Friday 17 January 2020

வரலாற்றில் வன்னியர்கள் நாடும் வன்னியர்கள் ஆட்சி செய்த காலமும்

முரளி நாயக்கர் பதிவிலிருந்து

வன்னியர் நாடு (திகுலர் பூமி)
-----------------------------------------------

வேலூர் மாவட்டம், அகரத்தில் இருக்கும் விஜயநகர வேந்தர் மல்லிகார்ஜுன தேவ மஹாராயரின் கல்வெட்டு ஒன்று (கி.பி.1469) :-

"அகரம் பெருமாள் ஆனைகாத்த அப்பன் சிரிகாரியம் பாற்கும் வன்னிய திம்மய நாயக்கர்"

என்று குறிப்பிடுகிறது. இவரை "வன்னிய திம்மு நாயக்கர்" என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. மேலும் இக் கல்வெட்டு "வன்னிய நாட்டு நாயகஞ் செய்வார்" என்று தெரிவிக்கிறது. இந்த "வன்னிய நாடு" என்பது வன்னியர்கள் அரசாட்சி செய்த நாடாகும்.

விஜயநகர காலத்திய கி.பி.1519 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று, திருக்கோயிலூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய "வன்னிய வட்டத்தில்", குதிரை காணிக்கை என்கிற வரியை வசூலித்து, அதை கோயில் நற்பணிக்காக தன்னுடைய மூத்த சகோதரி வயிச்சம்மன் பெயரினில் திம்மப்ப நாயக்கர் அவர்கள் கொடுத்தார்கள் என்றும் இவர் வாசல் மல்லப்ப நாயக்கரின் மகனாவார் என்றும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

ஆண்டு குறிப்பிடாத மற்றொரு கல்வெட்டு ஒன்று, திம்மப்ப நாயக்கர் அவர்கள், "வன்னியர் அரசாட்சி காலத்தில்" பெறப்படும் வரியை தன்னுடைய சகோதரி வயிச்சம்மன் அவர்களின் பெயரினில் ஒரு நற்கட்டளை ஏற்படுத்தினார்கள் என்பதை தெரிவிக்கிறது. எனவே, கல்வெட்டுகளில் இருந்து :-

"வன்னிய நாடு"

"வன்னிய வட்டம்"

"வன்னியர் அரசாட்சி காலம்"

என்று தெரியவருகின்றன. "திகுலர் பூமியை கைப்பற்றியவர்கள்" என்று விஜயநகர அரசர்களை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இதை அறிஞர் பெருமக்கள் "தமிழர் பூமியை கைப்பற்றியவர்கள்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்கள் என்பதாகும். ஆனால், இந்த விளக்கம் என்பது மிகப்பெரும் பிழையாகும். எந்த ஒரு சான்றும் தமிழர் பூமி/நாடு என்று சொல்லவே இல்லை என்பதாகும்.

கி.பி.1233 ஆம் ஆண்டின் ஓய்சாள கன்னட கல்வெட்டு ஒன்று, காடவராயரிடம் இருந்து மூன்றாம் ராஜராஜ சோழனை மீட்ட தளபதிகளான அப்பண்ணா மற்றும் கோப்பையா ஆகியோரைப் பற்றி குறிப்பிடுகிறது. இதில் மிக குறிப்பாக அப்பண்ணா அவர்கள் "திகுல மண்டலத்தை கொள்ளையிட்டவர்" என்று குறிப்பிடப்பட்டார்கள் என்பதாகும்.

இந்த கன்னட கல்வெட்டு குறிப்பிடும் "திகுல மண்டலம்" என்பது வன்னியர்களான காடவராயர்கள் அரசாட்சி செய்த பகுதியாகும். இந்த கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக, கி.பி.14 ஆம் நூற்றாண்டின் "மதுரா விஜயம்" ஒன்பதாம் காண்டம் சுலோகம் - 28, வன்னிய அரசர்களை பற்றி தெரிவிக்கிறது :-

சுலோகம் - 28 : "வீர கம்பண்ணரின் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் ஸர்ப்பங்களைப்போல் சீறிக்கொண்டு பாய்ந்து வந்தன. அவ்வாறு அவை பாய்ந்து சென்றபோது கேரள மக்களின் மூச்சுக் காற்றையும், வன்னிய மன்னர்களின் நாட்டை நாசம் செய்த தீயைப் போலவும், ஆந்திர தேசத்தை தகிக்கும் சூரியன் போலவும் காணப்பட்டன"

மதுரா விஜயத்தின் மேற்குறிப்பிட்ட சுலோகம் - 28, மிகத் தெளிவாக "கேரள மக்களின் நாட்டையும்", "தமிழக மக்களின் நாட்டையும்", "ஆந்திரா மக்களின் நாட்டையும்" என்று குறிப்பிடுகிறது. இதில் "தமிழ்நாடு" என்று குறிப்பிடுவதற்கு பதிலாக "வன்னிய மன்னர்களின் நாடு" என்றே குறிப்பிடுகிறது.

கன்னட நாட்டில் இருந்த சோழர்களின் தலைக்காட்டுப் (தழைக்காடு) பகுதியை அரசாட்சி செய்த சோழ சாமந்தர்களான "தகடூர் அதியமான்", "திகுல தாமன்", "நரசிம்ம வர்மன்" ஆகியோரை ஓய்சாளர்களின் தளபதியான வீர கங்கன் அவர்கள் வெற்றிகொண்டார் என்பதாகும். இவரை கன்னட கல்வெட்டுகள் :-

''திகுலர் படையை வென்ற கண்டன்"

"திகுலர் கூட்டுப்படையை வென்ற கண்டன்"

"கங்கவாடி திகுலரை வென்ற வீர கங்கன்"

என்று குறிப்பிடுகின்றன. சோழ தளபதியான தகடூர் அதியமான் அவர்களை கன்னட கல்வெட்டுகள் "காடவ குல அதியமான்" (வன்னியர்) என்று குறிப்பிடுகின்றன. சோழ தளபதி திகுல தாமன் என்பவர் வன்னியர் என்பது அவரின் பெயரான "திகுலர்" (வன்னியர்) என்பதிலிருந்தே தெரியவருகிறது. சோழ தளபதி நரசிம்ம வர்மன் அவர்கள் "நுளம்ப பல்லவர்" (வன்னியர்) என்று தெரியவருகிறது. இதன் காரணமாகவே, ஒய்சாள தளபதி வீர கங்கன் அவர்கள் "திகுலரை வென்றவர்" (வன்னியரை வென்றவர்) என்று குறிப்பிடப்பட்டார்கள் என்பதாகும்.

திகுலர் என்பவர்கள் வன்னிய வம்சத்தவர்கள் ஆவர். இவர்கள் கர்நாடகத்தில் பெரும் எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதாகும். தர்மராஜா கோயிலின் திரௌபதி அம்மன் கரகவிழா என்பது வன்னிய வம்சத்தவர்களான திகுலர்கள் எடுக்கும் மிகச் சிறப்பான விழாவாகும். இந்த திரௌபதி அம்மன் கரகவிழாவானது கர்நாடக மாநிலத்தின் சிறப்பு மிக்க ஒரு விழாவாகும். 

கி.பி.1125 ஆம் ஆண்டின் கன்னட கல்வெட்டு ஒன்று, சோழர் என்று குறிப்பிட "திகுலர்" என்ற பெயரினை பயன்படுத்தியுள்ளது என்பதாகும். ஒய்சாள வேந்தர் வீரராமநாத தேவரின் கோலார் பகுதி மடிவளாகத்தில் இருக்கும் தமிழ் கல்வெட்டு ஒன்று, உலகுய்யவந்த பெருமாளுக்கு "முன்னாள் வன்னியர் காலம்" முதல் இருந்த கொடைகள் தொடர்வதாக குறிப்பிடுகிறது. இந்த முன்னாள் வன்னியர் காலம் என்பது "சோழர் காலம்" என்பதாகும்.

எனவே, திகுலர் பூமி/நாடு/மண்டலம் என்பது "வன்னியர் பூமி/நாடு/மண்டலம்" என்பதாகும். இதுவே மேற்குறிப்பிட்ட சான்றுகளின் அடிப்படையினில் மிகச் சரியானதாகும்.

வரலாற்று அறிஞர்கள் மேற்குறிப்பிட்ட சான்றுகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் ''திகுலர் பூமி/நாடு/மண்டலம்'' என்பதை ''தமிழர் பூமி/நாடு/மண்டலம்'' என்று பெரும் பிழையாக பதிவு செய்திருக்கிறார்கள் என்பதாகும்.