Friday 17 January 2020

வரலாற்றில் வன்னியர்கள் நாடும் வன்னியர்கள் ஆட்சி செய்த காலமும்

முரளி நாயக்கர் பதிவிலிருந்து



வன்னியர் நாடு (திகுலர் பூமி)
-----------------------------------------------

வேலூர் மாவட்டம், அகரத்தில் இருக்கும் விஜயநகர வேந்தர் மல்லிகார்ஜுன தேவ மஹாராயரின் கல்வெட்டு ஒன்று (கி.பி.1469) :-

"அகரம் பெருமாள் ஆனைகாத்த அப்பன் சிரிகாரியம் பாற்கும் வன்னிய திம்மய நாயக்கர்"

என்று குறிப்பிடுகிறது. இவரை "வன்னிய திம்மு நாயக்கர்" என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் இக் கல்வெட்டு "வன்னிய நாட்டு நாயகஞ் செய்வார்" என்று தெரிவிக்கிறது. இந்த "வன்னிய நாடு" என்பது வன்னியர்கள் அரசாட்சி செய்த நாடாகும்.

விஜயநகர காலத்திய கி.பி.1519 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று, திருக்கோயிலூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய "வன்னிய வட்டத்தில்", குதிரை காணிக்கை என்கிற வரியை வசூலித்து, அதை கோயில் நற்பணிக்காக தன்னுடைய மூத்த சகோதரி வயிச்சம்மன் பெயரினில் திம்மப்ப நாயக்கர் அவர்கள் கொடுத்தார்கள் என்றும் இவர் வாசல் மல்லப்ப நாயக்கரின் மகனாவார் என்றும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

ஆண்டு குறிப்பிடாத மற்றொரு கல்வெட்டு ஒன்று, திம்மப்ப நாயக்கர் அவர்கள், "வன்னியர் அரசாட்சி காலத்தில்" பெறப்படும் வரியை தன்னுடைய சகோதரி வயிச்சம்மன் அவர்களின் பெயரினில் ஒரு நற்கட்டளை ஏற்படுத்தினார்கள் என்பதை தெரிவிக்கிறது. எனவே, கல்வெட்டுகளில் இருந்து :-

"வன்னிய நாடு"

"வன்னிய வட்டம்"

"வன்னியர் அரசாட்சி காலம்"

என்று தெரியவருகின்றன. "திகுலர் பூமியை கைப்பற்றியவர்கள்" என்று விஜயநகர அரசர்களை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இதை அறிஞர் பெருமக்கள் "தமிழர் பூமியை கைப்பற்றியவர்கள்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்கள் என்பதாகும். ஆனால், இந்த விளக்கம் என்பது மிகப்பெரும் பிழையாகும். எந்த ஒரு சான்றும் தமிழர் பூமி/நாடு என்று சொல்லவே இல்லை என்பதாகும்.

கி.பி.1233 ஆம் ஆண்டின் ஓய்சாள கன்னட கல்வெட்டு ஒன்று, காடவராயரிடம் இருந்து மூன்றாம் ராஜராஜ சோழனை மீட்ட தளபதிகளான அப்பண்ணா மற்றும் கோப்பையா ஆகியோரைப் பற்றி குறிப்பிடுகிறது. இதில் மிக குறிப்பாக அப்பண்ணா அவர்கள் "திகுல மண்டலத்தை கொள்ளையிட்டவர்" என்று குறிப்பிடப்பட்டார்கள் என்பதாகும்.

இந்த கன்னட கல்வெட்டு குறிப்பிடும் "திகுல மண்டலம்" என்பது வன்னியர்களான காடவராயர்கள் அரசாட்சி செய்த பகுதியாகும். இந்த கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக, கி.பி.14 ஆம் நூற்றாண்டின் "மதுரா விஜயம்" ஒன்பதாம் காண்டம் சுலோகம் - 28, வன்னிய அரசர்களை பற்றி தெரிவிக்கிறது :-

சுலோகம் - 28 : "வீர கம்பண்ணரின் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் ஸர்ப்பங்களைப்போல் சீறிக்கொண்டு பாய்ந்து வந்தன. அவ்வாறு அவை பாய்ந்து சென்றபோது கேரள மக்களின் மூச்சுக் காற்றையும், வன்னிய மன்னர்களின் நாட்டை நாசம் செய்த தீயைப் போலவும், ஆந்திர தேசத்தை தகிக்கும் சூரியன் போலவும் காணப்பட்டன"

மதுரா விஜயத்தின் மேற்குறிப்பிட்ட சுலோகம் - 28, மிகத் தெளிவாக "கேரள மக்களின் நாட்டையும்", "தமிழக மக்களின் நாட்டையும்", "ஆந்திரா மக்களின் நாட்டையும்" என்று குறிப்பிடுகிறது. இதில் "தமிழ்நாடு" என்று குறிப்பிடுவதற்கு பதிலாக "வன்னிய மன்னர்களின் நாடு" என்றே குறிப்பிடுகிறது.

கன்னட நாட்டில் இருந்த சோழர்களின் தலைக்காட்டுப் (தழைக்காடு) பகுதியை அரசாட்சி செய்த சோழ சாமந்தர்களான "தகடூர் அதியமான்", "திகுல தாமன்", "நரசிம்ம வர்மன்" ஆகியோரை ஓய்சாளர்களின் தளபதியான வீர கங்கன் அவர்கள் வெற்றிகொண்டார் என்பதாகும். இவரை கன்னட கல்வெட்டுகள் :-

''திகுலர் படையை வென்ற கண்டன்"

"திகுலர் கூட்டுப்படையை வென்ற கண்டன்"

"கங்கவாடி திகுலரை வென்ற வீர கங்கன்"

என்று குறிப்பிடுகின்றன. சோழ தளபதியான தகடூர் அதியமான் அவர்களை கன்னட கல்வெட்டுகள் "காடவ குல அதியமான்" (வன்னியர்) என்று குறிப்பிடுகின்றன. சோழ தளபதி திகுல தாமன் என்பவர் வன்னியர் என்பது அவரின் பெயரான "திகுலர்" (வன்னியர்) என்பதிலிருந்தே தெரியவருகிறது. சோழ தளபதி நரசிம்ம வர்மன் அவர்கள் "நுளம்ப பல்லவர்" (வன்னியர்) என்று தெரியவருகிறது. இதன் காரணமாகவே, ஒய்சாள தளபதி வீர கங்கன் அவர்கள் "திகுலரை வென்றவர்" (வன்னியரை வென்றவர்) என்று குறிப்பிடப்பட்டார்கள் என்பதாகும்.

திகுலர் என்பவர்கள் வன்னிய வம்சத்தவர்கள் ஆவர். இவர்கள் கர்நாடகத்தில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதாகும். தர்மராஜா கோயிலின் திரௌபதி அம்மன் கரகவிழா என்பது வன்னிய வம்சத்தவர்களான திகுலர்கள் எடுக்கும் மிகச் சிறப்பான விழாவாகும். இந்த திரௌபதி அம்மன் கரகவிழாவானது கர்நாடக மாநிலத்தின் சிறப்பு மிக்க ஒரு விழாவாகும். 

கி.பி.1125 ஆம் ஆண்டின் கன்னட கல்வெட்டு ஒன்று, சோழர் என்று குறிப்பிட "திகுலர்" என்ற பெயரினை பயன்படுத்தியுள்ளது என்பதாகும். ஒய்சாள வேந்தர் வீரராமநாத தேவரின் கோலார் பகுதி மடிவளாகத்தில் இருக்கும் தமிழ் கல்வெட்டு ஒன்று, உலகுய்யவந்த பெருமாளுக்கு "முன்னாள் வன்னியர் காலம்" முதல் இருந்த கொடைகள் தொடர்வதாக குறிப்பிடுகிறது. இந்த முன்னாள் வன்னியர் காலம் என்பது "சோழர் காலம்" என்பதாகும்.

எனவே, திகுலர் பூமி/நாடு/மண்டலம் என்பது "வன்னியர் பூமி/நாடு/மண்டலம்" என்பதாகும். இதுவே மேற்குறிப்பிட்ட சான்றுகளின் அடிப்படையினில் மிகச் சரியானதாகும்.

வரலாற்று அறிஞர்கள் மேற்குறிப்பிட்ட சான்றுகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் ''திகுலர் பூமி/நாடு/மண்டலம்'' என்பதை ''தமிழர் பூமி/நாடு/மண்டலம்'' என்று பெரும் பிழையாக பதிவு செய்திருக்கிறார்கள் என்பதாகும்.

14 comments:

  1. பல்லவர் தமிழர் அல்லர்

    வன்னியர்கள்

    பள்ளி என்பது பாண மன்னர்களின் பட்டம், வன்னி பட்டம் வில்லவர்களாலும் பயன்படுத்தப்பட்டது. பழங்காலத்தில் இந்தியா முழுவதும் பாண குலத்தினர் ஆட்சி செய்தனர். ஆனால் கிமு 1800 இல் ஆரியர்கள் மற்றும் நாகா பழங்குடியினரின் வருகைக்குப் பிறகு பல பாண குலங்கள் ஆரியர்கள் மற்றும் நாகர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர்.

    பாணர்க்கள் காடுகளில் (வன்னி, சம்பு) வசிக்க விரும்பினர். ஆரியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட பாணர் காடுகளை வெட்டுபவர்களாக வேலை செய்திருக்கிறார்கள்.

    கிமு ஆறாம் நூற்றாண்டில் மகாபாரதத்தின் போது பாஞ்சால நாடு உத்தர பாஞ்சால நாடு மற்றும் தட்சிண பாஞ்சால நாடுகளாக பிரிக்கப்பட்டது.
    கிமு ஆறாம் நூற்றாண்டில் பாரத்வாஜ பிராமண கோத்திரத்தைச் சேர்ந்த அஸ்வத்தாமா உத்தர பாஞ்சால நாட்டின் மன்னரானார். உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரம் அஹிச்சத்திரம். தட்சிண பாஞ்சால நாடு திரௌபதியின் தந்தை துருபதன் ஆண்ட நாக நாடு. வன்னியர்கள் வீர புத்திரர்கள் எனப்படும் திரௌபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக இருந்தனர்.

    வன்னியர்கள் பாண்டவர்கள் மற்றும் திரௌபதியின் சேவகராகவும் போர்வீரர்களாகவும் இருந்துள்ளனர். திகல-திர்காலா என்ற வன்னியர் கிமு 6 ஆம் நூற்றாண்டில் பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும் சேவை செய்த பாஞ்சால நாட்டில் வசித்தவர்.

    கர்நாடகாவின் திகளர் திரௌபதி மற்றும் தர்மராயரை வணங்குகிறார், அவர்களுக்காக அவர்கள் பல கோயில்களைக் கட்டியுள்ளனர். தமிழ்நாட்டின் வன்னியர்கள் அர்ஜுனனின் மகன் அரவானை வணங்குகிறார்கள்.

    ஆரியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட பாணர்கள், ஹிந்தியின் பண்டைய வடிவமான பிராகிருதத்தைப் பேசினர். பல்லவர்கள் பிராகிருதத்தையும் சமஸ்கிருதத்தையும் அதிகாரப்பூர்வ மொழிகளாகப் பயன்படுத்தினர், தமிழ் அல்ல.

    இந்த அடிமைப்பட்ட பாணர்கள் ஆரிய மற்றும் நாகா ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருந்தனர் மற்றும் அவர்களது சொந்த மக்களான அசுரர்களுக்கு எதிராக போரிட்டனர்.

    பாரசீக பஹ்லவா அல்லது பார்த்தியன் வம்சத்துடன் கலந்திருந்த அஸ்வத்தாமாவின் பிராமண வம்சத்திலிருந்து வந்த பல்லவர்கள், கிமு மூன்றாம் நூற்றாண்டில் திராவிட நாட்டின் மீது படையெடுப்பதற்காக வன்னியர் (பாண, வன்னி, வட பலிஜா) படைகளைக் கொண்டு வந்தனர்.


    வன்னியர்கள் சேர, சோழ பாண்டிய வம்சங்களை நிறுவிய தமிழ் வில்லவர் அல்ல. வன்னியர்-பள்ளி வட இந்திய பிராகிருத மொழி பேசியிருந்த பாஞ்சால நாட்டின் பாணர்கள். பழங்காலத்தில் பாஞ்சால நாடு நவீன உத்தரப்பிரதேசத்திலும் நேபாளத்திலும் இருந்தது.

    பல்லவர்

    பல்லவர் பாரத்வாஜ பிராமண கோத்ரத்தைச் சேர்ந்த துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமாவை பூர்வீகராக கொண்டவர்கள். பல்லவர்கள் பார்த்தியர்கள் (பாரசீகர்கள்) மற்றும் பிராமண பாரத்வாஜ கோத்திரம் கலர்ந்தவர்கள். பல்லவர் முதலில் அஹிச்சத்திரத்தில் இருந்து பாஞ்சால நாட்டைச் ஆண்டவர்கள். பல்லவர் உத்தரபிரதேசத்தில் இருந்து காடு வெட்டுபவர்களின் படையை கொண்டு வந்தார்கள். இந்த காடுவெட்டிகள் உத்தரபிரதேசத்தின் பாணர் அல்லது வட பலிஜா (அக்னி, வன்னி, திர்கார், திர்கால) என்னும் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பிராகிருதமும் சமஸ்கிருதமும்தான் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

    திரவுபதி பாஞ்சால நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் இந்த திகலா-வன்னியர் திரவுபதி, தர்மராயர் மற்றும் அரவானை வழிபடுகின்றனர். பெங்களூரில் திகளர் பெங்களூரு கரகத்தை தர்மராயர் கோவில்களில் வருடாவருடம் நடத்துகிறார்கள். திகல-வன்னியர் அவர்கள் திரவுபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக இருந்த வீரபுத்திரர்கள் என்று கூறுகின்றனர்.

    ஆனால் அவர்கள் ஓசூர் எல்லையைக் கடக்கும்போது பிச்சாவரம் ஜமீன்தார் சோழர் என்று சொல்லத் தொடங்குகிறார்கள். சூரப்ப சுப்பையா நாயுடு சோழர் அல்லர். பாளையக்காரர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கு பாணர்கள்- வாணதிராயர், பலிஜா நாயக்கர் அல்லது லிங்காயத்துகள் ஆவர். நாயக்கர் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாளையக்காரர் தங்களை உள்ளூர் தமிழ் சாதிகளுடன் அடையாளம் காணத் தொடங்கினர்கள். தெலுங்கு வாணாதிராயர் மற்றும் வன்னியர் மூலம் பலிஜா நாய்க்கர்கள் தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்தினர்.

    வாணாதிராயர் பாண வம்சத்தின் கொடியுடன் அதாவது காளை கொடி மற்றும் அனுமன் கொடியுடன் வந்தார்கள். வன்னியர் மற்றும் பல்லவர் ஆகியோரும் காளைக் கொடியுடன் வந்தனர், காளைக்கொடி வடுக பாண வம்சத்தின் அடையாளமாக இருந்தது. அனுமன் கொடியுடன் சேதுபதி வந்தார். சேதுபதி கலிங்க பாணர் ஆவார்

    வடுக பாண வம்சம் தமிழ் வில்லவர் வம்சத்திலிருந்து வேறுபட்டது.

    ReplyDelete
  2. பல்லவர் தமிழர் அல்லர்

    வன்னியர்கள்

    பள்ளி என்பது பாண மன்னர்களின் பட்டம், வன்னி பட்டம் வில்லவர்களாலும் பயன்படுத்தப்பட்டது. பழங்காலத்தில் இந்தியா முழுவதும் பாண குலத்தினர் ஆட்சி செய்தனர். ஆனால் கிமு 1800 இல் ஆரியர்கள் மற்றும் நாகா பழங்குடியினரின் வருகைக்குப் பிறகு பல பாண குலங்கள் ஆரியர்கள் மற்றும் நாகர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர்.

    பாணர்கள் காடுகளில் (வன்னி, சம்பு) வசிக்க விரும்பினர். ஆரியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட பாணர் காடுகளை வெட்டுபவர்களாக வேலை செய்திருக்கிறார்கள்.

    பாஞ்சால நாடு

    கிமு ஆறாம் நூற்றாண்டில் மகாபாரதத்தின் போது பாஞ்சால நாடு உத்தர பாஞ்சால நாடு மற்றும் தட்சிண பாஞ்சால நாடுகளாக பிரிக்கப்பட்டது.
    கிமு ஆறாம் நூற்றாண்டில் பாரத்வாஜ பிராமண கோத்திரத்தைச் சேர்ந்த அஸ்வத்தாமா உத்தர பாஞ்சால நாட்டின் மன்னரானார். உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரம் அஹிச்சத்திரம். தட்சிண பாஞ்சால நாடு திரௌபதியின் தந்தை துருபதன் ஆண்ட நாக நாடு. வன்னியர்கள் வீர புத்திரர்கள் எனப்படும் திரௌபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக இருந்தனர்.

    கிமு ஆறாம் நூற்றாண்டில் அதாவது மகாபாரத காலத்தில் வன்னியர்கள் பாஞ்சால நாட்டில் வசிப்பவர்களாக இருந்தனர். கிமு மூன்றாம் நூற்றாண்டில் வன்னியர்கள் பஹ்லவா-பல்லவ என்று அழைக்கப்படும் பாரசீக கலப்பு பரத்வாஜ பிராமண மன்னர்களுடன் தென்னிந்தியாவிற்கு படையெடுத்து வந்தனர்.

    பெங்களூர் கரகா

    கர்நாடகாவில், ஒவ்வொரு ஆண்டும் வன்னியர்கள் தர்மராயா கோவிலில் "பெங்களூர் கரகா" என்ற திருவிழாவை நடத்துகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரில் நடத்தப்படும் திருவிழாவில், பாஞ்சால நாட்டின் திரௌபதியின் விசுவாசமான ஊழியர்களான வீர புத்திரர்களின் வேஷத்தில் திகளர் என்றழைக்கப்படும் வன்னியர்கள் வாள்களுடன் நடனமாடுகிறார்கள்.

    வன்னியர்கள் பாண்டவர்கள் மற்றும் திரௌபதியின் சேவகராகவும் போர்வீரர்களாகவும் இருந்துள்ளனர். திகல-திர்காலா என்னும் பட்டமுடைய வன்னியர்கள் கிமு 6 ஆம் நூற்றாண்டில் பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும் சேவை செய்து பாஞ்சால நாட்டில் வசித்தவர்கள்.

    கர்நாடகாவின் திகளர் திரௌபதி மற்றும் தர்மராயரை வணங்குகிறார், அவர்களுக்காக அவர்கள் பல கோயில்களைக் கட்டியுள்ளனர். தமிழ்நாட்டின் வன்னியர்கள் அர்ஜுனனின் மகன் அரவானை வணங்குகிறார்கள்.

    ஆரியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட பாணர்கள், ஹிந்தியின் பண்டைய வடிவமான பிராகிருதத்தைப் பேசினர். பல்லவர்கள் பிராகிருதத்தையும் சமஸ்கிருதத்தையும் அதிகாரப்பூர்வ மொழிகளாகப் பயன்படுத்தினர், தமிழ் அல்ல.

    இந்த அடிமைப்பட்ட பாணர்கள் ஆரிய மற்றும் நாகா ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருந்தனர் மற்றும் அவர்களது சொந்த மக்களான அசுரர்களுக்கு எதிராக போரிட்டனர்.

    பாரசீக பஹ்லவா அல்லது பார்த்தியன் வம்சத்துடன் கலந்திருந்த அஸ்வத்தாமாவின் பிராமண வம்சத்திலிருந்து வந்த பல்லவர்கள், கிமு மூன்றாம் நூற்றாண்டில் திராவிட நாட்டின் மீது படையெடுப்பதற்காக வன்னியர் (பாண, வன்னி, வட பலிஜா, பள்ளி, திர்காலா) படைகளைக் கொண்டு வந்தனர்.


    வட பலிஜா

    வன்னியர்கள் மகாபலியின் வழிவந்த பாணர்கள் என்பதால் அவர்கள் பலிஜா என்று அழைக்கப்பட்டனர். வன்னியர் வட பாஞ்சால நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் வட பலிஜா என்று அழைக்கப்பட்டனர். இது வன்னியரை ஆந்திராவின் பலிஜா நாயக்கர் என்ற பழங்குடி பாணர் குலங்களிலிருந்து வேறுபடுத்துவதற்காகும். ஆந்திரப் பிரதேசத்தில் வட பலிஜா என்று அழைக்கப்படும் வன்னியர்கள் பெரும்பாலும் மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதியில் வசிக்கின்றனர். மற்ற வன்னியர்கள் தங்களை காப்பு சமூகமாக அடையாளப்படுத்த முயற்சிக்கின்றனர். இதை காப்பு சமூகத்தினர் கடுமையாக மறுத்துள்ளனர். ஆயினும்கூட, வன்னியர்கள் தங்களை ஆந்திரப் பிரதேசத்தில் வன்னே காப்பு என்றும் பள்ளே காப்பு என்றும் அழைக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் விவசாயத் தொழிலாளர்கள்.

    ReplyDelete
  3. பல்லவர் தமிழர் அல்லர்

    வில்லவர் மற்றும் பாணர்

    வில்லவர் மற்றும் பாணர் இருவரும் மகாபலியின் வழிவந்தவர்கள். வில்லவர் மகாபலியை மாவேலி என்றும் அழைத்தார்கள். துளு ஆலுபா பாண வம்சங்கள் எல்லாம் ஹிரண்யகர்பா விழாவை நடத்தினர். வில்லவர் பாண்டியன் வம்சம் மற்றும் ஆந்திர பாணர், துளு ஆலுபா பாண வம்சங்கள் எல்லாம் ஹிரண்யகர்ப விழாவை நடத்தினர். அந்த விழாவில் வில்லவர் அல்லது பாணர் ஆட்சியாளர்கள் தாம் அசுர மன்னன் மஹாபலியின் தாத்தாவான ஹிரண்யகசிபுவின் வழித்தோன்றல் எனக் கூறினர்.
    வட இந்திய பாணர்கள் பிராகிருதத்தை பயன்படுத்திய போது வில்லவர் தமிழ் பேசினார்கள். வில்லவர் மற்றும் பாணர்கள் பழங்காலத்தில் உறவினர்களாக இருந்தபோதிலும் பரம எதிரிகளாக மாறினர். சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் தமிழ் வல்லவர் துணைக் குலங்களான வில்லவர் மலையர் மற்றும் மீனவர் எனப்படும் வில்லவரின் கடல் செல்லும் குலத்தால் நிறுவப்பட்டது. பிற்காலத்தில் வில்லவர், மலையர், வானவர் போன்ற அனைத்து வில்லவர் குலங்களும், மீனவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கினர்.


    வில்லவர் வேறு வன்னியர் வேறு

    வன்னியர்கள் சேர, சோழ பாண்டிய வம்சங்களை நிறுவிய தமிழ் வில்லவர் அல்ல. வன்னியர்-பள்ளி வட இந்திய பிராகிருத மொழி பேசியிருந்த பாஞ்சால நாட்டின் பாணர்கள். பழங்காலத்தில் பாஞ்சால நாடு நவீன உத்தரப்பிரதேசத்திலும் நேபாளத்திலும் இருந்தது.

    காளைக் கொடி பாணர் குலத்தைச் சேர்ந்தது. பல்லவ அரசர்களுக்குச் சொந்தமான சிங்கக் கொடி பிராமண பாரத்வாஜா வம்சத்தைச் சேர்ந்தது. பல்லவ மன்னர்கள் பாரத்வாஜ பிராமணர்கள் மற்றும் பாரசீகத்தின் பார்த்தியன்-பஹ்லவா வம்சத்தின் கலப்பு இனத்தைச் சேர்ந்தவர்கள். பல்லவ மன்னர்கள் பாண வன்னியர்களை ஆண்டவர்கள் ஆதலால் தங்களை நந்தி(பாணக்கொடி) வர்மா(அரசர்) பல்லவன்(பாரசீக பஹ்லவ வம்சம்) என்று அழைத்தனர். பல்லவ வம்சத்தின் தலைநகரம் மகாபலி புரம் ஆகும், இது பாண மன்னன் மகாபலியின் பெயரால் அழைக்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பல்லவ மன்னர்கள் தங்கள் பலிஜா-வன்னியர் வீரர்களின் ஆதரவைப் பெற மகாபலி போல் நடித்தனர்.

    ஐந்தாம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் பல்லவர்கள் தமிழைப் பயன்படுத்தியிருந்தாலும், அவர்கள் தமிழை ஆட்சி மொழியாகப் பயன்படுத்தவில்லை. அதிகாரப்பூர்வ மொழி சமஸ்கிருதம் மற்றும் பிராகிருதம். பல்லவ மன்னர்கள் கி.பி.13ஆம் நூற்றாண்டில் தமிழைப் பயன்படுத்தத் தொடங்கினர். முதலாம் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1216 முதல் 1242 வரை) தமிழ்ப் பெயரைப் பயன்படுத்திய முதல் பல்லவ மன்னர் ஆவார்.

    கோப்பெருஞ்சிங்கன் ஆந்திர பாண வம்சத்தினர் பயன்படுத்திய மணவாளப்பெருமாள் பட்டத்தை பயன்படுத்தினார்.  முதலாம் கோப்பெருஞ்சிங்க மன்னன் பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவன் அல்ல, ஆனால் அவன் ஆந்திர பாணர் வம்சத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம். மணவாளப்பெருமாள் மற்றும் காடவர் பட்டம் ஆந்திர பாணர்களுக்கு சொந்தமானது.  பாணர் காடுகளில் வாழ்ந்தார். 

    தமிழ்

    பல்லவ வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு வன்னியர் தமிழ் மொழியை ஏற்றுக்கொண்டிருக்கலாம்.  அல்லது வன்னியர் இடைக்காலத்தில் பிராகிருதம், தமிழ் இரண்டையும் பயன்படுத்தியிருக்கலாம்.  கிமு 300 முதல் கிபி 275 வரை பல்லவர் ஆந்திராவை ஆண்டதால் வன்னியர்களால் பயன்படுத்தப்பட்ட முதல் திராவிட மொழி தெலுங்கு.  கி.பி 300க்குப் பிறகு பல்லவர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்தபோது வன்னியர்கள் தமிழ் கற்கத் தொடங்கியிருக்கலாம்.  கி.பி.1500க்குப் பிறகு வன்னியர் கர்நாடகாவுக்கு தோட்டக்கலைத் தொழிலாளியாகச் சென்றிருக்கலாம்.  கர்நாடக வன்னியர்கள் திகளர் என்று அழைக்கப்படுகிறார்கள். 
    மைசூரைச் சுற்றி காணப்படும் வன்னியர்கள் சம்புவ ராயர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சம்புவராயர் விவசாய கூலித்தொழிலாளிகள்.

    தென் தமிழ்நாட்டிலும், கேரளாவின் தென்பகுதியிலும் வன்னியர்கள் சவளக்காரர் என்று அழைக்கப்படும் மீனவர்கள். பெரும்பாலான சவளக்காரர்கள் போர்த்துகீசிய காலத்தில் லத்தீன் கத்தோலிக்கராக மாற்றப்பட்டனர்.

    வன்னியர் குலங்கள்.

    ஆந்திரப் பிரதேசம்
    1.வன்னே காப்பு
    2.பள்ளே காப்பு
    3. வட பலிஜா

    தமிழ்நாடு
    1. வன்னியர்
    2. பள்ளி
    3.காடுவெட்டி
    4. நாயக்கர்
    5.சவளக்கரர்

    கர்நாடகா
    1. திகளர்
    2. சம்புவ ராயர்

    கேரளா
    1.சவளர்

    ReplyDelete
  4. பல்லவர் தமிழர் அல்லர்


    மொழி

    கேரளாவில் வன்னியர்களை சவளர் என்று அழைக்கப்படும் உள்நாட்டு மீனவர்கள்.  வன்னியர்கள் நான்கு திராவிட மொழிகள் பேசுகிறார்கள்.  ஒருவேளை தெலுங்கு அவர்களுக்கு பிடித்த மொழியாக இருந்திருக்கலாம். 

    தமிழ்நாட்டில் வன்னியர்கள் தெலுங்கு வார்த்தைகள் கலந்த தமிழ் போன்ற ஒரு மொழியைப் பேசுகிறார்கள். கர்நாடகாவில் திகளர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் கலந்த திகளரி என்றும் அழைக்கப்படும் தெகிழ் மொழியைப் பேசுவார்கள்.

    பல்லவர்

    பல்லவர் பாரத்வாஜ பிராமண கோத்ரத்தைச் சேர்ந்த துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமாவை பூர்வீகராக கொண்டவர்கள். பல்லவர்கள் பார்த்தியர்கள் (பாரசீகர்கள்) மற்றும் பிராமண பாரத்வாஜ கோத்திரம் கலர்ந்தவர்கள். பல்லவர் முதலில் அஹிச்சத்திரத்தில் இருந்து பாஞ்சால நாட்டைச் ஆண்டவர்கள். பல்லவர் உத்தரபிரதேசத்தில் இருந்து காடு வெட்டுபவர்களின் படையை கொண்டு வந்தார்கள். இந்த காடுவெட்டிகள் உத்தரபிரதேசத்தின் பாணர் அல்லது வட பலிஜா (அக்னி, வன்னி, திர்கார், திர்கால) என்னும் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பிராகிருதமும் சமஸ்கிருதமும்தான் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

    திரவுபதி பாஞ்சால நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் இந்த திகலா-வன்னியர் திரவுபதி, தர்மராயர் மற்றும் அரவானை வழிபடுகின்றனர். பெங்களூரில் திகளர் பெங்களூரு கரகத்தை தர்மராயர் கோவில்களில் வருடாவருடம் நடத்துகிறார்கள். திகல-வன்னியர் அவர்கள் திரவுபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக இருந்த வீரபுத்திரர்கள் என்று கூறுகின்றனர்.

    ஆனால் அவர்கள் ஓசூர் எல்லையைக் கடக்கும்போது பிச்சாவரம் ஜமீன்தார் சோழர் என்று சொல்லத் தொடங்குகிறார்கள். சூரப்ப சுப்பையா நாயுடு சோழர் அல்லர். பாளையக்காரர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கு பாணர்கள்- வாணதிராயர், பலிஜா நாயக்கர் அல்லது லிங்காயத்துகள் ஆவர். நாயக்கர் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாளையக்காரர் தங்களை உள்ளூர் தமிழ் சாதிகளுடன் அடையாளம் காணத் தொடங்கினர்கள். தெலுங்கு வாணாதிராயர் மற்றும் வன்னியர் மூலம் பலிஜா நாய்க்கர்கள் தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்தினர்.

    வாணாதிராயர் பாண வம்சத்தின் கொடியுடன் அதாவது காளை கொடி மற்றும் அனுமன் கொடியுடன் வந்தார்கள். வன்னியர் மற்றும் பல்லவர் ஆகியோரும் காளைக் கொடியுடன் வந்தனர், காளைக்கொடி வடுக பாண வம்சத்தின் அடையாளமாக இருந்தது. அனுமன் கொடியுடன் சேதுபதி வந்தார். சேதுபதி கலிங்க பாணர் ஆவார்.

    ஆனால் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், வட இந்திய பாணர்களான வன்னியர், ஆந்திர பாணர் வம்சம் மற்றும் வில்லவர்-நாடார் வம்சங்கள் ஆகியவை நெருங்கிய தொடர்புடையவை. அனைவரும் அசுர மன்னன் மகாபலியின் வழிவந்தவர்கள்.அனைவரும் அசுர மன்னன் மகாபலியின் வழிவந்தவர்கள். வில்லவர் பாண்டியன் வம்சம் மற்றும் ஆந்திர பாணர்,

    வடுக பாண வம்சத்தினராய வன்னியர்கள் தமிழ் வில்லவர் வம்சத்திலிருந்து வேறுபட்டவர்கள். பாணர் குலங்கள் தீ வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்தியா முழுவதையும் ஆண்ட இந்தியாவின் ஆரம்பகால க்ஷத்திரியர்களில் ஒரு குலமாவர்.

    வில்லவர் தமிழ் சாம்ராஜ்யங்களை அதாவது சேர சோழ பாண்டிய சாம்ராஜ்யங்களை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் அதாவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிறுவினார்கள். பல்லவரும் வன்னியர்களும் கிமு 3 ஆம் நூற்றாண்டில்தான் தென்னிந்தியாவை ஆக்கிரமித்து சோழர்களால் ஆளப்பட்ட ஆந்திராவை ஆக்கிரமித்தனர்.

    _________________________________________



    கர்நாடகாவில் உள்ள பேகூரில் உள்ள திகளர் கிறிஸ்தவர்கள்

    https://www.thehindu.com/news/cities/bangalore/a-past-more-glorious-than-its-present/article3254209.ece

    _______________________________________


    திரௌபதியால் உருவாக்கப்பட்ட திகளர் வீர குமாரர்கள்

    https://newsable.asianetnews.com/south/six-facts-you-didnt-know-about-century-old-festival-karaga

    _______________________________________


    கேரளாவில் சவளர் சமூகம்

    http://chavalakkaran.blogspot.com/


    ________________________________________

    ReplyDelete
  5. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    ReplyDelete
  6. வில்லவர் மற்றும் பாணர்

    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவர்.

    ReplyDelete
  7. இந்திய துணைக்கண்டத்தின் அசுர-திராவிட ஆரம்பம்

    பண்டைய வட இந்தியாவில் திராவிட ஆட்சி

    பல திராவிட இராச்சியங்கள் வட இந்தியாவிலும் பண்டைய காலங்களில் இருந்தன. பண்டைய இலக்கியங்களில், திராவிட ஆட்சியாளர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்பட்டனர். பண்டைய இந்தியாவில், தானவர், தைத்யர், பாணர், மீனா மற்றும் வில்லவர் ராஜ்யங்கள் இருந்தன. கங்கை நதியின் வடக்குப் பகுதியில் மட்டுமே ஆரியர்கள் ஆதிக்கம் செலுத்தினர். திராவிட வேர்களைக் கொண்ட பல பாணாசுரர்கள் வட இந்தியாவை ஆண்டனர்.

    திராவிட வில்லவர்-பாணர் வம்சங்கள்
    1. தானவர் தைத்யர்
    2. பாண மீனா வம்சங்கள்.
    3. வில்லவர் - மீனவர் வம்சங்கள்

    தானவரும் வில்லவரும் பாணரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், அவர்கள் மகாபலி பட்டம் பெற்ற அரசர்களால் ஆளப்பட்டவர்கள்.

    தானவர் மற்றும் தைத்யர்

    இந்தியாவின் ஆரம்பகால இலக்கியங்களில் தானவா மற்றும் தைத்யா என்று அழைக்கப்படும் இரட்டை பழங்குடியினரும், சிந்து பகுதியில் அவர்களின் மன்னரான மகாபலியும் குறிப்பிடப்பட்டனர். தனு என்பது வில் என்று பொருள். தானவா குலங்கள் திராவிட வில்லவர் - பாண மக்கள் ஆயிருக்கலாம். வில்லவர் மற்றும் பாண மக்களும் மஹாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். வில்லவர் மற்றும் பாண மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகசிபு மன்னர் மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    தானவர் , தைத்யர், பாணர் அனைவரையும் அசுரர்கள் என்று அழைத்தனர். திராவிடர்களும் அசுரர்களும் ஒரே குல மக்களாக இருக்கலாம்.

    சிந்து சமவெளியில் தானவர்(கிமு 1800)

    சிந்து மன்னர் விரித்ரா (விருத்திரர்)

    விரித்ரா ஒரு ஆரம்பகால தானவா மன்னர், அவர் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தை ஆட்சி செய்திருக்கலாம்.

    நீர்ப்பாசனத்தைக் கட்டுப்படுத்த சிந்து நதியின் கிளைகளில் பாம்புகளின் வடிவத்தை ஒத்த பல கல் அணைகளை விரித்ரா கட்டியிருக்கலாம். சிந்து பகுதியில் விரித்ராவுக்கு 99 கோட்டைகள் இருந்தன.

    ரிக் வேதத்தின்படி, விரித்ரா இந்திரனால் கொல்லப்படும் வரை உலகின் அனைத்து நீரையும் சிறைபிடித்தான். விரித்ராவின் 99 கோட்டைகளையும் இந்திரன் அழித்தான்.

    விரித்ரன் போரின் போது இந்திரனின் இரண்டு தாடைகளை உடைத்தார், ஆனால் பின்னர் இந்திரனால் வீசப்பட்டார், வீழ்ச்சியடைந்தபோது, ​​ஏற்கனவே சிதைந்துபோன கோட்டைகளை நசுக்கினார்.

    இந்த சாதனை காரணம், இந்திரன் "விரித்ரஹான்" அதாவது விரித்ராவின் கொலைகாரன் என்று அறியப்பட்டார்.

    இந்திரனின் சகோதரர் உபேந்திரா

    இந்திரனின் சகோதரன் உபேந்திரனை விருத்திரனை தாக்க இந்திரன் கட்டளையிட்டான். உபேந்திரா விருத்திராவை தாக்கி கொன்றார். உபேந்திரா விஷ்ணு என்றும் கோபா என்றும் அழைக்கப்பட்டார். கோபா என்றால் கால்நடைகளின் பாதுகாவலர் அல்லது மேய்ப்பவர் என்று பொருள்.

    விரித்ராவின் தாய் தனு

    விரித்ராவின் தாய் தனு அசுரரின் தானவா இனத்தின் தாயாகவும் இருந்தவர், பின்னர் இந்திரனால் அவரது இடியால் தாக்கப்பட்டு தோற்கடிக்கப்பட்டார்.

    மூன்று தேவர்கள், வருணன், சோமன் மற்றும் அக்னி ஆகியோர் வ்ரித்ராவுக்கு எதிரான போராட்டத்தில் அவருக்கு உதவுமாறு இந்திரனால் வற்புறுத்தப்பட்டனர். அதேசமயம் அதற்கு முன்பு அவர்கள் விரித்ராவின் பக்கத்தில் இருந்தபோது விரித்ராவை தந்தையே என்று அழைத்து வந்தனர்.

    சிந்து மன்னர் வாளா

    விரித்ராவின் சகோதரரான வாளா அணை கட்டி தடுப்பவரான விரித்ராவுக்கு இணையாக அணை கட்டிய போது நதிகளை விடுவிப்பதற்காக இந்திரனால் கொல்லப்பட்ட ஒரு கல் பாம்பு (அணைக்கட்டு) உண்டாக்கியவர்.

    ரிக் வேதம் 2.12.3 இந்திரன் டிராகனைக்(அணைக்கட்டு) கொன்றது, ஏழு நதிகளை(சப்த சிந்து நதிகள்) விடுவித்தது, மற்றும் வாலாவின் குகையில் இருந்து கின்களை (பசுக்களை) வெளியேற்றியது.

    ReplyDelete
  8. அசுர திராவிட துடக்கம்

    சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு

    சிந்து சமவெளியில் சிந்து நதியி்ன் ஏழு துணை நதிகளிலும் பாம்புகளின் வடிவத்தில் விரிவான அணைகள் கட்டப்பட்டிருந்தது. சிந்து சமவெளி ஒரு விவசாய நாடாக இருந்ததால் அசுர- தானவா மன்னர் விருத்திரர் பல அணைகளைக் கட்டினார். ஆரியர்கள் பெரும்பாலும் ஆயர்களாதலால் ஆறுகள் தடுக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை . ஆரியர்களின் மன்னனான இந்திரன், அசுர மன்னன் விருத்திரருடன் சண்டையிட்டு அவரைக் கொன்றார். இந்திரன் விரித்ரன் கட்டிய அனைத்து அணைகளையும், விரித்ரனுடைய 99 கோட்டைகளையும் அழித்தார்.

    விரித்ராவுக்குப் பிறகு அவரது சகோதரர் வாளா சிந்து பள்ளத்தாக்கின் மன்னரானார். மீண்டும் வாளா அனைத்து கிளை நதிகளிலும் அணைகள் கட்டினார். வாளா ஆரியர்களின் கால்நடைகளையும் கைப்பற்றி ஒரு குகையில் அடைத்தார். இந்திரன் வாளா மன்னரையும் கொன்றார். வாளா மன்னர் கட்டிய நீண்ட கல்பாம்பு போல காணப்பட்ட அணைகளையும் இந்திரன் தகர்த்தார். இந்திரன் அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் குகையிலிருந்து விடுவித்தார். அணைகள் அழிக்கப்பட்டதால் நீர்ப்பாசனம் மற்றும் வேளாண்மை தோல்வியடைந்தது. இறுதியில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகம் முடிவுக்கு வந்தது.


    பிராஹுய்

    பலூசிஸ்தான் பகுதியில் உள்ள மெஹர்கரில், ஹரப்பா-சிந்து சமவெளிக்கு முந்தைய நாகரிகம் (கிமு 7000 முதல் சி. 2500 கிமு வரை) இருந்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் மக்கள் இன்றும் பிராஹுய் என்ற வட திராவிட மொழியைப் பேசுகிறார்கள்.

    ReplyDelete
  9. அசுர திராவிட துடக்கம்

    தைத்யர் மற்றும் தானவர் குலங்களின் கிளர்ச்சி

    தைத்ய குலத்தின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார். தைத்ய மன்னர் மகாபலியின் தலைமையில் தானவர்கள் தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு) எதிராக கிளர்ச்சி செய்தனர்.

    மகாபலியைக் கொன்ற உபேந்திரா

    மகாபலி திராவிட தானவ மற்றும் தைத்திய பழங்குடியினரின் நீதியும் கருணையும் கொண்ட மன்னன் ஆவார்.
    இந்திரனின் சகோதரனான உபேந்திரா, பிராமணனாக மாறுவேடமிட்டு மகாபலியிடம் சென்று அவனைக் கொன்று வெற்றி பெற்றார். இது உபேந்திராவை ஆரியர்களிடையே பிரபலமாக்கியது. ஆரம்பகால வேத காலத்தில் கிமு 1500 மற்றும் கிமு 500 க்கு இடைப்பட்ட காலத்தில் உபேந்திரா விஷ்ணு எனப்படும் சிறு தெய்வமாக வணங்கப்பட்டார். கிமு 1100 முதல் கிமு 500 வரையிலான வேத காலத்தின் பிற்பகுதியில், ஆரிய இனத்தின் முக்கிய கடவுளாகவும் பாதுகாவலராகவும் இருந்த மகாவிஷ்ணுவாக உபேந்திரா அடையாளம் காணப்பட்டார்.


    சத்திய யுகத்தின் போது தேவர்கள் (ஆரியர்கள்) தானவர்களை சொர்க்கத்திலிருந்து (வட இந்தியாவிலிருந்து) நாடுகடத்தினர்.

    நாடுகடத்தப்பட்ட பின்னர், தானவர்கள் விந்திய மலைகளில் தஞ்சம் புகுந்தனர். தானவா என்றால் தனு உள்ளவர்கள் அதாவது வில் உள்ளவர்கள், வில்லவர். பாணா மற்றும் அவர்களது கிளைக்குலங்களான தைத்யா மற்றும் தானவா ஆகியோர் அசுரர்களாக கருதப்பட்டனர். திராவிட வில்லவர், மீனவர் மற்றும் அசுர பாணா, மீனா குலங்கள் பொதுவான மூதாதையர்களைக் கொண்டிருந்தனர்.

    தானவா மல்யுத்த வீரர்கள்

    கம்ச மன்னரின் உத்தரவின்படி, அக்ரூரா என்ற யாதவ மூப்பர் கிருஷ்ணர் மற்றும் பலராமரை,மதுராவில் நடந்த ஒரு தனுஷ் யாகம் மற்றும் நட்பு மல்யுத்த போட்டியில் கலந்து கொள்ள அழைத்திருந்தார். பயங்கரமான தானவா மல்யுத்த வீரர்கள் சானுரா மற்றும் முஷ்டிகா ஆகியோர் இளம் கிருஷ்ணர் மற்றும் பலராமனால் கொல்லப்பட்டனர்.

    புத்தமதத்தில் தானவர்

    புத்தமதத்தில் அவர்கள் வில் தரிக்கும் தானவேகச அசுரர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

    முந்தைய காலகட்டத்தில் இந்தியாவில் வசித்து வந்தவர்கள் பெரும்பாலும் திராவிடர்கள் ஆவர். அவர்கள் பல திராவிட நாடுகளை உண்டாக்கினர். தென்னிந்தியாவில் பல பாண்டியன் ராஜ்யங்கள் வில்லவர்-மீனவர் குலங்களால் நிறுவப்பட்டன.

    வட இந்தியாவில் வில்லவர் தொடர்புடைய பாணா-மீனா வம்சங்கள் மகாபலி என்று அழைக்கப்படும் மன்னர்களால் ஆளப்பட்ட ஏராளமான பாணப்பாண்டியன் ராஜ்யங்களை நிறுவினர்.

    மகாபலி வம்சம்

    வில்லவர் மற்றும் பாணர்கள் இருவரும் அசுர மன்னர் மகாபலி மற்றும் அவருடைய மூதாதையரான ஹிரண்யகசிபு ஆகியோருடைய வம்சத்திலிருந்து வந்ததாகக் கூறினர். தென்னிந்திய பாண மற்றும் பாண்டியன் மன்னர்கள் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தி வந்தனர். ஹிரண்யகசிபுவின் பண்டைய தலைநகரம் இரணியல் (ஹிரண்ய சிம்ஹ நல்லூர்) என்று அழைக்கப்படுகிறது.

    கன்னியாகுமரி புராணத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் தேவர்கள் மற்றும் அசுரர்களின் பொதுவான கடவுளான பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தார். முழு பிரபஞ்சத்திலும் ஆணின் அல்லது பெண்ணின் கைகளில் கொல்லப்படமாட்டார் என்ற அழியாத வரத்தை பாணாசுரன் பெற்றார். திருமணமாகாத பெண் அல்லது குழந்தையால் மட்டுமே பாணாசுரனை கொல்ல முடியும். கன்னியாகுமரி பராசக்தியின் அவதாரமாக பிறந்தார். பாணாசுரன் கன்னியாகுமரியை கடத்த முயன்றார் ஆனால் கன்னியாகுமரி தேவியால் கொல்லப்பட்டார்.

    சீதையின் சுயம்வரத்தில் பாணாசுரன்

    பாணாசுரன் மற்றும் ராவணன் இருவரும் சீதா தேவியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டனர். ஆனால் இராவணனும் பாணாசுரனும் வில்லைப் பார்த்தவுடன் அமைதியாக நழுவி விட்டனர்.

    மகாபாரத காலத்தில் பாணாசுரன்

    பாணாசுரனின் மகள் உஷா பகவான் கிருஷ்ணரின் பேரன் அனிருத்தனை கனவு கண்டார். உஷாவின் தோழி சித்ரலேகா, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் மூலம், கிருஷ்ணரின் அரண்மனையில் இருந்து அனிருத்தனை கடத்தி, உஷாவிடம் கொண்டு வந்தார். அனிருத்தன் உஷாவை விரும்பினார் ஆனால் பாணாசுரன் அவனை சிறையில் அடைத்தார். இது பகவான் கிருஷ்ணர் பலராமன் மற்றும் பிரத்யும்ன னுடன் ஒரு போருக்கு வழிவகுத்தது, பாணாசுரன் தோற்கடிக்கப்பட்டார். அதன் பிறகு உஷாவுடன் அனிருத்தனுக்கு திருமணம் நடந்தது.

    ஆந்திராவில் ஒரு பாண இராச்சியம் இருந்தது, இது விஜயநகர நாயக்கர்கள் உட்பட பலிஜாக்களின் பல ஆளும் வம்சங்களை உருவாக்கியது. மன்னன் மகாபலியில் தோன்றியதால் அவர்கள் பலிஜாக்கள் என்று அழைக்கப்பட்டனர். பலிஜாக்கள் பாணாஜிகா அல்லது வளஞ்சியர் என்றும் அழைக்கப்பட்டனர்.
    வாணாதி ராயர், வன்னியர் மற்றும் வாணர் ஆகியவையும் தெலுங்கு பாணர்களின் பாண வம்ச பட்டங்கள் ஆகும்.

    ReplyDelete
  10. அசுர திராவிட துடக்கம்

    வாணர்

    பாணர் காடுகளில் தங்க விரும்பினர். எனவே கடம்ப பாண தலைநகரான பாணவாசியை வனவாசி என்றும் அழைத்தனர். அவர் வாணர் என்றும் மேலும் வானரர் என்றும் அழைக்கப்படுகின்றனர். வானர அரசர் பாலியின் தலைநகரம் கிஷ்கிந்தா. பலிஜா நாயக்கர் அரச குடும்பத்தினர் கிஷ்கிந்தா அருகே உள்ள ஆனேகுண்டியில் தங்கியுள்ளனர்.
    விஜயநகரை ஆட்சி செய்த பலிஜா நாயக்கர்களின் தலைநகரம் கிஷ்கிந்தாவிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ள ஹம்பி ஆகும்.

    கர்நாடகாவில் பாணப்பாண்டியன் இராச்சியங்கள்

    கர்நாடகாவில் கடம்ப இராச்சியம், நூறும்பாடா பாண்டியன் இராச்சியம், சான்றாரா பாண்டியன் இராச்சியம், உச்சாங்கி பாண்டியன் இராச்சியம், ஆலுபா பாண்டியன் இராச்சியம் உள்ளிட்ட பல பாணப்பாண்டியன் இராச்சியங்கள் இருந்தன.

    கடலோர கர்நாடகாவை ஆண்ட துளுவ வம்சம் பாணப்பாண்டியன் குலமாகும். பாண சாளுவ வம்சம் கோவாவை ஆண்டது. சாளுவ மற்றும் துளுவ பாணகுலங்கள் விஜயநகர் பேரரசின் இரண்டு வம்சங்களை உண்டாக்கின.


    பாண்பூர்

    வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாண்பூர் அல்லது பான்பூர் என்று அழைக்கப்படும் பண்டைய பாண வம்ச தலைநகரங்கள் உள்ளன. அங்கிருந்து பாணர் அந்த பிரதேசங்களை ஆட்சி செய்தார்கள்.

    மகாபலி

    மகாபலி / மாவேலி பட்டத்துடன் பல மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர். ஒரு மகாபலி அசாமில் சோனித்பூரரில் இருந்து ஆட்சி செய்தார், மற்றொரு மகாபலி கேரளாவிலிருந்து ஆட்சி செய்தார், மேலும் மற்றொரு மகாபலி சிந்து சமவெளியில் தைத்யா மற்றும் தானவர்களின் ராஜாவாக இருந்தார். அவர் ஆரம்பகால ஆரியர்களுக்கு எதிராக போராடினார்.


    மீனா வம்சம்

    இதேபோல் மீனா வம்சம் ராஜஸ்தான், சிந்து மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரியர்க்கு முந்தைய ஆட்சியாளர்களாக இருந்தனர், அவர்கள் திராவிட வேர்களைக் கொண்டிருக்கலாம். பாணா இராச்சியம் மற்றும் மீனா-மத்ஸ்ய ராஜ்யம் ஆரியவர்த்தம் கங்கை சமவெளியில் உருவாக்கப்பட்ட பின்னரும் இருந்து வந்தது. பாணா-மீனா ராஜ்யங்கள் வேத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

    மத்ஸ்ய ராஜ்யத்தின் மன்னராகிய விராட மன்னர் பாண்டவர்களை அஞ்ஞாதவாச காலத்தில், அங்கு ஒரு வருடம் வரை மறைத்து வைத்திருந்தார்.
    மீனா-மத்ஸ்ய மன்னன் விராடனின் மகள் உத்தரா பின்னர் அர்ஜுனனின் மகன் அபிமன்யுவை மணந்தார்.

    பாணா மீனா குலங்கள்

    வட இந்தியாவில் வில்லவர் மற்றும் மீனவர் ஆகியவர்கள், பாணா மற்றும் மீனா என்ற பெயர்களால் அறியப்பட்டனர். பாணா வடக்கில் பாணப்பாண்டியன் இராச்சியங்களையும், மீனா வட இந்தியாவில் மீனா அல்லது மத்ஸ்ய ராஜ்யத்தையும் நிறுவினார்கள். மலைப்பாங்கான பகுதிகளை ஆண்ட பில் பழங்குடியினர் வில்லவரின் துணைக்குழுக்களாகவும் இருக்கலாம்.

    கி.பி 1030 வரை மீனா ராஜ்ஜியம் ராஜஸ்தானை ஆட்சி செய்தது. நவீன ஜெய்ப்பூர் மீனா குலத்தாரால் நிறுவப்பட்டது. கடைசி சக்திவாய்ந்த மீனா ஆட்சியாளர் ஆலன் சிங் சாந்தா மீனா. இந்தக் காலத்தில் கச்வாஹா ராஜபுத்திரர்களால் மீனாக்கள் தோற்கடிக்கப்பட்டனர்.

    பண்டைய வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு ராஜ்யங்கள் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்தவை. சில ராஜ்யங்கள் பண்டைய அசுர-திராவிட வம்சாவளியைக் கொண்டிருக்கலாம், மற்றவை நாக மற்றும் ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவை. சிலர் வெளிநாட்டினர்.

    பாண ராஜ்யங்களின் வீழ்ச்சி

    வட இந்தியாவை ஆக்கிரமித்த சித்தியன், பார்த்தியன் மற்றும் ஹுண படையெடுப்பாளர்களின் வருகையின் பின்னர் பாண ராஜ்யங்கள் வலிவிழந்தன. பாணா-மீனா ராஜ்யங்கள் ராஜபுத்திர ராஜ்யங்களால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். மீனா இராச்சியம் கிபி 1036 வரை நீடித்தது. அதன் பிறகு ராஜபுத்திரர்களும் டெல்லி சுல்தானகமும் மீனா ராஜ்யத்தின் பிரதேசங்களை இணைத்து கொண்டனர்.

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழா

    ராஜபுத்திரர்களின் முடிசூட்டு விழாவின் போது, ​​பில் அல்லது மீனா குலத்தினரின் கட்டைவிரலிலிருந்து எடுக்கப்பட்ட இரத்தத்தை ராஜாவின் நெற்றியில் பூசுவது வழக்கம். ஏனென்றால், வட இந்தியாவின் அசல் ஆட்சியாளர்கள் பாணா, பில், மீனா மக்கள் ஆயிருந்தனர்.

    திராவிட பாரம்பரியம்

    உடல் ரீதியாக அனைத்து இந்தியர்களும் பழுப்பு நிறம் மற்றும் திராவிட முக அம்சங்களைக் கொண்டுள்ளனர். அது அவர்களின் திராவிட தோற்றம் காரணமாகும்.

    சித்தியன் படையெடுப்பு (கிமு 150)

    ஆனால் வட இந்தியாவின் கங்கை சமவெளியில் உள்ள இந்த திராவிட பழங்குடியினர் சித்தியன் படையெடுப்பாளர்களால் தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

    கங்கை பகுதிகளை ஆட்சி செய்த வில்லவர் குலங்களை சித்தியர்கள் தம்முடன் சேர்த்திருக்கலாம். ஜாட் சமூகத்தில் பல வில்லவர்-நாடார் குடும்பப் பெயர்கள் உள்ளன. ஜாட் சமூகம் சித்தியன் வம்சாவளியைக் கொண்டிருந்திருக்கலாம்.

    நாடார், சாணார், சாந்தார் பில்வன், பாணா, சேர, சோழர் பாண்டியா போன்ற பல வில்லவர் குடும்பப்பெயர்கள் ஜாட் சமூகத்தின் குடும்பப்பெயர்களில் காணப்படுகின்றன.

    ReplyDelete
  11. அசுர திராவிட துடக்கம்

    வில்லவர் மீனவர்

    தமிழ் வில்லவர் மற்றும் அதன் துணைக்குழுக்கள் வில்லவர், வானவர், மலையர் மற்றும் மீனவர் என்று அழைக்கப்பட்ட அவர்களின் கடலில் செல்லும் உறவினர்கள், இவர்கள் அனைவரும் பண்டைய பாண்டியன் இராச்சியத்தை நிறுவியவர்கள் ஆவர். பண்டைய பாண்டியன் மன்னர்கள் தங்கள் துணைக்குலங்களால் அறியப்பட்டனர் எ.கா. மலையர் குலம்-மலயத்வஜ பாண்டியன். வில்லவர் குலம்-சாரங்கத்வஜ பாண்டியன் மீனவர் குலம்-மீனவ பாண்டியன்போன்றவர்கள்.

    வில்லவர் குலங்களின் இணைப்பு

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் மீனவர் குலங்களுடன் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கின.

    பாண்டிய ராஜ்ஜியத்தின் பூர்வீகம்

    பாண்டிய ராஜ்ஜியத்தின் ஆரம்பம் குமரிக்கண்டத்தில் வரலாற்றுக்கு முந்தையது. தலைநகரங்கள் தென் மதுரை, கபாடபுரம் மற்றும் மதுரை.

    காலவரிசை

    1. முதல் பாண்டிய இராச்சியத்தின் அடித்தளம் (கிமு 9990)
    2. முதல் பிரளயம் (கிமு 5550)
    3. இரண்டாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    4. இரண்டாம் பிரளயம் (கிமு 1850)
    5. மூன்றாவது பாண்டிய சாம்ராஜ்யம்
    6. சங்க யுகத்தின் முடிவு (கி.பி. 1)


    பாண்டியன் ராஜ்யத்தின் பிரிவு

    பண்டைய பாண்டிய இராச்சியம் தமிழத்தில் சேர, சோழர் மற்றும் பாண்டியன் ராஜ்யங்களாக பிரிக்கப்பட்டது.

    வில்லவர் ராஜ்யங்களின் முடிவு.

    கி.பி 1120 இல் அரேபியர்களின் உதவியுடன் கேரளாவைத் தாக்கிய துளு-நாயர் படையெடுப்பைத் தொடர்ந்து சேர வம்சம் கொடுங்கலூரில் இருந்து கொல்லத்திற்கு மாற்றப்பட்டது. கி.பி 1310 இல் மாலிக் கஃபூரின் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீதுள்ள தாக்குதல் மற்றும் தோல்விக்குப் பிறகு, வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கேரளா முழுவதும் துளு-நேபாள ஆட்சியின் கீழ் வந்தது. கி.பி 1335 க்குப் பிறகு கேரளாவில் அஹிச்சத்திரம்-நேபாளத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    தமிழ்நாட்டை தெலுங்கு பலிஜாக்கள் மற்றும் வாணாதிராயர்கள் ஆக்கிரமித்தனர். வாணாதிராயர்கள் தமிழ்நாட்டின் கங்கை நாகர்களின் தலைவர்கள் ஆனார்கள். கி.பி 1377 க்குப் பிறகு கேரளாவும் தமிழகமும் பாண மன்னர்களால் ஆளப்பட்டன. கேரளா மற்றும் தமிழ்நாடு வடுக நாகர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.

    தெற்கே வில்லவர் குடியேற்றம்
    கேரளா
    1. கொடுங்கலூரிலிருந்து கொல்லத்திற்கு இடம்பெயர்வு (கி.பி 1102)
    2. கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம், கன்னியாகுமரி மற்றும் இலங்கைக்கு இடம்பெயர்வு (கி.பி 1335)

    தமிழ்நாடு
    1. தஞ்சாவூரில் இருந்து களக்காட்டுக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    2. மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு இடம்பெயர்வு (கி.பி 1310)
    3. திருநெல்வேலியில் இருந்து கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்திற்கு இடம்பெயர்வு (கி.பி. 1377 முதல் கி.பி .1640 வரை)

    வட இந்தியாவில் வில்லவர்
    வில்லவர் குலங்கள்
    1. வில்லவர் = பில்
    2. மலையர் = மலேய, மலய
    3. வானவர் = பாணா
    4. மீனவர் = மீனா

    வில்லவர் பட்டங்கள் மற்றும் பாணரின் பட்டங்கள் வில்லவர் = பில், பில்லவா, சாரங்கா, தானவா
    மலையர் = மலெயா, மலயா, மெர், மேரு, மெகர்
    வானவர் = பாணா, வானாதிராயர்
    மீனவர் = மீனா, மத்ஸ்யா
    நாடாள்வார் = நாடாவா, நாடாவரு, நாடாவரா.
    நாடார் = நாடோர், தோற்கே நாடோர், உப நாடோர், நாடாலா, நாடார்வால்
    பணிக்கர் = பணிக்கா
    சாணார்=சண்ணார், சாணான், சாண்டார்
    சான்றார் = சான்றாரா, சான்தா
    பாண்டியன் = பாண்ட்யா
    மாவேலி = மகாபலி

    முடிவுரை

    வில்லவர்-நாடார் குலங்கள் இந்தியா முழுவதையும் ஆண்ட வில்லவர் மற்றும் பாண குலங்கள் என்று அழைக்கப்படும் பழங்குடி ஆட்சியாளர்களைச் சேர்ந்தவை. டெல்லி படையெடுப்பைத் தொடர்ந்து நடந்த இனப்படுகொலைதான் வில்லவரின் வீழ்ச்சிக்குக் காரணம். மற்றொரு காரணம் வில்லவர் மற்றும் பணிக்கர் மற்ற நாடுகளுக்கு வெளியேறியது.


    __________________________________________

    ReplyDelete
  12. மீனா வம்சம்

    நாடார்களின் வடநாட்டு உறவினர்களான மீனா மன்னர்களின் கதை.

    மீனா குலம் அவர்களின் பெயரை மீன் என்ற திராவிட தமிழ் வார்த்தையிலிருந்து பெற்றிருக்கலாம். மீனா குலங்கள் பண்டைய வட இந்திய திராவிட ஆட்சியாளர் குலங்களின் ஒரு பகுதியாகும்.

    ராஜஸ்தானின் மீனா குலத்தினர் நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். மீனாக்கள் பயன்படுத்தும் மீனா பட்டம் என்பது வில்லவர்-நாடார் குலங்கள் பயன்படுத்தும் மீனவர் பட்டத்தின் மாறுபாடு ஆகும். மீனாக்கள் பயன்படுத்தும் பில்-மீனா பட்டம் நாடார்களின் வில்லவர்-மீனவர் பட்டத்திற்கு சமம்.

    நாடார் அதாவது வில்லவர் பண்டைய காலத்தில் வில்லவர், மலையர் மற்றும் வானவர் என்று மூன்று துணைக்குழுக்களைக் கொண்டிருந்தனர். வில்லவரின் கடலில் மீன்பிடிக்கும் உறவினர்கள் மீனவர் ஆவர்.

    மீனா என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் முக்கியமாக வசிக்கும் ஒரு சாதி. மீனா சாதி இந்தியாவின் பழமையான சாதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வேதங்கள் மற்றும் புராணங்களின்படி மீனா சாதியினர் மத்ஸ்ய சின்னம் அல்லது மீனா சின்னத்தை அடையாளமாக கொண்டிருந்தனர். மீனா சமாஜம் மத்ஸ்ய ஜெயந்தியாகக் கொண்டாடும் அதே வேளையில், ராஜஸ்தான் முழுவதும் கங்கௌர் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மீனா சாதியின் அடையாளம்  மீன். சமஸ்கிருதத்தில் மீன் மத்ஸ்யா என்று அழைக்கப்படுகிறது. பழங்காலத்தில்  மீனா சாதியின் அரசர்களின் கேடயத்திலும் கொடிகளிலும் மீனின் அடையாளம் பொறிக்கப்பட்டிருந்தது.

    மீனா குலம் என்பது ராஜஸ்தானில் எண்ணிக்கையில் மிகப் பெரிய பழங்குடியாகும். அவர்கள் ஒரு காலத்தில் முன்னாள் ராஜ்ஜியங்களான ஜெய்ப்பூர் மற்றும் ஆள்வார் ஆகியவற்றை ஆட்சி செய்தனர் மற்றும் அடிப்படையில் ஒரு விவசாய சமூகமாக இருந்தனர்

    சாந்தா மீனா

    பண்டைய காலங்களில் அதாவது 10 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வடபகுதி முக்கியமாக சௌஹான்களின் குலங்களால் ஆளப்பட்டது. ஜமீன்தார் மீனாவின் குலமான சாந்தா, சௌஹான்களின் கிளைகளில் ஒன்று. சாந்தாக்கள் இப்போது ஜெய்ப்பூரின் ஒரு பகுதியான கோகன்வ்வை ஆட்சி செய்து கொண்டிருந்தனர் மற்றும் மீனா இராச்சியத்தின் கூட்டமைப்பின் தலைவராக இருந்தனர். சாந்தா என்பது சான்றாரின் மாறுபாடு. சாந்தா மீனா என்றால் சான்றார் மீனவர் என்று பொருள்.


    கிபி 1036 வரை மீனா குலங்கள் ராஜஸ்தானின் பாரம்பரிய ஆட்சியாளர்களாக இருந்தனர். பழங்காலத்திலிருந்தே மீனா குலத்தார் ராஜஸ்தானையும் கங்கை நதிப்பகுதியையும் ஆண்டனர்.


    சிந்து சமவெளி நாகரிகம்

    சிந்து சமவெளியின் பிற திராவிட பாணா, வில்லவர், தானவ மற்றும் தைத்திய குலங்களுடன் சிந்து சமவெளியின் பழமையான குடியிருப்பாளர்களில் மீனா குலமும் இருக்கலாம்.

    குஜராத்தின் மேற்கு கத்தியவாரின் ஜெத்வா வம்சத்தின் சின்னம் இன்னும் மீன் வடிவில் உள்ளது. ஜெத்வா மக்கள் மெர் (மஹர், ராவத்) சமூகத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஜெத்வா மெரோன் குலத்தின் ஒரு வம்சக் கிளை. மெரோன் குலத்தினர் மீனா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மெர்-மேரு அல்லது மலையில் வசிப்பவர்கள் என்பது வில்லவர்களின் மலையர் துணைக்குழுவுடன் ஒத்திருக்கிறது.

    மகாபாரதம்

    மகாபாரதத்தில் பாண்டவரும் திரௌபதியும் விராட மன்னனின் அரண்மனையில் ஒரு வருடம் மறைந்திருந்து வாழ்ந்தனர். மத்ஸ்ய ராஜ்ஜியத்தை ஆண்ட மீனா மன்னன் விராட மன்னன். மத்ஸ்யா என்பது மீனா குலத்தின் சமஸ்கிருத வடிவம்.


    மீனா ஆட்சியாளர்கள் நவீன ஜெய்ப்பூருக்கு அருகில் ஆமர் கோட்டையை கட்டினார்கள்.
    வில்லவர் மீனவர்கள் வட இந்தியாவில் பாணா-பில் மீனா என்று அழைக்கப்படுகிறார்கள். பில்மீனாக்கள் இடைக்காலத்தில் ராஜஸ்தானை ஆண்டனர். மீனா அரசர்களின் அரச பட்டம் சாண்ட மீனா அதாவது சாந்தா மீனா.

    ஆமர்

    மீனா வம்சத்தில் பல உபகுலங்கள் இருந்தன. ஜோதா மீனா ஆட்சியாளர்களின் நினைவாக ஜோத்வாரா என்று பெயரிடப்பட்டது. ஜெய்ப்பூர் ஆட்சியாளர்களின் குடையாக இருந்தவர்கள் கெட்டா மீனா. அமீர் மீனா ராஜா அலன்சி என்பவரால் நிறுவப்பட்டது. கிபி 967 இல் ஆமர் குடியேற்றப்பட்டதற்கான சான்றுகளும் உள்ளன.


    ஜகா இனத்தவரின் பதிவுகள்

    சாந்தா குலத்துக்காக ராஜஸ்தானின் ஜகா இனத்தவர் பராமரித்த பதிவுகளின்படி, சாந்தா வம்சம் மற்றும் ராஜ்ஜியங்கள் பற்றிய கடந்தகால வரலாற்றை வெளிப்படுத்துகிறது. ஜகாஸின் கூற்றுப்படி, சாந்தா மீனாக்கள் அக்னிவன்ஷிகள் மற்றும் சௌஹான்களின் துணை குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

    ReplyDelete
  13. மீனா வம்சம்

    துருக்கிய தாக்குதல்

    மீனாக்கள் தற்போதைய ஹனுமான்கரின் சுனம் நகரில் குடியேறினர்.

    சுல்தான் முகமது பின் துக்ளக், சுனம் மற்றும் சமனாவின் கலகக்கார ஜாட் மற்றும் மீனாக்களின் 'மண்டல்' அமைப்பை அழித்தார், மேலும் அவர் கிளர்ச்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று இஸ்லாமியராக மாற்றினார்.

    முகலாய தாக்குதல்

    அம்பரின் கச்வாஹா ராஜ்புத் ஆட்சியாளர் பர்மால் எப்போதும் நஹான் மீனா ராஜ்யத்தைத் தாக்கிக்கொண்டிருந்தார், ஆனால் படா மீனாவுக்கு எதிராக பார்மால் வெற்றிபெற முடியவில்லை. அக்பர் ராவ் படா மீனாவை அவருடைய மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார் ஆனால் படா(பெரிய) மீனா மறுத்துவிட்டார். பின்னர் பார்மால் தனது மகள் ஜோதாவை அக்பருக்கு திருமணம் செய்து வைத்தார். பின்னர் அக்பர் மற்றும் பார்மாலின் கூட்டு இராணுவம் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி மீனா ராஜ்யத்தை அழித்தது. மீனாக்களின் கருவூலம் அக்பருக்கும் பார்மாலுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. பார்மல் அம்பர் அருகே உள்ள ஜெய்கர் கோட்டையில் அந்த பொக்கிஷத்தை வைத்திருந்தார்.



    ஜெய்ப்பூர்

    கிபி 1727 வரை முன்னாள் மீனா தலைநகர் ஆமர் கச்வாஹா ராஜபுத்திரர்களின் தலைநகராக இருந்தது. ஜெய் சிங் II கிபி 1727 இல் ஜெய்ப்பூர் நகரில் குடியேறினார் மற்றும் புதிய நகரத்தில் தனது தலைநகரை உருவாக்கினார்.
    அதன் பிறகு ராஜஸ்தானின் தலைநகரம் ஆமரில் இருந்து 14 கிமீ தொலைவில் புதிதாக கட்டப்பட்ட ஜெய்ப்பூர் நகரத்திற்கு மாற்றப்பட்டது.


    மீனா வம்சத்தின் வீழ்ச்சி

    பண்டைய நூல்களில் மத்ஸ்ய ஜனபதத்தைப் பற்றிய தெளிவான குறிப்பு உள்ளது, அதன் தலைநகரம் விராட் நகர், அது இப்போது ஜெய்ப்பூரில் உள்ள வைரத் ஆகும். இந்த மஸ்த்யா பிரதேசத்தில் ஆள்வார், பரத்பூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகள் அடங்கும். இன்றும் இந்தப் பகுதியில் மீனா இன மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர்.

    மீனா சாதியின் பதா அல்லது ஜகா எனப்படும் பழங்குடி வரலாற்றின் படி, மீனா சாதியில் 12 பால்கள், 32 தாட்கள் மற்றும் 5248 கோத்திரங்கள் இருந்தன.

    மீனா சமாஜ் மத்தியப் பிரதேசத்தின் சுமார் 23 மாவட்டங்களிலும் வசிக்கிறது.

    முதலில் மீனாக்கள் ஒரு ஆளும் சாதியாக இருந்தனர், மேலும் மத்ஸ்யாக்களின் ஆட்சியாளர்களாக இருந்தனர், அதாவது ராஜஸ்தான் அல்லது மத்ஸ்ய கூட்டமைப்பு. ஆனால் அவர்களின் சரிவு சித்தியர்களுடன் ஒருங்கிணைப்பதில் தொடங்கியது.

    ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் உட்பட ராஜஸ்தானின் முக்கிய பகுதிகளின் ஆரம்பகால ஆட்சியாளர்களாக மீனா மன்னர்கள் இருந்தனர்.

    "ஆர்.எஸ். மான்" எழுதிய 'கலாச்சாரம் மற்றும் இந்திய சாதிகளின் ஒற்றுமை' என்ற புத்தகத்தில், மீனாக்கள் ராஜபுத்திரர்களைப் போலவே க்ஷத்திரிய சாதியாகக் கருதப்படுகிறார்கள், ஆனால் வரலாற்றில் மிகக் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    பழங்காலத்தில் ராஜஸ்தான் மீனா வம்ச மன்னர்களால் ஆளப்பட்டது. மீனா ராஜ்ஜியம் மீன் மாநிலம் என்று அழைக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் மத்ஸ்ய ராஜ்ஜியம் ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் பில் மற்றும் மீனாக்கள் சிந்து, ஹெப்தாலைட்டுகள் அல்லது பிற மத்திய ஆசிய படையெடுப்பாளர்களிலிருந்து வந்த வெளிநாட்டினருடன் கலந்தனர்.

    மீனா முக்கியமாக மீனம் மற்றும் சிவனை வழிபட்டார்கள். பல இந்து சாதிகளை விட மீனாக்கள் பெண்களுக்கு சிறந்த உரிமைகளைப் பெற்றுள்ளனர். விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களின் மறுமணம் ஒரு பொதுவான நடைமுறை மற்றும் மீனா சமூகத்தில் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகைய நடைமுறைகள் வேத நாகரிகத்தின் ஒரு பகுதியாகும்.

    துருக்கியர்களின் படையெடுப்பின் ஆண்டுகளில், மற்றும் 1868 இல் கடுமையான பஞ்சத்தின் விளைவாக, அழிவின் அழுத்தத்தின் கீழ் பல கொள்ளைக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக, பசியால் வாடும் குடும்பங்கள் தங்கள் பாரம்பரியத்திலிருந்து விலகி கால்நடைகளைத் திருடி உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

    ஆங்கிலேய அரசு மீனா குலங்களை "குற்றப்பரம்பரை " என்று முத்திரை குத்தியது. இந்த நடவடிக்கை ராஜஸ்தானில் உள்ள ராஜபுத்திர ராஜ்யத்துடன் உண்டாய ஆங்கிலேய கூட்டணியை ஆதரிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. மீனா பழங்குடியினர் இன்னும் ராஜபுத்திரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர், அவர்கள் இழந்த ராஜ்யங்களைக் கைப்பற்றுவதற்காக கொரில்லா தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

    இடைக்காலத்தின் முகலாய பதிவுகள் முதல் பிரிட்டிஷ் ராஜ்ஜின் பதிவுகள் வரை, மீனாக்கள் வன்முறையாளர்கள், கொள்ளையடிக்கும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத இன பழங்குடியின குழுவாக விவரிக்கப்படுகிறார்கள்.

    ReplyDelete
  14. மீனா வம்சம்

    மீனா சாதி முக்கியமாக பின்வரும் வகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

    ஜமீன்தார் அல்லது புராணாவாசி மீனா(பண்டைய மீனவர்)

    ஜமீன்தார் அல்லது புராணாவாசி மீனா என்பவர்கள் பல ஆண்டுகளாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு செய்து வருபவர்கள். ராஜஸ்தானின் சவாய் மாதோபூர், கரௌலி, தௌசா மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டங்களில் இந்த மக்கள் அதிகம் வாழ்கிறார்கள்.

    சௌக்கிதார் அல்லது நயாபசி மீனா

    சௌக்கிதார் அல்லது நயாபசி மீனா அவர்கள் தமது சுதந்திரமான இயல்பு காரணமாக காவலாளிகளாக பணிபுரிந்த மீனாக்கள் ஆவர். அவர்களுக்கு நிலம் இல்லாததால் அவர்கள் விரும்பிய இடத்தில் குடியேறினர். இந்த காரணங்களால், அவர்கள் நயாபசி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த மக்கள் சிகார், ஜுன்ஜுனு மற்றும் ஜெய்ப்பூர் மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

    பிரதிஹாரா அல்லது பதிஹார் மீனா

    பிரதிஹார் அல்லது பதிஹார் ஒரு கோத்ரா மற்றும் அது ஒரு தனி மீனா குலமல்ல. இந்த கோத்திரத்தின் மீனாக்கள் டோங்க், பில்வாரா மற்றும் பூண்டி மாவட்டங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இந்த கோத்ரா அதன் ஆதிக்கத்தால் வேறுபட்ட அடையாளத்தைக் கொண்டுள்ளது. பிரதிஹாரா என்பதன் நேரடிப் பொருள் திருப்பித் தாக்குவது. இந்த மக்கள் கொரில்லா போர் திறன்களில் தேர்ந்தவர்கள், எனவே அவர்கள் பிரதிஹாராக்கள் என்று அழைக்கப்பட்டனர்.

    பில் மீனா: இந்த மக்கள் முக்கியமாக சிரோஹி, உதய்பூர், பான்ஸ்வாரா, துங்கர்பூர் மற்றும் சித்தோர்கர் மாவட்டங்களில் வசிக்கின்றனர்.(வில்லவர் மீனவர் வம்சம்)

    தற்செயலாக எஸ்டி பட்டியலில் சேர்த்தல்

    1954 ஆம் ஆண்டு தேசிய எஸ்சி/எஸ்டி ஆணையம் அமைக்கப்பட்டபோது, ​​தென்கிழக்கு ராஜஸ்தான்,
    மத்தியப்பிரதேசம் மற்றும் குஜராத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் "பில் மீனாக்கள்" பிரிவினரைப் பரிந்துரைக்க விரும்பியது. மீனாக்கள் ஜமீன்தார்களைக் கொண்ட ஒரு பணக்கார நிலத்தை உடைய வர்க்கம். இருப்பினும், தேசிய எஸ்சி/எஸ்டி கமிஷன் அறிக்கை வெளியிடப்பட்டபோது, ​​தேவையில்லாமல் ஒரு கமாவைச் சேர்த்ததன் விளைவாக ஒரு எளிய அச்சுப் பிழை ஏற்பட்டது. "பில் மீனா" என்பதற்குப் பதிலாக தவறுதலாக "பில், மீனா" என்று அச்சிடப்பட்டு, மீனாக்களின் பணக்கார நில உடைமை வகுப்பினரும் எஸ்டி அந்தஸ்துக்கு தகுதி பெற்றனர்.

    இதனால் அரசு வேலைகளில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் மீனா குலத்தவர் பெரும் பங்கு பெற்றனர்.

    இதனால்தான் ராஜஸ்தானின் மீனா சாதியினர் ராஜபுத்திரர்களாகவும் அதே மாநிலத்தில் பட்டியல் பழங்குடியினராகவும் கருதப்படுகிறார்கள்.

    பின்வருபவை மீனா சாதியின் முக்கிய மாநிலங்கள் மற்றும் குலங்கள்

    கோகாங்கின் சாந்தா வம்சம்(சான்றார் வம்சம்)

    மன்ச் சிஹ்ரா அல்லது செரோ வம்சம்(சேர வம்சம்)

    கேட்டர் மற்றும் ஜோத்வாராவின் நாடாலா வம்சங்கள் (நாடார், நாடாள்வார் வம்சங்கள்)

    அமரின் சுசாவத் வம்சம்(ராஜபுத்திர வம்சம்)

    நயாலா தியோத்வால் அல்லது தர்வால் வம்சத்தின் ராவ் பாகோ(ராஜபுத்திர வம்சம்)

    நஹனின் கோமலாடு வம்சம்

    ரன்தம்போரின் டாட்டூ வம்சம்

    நாட்டாலா வம்சம் (நாடார் அல்லது நாடாள்வார் வம்சம்)

    பூந்தியின் உஷாரா மற்றும் மோதிஷ் வம்சம்

    மேவாரின் மீனா வம்சம் (மீனவர் வம்சம்)

    மதசுல மற்றும் நரேத்கா பைட்வால்

    நாட்டார்வால்(நாடார் அல்லது நாடாள்வார்)

    ____________________________________________


    நாடார் மற்றும் மீனா குலங்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் பிரிந்த சகோதரர்கள்

    https://indianmeena.blogspot.com/2020/09/

    ______________________________________


    ஆமர் கோட்டை

    https://m.facebook.com/IndiaLostFound/photos/amer-was-originally-a-meena-kingdom-town-by-the-name-of-khagong-ruled-by-the-cha/1483561208493832/


    ஆமர் கோட்டை

    https://en.m.wikipedia.org/wiki/Amber_Fort

    ________________________________________

    மீனா குலங்கள்

    http://meenawiki.com/index.php?title=Meenas&setlang=hi

    ___________________________________________


    மீனா குலங்கள் ராஜபுத்திரர்களுக்கு சமம் ஆனால் அதே மாநிலத்தில் உள்ள பழங்குடியினரும் ஆவர்.


    https://parliamentofindia.nic.in/ls/lsdeb/ls10/ses5/3027119201.htm

    _______________________________________

    ReplyDelete