு நாயகஞ் செய்வார்" என்று தெரிவிக்கிறது. இந்த "வன்னிய நாடு" என்பது வன்னியர்கள் அரசாட்சி செய்த நாடாகும்.

விஜயநகர காலத்திய கி.பி.1519 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று, திருக்கோயிலூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய "வன்னிய வட்டத்தில்", குதிரை காணிக்கை என்கிற வரியை வசூலித்து, அதை கோயில் நற்பணிக்காக தன்னுடைய மூத்த சகோதரி வயிச்சம்மன் பெயரினில் திம்மப்ப நாயக்கர் அவர்கள் கொடுத்தார்கள் என்றும் இவர் வாசல் மல்லப்ப நாயக்கரின் மகனாவார் என்றும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

ஆண்டு குறிப்பிடாத மற்றொரு கல்வெட்டு ஒன்று, திம்மப்ப நாயக்கர் அவர்கள், "வன்னியர் அரசாட்சி காலத்தில்" பெறப்படும் வரியை தன்னுடைய சகோதரி வயிச்சம்மன் அவர்களின் பெயரினில் ஒரு நற்கட்டளை ஏற்படுத்தினார்கள் என்பதை தெரிவிக்கிறது. எனவே, கல்வெட்டுகளில் இருந்து :-

"வன்னிய நாடு"

"வன்னிய வட்டம்"

"வன்னியர் அரசாட்சி காலம்"

என்று தெரியவருகின்றன. "திகுலர் பூமியை கைப்பற்றியவர்கள்" என்று விஜயநகர அரசர்களை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இதை அறிஞர் பெருமக்கள் "தமிழர் பூமியை கைப்பற்றியவர்கள்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்கள் என்பதாகும். ஆனால், இந்த விளக்கம் என்பது மிகப்பெரும் பிழையாகும். எந்த ஒரு சான்றும் தமிழர் பூமி/நாடு என்று சொல்லவே இல்லை என்பதாகும்.

கி.பி.1233 ஆம் ஆண்டின் ஓய்சாள கன்னட கல்வெட்டு ஒன்று, காடவராயரிடம் இருந்து மூன்றாம் ராஜராஜ சோழனை மீட்ட தளபதிகளான அப்பண்ணா மற்றும் கோப்பையா ஆகியோரைப் பற்றி குறிப்பிடுகிறது. இதில் மிக குறிப்பாக அப்பண்ணா அவர்கள் "திகுல மண்டலத்தை கொள்ளையிட்டவர்" என்று குறிப்பிடப்பட்டார்கள் என்பதாகும்.

இந்த கன்னட கல்வெட்டு குறிப்பிடும் "திகுல மண்டலம்" என்பது வன்னியர்களான காடவராயர்கள் அரசாட்சி செய்த பகுதியாகும். இந்த கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக, கி.பி.14 ஆம் நூற்றாண்டின் "மதுரா விஜயம்" ஒன்பதாம் காண்டம் சுலோகம் - 28, வன்னிய அரசர்களை பற்றி தெரிவிக்கிறது :-

சுலோகம் - 28 : "வீர கம்பண்ணரின் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் ஸர்ப்பங்களைப்போல் சீறிக்கொண்டு பாய்ந்து வந்தன. அவ்வாறு அவை பாய்ந்து சென்றபோது கேரள மக்களின் மூச்சுக் காற்றையும், வன்னிய மன்னர்களின் நாட்டை நாசம் செய்த தீயைப் போலவும், ஆந்திர தேசத்தை தகிக்கும் சூரியன் போலவும் காணப்பட்டன"

மதுரா விஜயத்தின் மேற்குறிப்பிட்ட சுலோகம் - 28, மிகத் தெளிவாக "கேரள மக்களின் நாட்டையும்", "தமிழக மக்களின் நாட்டையும்", "ஆந்திரா மக்களின் நாட்டையும்" என்று குறிப்பிடுகிறது. இதில் "தமிழ்நாடு" என்று குறிப்பிடுவதற்கு பதிலாக "வன்னிய மன்னர்களின் நாடு" என்றே குறிப்பிடுகிறது.

கன்னட நாட்டில் இருந்த சோழர்களின் தலைக்காட்டுப் (தழைக்காடு) பகுதியை அரசாட்சி செய்த சோழ சாமந்தர்களான "தகடூர் அதியமான்", "திகுல தாமன்", "நரசிம்ம வர்மன்" ஆகியோரை ஓய்சாளர்களின் தளபதியான வீர கங்கன் அவர்கள் வெற்றிகொண்டார் என்பதாகும். இவரை கன்னட கல்வெட்டுகள் :-

''திகுலர் படையை வென்ற கண்டன்"

"திகுலர் கூட்டுப்படையை வென்ற கண்டன்"

"கங்கவாடி திகுலரை வென்ற வீர கங்கன்"

என்று குறிப்பிடுகின்றன. சோழ தளபதியான தகடூர் அதியமான் அவர்களை கன்னட கல்வெட்டுகள் "காடவ குல அதியமான்" (வன்னியர்) என்று குறிப்பிடுகின்றன. சோழ தளபதி திகுல தாமன் என்பவர் வன்னியர் என்பது அவரின் பெயரான "திகுலர்" (வன்னியர்) என்பதிலிருந்தே தெரியவருகிறது. சோழ தளபதி நரசிம்ம வர்மன் அவர்கள் "நுளம்ப பல்லவர்" (வன்னியர்) என்று தெரியவருகிறது. இதன் காரணமாகவே, ஒய்சாள தளபதி வீர கங்கன் அவர்கள் "திகுலரை வென்றவர்" (வன்னியரை வென்றவர்) என்று குறிப்பிடப்பட்டார்கள் என்பதாகும்.

திகுலர் என்பவர்கள் வன்னிய வம்சத்தவர்கள் ஆவர். இவர்கள் கர்நாடகத்தில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதாகும். தர்மராஜா கோயிலின் திரௌபதி அம்மன் கரகவிழா என்பது வன்னிய வம்சத்தவர்களான திகுலர்கள் எடுக்கும் மிகச் சிறப்பான விழாவாகும். இந்த திரௌபதி அம்மன் கரகவிழாவானது கர்நாடக மாநிலத்தின் சிறப்பு மிக்க ஒரு விழாவாகும். 

கி.பி.1125 ஆம் ஆண்டின் கன்னட கல்வெட்டு ஒன்று, சோழர் என்று குறிப்பிட "திகுலர்" என்ற பெயரினை பயன்படுத்தியுள்ளது என்பதாகும். ஒய்சாள வேந்தர் வீரராமநாத தேவரின் கோலார் பகுதி மடிவளாகத்தில் இருக்கும் தமிழ் கல்வெட்டு ஒன்று, உலகுய்யவந்த பெருமாளுக்கு "முன்னாள் வன்னியர் காலம்" முதல் இருந்த கொடைகள் தொடர்வதாக குறிப்பிடுகிறது. இந்த முன்னாள் வன்னியர் காலம் என்பது "சோழர் காலம்" என்பதாகும்.

எனவே, திகுலர் பூமி/நாடு/மண்டலம் என்பது "வன்னியர் பூமி/நாடு/மண்டலம்" என்பதாகும். இதுவே மேற்குறிப்பிட்ட சான்றுகளின் அடிப்படையினில் மிகச் சரியானதாகும்.

வரலாற்று அறிஞர்கள் மேற்குறிப்பிட்ட சான்றுகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் ''திகுலர் பூமி/நாடு/மண்டலம்'' என்பதை ''தமிழர் பூமி/நாடு/மண்டலம்'' என்று பெரும் பிழையாக பதிவு செய்திருக்கிறார்கள் என்பதாகும்.


Tuesday 1 November 2016

பிரம்ம க்ஷத்ரியர்களான பங்களநாட்டு கங்கரையர்கள்


கங்கரையர்கள் என்ற அரச மரபினர்கள் பண்டைய வேளிர் மரபினர்கள் ஆவார்கள். கங்கர்கள் பல கிளை மரபினர்களாக விளங்கி தென்னிந்தியாவை சிறப்புடன் ஆட்சி செலுத்தினார்கள். குறிப்பாக தமிழகத்தில் "பங்களநாட்டு கங்கரையர்கள்" என்றும் "நீலகங்கரையர்கள்" என்றும் இவர்கள் தங்களது ஆட்சியை செலுத்தினார்கள். இவர்கள் "வேள்வி தீயில் பிறந்த க்ஷத்ரியர்கள்" ஆவார்கள். கங்கு என்றால் "நெருப்பு" மற்றும் "தீ" என்று பொருள்படும்.











கர்நாடக மாநிலத்தில் கங்கர்கள் வெகுசிறப்பாக ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பது அவர்களின் பல தமிழ்க் கல்வெட்டுகளில் இருந்து நமக்கு தெரியவருகிறது. கங்கர்கள் தங்களை :-
"Kuvalalapura Paramesvaran" (Lord of the city of Kolar), (குவலாளையப்புரத்து பரமேஸ்வரன். இது இன்று கோலார் என்று வழங்கப்படுகிறது).
"Ganga Kulodbhavan" (Descendant of Ganga Kulam), (கங்கை குலத்தவர்கள்).
"Kaveri Vallaban" (Lord of Kaveri), (காவேரித் தலைவன்).
"Nandigiri Nathan" (Lord of Nandi Hills), (நந்திமலைத் தலைவன்) என்று குறிப்பிட்டனர்.
கங்கர்கள் கோலார் நாட்டினை ஆண்டவர்கள் என்பதனை அவர்களின் கல்வெட்டுகள் நமக்கு தெரிவிக்கிறது :-
"Vira Ganganallur on the hill called Muchukunda-giri near Kuvalalam of the Kuvalala-Nadu in Ganga Mandalam" (Epigraphia Carnatica, Vol-X, No.120, Tamil Inscription, 1216 A.D) "கங்க மண்டலத்து குவலாளைய நாட்டு, குவலாளையம் அருகில் இருக்கும் முசுகுந்தகிரி என்ற மலைமீது இருக்கும் வீர கங்கநல்லூர்."
கங்க மன்னர்களின் பல பெயர்கள் அவர்களின் தமிழ்க் கல்வெட்டில் இருந்து தெரியவருகிறது. அவை :-
"உத்தமச் சோழ கங்கன்" (Uttamach Chola Gangan).
"விக்கிரம கங்கன்" (Vikkrama Gangan).
"வேதுமாற பாணனான உத்தமச் சோழ கங்கன்" (Vedummara Banan (alias) Uttama Chola Gangan).
"வீர சோழ கங்கனான உத்தமச் சோழ கங்கன்" (Vira Chola Gangan (alias) Uttamach Chola Gangan).
"பிரம்ம க்ஷத்ரிய கங்கப் பெருமாள் தேவன்" (Brahma Kshatriya Ganga Perumal Devan).
"கூத்தாடும் தேவர்" (Kuttadum Devar) போன்றவைகளாகும்.
கோலார் தாலுக்காவில் உள்ள கி.பி. 1273 ஆம் ஆண்டின் தமிழ் கல்வெட்டு ஒன்று (Epigraphia Carnatica, Vol-X, No.242), உத்தம சோழ கங்கர் பதிம தேவர் மகன் கங்கப்பெருமாள் அவர்கள், "வன்னிய கட்டத்திற்காக" இறைவன் தாமோதரப் பெருமாளுக்கு தானம் கொடுத்துள்ள செய்தியைப் பற்றி குறிப்பிடுகிறது. கங்கர்கள் வன்னியர்கள் என்பதால் தான் "வன்னிய கட்டளையை" ஏற்படுத்தி இறைவனுக்கு தானம் கொடுத்துள்ளர்கள்.
இதைப்போலவே, கர்நாடக மாநிலம் சித்தலகட்டா தாலுக்காவில் உள்ள கி.பி. 1278 ஆம் ஆண்டின் தமிழ் கல்வெட்டு ஒன்று (Epigraphia Carnatica, Vol-X, No.110) கங்க குல மன்னர்களை "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்று தெரிவிக்கிறது. அது :-
"Brahma Kshatriya Gangap perumal devar magan" (The Brahma Kshatriya Gangap perumal devar's son), (பிரம்ம க்ஷத்ரிய கங்கப் பெருமாள் தேவர் மகன்).
எனவே கர்நாடக மாநிலத்தில் உள்ள கங்க குல அரசர்கள் தங்களை "வன்னியர்கள்" என்றும் "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்றும் குறிப்பிட்டனர். கர்நாடக பகுதிகளில் உள்ள இவர்களின் பல கல்வெட்டுகள் தமிழ் மொழிலேயே உள்ளதால், கங்கர்கள் பண்டைய தமிழர்கள் என்பது நமக்கு தெளிவாக தெரியவருகிறது. தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலான "தொல்காப்பியத்திற்கு" பிறகு பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட "நன்னூல்" என்ற இலக்கண நூலுக்கு ஆதரவுத் தந்தவர் கோலார் பகுதியை ஆட்சிசெய்த "அமராபரண சீய கங்கன்" என்ற கங்க மன்னர் ஆவார்.
இன்றைய "போளூர்", "திருவண்ணாமலை" போன்ற பகுதிகளை பல்லவர்கள் காலம் முதல் சோழர்கள் காலம் வரை அரசாட்சி செய்தவர்கள் "பங்கள நாட்டு கங்கரையர்கள்" என்ற அரச மரபினர்கள் ஆவார்கள். இவர்கள் தங்களை திருவண்ணாமலை கோயிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் கிளிகோபுர கல்வெட்டில் :-
"பங்களனாட்டுக் கூத்தாடுந் தெவன் பிரதிவிகங்கன் வந்னிய மாதெவன் அழகிய சொழநென்" (S.I.I. Vol-VIII, No.137, Line - 2).
கூத்தாடுந் தெவன் பிரதிவிகங்கன் வந்நிய மாதெவன் அழகிய சொழநென்" (S.I.I. Vol-VIII, No.137, Line - 5). என்று குறிப்பிட்டார்கள்.
பங்கள நாட்டு கங்கரையர்களின் கிளை மரபினர்களான "நீலகங்கரையர்கள்" என்ற அரச மரபினர்கள், இன்றைய "பல்லாவரம்", "திரிசூலம்", "பம்மல்", "அனகாபுத்தூர்", "திருநீர்மலை", "தாம்பரம்", "மணிமங்கலம்", "திருக்கச்சூர்", "திருக்கழுகுன்றம்", "செங்கல்பட்டு", "காஞ்சிபுரம்", "திருமொழிசை", "பூந்தமல்லி", "நீலாங்கரை" போன்ற பகுதிகளை சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் காலங்களில் சிறப்புடன் ஆட்சி செய்தார்கள். இவர்கள் தங்களை கல்வெட்டுகளில் "பள்ளி" என்றும் "வன்னிய நாயன்" என்றும் "சம்பு குல வேந்தன்" என்றும் குறிப்பிட்டார்கள் :-
"திருச்சுரத்துக் கண்ணப்பன் தூசி ஆதி நாயகன் நிலகங்கரெயன் வன்னிய நாயநான உத்தமநிதிக்கண்ணப்பன்" (S.I.I. Vol-III, No.36, Line - 6, Manimangalam).
"இவ் வன்னியனாயனான உத்தமநிதிக் கண்ணப்பர் பக்கல் வெண்டும் பொன் கொண்டு" (S.I.I. Vol-III, No.36, Line - 9, Manimangalam).
சென்னை தாம்பரம் அடுத்துள்ள மணிமங்கலம் வைகுந்த பெருமாள் கோயிலில் இருக்கும் பாண்டியர் காலக் கல்வெட்டுகள் மணிமங்கலத்தை நீலகங்கரையர்களின் "பண்ணை" என்று குறிப்பிடுகிறது :-
"நம்முடைய பண்ணைத்தொட்டம்" (S.I.I. Vol-VI, No.263).
"பிள்ளையார் நிலகங்கையர் பண்ணையாய எங்களுரில்" (S.I.I. Vol-VI, No.262).
இதைப்போலவே, மணிமங்கலம் கைலாசநாதர் கோயிலில் இருக்கும் ஸ்ரீ வீர பிரதாப அச்சுததேவ மகாராயர் கல்வெட்டு :-
"மணிமங்கலம் வண்டுவராபதி எம்பெருமான் பாடிவெட்டை கங்கராஜாவின் மண்டபமும்" (S.I.I. Vol-VI, No.273).
என்று குறிப்பிடுகிறது. நீலகங்கரைய மன்னர்கள் கட்டிய மண்டபத்தை "கங்கராஜாவின் மண்டபம்" என்று விஜயநகர கல்வெட்டு மிகத் தெளிவாக தெரிவிப்பதால், வன்னியர்களான நீலகங்கரையர்கள் "கங்க குல அரச மரபினர்கள்" என்பது உண்மையாகிறது. இதை மெய்ப்பிக்கும் விதமாக "சோழ கங்க தேவன்" என்ற "நீலகங்கரைய மன்னரைப்" பற்றிய பல கல்வெட்டுகள் திருநீர்மலை கோயிலில் உள்ளது.
கங்க குல அரசர்களை கர்நாடக மாநிலக் கல்வெட்டு "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்று மிகத் தெளிவாக தெரிவிப்பதால். வன்னியர்கள் "பிரம்ம க்ஷத்ரியர்கள்" ஆவார்கள் என்பது தெளிவாகிறது. இதைப்போலவே வன்னியர்களான பல்லவர்களும் மற்றும் கேரள அரசர்களின் உறவினரான "அனந்தபத்மநாபனும்" தங்களை "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்றே ஆவணங்களில் குறிப்பிட்டனர். இவர்கள் அனைவரும் "பண்டைய வேளிர் அரச வம்சத்தினர்கள்" ஆவார்கள்.
வன்னியர் குல க்ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்த உடையார் பாளையம் அரசர்களும், கடலங்குடி உடையார் அரசர்களும் தங்களை "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்றே ஆவணங்களில் குறிப்பிடுகிறார்கள்.
உடையார் பாளையம் அரசர்கள் தங்களை "கங்கநூஜா வம்சத்தை சேர்ந்த பார்கவ கோத்திரத்தார்கள் என்றும் நெருப்பு கடவுள் சந்ததியில் உதித்த வன்னிய குலத்தவர்கள்" என்று தங்களது வம்சாவழி பட்டியலில் குறிப்பிட்டுள்ளார்கள். (The "Udaiyar Palayam Chieftains" refer them as "Bargava Gotram in Ganganooja Family that took its origin from Vanniya Kulam (the family of the God of Fire).
எனவே வன்னியர்கள் "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்பது மேற்குறிப்பிட்ட அடிப்படை சான்றுகளின் மூலம் மிகத் தெளிவாக தெரியவருகிறது. வன்னியர்கள் கர்நாடகத்தின் மிகப் பெரும் பகுதியான கோலார் நாட்டை ஆண்டிருக்கிறார்கள் என்பது வன்னியர்களுக்கு கிடைத்த மிகப் பெரும் பெருமையாகும். வாழ்க வன்னியர்களான கங்க குல அரசர்களின் புகழ்.
----- xx ----- xx ----- xx -----

Wednesday 26 October 2016

அமராவதிபுரவேஸ்வரா நிகலாங்கமல்லா மகாமண்டலேஸ்வர வன்னி குல கர்க்கராசா

கல்யாணி சாளுக்கிய மன்னர் ஆறாம் விக்கிரமாதித்தியனின் (கி.பி.1076 - 1126) கன்னட மொழி கல்வெட்டுகள் மகாராஷ்டிரா மாநிலம், நந்தேத் மாவட்டம், கரத்கேள் என்னும் ஊரில் உள்ளது. அக் கல்வெட்டுகளில் ஒன்று (A.R.E No.184 of 1958 - 59) சாளுக்கிய வம்சாவழி மன்னர்கள் திருபுவனமல்லா வரைக்கும் குறிப்பிட்டுவிட்டு வன்னிய குல மன்னர்களின் வம்சாவழியையும் குறிப்பிடுகிறது.














அந்த வன்னிய குல வம்சாவழி மன்னர்களில் ஒருவரான "அமராவதிபுரவேஸ்வரா நிகலாங்கமல்லா மகாமண்டலேஸ்வர கர்க்கராசா" என்பவர் கரத்கேள் என்னும் ஊரில் இருக்கும் சோமேஸ்வர கடவுளுக்கு கோயில் ஒன்றை கட்டியுள்ளார்கள்.
வன்னிய குல மன்னர் மகாமண்டலேஸ்வர கர்க்கராசாவின் மற்றொரு கல்வெட்டில் (A.R.E No.187 of 1958 - 59), அவர் பல கோயில்களை கட்டியுள்ளார்கள் என்பதை குறிப்பிடுகிறது. குறிப்பாக :-
"சுயம்பு சோமநாததேவர் கோயில்"
"தோரேஸ்வரதேவர் கோயில்"
"கலிச்சோரேஸ்வரதேவர் கோயில்"
"பிரசன்ன பைரவதேவர் கோயில்"
போன்றவைகளாகும். இதில் "தோர ராஜா", "கலிச்சோர ராஜா" போன்ற பெயர்கள் அக்னி குல மகாமண்டலேஸ்வர கர்க்கராசாவின் முன்னோர்களது பெயர்களாகும். இக் கோயில்களின் வழிப்பாட்டிற்கும், நிவேதனத்திற்கும், பராமரிப்பு பணிகளுக்கும், சன்யாசிகளுக்கும் மற்றும் பிராமணர்களுக்கு உணவளிக்கவும், பிராமணர்களின் கல்விக்கும், நிலங்களை கொடையாக கொடுத்துள்ளார் வன்னிய குல மன்னர் மகாமண்டலேஸ்வர கர்க்கராசா அவர்கள்.
"மகாமண்டலேஸ்வர கர்க்கராசா" அவர்களை, மகாராஷ்டிரா மாநிலம், நந்தேத் மாவட்டம், தேகுலூர் தாலுக்காவில் இருக்கும் கல்யாணி சாளுக்கிய மன்னர் புவனேகமல்லா இரண்டாம் சோமேஸ்வரனின் கல்வெட்டு (கி.பி. 1070) ஒன்று "அமராவதிபுரவேஸ்வரா" (Amaravatipuravesvara) என்றும் "நிகலாங்கமல்லா" (Nigalankamalla) என்றும் குறிப்பிடுகிறது.
இந்த "அக்னி குல வன்னிய பரம்பரை மன்னர்களை", ஆய்வாளர்கள் கல்யாணி சாளுக்கியர்களின் வம்சாவழியினர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்கள் கல்யாணி சாளுக்கியர்களிடம் குறுநில மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். இவர்களுடைய ஆட்சிப்பகுதியில் 20,000 கிராமங்கள் அடங்கியிருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள் :-
The Karadkhel inscriptions shows that the chiefs of the "Fire Family" were the subordinates of the Later Chalukya Kings of Kalyana and that they were ruling over the territory including the area around Karadkhel and Hottal probably called "the Yerga district" or "Yerga-1000" in our epigraph. The entire terriroty of the "Fire Race" chiefs, stated to have consisted of twenty thousand villages, probably contained several vishayas like Yera. (Epigraphia Indica, Vol-XXXV, No.21, Page-163)
----- xx ----- xx ----- xx -----
மேலை சாளுக்கியர்கள் மற்றும் கீழைச் சாளுக்கியர்கள் என்பவர்கள் ஒருவரே ஆவார்கள். சோழப் பெருவேந்தன் முதலாம் குலோத்துங்கச் சோழன் கீழைச் சாளுக்கிய மரபினன் ஆவான். இவர்களுடைய மரபினர்களுக்கு (பிச்சாவரம் சோழர்கள்) தான் சென்ற நூற்றாண்டிலும் தில்லை வாழ் அந்தணர்கள் திருமுடிச்சூட்டினார்கள். தில்லை திருநகரில் திருமுடிச்சூடிய இரண்டாம் குலோத்துங்கச் சோழனை, கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் பெருமானார் அவர்கள் "தீக்கோன்" என்று குலோத்துங்க சோழன் உலாவில் குறிப்பிடுகிறார்கள். சோழப் பெருவேந்தன் மூன்றாம் ராஜ ராஜ சோழனை, அண்ணமங்கலம் கல்வெட்டு "வன்னிய மணாளன்" (வன்னிய மாப்பிள்ளை) என்று குறிப்பிடுகிறது. சாளுக்கியர்கள் தங்களை "வேள் குல சாளுக்கியர்கள்" (வேளிர் குலத்தவர்கள்) என்று கல்வெட்டுகளில் குறிப்பிடுகிறார்கள். எனவே சாளுக்கியர்கள் என்பவர்கள் பண்டைய வேளிர் குலத்தவர்கள் ஆவார்கள். இவர்களை தான் சங்கத் தமிழ் புலவர் கபிலர் அவர்கள் புறம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள். வடபால் முனிவனின் ஓமகுண்டத்தினில் தோன்றிய வேளிர் மன்னர்கள் என்று.
----- xx ----- xx ----- xx -----

தில்லை வாழ் அந்தணர்களால் வரவேற்கப்படும் சோழ மன்னர்கள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சோழப் பெருவேந்தன் ராஜ ராஜ சோழன் அவர்கள், தங்களது குல தெய்வ கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வழிபாடு செய்ய குடும்பத்தோடு வந்தபோது, தில்லை வாழ் அந்தணர்கள், அவர்களை வரவேற்ற ஓவியக் காட்சிகள் தஞ்சை பெரிய கோயிலில் உள்ளது.








ஆயிரம் ஆண்டுகள் கடந்து, இந்த நூற்றாண்டிலும் சோழ மன்னர்களின் வாரிசுகளான பிச்சாவரம் சோழ மன்னர்களுக்கு மரியாதை கொடுக்கும் தில்லை வாழ் அந்தணர்கள். வாழ்க க்ஷத்ரிய வம்சத்து பிச்சாவரம் சோழ மன்னர்கள்.
இப்படி சான்றுகள் ஏதும் இல்லாமல், க்ஷத்ரிய வம்சத்தில் பிறக்காத திருமங்கை ஆழ்வார் / கண்ணப்ப நாயனார் வம்சத்தவர்களும், உழவு தொழிலை தங்களது குலத் தொழிலாக கொண்டவர்களும், இன்னும் சிலரும், தாங்கள் தான் சோழர்களின் வம்சத்தவர்கள் என்று மாய்ந்து மாய்ந்து சுவர் விளம்பரம் செய்கிறார்கள். ஊர் முழுவதும் கலர் கலராக போஸ்டர்கள் ஓட்டுகிறார்கள். இவர்கள் எல்லாம் சோழர்கள் காலத்தில் இப்படி செய்திருக்க முடியுமா ? கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனையில் நுழைவதற்க்கே அனுமதி பெற்றிருப்பார்கள்.
நீங்கள் எல்லாம் எந்த வகையில் சோழர்களுக்கு உரிமை கொண்டாடுகிறீர்கள் என்று கேட்டால், அவர்களிடம் பதில் இல்லை. ஏதேதோ கற்பனை கதைகளை சொல்லுகிறார்கள்.
சோழ பெருவேந்தர்களுக்கு சம்மந்தி முறையுள்ள வன்னிய குல காடவராயர்கள் (கச்சியராயர்கள்) இன்றும் இருக்கிறார்களே, அவர்களுக்கு நீங்கள் உறவினர்களா ? என்று கேட்டால், பேந்த பேந்த என்று முழிக்கிறார்கள். பிறகு எப்படி நீங்கள் சோழர்களுக்கு உரிமை கொண்டாடமுடியும் என்று கேட்டால், "புத்தகத்தில் இருக்கிறது" என்று சொல்லுகிறார்கள். என்ன இருக்கிறது புத்தகத்தில் என்று கேட்டால், அதான் இருக்கிறதே புத்தகத்தில் என்று சொல்லி விட்டு, "மாமன்னர் ராஜ ராஜ சோழனின் வாரிசுகளே வருக வருக" என்று சுவர் விளம்பரம் செய்ய சென்றுவிடுகிறார்கள்.
அட கஷ்டமே. விட்டால் இவர்கள் இதே பாணியில் "மாமன்னர் அலெக்சாண்டருக்கு" கூட உரிமை கொண்டாடிவிடுவார்கள் போல.
----- xx ----- xx ----- xx -----

சோழர்களும் சாளுக்கியர்களும் தொன்று தொட்டு உறவினர்களே !

முதலாம் குலோத்துங்கச் சோழனது காலத்தில் இருந்தே சாளுக்கியர்கள் சோழப் பேரரசில் இருக்கிறார்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் அது அவ்வாறு இல்லை என்பதை கீழ்காணும் சான்றுகள் உறுதிசெய்கின்றன :-




முதலாம் அதித்த சோழன் (கி.பி.871 - 907), பட்டத்தரசிகள் 

===================================================

"காடுவெட்டிகள் திரிபுவன மாதேவி வயிரியக்கன்". (இவள் ஒரு பல்லவ அரசி மற்றும் காடவ கோப்பெருஞ்சிங்கனின் முன்னோர்கள்).
"இளங்கோப்பிச்சி" என்பவள் இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணன் மகள்.

முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907 - 955)

========================================
"பராந்தக சோழனின் புதல்வி வீரமாதேவி இராஷ்டிரகூட மன்னன் நான்காம் கோவிந்த வல்லவரையனை மணந்தாள்"
"பராந்தக சோழனின் மற்றொரு புதல்வி அனுபமா கொடும்பாளூர்ச் வேளிர் அரசனை மணந்தாள்"


கண்டராதித்த சோழன் (கி.பி. 950 - 957) பட்டத்தரசி

==============================================

"மழவர் குலத்து செம்பியன் மாதேவியார்"


இரண்டாம் பராந்தக சோழனான சுந்தர சோழன் (கி.பி. 957 - 970)
===================================================
"அரிஞ்சயனுக்கும் வைதும்பக் குடியில் வந்த கல்யாணிக்கும் பிறந்தவர் சுந்தர சோழன்"
"சுந்தர சோழன் பட்டத்தரசியான வானவன் மாதேவி திருக்கோவிலூர் மலையமான் மகள்".
"சுந்தர சோழன் தன் மகள் குந்தவையைக் கிழைச் சாளுக்கிய மரபினன் வல்லவரையன் வந்தியதேவனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்".
உத்தம சோழன் (கி.பி. 973 - 985) பட்டத்தரசிகள்
===========================================
"இருங்கோளர் மகள் வானவன் தேவி"
"விழுப்பரையர் மகளாகிய கிழானடிகள்"
The "Vilupparaiyar" are "Vanniyas". The present "Viluppuram District" got the name from the "Vanniyar Chieftains Vilupparaiyar", who ruled that area during imperial cholas times. "விழுப்புண் பெற்ற அரையர்கள் (விழுப்பரையர்கள்)". The inscription evidences for the same :-
"This epigraph contains two portions, one in Sanskrit and the other in Tamil. The former engraved in Grantha characters records that Kotacholaka Vimana originally built of brick was now rebuilt of stone by Sendan (Jayantan) Poyakapati. The Tamil portion which is incomplete while recording the same fact describes him as Kumari Sendan alias Jayangondasola Vilupparaiya Nadalvan, a kudippalli of Poypakkam in Panaiyur-nadu in Rajendrasola-valanadu". (S.I.I. Vol-XVII, No.227), (Tiruvakkarai, Viluppuram District, Varadaraja Perumal shrine in the Chandramaulisvara temple), (Adhirajendra Chola, 1068-69 A.D).
"This seems to record some gift made by Kudippalli Sendan Nagan alias Rajendrasola Viluppadirasan of Poygaipakkam, in Panaiyur-nadu in Rajendrasola-valanadu for the merit of his younger brother Sendan Karanai alias Kidarattaraiyan" (S.I.I. Vol-XVII, No.223), (Tiruvakkarai, Viluppuram District, Varadaraja Perumal shrine in the Chandramaulisvara temple), (Kulottunga Chola-I, 1096-97 A.D).
முதலாம் ராஜ ராஜ சோழன் (கி.பி. 985 - 1012)
=========================================
"ராஜ ராஜ சோழன் தன் மகள் குந்தவையை கீழைச் சாளுக்கிய மரபினனும் வேங்கி நாட்டின் அரசனுமான விமலாதித்தனுக்கு திருமணம் செய்து கொடுத்தார்"
முதலாம் ராஜேந்திர சோழன் (கி.பி. 1012 - 1044)
===========================================
"ராஜேந்திர சோழனின் மகள் அம்மங்கைதேவி. அவள், ராஜ ராஜ சோழனின் மகளும் தன் தந்தை ராஜேந்திர சோழனின் உடன்பிறப்புமான குந்தவை, விமலாதித்தன் ஆகியோரின் மகன் இராஜ ராஜ நரேந்திரன் என்னும் இளவரசனை மணந்தாள். வேங்கி நாட்டில் வாழ்ந்த இவளுடைய மகன் தான் முதலாம் குலோத்துங்க சோழன்"
இரண்டாம் குலோத்துங்க சோழன் "தீக்கோன் நிகழ்நிலா அன்று நிருப குல துங்கன்" என்று குலோத்துங்க சோழனுலாவில் குறிப்பிடப்பட்டுள்ளான். அதாவது அவன் "அக்கினியில் தோன்றிய க்ஷத்திரிய குலத்தவன்" என்று உலா குறிப்பிடுகிறது. "நிருப குலம்" என்பது "அரச குலம்" அதாவது "க்ஷத்திரிய குலம்".
----- xx ----- xx ----- xx -----