Wednesday 26 October 2016

தில்லை வாழ் அந்தணர்களால் வரவேற்கப்படும் சோழ மன்னர்கள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சோழப் பெருவேந்தன் ராஜ ராஜ சோழன் அவர்கள், தங்களது குல தெய்வ கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வழிபாடு செய்ய குடும்பத்தோடு வந்தபோது, தில்லை வாழ் அந்தணர்கள், அவர்களை வரவேற்ற ஓவியக் காட்சிகள் தஞ்சை பெரிய கோயிலில் உள்ளது.








ஆயிரம் ஆண்டுகள் கடந்து, இந்த நூற்றாண்டிலும் சோழ மன்னர்களின் வாரிசுகளான பிச்சாவரம் சோழ மன்னர்களுக்கு மரியாதை கொடுக்கும் தில்லை வாழ் அந்தணர்கள். வாழ்க க்ஷத்ரிய வம்சத்து பிச்சாவரம் சோழ மன்னர்கள்.
இப்படி சான்றுகள் ஏதும் இல்லாமல், க்ஷத்ரிய வம்சத்தில் பிறக்காத திருமங்கை ஆழ்வார் / கண்ணப்ப நாயனார் வம்சத்தவர்களும், உழவு தொழிலை தங்களது குலத் தொழிலாக கொண்டவர்களும், இன்னும் சிலரும், தாங்கள் தான் சோழர்களின் வம்சத்தவர்கள் என்று மாய்ந்து மாய்ந்து சுவர் விளம்பரம் செய்கிறார்கள். ஊர் முழுவதும் கலர் கலராக போஸ்டர்கள் ஓட்டுகிறார்கள். இவர்கள் எல்லாம் சோழர்கள் காலத்தில் இப்படி செய்திருக்க முடியுமா ? கங்கைகொண்ட சோழபுரம் அரண்மனையில் நுழைவதற்க்கே அனுமதி பெற்றிருப்பார்கள்.
நீங்கள் எல்லாம் எந்த வகையில் சோழர்களுக்கு உரிமை கொண்டாடுகிறீர்கள் என்று கேட்டால், அவர்களிடம் பதில் இல்லை. ஏதேதோ கற்பனை கதைகளை சொல்லுகிறார்கள்.
சோழ பெருவேந்தர்களுக்கு சம்மந்தி முறையுள்ள வன்னிய குல காடவராயர்கள் (கச்சியராயர்கள்) இன்றும் இருக்கிறார்களே, அவர்களுக்கு நீங்கள் உறவினர்களா ? என்று கேட்டால், பேந்த பேந்த என்று முழிக்கிறார்கள். பிறகு எப்படி நீங்கள் சோழர்களுக்கு உரிமை கொண்டாடமுடியும் என்று கேட்டால், "புத்தகத்தில் இருக்கிறது" என்று சொல்லுகிறார்கள். என்ன இருக்கிறது புத்தகத்தில் என்று கேட்டால், அதான் இருக்கிறதே புத்தகத்தில் என்று சொல்லி விட்டு, "மாமன்னர் ராஜ ராஜ சோழனின் வாரிசுகளே வருக வருக" என்று சுவர் விளம்பரம் செய்ய சென்றுவிடுகிறார்கள்.
அட கஷ்டமே. விட்டால் இவர்கள் இதே பாணியில் "மாமன்னர் அலெக்சாண்டருக்கு" கூட உரிமை கொண்டாடிவிடுவார்கள் போல.
----- xx ----- xx ----- xx -----

No comments:

Post a Comment