Sunday, 16 October 2016

துண்ட நாடு உடையார்கள்

"துண்ட நாடு உடையார்கள்" என்ற வன்னிய குறுநில மன்னர்கள் சோழர்கள் காலத்தில் அரியலூர் பகுதியை அரசாட்சி செய்திருக்கிறார்கள். இவர்கள் "துண்ட நாடு உடையார்" என்றும் "துண்டராயன்" என்றும் "துண்ட நாடாழ்வான்" என்றும் அழைக்கப்பெற்றனர். இவர்கள் தங்களை "பள்ளி" (வன்னியர்) என்று கல்வெட்டில் குறிப்பிட்டனர்.
இவர்களை பற்றி இருபதுக்கும் மேற்பட்டக் கல்வெட்டுகள் காணக்கிடைக்கின்றன. இவர்கள் "வேளிர்கள்" ஆவார்கள். சோழ மன்னன் வீர ராஜேந்திரனின் (கி.பி.1067) கல்வெட்டில், துண்டநாடு உடையார் குறிப்பிடப்படுகிறார். அவர் "பள்ளி கூத்தன் பக்கனான ஜெயம்கொண்ட சோழ துண்ட நாடாழ்வான்" என்பவராவார்.






முதலாம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி.1099) ஆட்சிக் காலத்தில் "துண்டநாடு உடையார் சோழ குல சுந்தரன் கல்யாணபுரம் கொண்டார்" என்ற துண்டநாடு உடையார் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார். இவரை அக் கல்வெட்டு "தேனூர் உடையான்" என்று குறிப்பிடுகிறது. இவர் மகா பராக்கிரம சாலியாக இருந்திருப்பார் என்பது இவர் பெயரான "கல்யாணபுரம் கொண்டார்" என்பதில் இருந்து தெரியவருகிறது.
கல்யாணபுரம் என்பது "சாளுக்கிய தேசமாகும்". இந்த துண்டநாடு உடையார் நிச்சயமாக "கலிங்கத்து போரில்" பங்கேற்றிருக்கிறார் என்பதும் அவர் சாளுக்கிய தேசத்தை வென்றதின் காரணமாக, முதலாம் குலோத்துங்கச் சோழன் அவருக்கு "கல்யாணபுரம் கொண்டார்" என்ற பட்டத்தினை வழங்கியிருப்பார்கள் என்பதும் கல்வெட்டின் மூலம் அறியமுடிகிறது.
திட்டக்குடி வட்டம் வசிஷ்டாபுரம் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு, வன்னியர் சமூகத்தை சேர்ந்த "தேனூர் துண்டராயன் திருச்சிற்றம்பலமுடையார்" என்ற குறுநில மன்னனை பற்றிக் குறிப்பிடுகிறது. இவர் "நாவலூர் இருங்கோளர்" (திருநாவலூர் இருங்கோளர்) மகளாகிய குலோத்துங்கச் சோழியார் என்பவளை திருமணம் செய்துள்ளார். மூன்றாம் குலோத்துங்க சோழனின், கோயில்பாளையம் கல்வெட்டு, இவரை "துண்டராய பன்மன் திருவிராடன் குன்றன்" (பன்மன் = வர்மன் = க்ஷத்ரியர்) என்றும் இவருடைய அரசி பெயர் "குலோத்துங்கச் சோழியார்" என்றும் குறிப்பிடுகிறது.
துண்ட நாடு உடையார்கள் தங்களை "வர்மன்" என்றும் "திருவிராடன்" என்றும் குறிப்பிட்டனர். வர்மன் என்பது "க்ஷத்ரியர்கள்" ஆவார்கள். திருவிராடன் என்பது "மகாபாரத க்ஷத்ரியர்களின் பெயராகும்".
இத்தகைய "துண்ட நாடு உடையார்கள்" கல்வெட்டுகளில் "வாணகோவரையர்" என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். வாணகோவரையர்கள் "பள்ளி" என்றும் "வன்னியன்" என்றும் கல்வெட்டில் அழைக்கப்பெற்றனர். வாணகோவரையர் "க்ஷத்ரியர்கள்" ஆவார்கள் :-
"துண்ட நாடு உடையான் ஏகவாசகன் குலோத்துங்கரான பிள்ளை வாணகோவரையர்"
"துண்ட நாடு உடையான் ஏகவாசகன் உலகு கண்டுவித்த பெருமாளான வாணகோவரையன்"

No comments:

Post a Comment