ஹோய்சால அரசர்கள் "பண்டைய வேளிர் மரபினர்கள்" ஆவார்கள். இவர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள "துவாரா சமுத்திரத்தை" தங்களது தலைநகராக கொண்டு ஆண்டுவந்தார்கள். திருவண்ணாமலை இவர்களது இரண்டாம் தலைநகராகும். சாளுக்கியர்கள் மற்றும் ராஷ்டிரகூடர்களின் உறவினர்களான இவர்கள் பல கலைமிகு கோயில்களையும் காட்டியுள்ளார்கள். இவர்கள் தங்களை "சந்திர குலத்து யது வம்சத்து யாதவர்கள்" என்று குறிப்பிடுகிறார்கள்.
கர்நாடக மாநிலம் பேலூர் கல்வெட்டு ஒன்று (Epigraphia Carnatica, Vol - V, No. 15) ஹோய்சால மன்னர்களை :-
"யாதவ குல வன்னி புத்திரர்" (Yadava-kuladolu Hempan e-vannipudo) என்று குறிப்பிடுகிறது.
இதைப்போலவே, ஹோய்சால அரசர் வீரராமநாத தேவரின் (கி.பி. 1291), கர்நாடக கோலார் மாவட்ட தமிழ் கல்வெட்டு ஒன்று (Epigraphia Carnatica, Vol - X, No. 28) கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது :-
"உலகுய்யவந்த பெருமாளுக்கு முன்நாள் வன்னியர் காலம் தொடங்கி இந் நாயனாருக்கு இவ் ஊரில்"
என்று குறிப்பிடுகிறது. ஹொய்சளர்களின் குல கடவுளான சென்னகேசவ பெருமாளுக்கு வன்னியர் காலம்முதல் பலவிதமான கொடைகள் வழங்கப்பட்டது என்பதையும், அழகியாளன் என்பவனும், அரசர் வெற்றியடைய வேண்டி தானம் கொடுத்துள்ளான் என்பதையும் மேற்குறிப்பிட்ட கல்வெட்டு தெரிவிக்கிறது. இது "கர்நாடக மாநிலத்தில் ஹோய்சால வன்னிய அரசர்கள் ஆட்சி செய்ததைப்" பற்றி மிகத்தெளிவாக குறிப்பிடுகிறது.
ஹோய்சால அரசர் வீரராமநாத தேவர் அவர்கள், திருவண்ணாமலையை ஆட்சிசெய்த ஹோய்சால அரசர் மூன்றாம் வீர வல்லாள தேவருக்கு "சித்தப்பா" ஆவார்கள்.
கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் அருணாச்சலபுராணம், ஹோய்சால மூன்றாம் வீரவல்லாள தேவரை "வன்னி குலத்தினில் வரு மன்னா" என்றும் "அனல் குலத்தோன்" என்றும் குறிப்பிடுகிறது.
ஹோய்சால அரசர் மூன்றாம் வீரவல்லாள தேவர் அவர்கள், "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தைச்" சேர்ந்த மன்னர் என்பதால் தான் அவருக்கு ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் வன்னியர்களால் விழா கொண்டாடப்படுகிறது.
இதைப்பற்றி "கூடல் இருவாட்சி புலவர்" என்பவர், அரியலூர் மழவராய அரசர்களின் மேல் பாடிய "திருக்கைவளம்" என்ற இலக்கியத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள். திருக்கைவளம் என்னும் நூல் வன்னியர்களின் புகழினைப் பற்றி பாடும் நூலாகும்.
இத்தகைய அடிப்படை சான்றுகளின் மூலம் "ஹோய்சால அரசர்கள் வன்னிய குலத்தவர்கள்" என்று மிகத் மிகத் தெளிவாக தெரியவருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நானும், அருமை நண்பர் திரு. அண்ணல் கண்டர் அவர்களும், மதிப்பிற்குரிய அண்ணன் திரு. சோழன் குமார் வாண்டையார் அவர்களும், ஹோய்சால மூன்றாம் வீர வல்லாள தேவரின் விழாவிற்கு சென்றிருந்தோம்.
எம்பெருமான் அண்ணாமலையார் அவர்கள் ஹோய்சால வீர வல்லாள தேவருக்கு மகன் என்ற காரணத்தினால் அவருக்கு (உற்சவமூர்த்திக்கு) முடிச்சூட்டு விழாவின் போது "ராஜ அலங்காரம்" செய்யப்படுகிறது. வன்னியர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ளவேண்டும். அப்போது அண்ணாமலையார் அவர்களுக்கு செங்கோல் கொடுக்கப்படுகிறது. முடிச்சூட்டும் சமயத்தில் "கோயில் பிராமணர்கள்" அண்ணாமலையார் அவர்களைப் பார்த்து கீழ் கண்ட வாசகத்தை சொல்கிறார்கள் :-
"க்ஷத்ரிய சமூகத்தார் எல்லோரும் உங்களுடைய முடிச்சூட்டு விழாவுக்கு வந்திருக்கிறார்கள்"
என்று சொல்கிறார்கள். அண்ணாமலையாரின் தந்தை வீர வல்லாளன் என்ற காரணத்தினால் (அருணாச்சலபுராணம்) தந்தை இறந்தவுடன், அண்ணாமலையாருக்கு திருமுடிச்சூட்டப்படுகிறது. அதாவது திருவண்ணாமலைக்கு ராஜாவாக திருமுடிச்சூட்டப்படுகிறது. முடிச்சூட்டுக்கு முன்னாள் அண்ணாமலையார் அவர்கள் தன்னுடைய தந்தைக்கு "கௌதம நதிக்கரையில் திதி கொடுக்க கோயிலில் இருந்து மேளதாளத்துடன் செல்கிறார்கள். இது பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. அண்ணாமலையார் கௌதம நதிக்கரைக்கு வந்தவுடன், வேட்டு வெடிக்கப்பெற்று அவருடைய வருகையைப் பற்றி "சம்மந்தனூர் வன்னிய கவுண்டர் மக்களுக்கு" தெரிவிக்கிறார்கள்.
அதன்பிறகு அண்ணாமலையாருக்கு சம்மந்தம் கட்ட (16 வது நாள்) "சம்மந்தனூர் வன்னிய குல க்ஷத்ரியர்கள்" மேளதாளத்துடனும் சீர்வரிசையுடனும் வந்து சிறப்பிக்கிறார்கள். தீர்த்தவாரி நடைபெறுகிறது. சம்மந்தனூர் வன்னிய மக்கள் கொடுத்த புத்தாடையை அண்ணாமலையார் உடுத்திக்கொண்டு கோயிலுக்கு புறப்படுகிறார்கள். திருவண்ணாமலை கோயில் பிராமணர்களும், வல்லாள மகாராஜா மடாலயத்தாரும் இதை நடத்துகிறார்கள். வன்னியர்களுக்கு கோயில் சார்பில் விருந்து கொடுக்கப்படுகிறது.
இது ஏதோ இன்று நடைபெறுவதல்ல, சுமார் 700 ஆண்டுகளாக நடைபெறுகிறது. ஹோய்சால வீர வன்னிய வல்லாள மகாராஜா அவர்கள் திருவண்ணாமலை கோயிலுக்கு செய்த பல நன்மையினால் அவருக்கும் அவருடைய "வன்னிய சமூகத்தாருக்கும்" இத்தகைய மாபெரும் சிறப்புக்களை பிராமணர்கள் செய்கிறார்கள். இந்து சாம்ராஜ்ஜியம் காப்பதற்காக ஹோய்சால வீர வன்னிய வல்லாள மகாராஜா அவர்கள் தன்னுடைய இன்னுயிரை தந்துள்ளார்கள். முஸ்லிம்கள் இவரது தோலை உரித்து மதுரையில் தொங்கவிட்டார்கள்.
உலகிலேயே அண்ணாமலையாருக்கு சம்மந்தம் கட்டும் சமூகம் நமது ஹோய்சால வன்னிய குல க்ஷத்ரிய சமூகம் தான் என்பது நமக்கெல்லாம் மிகப்பெரும் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.
நம்முடைய அரசியல் தலைவர்கள் இத்தகைய விழாக்களில் கலந்துகொண்டால் இந்த விழாவானது உலகளவில் பேசப்படும். அது நமக்கு நன்மையை கொடுக்கும்.
வாழ்க ஹோய்சால வீர வன்னிய குல மன்னர்களின் புகழ்.
----- xx ----- xx ----- xx -----
No comments:
Post a Comment