சென்னையில் 06 ஆகஸ்ட் 2016 அன்று நடைப்பெற்ற "அகில பாரத க்ஷத்ரிய மகா சபா" விழாவில் அக்னி குல க்ஷத்ரிய வம்சத்தை சேர்ந்த "மகாராஜா ரகுவீர் சிங் சிரோஹி ஜீ" அவர்களும் மற்றும் நமது சொந்தங்களும் கலந்துகொண்டார்கள்.
மகாராஜா ரகுவீர் சிங் சிரோஹி ஜீ அவர்கள் (Maharaj Raghubir Singh Sirohi Ji) பேசும் போது ஒரு முக்கிய குறிப்பை சொன்னதாக நண்பர் திரு. நாகேஷ் நாயக்கர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
ராஜஸ்தான் அபு மலையில் (Mount Abu) இருந்த முனிவர்களின் ஓமகுண்டத்தில் இருந்து அரசர்கள் தோன்றியதாகவும், அதை ஸ்தாபித்தவர் "ஜம்வந் என்ற முனிவர்" என்றும் குறிப்பிட்டார்களாம். மேலும் "ஜம்வந் முனிவரே" அணைத்து முனிவர்களிலும் தலைமையானவர் என்றும் தெரிவித்தாராம் மகாராஜா ரகுவீர் சிங் சிரோஹி ஜீ அவர்கள்.
ராஜஸ்தான் அபு மலையை ஸ்தாபித்த "ஜம்வந் முனிவர்" தான் "சம்பு மாமுனிவர்" ஆவார்கள் என்று தெரியவருகிறது. மேலும் இவர்தான் "வடபால் முனிவர்" (அகத்தியர்) என்று சங்கத் தமிழ் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.
மராட்டிய மாநிலத்தில் இருக்கும் கி.பி. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமஸ்கிருத கல்வெட்டு, "அகத்திய முனிவரின் ஓமகுண்டத்தில் இருந்து வன்னிய அரசர்கள் தோன்றியதாக" குறிப்பிடுகிறது. அக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் அரசர்கள் "சாளுக்கிய வம்சத்தவர்" (வேள் குலத்தவர்கள்) ஆவார்கள்.
வாழ்க "சம்புமா முனிவர்" யாககுண்டத்தில் தோன்றிய "அக்னி குல க்ஷத்ரிய அரச மரபினர்கள்.
----- xx ----- xx ----- xx -----
No comments:
Post a Comment