Tuesday 29 December 2020

சோழர் படை வீரர்களாக இருந்த பள்ளி வன்னிய ஜாதியினர்

 தொண்டை மண்டலப் பகுதிகளை ஆட்சி செய்துவந்த சம்புவராயர்கள் பள்ளி(வன்னியர்) குலத்தவர்.

நடு நாட்டின் வலிமை மிகுந்த சிற்றரசர்களான காடவராயர்களும் வன்னியர் இனத்தவரே.இவர்கள் கல்வெட்டுக்களில் தம்மை பள்ளி இனத்தவராகவே குறிப்பிட்டுள்ளனர்(ARE 137 of 1900; S.I.I vol.7, No.150).

 கி.பி 12 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சிலை எழுபது நாயக்கர் காலத்திற்கு முன் சோழ, பாண்டிய மன்னர்களின் காலத்தில்தான் எழுதப்பெற்றது.வன்னிய குலத்தவரின் பெருமைகளைக் குறிப்பிடும் இந் நூல் வன்னியர்களை ஆட்சி செய்யும் மன்னர் இனத்தவராகக் குறிப்பிடுகின்றது.

பல்வேறு கல்வெட்டுக்கள் மூலம் வன்னிய குலத்தவர் சோழர் காலத்தில் பெற்றிருந்த செல்வாக்கும் அதிகாரமும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.வன்னிய குலத்தவருக்கு அரசரால் கொடையளிக்கப்பட்ட நிலங்கள் "பள்ளிப் பேறு" எனப்பட்டன.(ARE 200 of 1904)

மேலும் வன்னியர் குலத்தவர் விற்போர் வீரர்களாக விளங்கினர். இவர்கள் "வில்லிகள்" என்றும் அழைக்கப்பட்டனர்(ARE 360 of 1902)(ARE 394 of 1921).பள்ளி குல மக்கள் வாழ்ந்த பகுதி பள்ளி நாடு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது(ARE 35 of 1913).

விஜயநகர வேந்தர் படையெடுப்பின்போது அவர்களை எதிர்த்து முதலில் போரிட்டது தமிழ் குறு நில மன்னர்களான சம்புவராயர்கள்தான்.இவர்கள் வன்னியர் குலத்தவர்.(ARE 267 of 1919)

 சோழர்களின் தலைநகரமான கங்கைகொண்ட
===========================================
சோழபுரத்து குறுநில மன்னர்களும் படை வீரர்களும்
================================================
முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் "அரியலூர்" பற்றி ஆங்கிலத்தில் எழுதிய சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் எடுத்து நான் தமிழாக்கம் செய்திருக்கிறேன். இது நான் எழுதியது அல்ல.
----- xx ----- xx ----- xx -----
முதலாம் இராஜ ராஜ சோழனின் மகனான முதலாம் இராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்தில் வரலாற்றில் ஒரு புதிய அத்யாயம் தமிழகத்தோடு மட்டுமல்லாமல் இன்றைய அரியலூர் மாவட்டத்திலும் பிரதிபலித்தது. அதற்கு மிக முக்கிய காரணம் அவனால் அம்மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் தாலுக்காவில் புதியதாக நிர்மாணிக்கப்பட்ட சோழர்களின் தலைநகரமான கங்கைகொண்ட சோழபுரமே ஆகும்.
படையாட்சிகள் என்று புகழோடு அழைக்கப்படும் வன்னியர்களே அரியலூர் மாவட்டத்தின் பெரும்பான்மை மக்களாவார்கள். இவர்கள் சோழர்கள் காலத்தில் பள்ளிகள் என்றும் அழைக்கப்பட்டனர். அரியலூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலிருந்து கிடைக்கும் சுமார் ஐம்பது சோழர்கள் காலத்து கல்வெட்டுகள் வன்னியர்களைப் பற்றி குறிப்பிடுகின்றன.
அரியலூர் மாவட்டத்தில் இருந்த "காரைக்காடு", "துண்டநாடு", "சென்னிவளக் கூற்றம்" போன்ற பகுதிகளில் இருந்த ஊர்களில் பல பள்ளிகள் இருந்திருக்கிறார்கள் என்பதை சோழர்கள் காலத்து கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
வீர நாராயண சதுர்வேதிமங்கலத்தில் இருந்த 11 சேரிகளில் பள்ளிகளின் (வன்னியர்கள்) வாழ்விடங்கள் இருந்ததை முதலாம் இராஜேந்திர சோழனின் கி.பி. 1022 ஆம் ஆண்டு கல்வெட்டு குறிப்பிடுகிறது.
சோழர்கள் காலத்து பல கல்வெட்டுகளில் பள்ளிகள் பெற்றிருந்த பட்டங்களை பற்றி குறிப்பிடுகின்றன. அவை :-
"அரையன்",
"பெரியரையன்" (பேரரையன்),
"நாடு உடையான்",
"நாடாழ்வான்",
"காணி உடையான்",
"ஊர் உடையான்"
போன்றவைகளாகும். இப்பட்டப் பெயர்கள் சோழ அரசர்களின் பெயர் அல்லது பட்டங்களுடன் முன்னிட்டு சேர்த்து வழங்கப்பெற்றிருப்பது என்பது பள்ளிகள் (வன்னியர்கள்) எத்தகைய நிலையில் சோழர் அரசாங்கத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இப்பகுதி கல்வெட்டுகளில் இடம்பெற்றிருந்த பள்ளிகளின் சில பட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :-
"சோழேந்திர சிங்க பெரியரையன்",
"சிங்களாந்தக பெரியரையன்",
"மதுராந்தக பெரியரையன்",
"சுந்தர பெரியரையன்",
"முடிகொண்ட சோழ முத்தரையன்"
"கடாரம் கொண்ட சோழ பெரியரையன்"
"மாணிக்க பெரியரையன்",
"ஜெயம்கொண்ட சோழ துண்ட நாடாழ்வான்",
"துண்டநாடு உடையான் கல்யாணபுரம் கொண்டான்",
"தேனுரில் காணி உடையான் துண்டராயன்"
"ஆய்க்குடியில் காணி உடைய பள்ளிகளில் பொன்னநான முடிகொண்ட சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"
"ஓலைப்பாடியில் காணி உடைய பள்ளிகளில் காரி கிரிச்சன் விக்கிரம சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"
"தொங்கபுரத்தில் காணி உடைய பள்ளிகளில் அழகந் அம்பலவன் குலோத்துங்க சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"
"மகதை மண்டலத்து தொழுவூர் பற்றில் குறுக்கையில் காணி உடைய பள்ளிகளில் பாண்டியன் சொக்கன் மரகத சோழ முத்தரையன் உள்ளிட்டாரும்"
மேற்குறிப்பிட்ட பட்டங்கள், வன்னியர்கள் சோழ அரசர்களுக்கு கொடுத்த ராணுவ வீரதீர பங்களிப்பையும் மற்றும் வன்னியர்களின் நிலவுடமை நிலையையும் மற்றும் சோழ அரசாங்கத்தில் வன்னியர்கள் பெற்றிருந்த அதிகார நிலையையும் காட்டுகிறது.
சோழர்களின் பல கல்வெட்டுகளில் பள்ளிகள் வில் வீரர்களாக இருந்துள்ளனர் என்றும் அவர்கள் வில்லாற்றலில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றிருந்தார்கள் என்றும் குறிப்பிடுகிறது. மேலும் சோழர் கல்வெட்டுகள் பல "விற் படை" வில்லாளிகள் பற்றி குறிப்பிடுகின்றன (வில்லிகள் படை). அவ் விற்படைகளில் வன்னிய ஜாதியை சேர்ந்தவர்களையே சோழர்கள் நிலைப்படுத்தினர்.
கி.பி. 1045 மற்றும் 1050 ஆம் ஆண்டினைச் சேர்ந்த விருத்தாச்சலம் கல்வெட்டுகள், ஜெயங்கொண்ட சோழபுரம் நகரம் (ஜெயங்கொண்டாம், உடையார் பாளையம் வட்டம்) உருவானதைப் பற்றியும், பள்ளி ஜாதியைச் சேர்ந்த சிலர் ஜெயங்கொண்ட சோழபுரம் மற்றும் விசயபுரத்தின் ராணுவ அதிகாரிகளாய் இருந்ததையும் குறிப்பிடுகின்றன.
பள்ளி ஜாதியைச் சேர்ந்த ஒரு குறுநில வேந்தன் "கூத்தன் பக்கனான ஜெயங்கொண்ட சோழ துண்ட நாடாழ்வான்", கி.பி. 1067 ஆம் ஆண்டின் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார். அவரது பெயர் "துண்ட நாட்டுப்" பகுதியின் அரசியல் அதிகாரத்தை வெளிப்படுத்துகிறது.
விக்கிரம சோழன் (கி.பி. 1118 - 1136) மற்றும் அதன்பிறகு வந்த சோழ மன்னர்கள் காலக் கல்வெட்டுகளில் "பள்ளி" மற்றும் "சுருதிமான்" ஜாதியைச் சேர்ந்தவர்களே சோழ அரசாங்கத்திற்கு படைவீரர்களையும், அதிகாரிகளையும், குறுநில மன்னர்களையும் வழங்கி சமகாலச் சமூதாயத்தில் மேன்மையான நிலையை அடைந்தார்கள்.
பள்ளி ஜாதியைச் சேர்ந்த அதிகாரி "சேந்தன் சுத்த மல்லனான வாணகோவரையன்" என்பவர் இரண்டாம் குலோத்துங்கச் சோழனிடம் "திருமுகக் காணி" என்னும் நிலங்களைப் பெற்றிருக்கிறார். அவர் சென்னிவனம் கோயிலுக்கு கி.பி. 1137 ஆம் ஆண்டில் நிலதானம் கொடுத்திருக்கிறார்.
சோழ மன்னன் இரண்டாம் இராஜாதிராஜ சோழனின் ஆட்சி காலத்தில் (கி.பி. 1166 - 1182) வன்னாடு உடைய இராஜராஜ தேவனான இராஜாதிராஜ மகதை நாடாழ்வான், துண்ட நாடு உடையான் திருவிராடனான துண்டராய வர்மன் அரியவாயன், கடந்தை சேந்தன் ஆதித்தனான இராஜராஜ வங்கார முத்தரையன், ஸ்ரீராமன் சுத்தமல்லனான விக்கிரம சோழ மலையகுலராயன் போன்ற குறுநில மன்னர்கள் "இராசகுலவர்" (அரச குலத்தவர், Royal Families) ஆவார்கள். இந்த இராசகுலத்தவர்கள் கோயில்கள் மற்றும் இன்னபிற நில உரிமைகளை ஆக்கிரமித்து தனதாக்கிக்கொண்டனர்.
கி.பி. 1216 ஆம் ஆண்டு கல்வெட்டு "சுருதிமான் இராஜேந்திர சோழ தெரிந்த வில்லிகள்" (வில்லாளிகள்) என்ற இராணுவ படைப் பிரிவைப் பற்றி குறிப்பிடுகிறது. இப் படைப் பிரிவில் சுருதிமான் ஜாதியைச் சேர்ந்த "படை முதலிகள்" (இராணுவ தலைவர்கள்) இடம்பெற்றுள்ளனர். குன்றக்குறம், மேல்கரைக்காடு உள்ளிட்ட சுருதிமான் அஞ்சுநாடு படைப்பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.
வன்னிய ஜாதியைச் சேர்ந்த பல பட்டங்களுடைய குறுநில மன்னர்களான "கடந்தையார்கள் (என்கிற) வங்கார முத்தரையன்", "துண்ட நாடு உடையார் / துண்டராயன் ", "வாணகோவரையர்" மற்றும் "கச்சியராயர்கள்" ஆட்சி அதிகாரம் பெற்ற பாடிக்காவல் அதிகாரிகளாய் அரியலூர் மற்றும் அதன் பிற பகுதிகளிலும் இருந்துள்ளனர்.
போர்குடிகளைச் சேர்ந்த "பள்ளி" மற்றும் "சுருதிமான்" ஜாதியைச் சேர்ந்தவர்கள் சோழ இராணுவத்தில் சேர்ந்து உயர்ந்து பல உயரிய பதவிகளைப் சோழ அரசாங்கத்தில் பெற்று அரியலூர் பகுதியில் குறுநில மன்னர்களாக கோலோச்சியவர்களில் :-
"துண்ட நாடு உடையார்"
"கடந்தையார் (என்கிற) வங்கார முத்தரையன்"
"வாணகோவரையர்"
போன்றோர்கள் மிக மிக முக்கியமானவர்கள் ஆவார்கள்.
----- xx ----- xx ----- xx -----
நன்றி : முனைவர் இல. தியாகராஜன் அவர்கள்.





===================================================
Chieftains Warriors of Gangaikonda Cholapuram in Ariyalur Region
===================================================
The reign of Rajendra Chola-I, son of Rajaraja Chola-I, opened a glorious chapter not only in the history of Tamil Nadu but also of Ariyalur Region because of his foundation for a new capital called Gangaikondacholapuram in Udaiyarpalayam Taluk.
Vanniyar, popularly called Padaiyatchis are one of the major communities living in Ariyalur region. During the medieval period they were called as Palli. Some fifty records of the Chola period are available in Ariyalur region and in the adjoining area which refer to the Vanniyas. The inscriptions show that many Pallis hailed from the villages located in Karaikkadu, Tunda Nadu and Sennivala Kurran which existed in Ariyalur region. A record of Rajendra Chola-I in 1022 A.D. refers to Palli (Vanniyar) settlement in the 11 cheris of Viranarayana Chaturvedimangalam.
Many inscriptions show that the Pallis had the titles of Araiyan, Periyarayan, Nadu Udaiyan, Nadalvan, Kani Udaiyan, Ur Udaiyan etc., which were prefixed with the name or surname of Chola Kings indicating their position in Chola Government. The following were a few titles of individual Pallis of this area as shown in inscriptions.
Cholendrasinga Periyaraiyan.
Singalandaka Periyaraiyan.
Madurandaka Periyaraiyan.
Sundara Periyaraiyan.
Mudikondachola Muttaraiyan.
Kadarankondachola Periyaraiyan.
Manikka Periyaraiyan.
Jayankondachola Tunda Nadalvan.
Tundanadu Udaiyan Kalayanapuramkondan.
Tenuril Kani udaiaya Tundarayan.
Aykkudiyil Kani udaiya Palligalil Ponnan (alias) Mudikonachola Muttaraiyan.
Olaippadiyil Kani udaiya Palligalil Karitirichchan Vikramachola Muttaraiyan.
Tongapurattil Kani udaiya Palligalil Alagan Ambalavan Kulothungachola Muttaraiyan.
Kurukkaiyil Kani udaiya Palligalil Pandyan Sokkan Maragadachola Muttaraiyan.
The above titles show their participation in the military exploits of Chola Kings and their landholding status and official position in Chola Government. Many Chola records refers to the Pallis as Bowmen and adept in archery (Vil, Villigal). Records name several regiments of archers (villigal padai) composed of the people of Vanniya caste by the Cholas.
Two records of 1045 A.D. and 1050 A.D. in Vriddachalam indicate the emergence of Jayankondacholapuram nagaram (Jayankondam, Udaiyarpalaiyam Taluk) and some individuals of palli caste of Jayankondacholapuram and Visayapuram as army personnel.
A chief of palli caste named Kuttan Pakkan (alias) Jayankondachola Tunda Nadalvan figures in the record of 1067 A.D. His name indicates his political status in Tunda Nadu area.
During the reign of Vikramachola (1118-36) and of his successors, inscriptions give enough information to show that the Palli and Surutiman castes of this region supplied soldiers, officials and generals to the Chola Government and enjoyed status in the contemporary society.
An officer of Palli caste named Sendan Suttamallan (alias) Vanakovaraiyan received land called tirumugakani from the king and he also made a gift of land to the Sennivanam temple in 1137 A.D.
In the reign of Rajadhiraja Chola-II (1166 - 1182 A.D), Vannadu Udaiyan Rajarajadevan (alias) Rajadhiraja Magadai Nadalvan, Tundanadu Udaiyan Tiruviradan (alias) Tundarayapanman Ariyavayan, Kadandai Sendan Adittan (alias) Rajaraja Vangara Muttaraiyan, Siraman Suttamallan (alias) Vikramachola Malayakularayan, etc. It seems these chiefs who had the status of "Rasukulavar" (Royal Families) had become aggressive by appropriating for themselves landholdings of temples, etc.
A record of 1216 A.D. refers to an army wing called Surutiman RajendraChola Terinda Villigal (archers) which comprised of Padaimudaligal (army generals) of Surutimans of anju nadu including Kunra Kurram and Melkaraikkadu.
The number of Chieftains of Vanniya caste with the titles of Vangara Muttaraiyan also called Kadandaiyar, Tunda Nadu Udaiyar/Tundarayan, Vanakovaraiyar and Kachchiyarayar held sway as Padikaval officers over parts of Ariyalur region.
The people of martial communities such as Palli and Surutiman castes joined the Chola Militia and rose to high status in the Chola Government and dominated as chiefs in Ariyalur region. Of them Tundanadu Udaiyar, Kandandaiyar (also called Vangara Muttaraiyar) and Vanakovaraiyar were important chiefs.
Thanks to : Prof Dr. L. Thiyagarajan.



20 comments:


  1. பல்லவர் தமிழர் அல்லர்

    வாணாதிராயர்

    பாளையக்காரர்களில் பெரும்பாலானவர்கள் தெலுங்கு பாணர்கள்- வாணாதிராயர்கள், பலிஜா நாயக்கர் அல்லது லிங்காயத்துகள் ஆவர். நாயக்கர் வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, பாளையக்காரர் தங்களை உள்ளூர் தமிழ் சாதிகளுடன் அடையாளம் காணத் தொடங்கினர்கள். தெலுங்கு வாணாதிராயர் மற்றும் வன்னியர் மூலம் பலிஜா நாய்க்கர்கள் தமிழ்நாட்டைக் கட்டுப்படுத்தினர்.

    வாணாதிராயர் பாண வம்சத்தின் கொடியுடன் அதாவது காளை கொடி மற்றும் அனுமன் கொடியுடன் வந்தார்கள். வன்னியர் மற்றும் பல்லவர் ஆகியோரும் காளைக் கொடியுடன் வந்தனர், காளைக்கொடி வடுக பாண வம்சத்தின் அடையாளமாக இருந்தது. அனுமன் கொடியுடன் சேதுபதி வந்தார். சேதுபதி கலிங்க பாணர் ஆவார்.

    ஆனால் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், வட இந்திய பாணர்களான வன்னியர், ஆந்திர பாணர் வம்சம் மற்றும் வில்லவர்-நாடார் வம்சங்கள் ஆகியவை நெருங்கிய தொடர்புடையவை. அனைவரும் அசுர மன்னன் மகாபலியின் வழிவந்தவர்கள். அனைவரும் அசுர மன்னன் மகாபலியின் வழிவந்தவர்கள். வில்லவர் பாண்டியன் வம்சம் மற்றும் ஆந்திர பாணர்,

    வடுக பாண வம்சத்தினராய வன்னியர்கள் தமிழ் வில்லவர் வம்சத்திலிருந்து வேறுபட்டவர்கள். பாணர் குலங்கள் தீ வம்சத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்தியா முழுவதையும் ஆண்ட இந்தியாவின் ஆரம்பகால க்ஷத்திரியர்களில் ஒரு குலமாவர்.


    வில்லவர் தமிழ் சாம்ராஜ்யங்களை அதாவது சேர சோழ பாண்டிய சாம்ராஜ்யங்களை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் அதாவது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிறுவினார்கள். பல்லவரும் வன்னியர்களும் கிமு 3 ஆம் நூற்றாண்டில்தான் தென்னிந்தியாவை ஆக்கிரமித்து சோழர்களால் ஆளப்பட்ட ஆந்திராவை ஆக்கிரமித்தனர்.

    நீண்ட காலத்திற்கு முன்பு வில்லவ நாடார்கள் மற்றும் பாஞ்சால நாட்டின் வன்னியர் போன்ற பாண குலங்கள் மற்றும் கிஷ்கிந்தா-ஆனேகுண்டியின் பலிஜா நாயக்கர் ஆகியோர் அனைவரும் உறவினர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் சிந்து நதி பகுதியை ஆண்ட அசுர திராவிட மன்னன் மகாபலியுடன் இன ரீதியாக தொடர்புடையவர்கள். வன்னியர் என்பது பாஞ்சால நாட்டின் வட திராவிட இனத்தவர். உத்தரப்பிரதேசத்தின் பானா குலங்களின் வில் மற்றும் அம்பு மற்றும் மீன் சின்னம் நவீன உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ சின்னமாகும்.


    _________________________________________


    பாஞ்சால நாட்டின் பாணர்களின் இரட்டை மீன், வில் மற்றும் அம்பு சின்னம்


    https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fa/Seal_of_Uttar_Pradesh.svg/2048px-Seal_of_Uttar_Pradesh.svg.png

    _________________________________________



    கர்நாடகாவில் உள்ள பேகூரில் உள்ள திகளர் கிறிஸ்தவர்கள்

    https://www.thehindu.com/news/cities/bangalore/a-past-more-glorious-than-its-present/article3254209.ece

    _______________________________________


    திரௌபதியால் உருவாக்கப்பட்ட திகளர் வீர குமாரர்கள்

    https://newsable.asianetnews.com/south/six-facts-you-didnt-know-about-century-old-festival-karaga

    _______________________________________


    கேரளாவில் சவளர் சமூகம்

    http://chavalakkaran.blogspot.com/


    ________________________________________

    ReplyDelete
  2. பல்லவர் தமிழர் அல்லர்

    வன்னியர்கள்

    பள்ளி என்பது பாண மன்னர்களின் பட்டம், வன்னி பட்டம் வில்லவர்களாலும் பயன்படுத்தப்பட்டது.

    பள்ளிபாணப்பெருமாள்

    துளுநாட்டின் ஆலுபா பாண்டிய வம்சத்தின் பாணவாணிப்பெருமாள்கள் பள்ளி பட்டத்தை பயன்படுத்தினர். கி.பி 1120 இல் அராபியர்களுடன் ஆதரவுடன் கேரளா மீது படையெடுத்த துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளும் பள்ளி பட்டத்தை பயன்படுத்தினார். பள்ளிபாணப்பெருமாள் என்று அழைக்கப்பட்ட இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். பௌத்த பாணர்கள் பள்ளி பட்டத்தை பயன்படுத்தியிருக்கலாம். பாணப்பெருமாளின் வழித்தோன்றல்கள் கண்ணூர் கோலத்திரி வம்சத்தினர். கோலத்திரி மன்னர்களும் பள்ளிப் பட்டத்தைப் பயன்படுத்தினர். பேப்பூரில் உள்ள பள்ளி கோவிலகத்தின் கிளையானது ஒரு குட்டித் தலைவரால் ஆளப்பட்ட தட்டாரி கோவிலகம் என்று அழைக்கப்பட்டது. தலைச்சேரி தொழிற்சாலையில் இருந்த பிரிட்டிஷ் தலைமை ஆடம்ஸ் பேப்பூரில் இருந்து சில இளவரசர்களையும் இளவரசிகளையும் அழைத்து வந்து திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் அரசர்களாக்கினார். கேரளாவை ஆண்ட துளு
    ஆலுபா வம்சம், பள்ளி என்று அழைக்கப்பட்டாலும், வன்னியர்களுடன் எந்த விதத்திலும் இனம் சார்ந்திருக்கவில்லை. பள்ளி பட்டம் பௌத்த பாண மன்னர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.

    பாண குலம்

    பழங்காலத்தில் இந்தியா முழுவதும் பாண குலத்தினர் ஆட்சி செய்தனர். ஆனால் கிமு 1800 இல் ஆரியர்கள் மற்றும் நாகா பழங்குடியினரின் வருகைக்குப் பிறகு பல பாண குலங்கள் ஆரியர்கள் மற்றும் நாகர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர்.

    பாணர்கள் காடுகளில் (வன்னி, சம்பு, காடு) வசிக்க விரும்பினர். பாஞ்சால நாட்டில் ஆரியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட பாணர் காடுகளை வெட்டுபவர்களாக வேலை செய்திருக்கிறார்கள்.

    பாஞ்சால நாடு

    கிமு ஆறாம் நூற்றாண்டில் மகாபாரதத்தின் போது பாஞ்சால நாடு உத்தர பாஞ்சால நாடு மற்றும் தட்சிண பாஞ்சால நாடுகளாக பிரிக்கப்பட்டது.
    கிமு ஆறாம் நூற்றாண்டில் பாரத்வாஜ பிராமண கோத்திரத்தைச் சேர்ந்த அஸ்வத்தாமா உத்தர பாஞ்சால நாட்டின் மன்னரானார். உத்தர பாஞ்சால நாட்டின் தலைநகரம் அஹிச்சத்திரம். தட்சிண பாஞ்சால நாடு திரௌபதியின் தந்தை துருபதன் ஆண்ட நாக நாடு. வன்னியர்கள் வீர புத்திரர்கள் எனப்படும் திரௌபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக இருந்தனர்.

    கிமு ஆறாம் நூற்றாண்டில் அதாவது மகாபாரத காலத்தில் வன்னியர்கள் பாஞ்சால நாட்டில் வசிப்பவர்களாக இருந்தனர். கிமு மூன்றாம் நூற்றாண்டில் வன்னியர்கள் பஹ்லவா-பல்லவ என்று அழைக்கப்படும் பாரசீக கலப்பு பாரத்வாஜ பிராமண மன்னர்களுடன் தென்னிந்தியாவிற்கு படையெடுத்து வந்தனர்.

    பெங்களூர் கரகா

    கர்நாடகாவில், ஒவ்வொரு ஆண்டும் வன்னியர்கள் தர்மராயா கோவிலில் "பெங்களூர் கரகா" என்ற திருவிழாவை நடத்துகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரில் நடத்தப்படும் திருவிழாவில், பாஞ்சால நாட்டின் திரௌபதியின் விசுவாசமான ஊழியர்களான வீர புத்திரர்களின் வேஷத்தில் திகளர் என்றழைக்கப்படும் வன்னியர்கள் வாள்களுடன் நடனமாடுகிறார்கள்.

    வன்னியர்கள் பாண்டவர்கள் மற்றும் திரௌபதியின் சேவகராகவும் போர்வீரர்களாகவும் இருந்துள்ளனர். திகல-திர்காலா என்னும் பட்டமுடைய வன்னியர்கள் கிமு 6 ஆம் நூற்றாண்டில் பாண்டவர்களுக்கும் திரௌபதிக்கும் சேவை செய்து பாஞ்சால நாட்டில் வசித்தவர்கள்.

    கர்நாடகாவின் திகளர் திரௌபதி மற்றும் தர்மராயரை வணங்குகிறார், அவர்களுக்காக அவர்கள் பல கோயில்களைக் கட்டியுள்ளனர். தமிழ்நாட்டின் வன்னியர்கள் அர்ஜுனனின் மகன் அரவானை வணங்குகிறார்கள்.

    ஆரியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட பாணர்கள், ஹிந்தியின் பண்டைய வடிவமான பிராகிருதத்தைப் பேசினர். பல்லவர்கள் பிராகிருதத்தையும் சமஸ்கிருதத்தையும் அதிகாரப்பூர்வ மொழிகளாகப் பயன்படுத்தினர், தமிழ் அல்ல.

    இந்த அடிமைப்பட்ட பாணர்கள் ஆரிய மற்றும் நாகா ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருந்தனர் மற்றும் அவர்களது சொந்த மக்களான அசுரர்களுக்கு எதிராக போரிட்டனர்.

    பாரசீக பஹ்லவா அல்லது பார்த்தியன் வம்சத்துடன் கலந்திருந்த அஸ்வத்தாமாவின் பிராமண வம்சத்திலிருந்து வந்த பல்லவர்கள், கிமு மூன்றாம் நூற்றாண்டில் திராவிட நாட்டின் மீது படையெடுப்பதற்காக வன்னியர் (பாண, வன்னி, வட பலிஜா, பள்ளி, திர்காலா) படைகளைக் கொண்டு வந்தனர்.

    ReplyDelete
  3. பல்லவர் தமிழர் அல்லர்

    வட பலிஜா

    வன்னியர்கள் மகாபலியின் வழிவந்த பாணர்கள் என்பதால் அவர்கள் பலிஜா என்று அழைக்கப்பட்டனர். வன்னியர் வட பாஞ்சால நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் வட பலிஜா என்று அழைக்கப்பட்டனர். இது வன்னியரை ஆந்திராவின் பலிஜா நாயக்கர் என்ற பழங்குடி பாணர் குலங்களிலிருந்து வேறுபடுத்துவதற்காகும். ஆந்திரப் பிரதேசத்தில் வட பலிஜா என்று அழைக்கப்படும் வன்னியர்கள் பெரும்பாலும் மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதியில் வசிக்கின்றனர். மற்ற வன்னியர்கள் தங்களை காப்பு சமூகமாக அடையாளப்படுத்த முயற்சிக்கின்றனர். இதை காப்பு சமூகத்தினர் கடுமையாக மறுத்துள்ளனர். ஆயினும்கூட, வன்னியர்கள் தங்களை ஆந்திரப் பிரதேசத்தில் வன்னே காப்பு என்றும் பள்ளே காப்பு என்றும் அழைக்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் விவசாயத் தொழிலாளர்கள்.


    வில்லவர் மற்றும் பாணர்

    வில்லவர் மற்றும் பாணர் இருவரும் மகாபலியின் வழிவந்தவர்கள். வில்லவர் மகாபலியை மாவேலி என்றும் அழைத்தார்கள். துளு ஆலுபா பாண வம்சங்கள் எல்லாம் ஹிரண்யகர்பா விழாவை நடத்தினர். வில்லவர் பாண்டியன் வம்சம் மற்றும் ஆந்திர பாணர், துளு ஆலுபா பாண வம்சங்கள் எல்லாம் ஹிரண்யகர்ப விழாவை நடத்தினர். அந்த விழாவில் வில்லவர் அல்லது பாணர் ஆட்சியாளர்கள் தாம் அசுர மன்னன் மஹாபலியின் தாத்தாவான ஹிரண்யகசிபுவின் வழித்தோன்றல் எனக் கூறினர்.
    வட இந்திய பாணர்கள் பிராகிருதத்தை பயன்படுத்திய போது வில்லவர் தமிழ் பேசினார்கள். வில்லவர் மற்றும் பாணர்கள் பழங்காலத்தில் உறவினர்களாக இருந்தபோதிலும் பரம எதிரிகளாக மாறினர். சேர, சோழ, பாண்டிய வம்சங்கள் தமிழ் வல்லவர் துணைக் குலங்களான வில்லவர் மலையர் மற்றும் மீனவர் எனப்படும் வில்லவரின் கடல் செல்லும் குலத்தால் நிறுவப்பட்டது. பிற்காலத்தில் வில்லவர், மலையர், வானவர் போன்ற அனைத்து வில்லவர் குலங்களும், மீனவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கினர்.


    வில்லவர் வேறு வன்னியர் வேறு

    வன்னியர்கள் சேர, சோழ பாண்டிய வம்சங்களை நிறுவிய தமிழ் வில்லவர் அல்ல. வன்னியர்-பள்ளி வட இந்திய பிராகிருத மொழி பேசியிருந்த பாஞ்சால நாட்டின் பாணர்கள். பழங்காலத்தில் பாஞ்சால நாடு நவீன உத்தரப்பிரதேசத்திலும் நேபாளத்திலும் இருந்தது.

    காளைக் கொடி பாணர் குலத்தைச் சேர்ந்தது. பல்லவ அரசர்களுக்குச் சொந்தமான சிங்கக் கொடி பிராமண பாரத்வாஜா வம்சத்தைச் சேர்ந்தது. பல்லவ மன்னர்கள் பாரத்வாஜ பிராமணர்கள் மற்றும் பாரசீகத்தின் பார்த்தியன்-பஹ்லவா வம்சத்தின் கலப்பு இனத்தைச் சேர்ந்தவர்கள். பல்லவ மன்னர்கள் பாண வன்னியர்களை ஆண்டவர்கள் ஆதலால் தங்களை நந்தி(பாணக்கொடி) வர்மா(அரசர்) பல்லவன்(பாரசீக பஹ்லவ வம்சம்) என்று அழைத்தனர். பல்லவ வம்சத்தின் தலைநகரம் மகாபலி புரம் ஆகும், இது பாண மன்னன் மகாபலியின் பெயரால் அழைக்கப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பல்லவ மன்னர்கள் தங்கள் பலிஜா-வன்னியர் வீரர்களின் ஆதரவைப் பெற மகாபலி போல் நடித்தனர்.

    ஐந்தாம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் பல்லவர்கள் தமிழைப் பயன்படுத்தியிருந்தாலும், அவர்கள் தமிழை ஆட்சி மொழியாகப் பயன்படுத்தவில்லை. அதிகாரப்பூர்வ மொழி சமஸ்கிருதம் மற்றும் பிராகிருதம். பல்லவ மன்னர்கள் கி.பி.13ஆம் நூற்றாண்டில் தமிழைப் பயன்படுத்தத் தொடங்கினர். முதலாம் கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1216 முதல் 1242 வரை) தமிழ்ப் பெயரைப் பயன்படுத்திய முதல் பல்லவ மன்னர் ஆவார்.

    கோப்பெருஞ்சிங்கன் ஆந்திர பாண வம்சத்தினர் பயன்படுத்திய மணவாளப்பெருமாள் பட்டத்தை பயன்படுத்தினார்.  முதலாம் கோப்பெருஞ்சிங்க மன்னன் பல்லவ வம்சத்தைச் சேர்ந்தவன் அல்ல, ஆனால் அவன் ஆந்திர பாணர் வம்சத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம். மணவாளப்பெருமாள் மற்றும் காடவர் பட்டம் ஆந்திர பாணர்களுக்கு சொந்தமானது.  பாணர் காடுகளில் வாழ்ந்தனர்.

    ReplyDelete
  4. பல்லவர் தமிழர் அல்லர்

    தமிழ்

    பல்லவ வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு வன்னியர் தமிழ் மொழியை ஏற்றுக்கொண்டிருக்கலாம்.  அல்லது வன்னியர் இடைக்காலத்தில் பிராகிருதம், தமிழ் இரண்டையும் பயன்படுத்தியிருக்கலாம்.  கிமு 300 முதல் கிபி 275 வரை பல்லவர் ஆந்திராவை ஆண்டதால் வன்னியர்களால் பயன்படுத்தப்பட்ட முதல் திராவிட மொழி தெலுங்கு.  கி.பி 300க்குப் பிறகு பல்லவர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்தபோது வன்னியர்கள் தமிழ் கற்கத் தொடங்கியிருக்கலாம்.  கி.பி.1500க்குப் பிறகு வன்னியர் கர்நாடகாவுக்கு தோட்டக்கலைத் தொழிலாளியாகச் சென்றிருக்கலாம்.  கர்நாடக வன்னியர்கள் திகளர் என்று அழைக்கப்படுகிறார்கள். 
    மைசூரைச் சுற்றி காணப்படும் வன்னியர்கள் சம்புவ ராயர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சம்புவராயர் விவசாய கூலித்தொழிலாளிகள்.

    தென் தமிழ்நாட்டிலும், கேரளாவின் தென்பகுதியிலும் வன்னியர்கள் சவளக்காரர் என்று அழைக்கப்படும் மீனவர்கள். பெரும்பாலான சவளக்காரர்கள் போர்த்துகீசிய காலத்தில் லத்தீன் கத்தோலிக்கராக மாற்றப்பட்டனர்.

    வன்னியர் குலங்கள்.

    ஆந்திரப் பிரதேசம்
    1.வன்னே காப்பு
    2.பள்ளே காப்பு
    3. வட பலிஜா

    தமிழ்நாடு
    1. வன்னியர்
    2. பள்ளி
    3.காடுவெட்டி
    4. நாயக்கர்
    5.சவளக்காரர்

    கர்நாடகா
    1. திகளர்
    2. சம்புவ ராயர்

    கேரளா
    1.சவளர்



    மொழி

    கேரளாவில் வன்னியர்களை சவளர் என்று அழைக்கப்படும் உள்நாட்டு மீனவர்கள்.  வன்னியர்கள் நான்கு திராவிட மொழிகள் பேசுகிறார்கள்.  ஒருவேளை தெலுங்கு அவர்களுக்கு பிடித்த மொழியாக இருந்திருக்கலாம். 

    தமிழ்நாட்டில் வன்னியர்கள் தெலுங்கு வார்த்தைகள் கலந்த தமிழ் போன்ற ஒரு மொழியைப் பேசுகிறார்கள். கர்நாடகாவில் திகளர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் கலந்த திகளரி என்றும் அழைக்கப்படும் தெகிழ் மொழியைப் பேசுவார்கள்.

    பல்லவர்

    பல்லவர் பாரத்வாஜ பிராமண கோத்ரத்தைச் சேர்ந்த துரோணாச்சாரியாரின் மகன் அஸ்வத்தாமாவை பூர்வீகராக கொண்டவர்கள். பல்லவர்கள் பார்த்தியர்கள் (பாரசீகர்கள்) மற்றும் பிராமண பாரத்வாஜ கோத்திரம் கலர்ந்தவர்கள். பல்லவர் முதலில் அஹிச்சத்திரத்தில் இருந்து பாஞ்சால நாட்டைச் ஆண்டவர்கள். பல்லவர் உத்தரபிரதேசத்தில் இருந்து காடு வெட்டுபவர்களின் படையை கொண்டு வந்தார்கள். இந்த காடுவெட்டிகள் உத்தரபிரதேசத்தின் பாணர் அல்லது வட பலிஜா (அக்னி, வன்னி, திர்கார், திர்கால) என்னும் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பிராகிருதமும் சமஸ்கிருதமும்தான் ஆயிரம் வருடங்களுக்கு மேல் பேசிக்கொண்டிருந்தார்கள்.

    பாஞ்சால நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் இந்த திகலா-வன்னியர் திரவுபதி, தர்மராயர் மற்றும் அரவானை வழிபடுகின்றனர். பெங்களூரில் திகளர் பெங்களூரு கரகத்தை தர்மராயர் கோவில்களில் வருடாவருடம் நடத்துகிறார்கள். திகல-வன்னியர் அவர்கள் திரவுபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக இருந்த வீரபுத்திரர்கள் என்று கூறுகின்றனர்.

    ஆனால் அவர்கள் ஓசூர் எல்லையைக் கடக்கும்போது பிச்சாவரம் ஜமீன்தார் சோழர் என்று சொல்லத் தொடங்குகிறார்கள். சூரப்ப சுப்பையா நாயுடு சோழர் அல்லர்.

    சோழர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும் வில்லவர், வானவர் மற்றும் மலையர் குலங்களால் பாதுகாக்கப்பட்டனர். . நாடார்கள் இவர்களை சோனாட்டார் என்றும் ஆத்தியர் என்றும் அழைக்கின்றனர். அனைத்து வில்லவர் மீனவர் துணைக்குழுக்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் அல்லது நாடார் குலங்களை உருவாக்கினர்.

    ReplyDelete
    Replies
    1. சான்றுகளே இல்லாமல் மொத்தமாக கதை கூறுவதை நிறுத்தவும். பல்லவர்கள் காடவர்கள் பள்ளிகள் வன்னியர்கள்‌என்று நேரடியாகவே பல்லவர்கள் கல்வெட்டில் பதிவு செய்துள்ளனர், வேளீர்கள் கங்கர்கள் வெளிப்படையாக வன்னியர் பள்ளி என்று பதிவு செய்துள்ளனர்! வரலாறு இல்லாத பொறாமையில் உளறாமல் இருக்கவும்

      Delete
  5. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    சேர சோழ பாண்டிய வம்சங்கள்

    சேரர்கள் வில்லவர்கள், பாண்டியர்கள் வில்லவர்-மீனவர்கள், சோழர்கள் வானவர்கள், இவர்கள் அனைவரும் வில்லவர்-மீனவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ReplyDelete
    Replies
    1. வில்லவர்கள் சாணாரா? இதற்கு தான் இவ்வளவு சுத்தி வளச்சி கதை கட்டிக்கிட்டு இருக்கியா

      Delete
  6. வில்லவர் மற்றும் பாணர்

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.


    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர் (கரவே)
    2. குகன்குலத்தோர் (மறவர், முற்குகர், சிங்களர்)
    3. கவுரவகுலத்தோர் (கரையர்)
    4. பரதவர்
    5. களப்பிரர்கள் (கள்ளர், களப்பாளர், வெள்ளாளர்)
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்(நாயர்)

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் காபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    திருவிதாங்கூர் மன்னர்கள் சங்கு முத்திரையுடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினர். ஏனென்றால், அவர்கள் கர்நாடகாவின் துளுநாட்டில் ஆலுபா வம்சத்தைச் சேர்ந்தவர்கள். சேதுபதி அனுமன் சின்னத்துடன் ஒரு கொடியைப் பயன்படுத்தினார். அதற்கு காரணம் அவர் பாண - கலிங்க வாணாதிராயர் ஆவார்.

    ReplyDelete
  7. இந்தியாவின் மூன்று இனங்கள்

    இந்தியாவின் மூன்று இனங்கள் திராவிடர், ஆரியர் மற்றும் நாகர்கள்.
    திராவிடர்கள் இந்தியாவில் உருவான இந்தியாவின் பூர்வீக பூர்வகுடிகள்.

    1. திராவிடர்
    2. ஆரியர்
    3. நாகர்


    திராவிடர்கள்

    பாணர்கள், வில்லவர்கள், மீனவர் பில், மீனா, தானவர், தைத்தியர்கள் ஆகியோர் ஆரியர்களுக்கு முந்திய திராவிட மக்கள் ஆவர். அவர்கள் இந்தியா முழுவதையும் ஆண்டனர். பாண்டிய இராச்சியம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் நெருங்கிய தொடர்புடைய வில்லவர்-மீனவர் மக்களால் நிறுவப்பட்டது. வட இந்தியாவில் இப்போது ஆதிக்கம் செலுத்தும் பணியாக்கள் திராவிட பாணர்களிலிருந்து உருவாகியிருக்கலாம். இந்தோ-ஆரியர்கள் பாணர்களை அசுரர்கள் என்று அழைத்தனர்

    பண்டைய சங்க இலக்கியங்களின்படி, பாண்டிய மன்னன் காய்சின வழுதி பாண்டிய வம்சத்தை கிமு 9990 இல் நிறுவினார், அதாவது 11,971 ஆண்டுகளுக்கு முன்பு. வில்லவர் சாம்ராஜ்யங்கள் வில்லவர், மலையர், வானவர் போன்ற வில்லவர் குலத்தவர்களாலும் கடல்கடந்த குலமான மீனவர்களாலும் ஆதரிக்கப்பட்டன.
    வில்லவர் உயர்குடியினர் நாடாள்வார் அல்லது சான்றார் என்று அழைக்கப்பட்டனர்.


    இந்தோ-ஆரியர்கள்

    கிமு 1800 இல் இந்தோ-ஆரியர்கள் ஹரஹ்வைதி நதிக்கு அதாவது அர்கந்தாப் நதி பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். கிமு 1800 முதல் கிமு 1750 வரை அவர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தைத் தாக்கி அங்கு அவர்கள் குடியேறினர்.

    கிமு 1500 முதல் கிமு 1100 வரை இந்தோ-ஆரியர்கள் பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கில் குடியேறினர். அந்தக் காலத்தில் ரிக்வேதம் எழுதப்பட்டது. கிமு 1100 இல் இந்தோ-ஆரியர்கள் பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் குடியேறினர்! கிமு 1100 முதல் கிமு 500 வரையிலான இந்தோ-ஆரிய கலாச்சாரம் பிந்தைய வேத காலம் அல்லது வர்ணம் பூசப்பட்ட சாம்பல் சாமான் கலாச்சாரம் என்று அழைக்கப்பட்டது. கிமு 6 ஆம் நூற்றாண்டில் வேத யுகத்தின் பிற்பகுதியின் முடிவில் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் கூறப்பட்ட நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்தன. யுதிஷ்டிரனின் ராஜசூய யக்ஞத்திற்குப் பரிசுகளைக் கொண்டு வரும் குருக்ஷேத்திரப் போரில் சிங்கள மன்னன் பங்கேற்றதை மகாபாரதம் குறிப்பிடுகிறது. சிங்கள சரித்திரம் மகாவம்சத்தின் படி சிங்கள இராச்சியம் இளவரசர் விஜயனால் நிறுவப்பட்டது கி.மு 543 இலாகும், .


    சித்தியன் படையெடுப்பு

    கிமு 150 இல் ஆரிய குலமாக இருந்த சித்தியன் - சாகா மக்களின் படையெடுப்பிற்குப் பிறகு, பழைய இந்தோ-ஆரிய கலாச்சாரம் முற்றிலும் மறைந்து விட்டது. பிராமணர்கள் பல்லின தோற்றமுள்ளவர்கள் மற்றும் பல பிராமணர்கள் சித்தியர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். கிபி 460 இல் ஹூனா மற்றும் ஹெப்தாலைட்டுகள் இந்தியாவைத் தாக்கினர். ஹெப்தாலைட்டுகள் அல்லது வெள்ளை ஹுனா ஆரம்பகால துருக்கிய குலங்கள். சித்தியர்களிடமிருந்து, ஹூனாக்கள் மற்றும் ஹெப்தாலைட்டுகள் ராஜ்புத் குலங்கள் உருவாகின. சித்தியர்களிடமிருந்தும் ஜாட்கள் உருவாகியிருக்கலாம்.


    சித்தியன் மற்றும் ஹூணர்களுடன் இந்தோ-ஆரிய கலவை

    இவ்வாறு வட இந்தியப் பண்பாடு என்பது திராவிடர், இந்தோ-ஆரியர்கள், பார்த்தியர்கள், சித்தியர்கள், ஹூணர், ஹெப்தாலைட்டுகள் போன்றவர்களின் கலவையாகும்.
    வட இந்தியாவில் ராஜ்புத்திரர், ஜாட், கத்ரி, மராத்தியர் போன்ற பெரும்பாலான ஆதிக்க மக்கள் சித்தியர்கள் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். காயஸ்தர்கள் குஷான படையெடுப்பாளர்களிடமிருந்து உருவாகியிருக்கலாம். உண்மையான இந்தோ-ஆரியர்கள் இன்று இல்லை. வட இந்தியர்களில் பெரும்பாலானோர் ஹிந்தி பேசினாலும் அவர்கள் இன ரீதியாக வேறுபட்டவர்கள்.

    வேத ஆரியர்களாக நடிக்கும் வட இந்தியர் உண்மையில் சித்தியனாகவோ, ஹூணனாகவோ அல்லது துருக்கியராகவோ இருக்கலாம். பிராமணர்கள் உட்பட அவர்களில் பலர் பாரசீக மொழியிலும், வேதங்களில் இல்லாத மத்திய ஆசிய மொழிகளிலும் குடும்பப்பெயர்களைக் கொண்டுள்ளனர்.

    சித்தியன் படையெடுப்பிற்குப் பிறகு, இந்தோ-ஆரிய பிராமணர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்த இக்ஷவாகு மற்றும் சந்திர வம்சத்தைச் சேர்ந்த யாதவர்கள் போன்ற தங்கள் சொந்த மன்னர்களைக் கைவிட்டனர். இந்தோ-ஆரிய பிராமணர்கள் ராஜபுத்திர ராஜ்யங்களை நிறுவிய சித்தியன் மற்றும் ஹூண படையெடுப்பாளர்களுடன் இணைந்தனர்.


    மகாபாரத குலங்கள்

    மகாபாரத காலத்திலிருந்த யாதவர்கள், இக்ஷவாகு, குஷ்வாஹா, சாக்கியர், மௌரியர் போன்ற குலங்கள் உத்தரப்பிரதேசத்தில் இன்னும் பலமற்றவை. அவர்கள் ஒப்பீட்டளவில் கருமையான நிறமுள்ளவர்கள். இவர்கள் அனைவரும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

    ReplyDelete
  8. இந்தியாவின் மூன்று இனங்கள்

    நாகர்கள் துருக்கியர்கள் மற்றும் அரேபியர்களுடன் நட்பு கொள்வது

    கி.பி 1311 இல் மாலிக் காஃபர் படையெடுப்பு தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள அனைத்து தமிழ் வில்லவர் ராஜ்யங்களையும் அழித்தது.
    நாக குலங்கள் அரேபியர்கள் மற்றும் துருக்கியர்களுடன் கூட்டணி வைத்து அவர்களுடன் திருமண உறவுகளை கொண்டிருந்தனர். கிபி 1335 முதல் கிபி 1377 வரை மாபார் சுல்தானகத்தின் ஆட்சியின் போது பல நாகர்கள் இஸ்லாமிற்கு மாற்றப்பட்டனர், ஆனால் கிபி 1377 க்குப் பிறகு நாயக்கர் ஆட்சியின் போது அவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றப்பட்டனர்.
    ஆனால் கள்ளர்கள் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை விருத்தசேதனம் செய்யும் சடங்கைத் தொடர்ந்தனர். கள்ளர் திருமணங்களில் மணமகனின் சகோதரி மட்டுமே மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவார். தாலியில் சந்திரன் மற்றும் நட்சத்திரத்தின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கினறன.

    கிபி 1311 இல் மாலிக் காஃபர் படையெடுப்பிற்குப் பிறகு நாயர், கள்ளர், மறவர், வெள்ளாளர் போன்ற நாக குலங்கள் கேரளா மற்றும் தமிழகத்தின் ஆட்சியாளர்களாக ஆனார்கள்.


    வாணாதிராயர்கள்

    கி.பி.1377ல் விஜயநகர நாயக்கர் தாக்குதலின் பின்பு வாணாதிராயர் எனப்படும் பல தெலுங்கு பாண தலைவர்கள் கள்ளர், வெள்ளாளர், மறவர் போன்ற நாக குலங்களின் பிரபுக்களாக மாறினர்.

    இந்த வாணாதிராயர்கள் பாளையக்காரர் ஆக்கப்பட்டனர். பிற்காலத்தில் இந்த தெலுங்கு வாணாதிராயர்களும் லிங்காயத்துகளும் கள்ளர், மறவர் மற்றும் கவுண்டர்கள் போன்ற உள்ளூர் தமிழ் சாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்.


    முடிவுரை :

    திராவிடர்கள்

    தமிழ்நாட்டில் பெரும்பாலான நாக குலத்தினர் திராவிடர்களாக வேடம் போடுகிறார்கள். உண்மையில் நாடார்களும், பல்லவ வன்னியர்களும், பலிஜா நாயக்கர்களும் மட்டுமே தமிழ்நாட்டில் திராவிடர்கள் ஆவர்.

    வில்லவர், மலையர், வானவர், மீனவர் என அனைத்து வில்லவர் குலங்களும் இணைந்த பிறகே நாடார் அல்லது நாடாள்வார்கள் தோன்றினர்.
    வில்லவர் பட்டங்கள் வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாந்தகன், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா -காவுராயர், இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பாண குலங்களும் வில்லவர் குலங்களும் திராவிட இனத்தைச் சேர்ந்தவை. நாடார்கள் வில்லவர் குலத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா நாயக்கர்கள் ஆந்திரா மற்றும் கர்நாடகாவின் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பல்லவ வன்னியர் பாஞ்சால நாட்டின் வட பாண வம்சத்தைச் சேர்ந்தவர்.

    பலிஜா நாயக்கர்கள் பழங்காலத்திலிருந்தே கிஷ்கிந்தா-ஆனேகுண்டியில் இருந்து ஆட்சி செய்த பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். பலிஜா நாயக்கர்களின் பட்டங்களில் பாணாஜிகா, பாணியா, வளஞ்சியர் மற்றும் வானரர் ஆகியவை அடங்கும்.

    பல்லவ வன்னியர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் நேபாளத்தை ஒத்திருக்கும் பாஞ்சால நாட்டிலிருந்து வடக்கு பாணர்கள் ஆவர். அஸ்வத்தாமாவின் பிராமண பாரத்வாஜ குலத்தைச் சேர்ந்த பல்லவ மன்னர்களுடன் வன்னியர்கள் தென்னாட்டிற்கு கிமு மூன்றாம் நூற்றாண்டில் வந்தனர். பல்லவ வம்சம் ஈரானின் பார்த்தியன் வம்சத்துடன் இணைந்ததால் பல்லவ அல்லது பஹ்லவ என்று அழைக்கப்பட்டது. பாரத்வாஜ-பார்த்தியன் வம்சத்தினர் காடுவெட்டிப் படையைக் கொண்டுவந்தனர். பல்லவ மன்னர்கள் மகாபலிபுரத்தை கட்டி மன்னன் மகாபலியின் பெயரை சூட்டினார்கள். மகாபலி அல்லது மாவேலி வில்லவர் மற்றும் பாண குலத்தின் மூதாதையர் ஆவார்.

    அதன் காரணமாக பல்லவ மன்னர்கள் காடுவெட்டி என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர். வீரகுமாரர்கள் எனப்படும் திரௌபதியின் தனிப்பட்ட பாதுகாவலர்களாக வன்னியர் இருந்தனர். வன்னியர்களின் பட்டங்கள் வட பலிஜா, திகலா அல்லது திர்கலா போன்றவை.

    ReplyDelete
  9. கடைசி சேர, சோழ பாண்டிய மன்னர்கள்


    டெல்லி சுல்தானகத்தின் படையெடுப்பு

    சேர, சோழ பாண்டியர்கள் வில்லவர் வம்சத்தினர் ஆவர்.
    கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் கீழ் டெல்லி சுல்தானகத்தின் தாக்குதலுக்குப் பிறகு குலசேகர பாண்டிய கி.பி 1335 வரை மதுரையில் இருந்து ஆட்சி செய்தார். ஆனால் மதுரை சுல்தானகம் எனப்படும் மாபார் சுல்தானகம் என்ற துருக்கிய சுல்தானகம் கி.பி 1335 இல் நிறுவப்பட்டது. அதன் பிறகு வில்லவர்கள் தெற்கே சிவகாசிக்கு குடிபெயர்ந்தனர், அவர்களின் தலைநகரம் திருவாடானை ஆனது. திருவாடானையிலிருந்து வடக்கே கோடியக்கரையையும் தெற்கே கன்னியாகுமரியையும் பாண்டிய வம்சத்தினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். திருநெல்வேலியும் தூத்துக்குடியும் பாண்டியர்களின் கோட்டைகளாக இருந்தன. பாண்டிய வில்லவர்களின் பண்டைய அரச வீடான தென்காசியிலிருந்து மற்றொரு பாண்டிய குலத்தினர் ஆட்சி செய்தனர்.


    விஜயநகர நாயக்கர் தாக்குதல்

    1376 இல் விக்ரம பாண்டியன் வேணாட்டின் துளு-நேபாள குல அரசர் ஆதித்யவர்மா சர்வாங்கநாதன் உதவியுடன் துருக்கிய படையெடுப்பாளர்களை வெளியேற்ற முயன்றார். ஆனால் விஜயநகர நாயக்கர்கள் கி.பி 1377 இல் பாண்டிய ராஜ்ஜியத்தின் மீது படையெடுத்து கீழ்ப்படுத்தினர் மற்றும் அவர்கள் பாண்டியர்களாக வேடமணிந்த வாணாதிராயர் என்ற தெலுங்கு பாணர்களை மதுரை மன்னர்களாக்கினர்..


    சேர வில்லவர் குலங்களின் இடம்பெயர்வு

    சேர, பாண்டிய, சோழ வில்லவர்கள் வேணாட்டின் எல்லையில் கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி, களக்காடு, கோட்டையடி ஆகிய இடங்களில் வரிசையாகக் கோட்டைகளைக் கட்டினர்.

    சேராய் குலத்தினர் தெற்கே குடிபெயர்ந்து திருவிதாங்கோடு, கோட்டையடி மற்றும் சேரன்மாதேவி ஆகிய இடங்களில் கோட்டைகளை நிறுவினர். சேரர்களின் வழித்தோன்றல்கள் வில்லவ நாடார், திருப்பாப்பு நாடார் மற்றும் மேனாட்டார் போன்றவர்களாகும்.

    பாண்டியர்கள் தங்கள் பண்டைய அரச வீட்டிற்கு குடிபெயர்ந்து 17 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து ஆட்சி செய்தனர். தென்காசி பாண்டியர்கள் விஜயநகரப் பேரரசின் மேன்மையை ஏற்றுக்கொண்டனர். சில பாண்டிய குலத்தினர் கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இடங்களுக்கு குடிபெயர்ந்து அங்கு கோட்டைகளை நிறுவினர். பாண்டியர்கள் களக்காடு மற்றும் வள்ளியூர் ஆகிய இடங்களிலும் தங்கியிருந்தனர்.

    பாண்டிய வம்சாவளியினர் பாண்டிய குல க்ஷத்திரிய நாடார், மாற நாடார் அல்லது மானாட்டார் போன்றவர்கள்.

    சோழ பாண்டியன் கலப்பு குலம் நட்டாத்தி நாடார்கள்.

    களக்காடுக்குப் புலம் பெயர்ந்த சோழர்கள் களக்காடு என்ற சோழ குல வல்லிபுரத்தில் கோட்டையைக் கட்டினார்கள்.

    பாண்டிய நாட்டை ஆண்ட கடைசி பாண்டிய மன்னன் சந்திரசேகர பாண்டியன்.


    சந்திரசேகர பாண்டியருக்கும் உலகுடைய பெருமாளுக்கும் இடையேயான போட்டி

    1520களில் சந்திரசேகரராவ் மதுரையை மீட்டு மதுரையில் இருந்து ஆட்சி செய்து வந்தார். சந்திரசேகர பாண்டியரின் போட்டியாளர் கன்னியாகுமரியில் வசித்து வந்த உலகுடையப்பெருமாள். உலகுடையப்பெருமாள் போர்த்துகீசியர்களுடன் கூட்டுச் சேர்ந்து, அவர் சிறிது காலம் மதுரையின் அரசரானார், அதே நேரத்தில் சந்திரசேகர பாண்டியன் மேற்குத் தொடர்ச்சி மலையில் தஞ்சம் புகுந்தார். உலகுடையப்பெருமாளும் அவரது சகோதரர் சரியகுலப்பெருமாளும் பட்டாணி ராகுத்தனுக்கு எதிரான போரில் போர்த்துகீசியர்களுடன் கூட்டுச் சேர்ந்தனர். ஆனால் சந்திரசேகர பாண்டியன் பாண்டிய அரசை மீண்டும் கைப்பற்றினார். உலகுடையப்பெருமாளையும், சரிய குலப் பெருமாளையும் துதித்து வில்லுப்பாட்டு வடிவில் பல்லவிகள் கடந்த ஐந்நூறு ஆண்டுகளாகப் பாடப்பட்டு வருகின்றன.


    உறையூர் சோழர்கள் மற்றும் மதுரை பாண்டியர்களின் முடிவு

    உறையூரில் இருந்து ஆட்சி செய்த வீரசேகர சோழன் 1529 இல் விஜயநகர நாயக்கர்களால் இடம்பெயர்ந்தார். வீரசேகர சோழன் சந்திரசேகர பாண்டியனால் ஆளப்பட்ட பாண்டிய அரசை ஆக்கிரமித்தார். கிருஷ்ணதேவராயர் அனுப்பிய நாகம நாயக்கர் வீரசேகர சோழனைக் கொன்றார், ஆனால் அவர் பாண்டிய நாட்டை சந்திரசேகர பாண்டியனுக்கு மீட்டு கொடுக்கவில்லை. நாகம நாயக்கரின் மகன் விஸ்வநாத நாயக்கர் தனது தந்தையைத் தோற்கடித்து அவரைக் கைது செய்து ஹம்பிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் விஸ்வநாத நாயக்கர் சந்திரசேகர பாண்டியனைக் கொன்று 1529 இல் மதுரை நாயக்கர் வம்சத்தை நிறுவினார்.

    ReplyDelete
  10. கடைசி சேர, சோழ பாண்டிய மன்னர்கள்

    வெங்கல தேவன்

    வீரசேகர சோழன் மகன் வெண்கலதேவனும் மகளும் போர்த்துகீசியரின் கட்டுப்பாட்டில் இருந்த இலங்கைக்கு தப்பிச் சென்றனர்.
    பல ஆண்டுகளுக்குப் பிறகு போர்த்துகீசியர்களின் எதிர்ப்பைச் சந்தித்த அவர் இலங்கையிலிருந்து திரும்பி வந்து கன்னியாகுமரி அருகே வெங்கலராயன் கோட்டை என்று ஒரு கோட்டையைக் கட்டினார்.
    ஆனால் வேணாட்டின் துளு-ஆய் மன்னராக இருக்க்கூடிய ஒரு உள்ளூர் மன்னன் வெங்கல ராயனின் மகளை மணக்க விரும்பினான். வெங்கல ராயனிற்கு அவனது திருமண விருப்பம் பிடிக்காமல் குரும்பூர் சென்றார். குரும்பூரிலும் நளன் என்ற குட்டி அரசன் வெங்கல ராயனின் மகளை மணக்க விரும்பினான். வெங்கல ராயன் தனது மகளைக் கொன்ற பிறகு தற்கொலை செய்து கொண்டார். வெங்கல ராயனின் வழித்தோன்றல்கள் நாடார்களின் துணைக்குழுவாகிய வெங்கல ராயன் கூட்டம் என்று அழைக்கப்படுகின்றனர்

    ReplyDelete
  11. சான்றாரா பாண்டியன் வம்சம்

    கர்நாடகத்தை ஆண்ட சான்றாரா பாண்டியர்கள் வில்லவர் பரம்பரையைச் சேர்ந்த சான்றார்கள் என்ற நாடார்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். பாணவாசியில் இருந்து ஆண்ட கடம்ப பாணப்பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை சான்றாரா பாண்டியன் குலமாகும்.


    கடம்ப வம்சம்

    கடம்ப வம்ச மன்னர்கள் பாணப்பாண்டியன் வம்சம் என்றும் அழைக்கப்படும் பாண வம்சத்தைச் சேர்ந்தவர்கள். கடம்ப வம்சத்தினர் வடக்கு கர்நாடகத்தில் இருந்து பாணவாசியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தனர். பாணர்கள் சேர, சோழ பாண்டிய வம்சங்களை ஆண்ட வில்லவரின் வட உறவினர்கள்ஆவர். இவ்வாறு சான்றாரா பாண்டிய வம்சத்தினர் வில்லவர் நாடாள்வார்-நாடார் குலங்களின் வடநாட்டு உறவினர்கள் ஆவர்.

    கடம்பர்கள் வில்லவர்களின் வானவர் துணைக்குழுவைப் போலவே காட்டில் வசிப்பவர்கள். வானவர் தங்கள் கொடிகளில் மரச் சின்னங்களையும், பிற்காலத்தில் புலிச் சின்னங்களையும் பயன்படுத்தினார்கள். மரம் மற்றும் புலி இரண்டும் காட்டுடன் தொடர்புடையவை. அதேபோல் கடம்பர்கள் தங்கள் கொடிகளில் கடம்ப மரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். கடம்ப தலைநகரம் வனவாசி அல்லது பாணவாசி என்று அழைக்கப்பட்டது. வில்லவர்களுடன் தொடர்புடைய கடம்பர்கள் மற்றும் பிற பாண வம்சத்தினர் வில்லவர்களின் பரம எதிரிகளாகவும் இருந்தனர்.


    சேர வம்சத்தின்மேல் கடம்பர்களின் தாக்குதல்

    பண்டைய சேர வம்சம் பாணவாசியின் கடம்பர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் (கிபி 130 முதல் கிபி 188 வரை) தான் பாணவாசி கடம்பரை தோற்கடித்ததாகவும், கடம்பர்களின் அரச அடையாளமாக இருந்த கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தியதாகவும் கூறுகிறார்.


    கடம்ப குலங்கள்

    கடம்பர்களின் பாணப்பாண்டியன் வம்சத்தில் இரண்டு அரச குலங்கள் இருந்தன

    1. நூறும்பாடா பாண்டியர்
    2. சான்றாரா பாண்டியர்

    நூறும்பாடா பாண்டிய குலத்தினர் நூரறும்பாடா பிரதேசத்தில் இருந்து ஆண்டனர். நூறும்பாடா என்பது நூறு நெல் வயல்களைக் குறிக்கும் அதாவது கிராமங்களை.

    சான்றாரா பாண்டியர்

    சான்றாரா பாண்டியன் குலத்தினர் சான்றாலிகே பிரதேசத்தில் இருந்து ஆட்சி செய்தனர். சான்றாலிகே என்றால் சான்றார் குலங்களின் வீடு என்று பொருள்.

    பாணர்கள் வில்லவர்களின் வடக்கு உறவினர்கள் ஆவர். வில்லவர் குலங்களைப் போலவே பாணர்களுக்கும் அரச பட்டங்கள் இருந்தன. பாணா என்பது வில்லவரின் சமஸ்கிருத வடிவம்.


    வில்லவர் = பாணா, பில்லா, பில்லவா
    நாடார் = நாடோர், உப்பு நாடோர், தொற்கே நாடோர்
    நாடாள்வார் = நாடாவரா, நாடாவா
    சான்றார் = சான்றாரா, சாந்தா, ஸாந்தா, சான்றா, சாந்தாரா ஸாந்தா மற்றும் ஸான்றா
    வானவர் = பாணா, பாண்டாரி, பான்ட்
    மலையர் = மலெயா
    மீனவர்=மச்சிஅரசா
    சாணார் = சாண்ணா, மாசாணா, மாசாணைய்யா
    சானார் = சான்னா
    பாண்டிய=பாண்டிய
    உடையார்=வொடெயா, ஒடெய


    சான்றாரா வம்சம்

    கிபி 682 இல் சாளுக்கிய மன்னன் வினயாதித்தியனால் நிறுவப்பட்ட கல்வெட்டுகளில் சான்றாரா குலத்தைப் பற்றிய முதல் குறிப்புகள் உள்ளன. சான்றாரா வம்சம் சான்டா, சாந்தா, சாந்தாரா, சாந்தா மற்றும் ஸாந்தா என்றும் அழைக்கப்பட்டது.


    ஜினதத்தா ராயா

    ஜினதத்தா ராயா அல்லது ஜின்தத் ராய், வட இந்தியாவில் மதுரா வைச் சேர்ந்த ஜைன இளவரசராக இருந்தவர், கி.பி 800 இல் சான்றாரா வம்சத்தை நிறுவியவர் எனக் கூறப்படுகிறது. வடக்கு மதுரா ஒரு பாணப்பாண்டியன் அரசாக இருந்திருக்கலாம்.

    இளவரசர் ஜினதத்தராயரை தனது தந்தை நடத்திய விதம் காரணம் மனம் நொந்து, பத்மாவதி தேவியின் சிலையை மட்டும் எடுத்துக்கொண்டு மதுராவை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

    கிபி 800 இல், கடம்ப வம்சத்தைச் சேர்ந்த சான்றாரா பாண்டியர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். சான்றாராகளின் ஒரு குழு பாணவாசியில் உள்ள அரச வீட்டில் தங்க விரும்பியது. சான்றாரா பாண்டியரின் மற்றொரு குழு ஹோம்புஜாவிற்கு குடிபெயர்ந்தது, இது அவர்களின் புதிய தலைநகராக மாறியது.

    ReplyDelete
  12. சான்றாரா பாண்டியன் வம்சம்

    கலசா-கர்கலா  ராஜ்யம்

    கிபி 1200 இல் சான்றாரா பாண்டியன் வம்சத்தின் ஒரு கிளை ஹோம்புஜா-ஹம்சாவிலிருந்து தெற்கே நகர்ந்து இரண்டு தலைநகரங்களை நிறுவியது.

    ஒரு தலைநகரம் கரையோர சமவெளியில் உள்ள கர்கலா மற்றும் மற்றொரு தலைநகரம் கலசா மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்தது. எனவே சான்றாரா பாண்டியன் வம்சத்தால் ஆளப்பட்ட பிரதேசம் கலசா-கர்கலா ராஜ்யம் என்றும் அறியப்பட்டது.

    பைரராசா பட்டம்

    கி.பி. 1200க்குப் பிறகு சான்றாரா மன்னர்கள் பைரராசா என்றும் அழைக்கப்பட்டனர், அவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மலேநாடு பகுதியையும் கர்நாடகாவின்  கடலோர மாவட்டங்களையும் ஆட்சி செய்தனர்.

    சிருங்கேரி, கொப்பா, பலேஹொன்னூர், சிக்கமகளூரில் உள்ள முடிகெரே மற்றும் கர்காலா தாலுகாவின் பெரும்பகுதியை உள்ளடக்கிய பரந்த பகுதியில் கலசா-கர்கலா ராஜ்யம் விரிவடைந்தது. மங்களூருக்குக் கிழக்கே கலசா-கர்கலா இராச்சியம் அமைந்திருந்தது. கர்கலா பாண்டிய நகரி என்றும் அழைக்கப்பட்டது.


    விஜயநகரத்தின் கீழ் சான்றாலிகே

    கி.பி 1336க்குப் பிறகு ஹோம்புஜா-ஹோசகுண்டாவின் சான்றாரா வம்சம் விஜயநகரப் பேரரசின் ஆதிக்கத்தின் கீழ் அடிமை நாடாக மாறியது. ஆனால் கலசா-கர்கலா சான்றாரா பாண்டிய அரசு சுதந்திரமாக இருந்தது.


    கர்கலா சான்றாரா பாண்டியர்கள்

    சான்றாரா மன்னன் வீர பைரராசா கி.பி.1390 ​​முதல் கி.பி.1420 வரை கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.


    சான்றாரா வீர பாண்டிய தேவா மன்னரால் பாகுபலி சிலை நிறுவப்பட்டது

    கி.பி 1432 இல், தாராள மனப்பான்மைக்கு பெயர் பெற்ற ஒரு அறிஞரான சான்றாரா வீர பாண்டிய தேவர் பாண்டிய நகரி என்று அழைக்கப்படும் கர்கலாவில் இருந்து ஆட்சி செய்தார்.
    கர்கலா சான்றாரா வம்சத்தின் தலைநகராக இருந்தது.
    சான்றாரா வீர பாண்டியர் சிருங்கேரி மடத்துடன் நல்லுறவைப் பேணி வந்தார். சான்றாரா வீர பாண்டிய தேவரின் ஆட்சியின் மிகப்பெரிய சாதனை கி.பி 1432 இல் கர்கலாவில் 42 அடி உயர பாகுபலியின் ஒற்றைக்கல் சிலை நிறுவப்பட்டதுதான். சான்றாரா மன்னன் வீர பாண்டியனுக்கு பைரராசா என்ற பட்டமும் இருந்தது.


    வீர பாண்டியா IV

    கி.பி 1455 இல் சான்றாரா வீர பாண்டியனுக்குப் பிறகு அவனது சகோதரனின் மகன் நான்காம் வீர பாண்டியா அரியணை ஏறினார், அவர் கி.பி 1455 முதல் 1475 வரை ஆட்சி செய்தார். கி.பி 1457 இல் ஹிரியங்கடியில் உள்ள நேமிநாத பாசதிக்கு முன்னால் 57 அடி அழகாக செதுக்கப்பட்ட மானஸ்தம்பத்தை சான்றாரா மன்னர் நான்காம் வீர பாண்டியர் கட்டினார். மானஸ்தம்பம் முடிந்ததும், அவருக்கு "அபிநவ பாண்டியர்" என்ற பட்டம் கிடைத்தது.


    இம்மடி பைரராசா வொடேயா சான்றாரா

    கர்கலாவில் உள்ள சதுர்முக ஜெயின் பாசதி கி.பி.1586 ஆம் ஆண்டில் சான்றாரா வம்சத்தின் இம்மடி வொடேயா (பைரவா II)வின் ஆதரவின் கீழ் கட்டப்பட்டது.16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்ட சதுர்முக சமண பாசதியில் ஜைன துறவிகளான அரநாத், மல்லிநாத் மற்றும் முனிசுவரத்நாத் ஆகியோரின் உருவங்கள் உள்ளன.

    கி.பி 1586 இல் ஒரு சிறிய பாறை மலையின் மேல் சதுர்முக பாசதி கட்டப்பட்டது. இந்த பாசதி கர்பகிருஹத்திற்கு செல்லும் நான்கு பகுதிகளிலிருந்தும் ஒரே மாதிரியான நான்கு நுழைவாயில்களைக் கொண்டிருந்தது, எனவே இது சதுர்முக பாசதி என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது.

    இம்மடி பைரவ வொடேயா, கொப்பா என்ற இடத்தில் "சாதன சைத்தியாலயம்" கட்டுவதற்கும் முக்கியப் பங்காற்றியவர்.

    வோடெயா பட்டம் என்பது வில்லவர்களின் வானவர் துணைக்குழுவின் உடையார் பட்டத்தை ஒத்ததாகும்.

    ReplyDelete
  13. மாறன், சாந்தகன், பனந்தாரகன், பனையமாறன், வில்லவன், செம்பியன், நாடாழ்வான், மகதை நாடாள்வார், திருப்பாப்பு ஆகியவை நாடார்களுக்குச் மாத்திரம் சொந்தமான சில வில்லவர் பட்டங்கள்.


    வில்லவ மன்னர்களின் சாந்தகன் பட்டம்

    சாந்தகன் பட்டம் என்பது வில்லவ நாடார்களின் சான்றார் பட்டத்தின் மாறுபாடாகும். சேர சோழ பாண்டிய மன்னர்கள் சாந்தகன் பட்டத்தை பயன்படுத்தினர்.

    நாடார்களின் வடக்கு உறவினர்களான மீனா வம்ச மன்னர்கள் சாந்தா மீனா பட்டத்தை
    பயன்படுத்தினர்.


    பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் (2613)


    ஆற்றல் மிகு பிரதப சூரியன் வங்கிசத்துவன் அளவு இல்
    சீர்த்தி
    சாற்ற அரிய இரிபும மருத்தனன் சோழ வங்கி சாந்தகன்
    தான் வென்றி
    மாற்ற அரிய புகழ்ச் சேர வங்கி சாந்தகன் பாண்டி வங்கி
    கேசன்
    தோற்றம் உறு பரித்தேர் வங்கிச் சிரோமணி பாண்டீச் சுரன்
    தான் மன்னோ.

    ___________________________________________

    ReplyDelete
  14. மீனா வம்சம்

    ஆலன் சிங் சாந்தா மீனா

    ஆலன் சிங் சாந்தா மீனா என்றும் அழைக்கப்படும் மீனா ராஜா ராலுன் சிங் கோகோங்கின் அரசராக இருந்தார். அவர் சாந்தா கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவரது ராஜ்ஜியத்தில் தஞ்சம் புகுந்த ராஜபுத்திர தாயையும் அவரது குழந்தையையும் அன்புடன் தத்தெடுத்தார். பின்னர், மீனா ராஜ்ஜியத்தை பிரதிநிதித்துவப்படுத்த மீனா ராஜா மகன் தோலா ராயை டெல்லிக்கு அனுப்பினார்.

    டெல்லி அரசர் பிருத்வி ராஜின் மகன் ஆலன் சிங் சாந்தாவின் மகளை மணந்தார். இது சாந்தா மற்றும் சௌஹான்களுக்கு இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்துகிறது. மற்ற சுவாரசியமான உண்மை, சௌஹான்கள் துந்தரிலிருந்து வந்தவர்கள் என்றும், வரலாற்று ரீதியாக கச்வாஹாவம்சத்திற்கு முன்பு 10 ஆம் நூற்றாண்டு வரை துந்தர் சாந்தா மீனா வம்சத்தால் ஆளப்பட்டதாகவும் கூறுகிறார்கள். துந்தர் என்பது ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரின் பழைய பெயர்.

    டோலா ராயின் துரோகம்

    இந்த உதவிகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் ராஜபுத்திர வளர்ப்பு மகன் தோலா ராய் ராஜபுத்திர சதிகாரர்களுடன் திரும்பி வந்து தீபாவளியன்று சடங்குகள் செய்யும் போது ஆயுதம் இல்லாத மீனாக்களை கொன்று குவித்தனர். மீனாக்கள் ராஜஸ்தானின் அசல் ஆட்சியாளர்களாக இருந்தனர், ஆனால் கிபி 1036 இல் கச்வாஹா ராஜபுத்திர குலத்தால் துரோகமாக தோற்கடிக்கப்பட்டனர். கச்வாஹா ராஜபுத்திரர்கள் மீனா குலத்திற்கு இழைத்த இந்த துரோகம் இந்திய வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான மற்றும் கோழைத்தனமான செயலாகும்.

    ராஜபுத்திர படையெடுப்பாளர் தோலா ராய், மஞ்ச் என்ற இடத்தில் வாழ்ந்த மீனா குலத் தலைவரான ராவ் நாட்டோவின் செரோ பழங்குடியினரை அடிபணியச் செய்யத் தீர்மானித்தார்.
    ராஜபுத்திர படையெடுப்பாளர்கள் மீனாக்களை அடிபணியச் செய்தல்

    கச்வாஹா ராஜபுத்திர குலத்தினர்

    கச்வாஹா ராஜபுத்திர குலத்தினர் இன்றைய பீகாரில் உள்ள ரோஹ்தாஸில் ஆரம்ப காலத்தில் குடியேறியதாக நம்பப்படுகிறது, பின்னர் அந்தக் குலம் ராஜஸ்தானுக்கு குடிபெயர்ந்தது. தோலா ராய் பின்னர் ஜெய்ப்பூர் அருகே ஜாம்வா ராம்கர் என்று அழைக்கப்பட்ட மீனா குலத்தின் சிஹ்ரா கோத்திரத்தை அடிபணியச் செய்தார், மேலும் அவரது தலைநகரை அங்கிருந்து மாற்றினார்.

    டோலா ராயின் மரணம்

    டோலாராய் பின்னர் அஜ்மீரின் இளவரசரின் மருமகனானார். அதன் பிறகு டோலா ராய் 11,000 மீனாக்களுடன் போரிட்டபோது இறந்தார், ஆனால் அதற்கு முன்பு அவர்களில் பெரும்பாலோரை அவர் கொன்றார்.

    மைதுல் ராய் படையெடுப்பு

    டோலா ராயின் மகன் மைதுல் ராய், சூசாவுத் மீனாக்களிடம் இருந்து அம்பர் நகரை சதி மூலம் கைப்பற்றினார், அதன் மன்னர் ராஜா பானு சிங் மீனா, மீனா கூட்டமைப்பின் தலைவராக இருந்தார். அவர் நந்தலா மீனாக்களை அடக்கி, காட்டூர்-காட்டி மாவட்டத்தை இணைத்தார்.

    மைதுல் ராய்க்குப் பிறகு மன்னன் ஹூண்தேவ் ராஜபுத்திர அரியணைக்கு வந்தார், அவர் மீனாக்களுக்கு எதிரான போரைத் தொடர்ந்தார்.

    அவரது வாரிசான கூன்தள் மன்னன் மீனாக்களுடன் போரிட்டான், அதில் மீனாக்கள் பெரும் படுகொலை செய்யப்பட்டு தோற்கடிக்கப்பட்டனர், இது 1129 ல் துந்தர் முழுவதும் அவரது ஆட்சியை விரிவுபடுத்தியது. துந்தர் முன்பு மீனா ராஜ்ஜியமாக இருந்தது.

    கி.பி. 1342 இல் ஹரா ராஜபுத்திரரான ராவ் தேவாவால் பூந்தி நகரம் கைப்பற்றப்பட்டது மற்றும் சோபோலி முஸ்லிம் படையெடுப்பாளர்களிடம் வீழ்ந்தது.

    மீனாக்கள் அம்பர் நகரத்தை கட்டியவர்கள், அதை அவர்கள் தாய் தெய்வமான அம்பாவுக்கு பிரதிஷ்டை செய்தனர்.
    அம்பா தேவி அவர்களால் காட்டா ராணி அல்லது கணவாய் ராணி என்று அழைக்கப்பட்டார்.

    ஆமர் நகரம் இடைக்காலத்தில் துந்தர் என்று அழைக்கப்பட்டது. துந்தர் என்பது மேற்கு எல்லையில் உள்ள ஒரு பலி கொடுக்கும் மலையின் பெயர். நவீன காலத்தில் மீனா வம்சத்தின் தலைநகராக இருந்த ஆமர் நகரம் ஜெய்ப்பூர் என்று அழைக்கப்படுகிறது.

    கிபி 1037 இல் கச்வாஹா ஆட்சியாளர்கள் அதைக் கைப்பற்றினர். இங்குள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் முதலாம் ராஜா மான்சிங் (கி.பி. 1590-1614) காலத்தில் கட்டப்பட்டவை.

    ReplyDelete
  15. மீனா வம்சம்

    துருக்கிய தாக்குதல்

    மீனாக்கள் தற்போதைய ஹனுமான்கரின் சுனம் நகரில் குடியேறினர்.

    சுல்தான் முகமது பின் துக்ளக், சுனம் மற்றும் சமனாவின் கலகக்கார ஜாட் மற்றும் மீனாக்களின் 'மண்டல்' அமைப்பை அழித்தார், மேலும் அவர் கிளர்ச்சித் தலைவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று இஸ்லாமியர்களாக மதம் மாற்றினார்.

    முகலாய தாக்குதல்

    அம்பரின் கச்வாஹா ராஜ்புத் ஆட்சியாளர் பர்மால் எப்போதும் நஹான் மீனா ராஜ்யத்தைத் தாக்கிக்கொண்டிருந்தார், ஆனால் படா மீனாவுக்கு எதிராக பார்மால் வெற்றிபெற முடியவில்லை. அக்பர் ராவ் படா மீனாவை அவருடைய மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார் ஆனால் படா(பெரிய) மீனா மறுத்துவிட்டார். பின்னர் பார்மால் தனது மகள் ஜோதாவை அக்பருக்கு திருமணம் செய்து வைத்தார். பின்னர் அக்பர் மற்றும் பார்மாலின் கூட்டு இராணுவம் ஒரு பெரிய தாக்குதலை நடத்தி மீனா ராஜ்யத்தை அழித்தது. மீனாக்களின் கருவூலம் அக்பருக்கும் பார்மாலுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. பார்மல் அம்பர் அருகே உள்ள ஜெய்கர் கோட்டையில் அந்த பொக்கிஷத்தை வைத்திருந்தார்.


    ஜெய்ப்பூர்

    கிபி 1727 வரை முன்னாள் மீனா தலைநகர் ஆமர் கச்வாஹா ராஜபுத்திரர்களின் தலைநகராக இருந்தது. ஜெய் சிங் II கிபி 1727 இல் ஜெய்ப்பூர் நகரில் குடியேறினார் மற்றும் புதிய நகரத்தில் தனது தலைநகரை உருவாக்கினார்.
    அதன் பிறகு ராஜஸ்தானின் தலைநகரம் ஆமரில் இருந்து 14 கிமீ தொலைவில் புதிதாக கட்டப்பட்ட ஜெய்ப்பூர் நகரத்திற்கு மாற்றப்பட்டது.


    மீனா வம்சத்தின் வீழ்ச்சி

    பண்டைய நூல்களில் மத்ஸ்ய ஜனபதத்தைப் பற்றிய தெளிவான குறிப்பு உள்ளது, அதன் தலைநகரம் விராட் நகர், அது இப்போது ஜெய்ப்பூரில் உள்ள வைரத் ஆகும். இந்த மஸ்த்யா பிரதேசத்தில் ஆள்வார், பரத்பூர் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகள் அடங்கும். இன்றும் இந்தப் பகுதியில் மீனா இன மக்கள் அதிகளவில் வாழ்கின்றனர்.

    மீனா சாதியின் பதா அல்லது ஜகா எனப்படும் பழங்குடி வரலாற்றின் படி, மீனா சாதியில் 12 பால்கள், 32 தாட்கள் மற்றும் 5248 கோத்திரங்கள் இருந்தன.

    மீனா சமாஜ் மத்தியப் பிரதேசத்தின் சுமார் 23 மாவட்டங்களிலும் வசிக்கிறது.

    முதலில் மீனாக்கள் ஒரு ஆளும் சாதியாக இருந்தனர், மேலும் மத்ஸ்யாக்களின் ஆட்சியாளர்களாக இருந்தனர், அதாவது ராஜஸ்தான் அல்லது மத்ஸ்ய கூட்டமைப்பு. ஆனால் அவர்களின் சரிவு சித்தியர்களுடன் ஒருங்கிணைப்பதில் தொடங்கியது.

    ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் உட்பட ராஜஸ்தானின் முக்கிய பகுதிகளின் ஆரம்பகால ஆட்சியாளர்களாக மீனா மன்னர்கள் இருந்தனர்.

    "ஆர்.எஸ். மான்" எழுதிய 'கலாச்சாரம் மற்றும் இந்திய சாதிகளின் ஒற்றுமை' என்ற புத்தகத்தில், மீனாக்கள் ராஜபுத்திரர்களைப் போலவே க்ஷத்திரிய சாதியாகக் கருதப்படுகிறார்கள், ஆனால் வரலாற்றில் மிகக் குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    பழங்காலத்தில் ராஜஸ்தான் மீனா வம்ச மன்னர்களால் ஆளப்பட்டது. மீனா ராஜ்ஜியம் மீன் மாநிலம் என்று அழைக்கப்பட்டது. சமஸ்கிருதத்தில் மத்ஸ்ய ராஜ்ஜியம் ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் பில் மற்றும் மீனாக்கள் சிந்து, ஹெப்தாலைட்டுகள் அல்லது பிற மத்திய ஆசிய படையெடுப்பாளர்களிலிருந்து வந்த வெளிநாட்டினருடன் கலந்தனர்.

    மீனா முக்கியமாக மீனம் மற்றும் சிவனை வழிபட்டார்கள். பல இந்து சாதிகளை விட மீனாக்கள் பெண்களுக்கு சிறந்த உரிமைகளைப் பெற்றுள்ளனர். விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்றவர்களின் மறுமணம் ஒரு பொதுவான நடைமுறை மற்றும் மீனா சமூகத்தில் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தகைய நடைமுறைகள் வேத நாகரிகத்தின் ஒரு பகுதியாகும்.

    துருக்கியர்களின் படையெடுப்பின் ஆண்டுகளில், மற்றும் 1868 இல் கடுமையான பஞ்சத்தின் விளைவாக, அழிவின் அழுத்தத்தின் கீழ் பல கொள்ளைக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதன் விளைவாக, பசியால் வாடும் குடும்பங்கள் தங்கள் பாரம்பரியத்திலிருந்து விலகி கால்நடைகளைத் திருடி உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

    ஆங்கிலேய அரசு மீனா குலங்களை "குற்றப்பரம்பரை " என்று முத்திரை குத்தியது. இந்த நடவடிக்கை ராஜஸ்தானில் உள்ள ராஜபுத்திர ராஜ்யத்துடன் உண்டாய ஆங்கிலேய கூட்டணியை ஆதரிப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு. மீனா பழங்குடியினர் இன்னும் ராஜபுத்திரர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தனர், அவர்கள் இழந்த ராஜ்யங்களைக் கைப்பற்றுவதற்காக கொரில்லா தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

    இடைக்காலத்தின் முகலாய பதிவுகள் முதல் பிரிட்டிஷ் ராஜ்ஜின் பதிவுகள் வரை, மீனாக்கள் வன்முறையாளர்கள், கொள்ளையடிக்கும் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோத இன பழங்குடியின குழுவாக விவரிக்கப்படுகிறார்கள்.

    ReplyDelete
  16. வில்லார்வெட்டம் இராச்சியம்.

    வில்லார்வட்டம் அல்லது வில்லார்வெட்டம் இராச்சியம் ஒருவேளை கேரளாவின் தமிழ் வில்லவர் சேர வம்சத்தின் ஒரு துணைக்குழு மற்றும் கிளையாக இருக்கலாம். பண்டைய சேர துணைக்குழுக்கள் இரும்பொறை, உதியன், வெளியர், புறையர் போன்றவை.

    வில்லார்வெட்டம் வம்சம் குட்டநாட்டை ஆண்ட சேரர்களின் உதியன் சேரலாதன் குலத்திலிருந்து வந்திருக்கலாம். உதயனாபுரத்தில் இருந்து வில்லார்வேட்ட மன்னர்கள் ஆட்சி செய்தனர். இது உதய ஸ்வரூபம் என்றும் அழைக்கப்பட்டது.

    துளு படையெடுப்பு

    கிபி 1120 இல் 350000 எண்ணிக்கையுள்ள நாயர் படையுடன் கேரளாவைத் தாக்கிய பாணப்பெருமாள் என்ற துளு படையெடுப்பாளரைத் தொடர்ந்து கொடுங்களூரில் பிற்கால சேர வம்சத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, சேர தலைநகரம் கொடுங்களூரில் இருந்து கிபி 1102 இல் கொல்லத்திற்கு மாற்றப்பட்டது.
    கண்ணூரில் துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாள் அவரது மகன் உதயவர்மன் கோலத்திரியை முதல் ஆட்சியாளராகக் கொண்டு ஒரு தாய்வழி சாம்ராஜ்யம் கபி 1156 இல் நிறுவப்பட்டது. கேரளாவை ஆக்கிரமித்தவர்கள் துளுநாட்டைச் சேர்ந்த பாணர்கள், ஆரியர்கள் மற்றும் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்ராவைச் சேர்ந்த நாகர்கள்(நாயர்கள்). இந்தப் படையெடுப்பிற்குப் பிறகு, பிற்கால சேர வம்சத்தின் வில்லவர் தங்கள் அரசை கொல்லத்திற்கு மாற்றினர்.

    வில்லார்வெட்டம் இராச்சியம்

    எனினும் கொச்சியில்  வில்லார்வெட்டம் என்றழைக்கப்படும் சேர குலத்தினர் 15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆட்சி செய்து வந்தனர். வில்லார்வெட்டம் இராச்சியம் உதய ஸ்வரூபம் என்று அழைக்கப்பட்டிருந்தது, இது வில்லவர்களின் உதியன் சேரலாதன் துணைக்குழுவில் தோன்றியதைக் குறிக்கிறது. உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து கேரளாவை ஆண்டவர்கள்.

    மாலிக் காஃபூரின் தாக்குதல்

    1311 இல் மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு அனைத்து தமிழ் வம்சங்களும் முடிவுக்கு வந்தன. கிபி 1335 இல் மதுரை சுல்தானகம் ஆட்சிக்கு வந்தபோது நான்கு தாய்வழி துளு-நேபாள ராஜ்ஜியங்கள் நிறுவப்பட்டன. கோலத்திரி, சாமுத்திரி, கொச்சி மற்றும் வேணாட்டில் உள்ள ஆற்றிங்கல் ராணி ஆகிய நான்கு தாய்வழி அரசுகள்.


    துளு படையெடுப்பாளர் பாணப்பெருமாளின்
    சகோதரியின் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நம்பூதிரி வம்சம் கொச்சி இராச்சியத்தில் ஆட்சியாளர்களானார். நாயர்களும் நம்பூதிரிகளும் பண்டைய நேபாளத்தின் அஹிச்சத்திராவின் தலைநகரிலிருந்து கடலோர கர்நாடகாவின் துளுநாட்டுக்கு குடியேறியவர்கள். கி.பி 1311க்குப் பிறகு கேரளாவை துளு-நேபாள மக்கள் ஆட்சி செய்தனர், அவர்கள் தாய்வழி , பலகணவருடைமை
    மற்றும் நாக வழிபாட்டைக் கடைப்பிடித்தனர். அவர்கள் நேபாள சொற்களஞ்சியத்துடன் பேசினார்கள் மற்றும் திகளரி எழுத்துக்களில் (துளு எழுத்து) எழுதினார்கள்.

    கிறிஸ்துவ மதத்திற்கு மாறுதல்

    வில்லார்வட்டம் மன்னர் கி.பி 1338க்குப் பிறகு கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கலாம். ஜோர்டானஸ் கேடலனஸ் எழுதிய 1329 முதல் 1338 வரையிலான நிகழ்வுகளை மிராபிலியா டிஸ்கிரிப்டாவில் விவரிக்கிறார். ஜோர்டானஸ் கிபி 1330 இல் காணாமல் போனார். ஜோர்டானஸ் ப்ரெஸ்டர் ஜான் அல்லது இந்தியாவில் எந்த கிறிஸ்தவ ராஜ்ஜியமும் இருப்பதைக் குறிப்பிடாததால் வில்லார்வட்டம் மன்னரின் மதமாற்றம் கி.பி 1338 க்குப் பிறகு நிகழ்ந்திருக்கலாம்.

    வில்லார்வெட்டம் வம்சம் வில்லவர்-நாடார் வம்சத்தின் ஒரு கிளை ஆகும். 1339 இல் வில்லார்வட்டம் மன்னரும் அவரது குடிமக்களும் சிரிய கிறிஸ்தவர்களின் நெஸ்டோரியன் கிறிஸ்தவத்திற்கு மாறியது மத்திய கேரளாவில் வில்லவர்களை பலவீனப்படுத்தியிருக்கலாம்.

    போப்பிற்கு கடிதம்

    வில்லார்வட்டம் மன்னர் எடெசா மூலம் கி.பி 1350 இல் ஐரோப்பிய சக்திகளிடம் இருந்து உதவி கோரி போப்பிற்கு கடிதம் அனுப்பினார். போப் அந்த கடிதத்தை போர்த்துகீசிய மன்னருக்கு அனுப்பினார்.

    ReplyDelete
  17. வில்லார்வெட்டம் இராச்சியம்

    சேந்தமங்கலம்

    வில்லார்வட்டம் பேரரசு ஆட்சி செய்த இடங்கள்  செம்பில், சேந்த மங்கலம்,  பறவூர், இளங்குன்னப்புழா--வைப்பீன், கும்பளம், கடலோர எர்ணாகுளம், உதயம்பேரூர், வைக்கம் அருகே உதயனாபுரம். இந்தப் பகுதிகள் அனைத்தும் பிற்காலத்தில் கிறிஸ்தவர்களின் கோட்டைகளாக மாறின. வில்லார்வட்டம் சாம்ராஜ்யம் . கி.பி. 1450க்கு முந்தைய அதன் உச்சக்கட்டத்தில் அதன் கட்டுப்பாட்டில் இருந்த குறைந்தது 1000 ச.கி.மீ. கி.பி 1311 இல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு கேரளாவில் தாய்வழி அரசுகள் நிறுவப்படும் வரை வில்லார்வட்டம் இராச்சியத்திற்கு சேந்தமங்கலம் கோட்டையில் கோவிலகத்தில் அதன் தலைநகர் இருந்தது.


    பிற்காலத்தில் இதன் தலைநகரம் உதயம்பேரூரில் இருந்தது. ஆனால் உதவி மிகவும் தாமதமாக வந்தது. போர்த்துகீசியர்கள் 150 ஆண்டுகளுக்குப் பிறகு 1498 இல் கேரளக் கடற்கரையை அடைந்தனர். ஐரோப்பியர்கள் வில்லார்வட்டம் மன்னரை பெலியார்ட்டே என்று அழைத்தனர். பதினான்காம் நூற்றாண்டின் மத்தியில் தலைநகர் சேந்தமங்கலம் கடல் தாக்குதலுக்கு ஆளாகக்கூடியதாக இருந்ததால் வில்லார்வட்டம் இராச்சியம் சாமுத்திரிகளின் மற்றும் அராபியர்களின் தாக்குதலை 1340 ல் எதிர்கொண்டது.


    கொச்சி அரசு

    கி.பி 1335 வரை மலப்புறம் மாவட்டத்தில் பொன்னானி ஏரிக்கு அருகில் உள்ள பெரும்படப்புக்கு அருகிலுள்ள வன்னேரியில் இருந்து பெரும்படப்பு ஸ்வரூபம் ஆட்சி செய்தது. துளு-நேபாள ராஜ்ஜியங்கள் மதுரை சுல்தானகத்துடன் கூட்டணி அமைத்து மத்திய மற்றும் தெற்கு கேரளாவின் ஆதிக்கத்தையும் பெற்றன. நம்பூதிரிகளின் பெரும்படப்பு ஸ்வரூபம் பின்னர் வன்னேரியிலிருந்து வெள்ளாப்பள்ளி மற்றும் பள்ளுருத்திக்கு தெற்கே நகர்ந்தது. கி.பி 1335 இல் கொச்சி இராச்சியம் நிறுவப்பட்ட போது தென் பள்ளுருத்தி பெரும்படப்பு என மறுபெயரிடப்பட்டது. பெரும்படப்பு ஸ்வரூபம் என்ற கொச்சி இராச்சியம் கிபி 1335 க்குப் பிறகு நம்பியாத்ரி வம்சத்தால் நிறுவப்பட்டது. அவர்கள் ஒரு நம்பூதிரி மூலம் பாணப்பெருமாள் சகோதரி ஸ்ரீதேவிக்கு பிறந்த ஒரு மகனிடமிருந்து தம் வம்சாவளியைக் கோரினர். தர்மடம் அரசனாகிய மகாபலி அவளுக்கு ஒரு மகன். கொச்சி இராச்சியம் துளு பண்டு சாதியின் துணைக் குழுவான கடலோர கர்நாடகத்தைச் சேர்ந்த தாய்வழி நாயர்களால் ஆதரிக்கப்பட்டது.

    சம்பந்தம்

    கொச்சியின் நம்பூதிரி ஆட்சியாளர்கள், கி.பி.1335க்குப் பிறகு வில்லார்வட்டம் இராச்சியத்தின் இளவரசிகளுடன் சம்பந்தத்தை வைத்திருக்கும் உரிமையைப் பெற்றிருக்கலாம். கோழிக்கோடு கிரந்தாவரியில் வில்லார்வட்டம் நாடு கொச்சி மன்னர்களுடன் இரத்தசம்பந்தமுள்ள தொடர்புடைய ஒரு அடிமை கிறிஸ்தவ வெளிநாட்டவர்களின் ராஜ்ஜியமாக இருந்தது என்று குறிப்பிடுகிறது. இந்த நம்பூதிரிகளுக்கும் கிறிஸ்தவ இளவரசிகளுக்கும் சம்பந்தம் மூலம் பிறந்தவர்கள் தாம் கிறிஸ்தவ நம்பூதிரிகள் என்று கூறியிருக்லாம். கி.பி. 1335க்குப் பிறகு நம்பூதிரிகள் மற்ற கிறிஸ்தவ உன்னத குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுடன் சம்பந்தம் வைத்திருந்திருக்கலாம்

    இது நம்பூதிரி என்று கூறிக்கொள்ளும் ஒரு கிறிஸ்தவக் குழுவை உருவாக்கியிருக்கலாம்

    சேந்தமங்கலத்தில் வில்லார்வட்டம் இராச்சியத்தின் வீழ்ச்சி

    கிபி 1340 இல் வில்லார்வட்டம் இராச்சியத்தின் தலைநகரான சேந்தமங்கலம் சாமுத்திரியால் அனுப்பப்பட்ட அரேபியர்களைக் கொண்ட கடற்படையால் தாக்கப்பட்டு அதை அழித்தது. தலைநகர் உதயம்பேரூருக்கு மாற்றப்பட்டது.

    உதயம்பேரூர்

    1340 கி.பி. இந்தியப் பேரரசருக்குப் பிறகு உதயம்பேரூர் புதிய தலைநகராக மாறியது. கேரளாவிற்கு ஒருபோதும் சென்றடையாத இந்தக் கடிதத்துடன் போப் தூதர்களை கேரளாவிற்கு அனுப்பினார். வில்லார்வட்டம் மன்னன், பிரஸ்டர் ஜான் (பிரஸ்பைட்டர் ஜான்) என்று அழைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த கிறிஸ்தவ மன்னன் இந்தியாவை ஆண்டதாக ஐரோப்பியர்கள் மத்தியில் ஒரு புராணக்கதை உண்டாகியது.

    கடைசி மன்னர்

    கடைசி வில்லார்வட்டம் மன்னர் யாகூப் மகள் கிருபாவதி  என்றழைக்கப்பட்ட மரியம், கொச்சி இளவரசர் ராமவர்மாவை திருமணம் செய்து கொண்டார் என்று சிரியன் கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர். அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இட்டிமாணி என்று அறியப்பட்டார். இட்டிமாணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், அங்கு அவர் இறந்தார். அந்தக் காலத்தில் கொச்சி மன்னர்கள் கூட்டிருப்பு அதாவது துணைமனைவி வழக்கத்தை மேற்கொண்டிருக்க வாய்ப்புகள் குறைவு. சில பதிவுகள் பாலியத்து அச்சனின் மத்தியஸ்தத்தின் பேரில்  கடைசி இளவரசி கிருபாவதி அல்லது மரியம்  கொச்சி மன்னரின் மறுமனைவியாகி இந்து மதத்திற்கு மாற்றப்பட்டதாகக் குறிப்பிடுகிறது.

    ReplyDelete
  18. வில்லார்வெட்டம் இராச்சியம்

    டச்சு காலம்

    1653 இல் டச்சுக்காரர்கள் வந்தபோது வில்லார்வட்டம் குடும்பம் கத்தோலிக்கர்களாயதினால் செயலிழந்தனர். உதயம்பேரூர் பரம்பரையின் கடைசி மன்னர் ராஜா தோமா ஆவார், அவர் 1701 இல் இறந்தார், அவர் தனது முன்னோர்களால் கட்டப்பட்ட பழைய தேவாலயமான உதயம்பேரூர் பழே பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டார்.

    பிற்கால வில்லார்வட்டம் தலைவர்கள்

    சில வில்லார்வட்டம் தலைவர்கள் 18 ஆம் நூற்றாண்டு வரை இருந்தனர். கிரந்தாவரியின் படி 1713 இல் வில்லார்வட்டம் அடூர் கிராமத்தைத் தாக்கி சூறையாடியது. அவர்கள் கோயிலை அழித்து, பிராமணர்களைத் துன்புறுத்தி, கோயிலின் படகைக் கைப்பற்றினர். பெருமுண்டமுக்கில் இருந்த நெடுங்கநாட்டு நம்பிடி அச்சன்களை அதிகாரத்திலிருந்து அகற்றினர். அவர்களுக்கு டச்சு ஆதரவு இருந்திருக்கலாம். அதன் பிறகு அவர்கள் வரலாற்றில் இருந்து மறைந்தனர்.

    வில்லார்வெட்டம் வம்சத்தின் வேர்கள்.

    சங்க காலத்தில் உதியன் சேரலாதன் வம்சம் குட்டநாட்டில் இருந்து ஆட்சி செய்தது. வேம்பநாட்டுக் காயலுக்கு அருகிலுள்ள உதயனாபுரம், உதியன் சேரலாதன் வழித்தோன்றல்களின் தலைநகராக இருந்திருக்கலாம். பிற்காலத்தில் உதயம்பேரூர் மற்றும் சேந்தமங்கலம் ஆகியவை வில்லார்வெட்டம் சமஸ்தானத்தின் தலைநகரங்களாக விளங்கின. உதய ஸ்வரூபம் என்பது வில்லவர்களின் வில்லார்வெட்டம் வம்சத்தின் மாற்றுப் பெயராகும்.

    ReplyDelete