Sunday, 16 October 2016

பிச்சாவரம் வன்னிய குல வீர வர்ம சோழனை க்ஷத்திரிய வர்ணத்தவர்கள் என்று குறிப்பிடும் தில்லை வாழ் அந்தணர்கள்

கோயில் என்றாலே அது "சிதம்பரம் நடராஜர்" கோயிலைத்தான் குறிக்கும். அக் கோயில் சைவத்தின் தலைமை கோயிலாகும். சைவ நாயன்மார்கள் முதலில் "தில்லை ஆடல்வல்லானையும்" மற்றும் "தில்லை வாழ் அந்தணர்களையும்" மட்டுமே போற்றுவார்கள். அத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த சிதம்பரம் நடராஜர் கோயில் என்பது சோழ வேந்தர்களின் "குல தெய்வ கோயிலாகும்". அங்கு தான் சோழ மன்னர்களுக்கு தில்லைவாழ் அந்தணர்கள் "திருமுடிசூட்டுவார்கள்".










சோழ மன்னர்களின் வாரிசுகள் என்பவர்கள் "பிச்சாவரம் சோழ மன்னர்கள்" ஆவார்கள். இவர்களை, தில்லை வாழ் அந்தணர்கள் "சக்கரவர்த்திகள்" என்று அழைக்கிறார்கள். இந்த சோழ சக்கரவர்திகளைப் பற்றி சமஸ்கிருத புராணமான "பார்த்தவன மான்மியம்" மற்றும் "ராஜேந்திரபுர மான்மியம்" ஆகிய இரு மான்மியங்களும் சான்றுகளை வழங்குகின்றன.
பூர்வாசார்யர்களால் எழுதப்பட்டுவந்த இந்த மான்மியங்களை தில்லைவாழந்தணர்களுள் "ப்ரம்ஹஸ்ரீ ஸோமயாஜி அப்பாசுவாமி தீக்ஷிதர் அவர்களும், "ப்ரம்ஹஸ்ரீ ராஜரத்தினதீக்ஷிதர் அவர்களும் உபகரித்தருளினார்கள்.
உமாபதிசிவச்சாரியார் அவர்களைப் பற்றிய சமஸ்கிருத புராணமான "பார்த்தவன மான்மியம்" மற்றும் "ராஜேந்திரபுர மான்மியம்" என்ற மான்மியங்களை, சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் இருக்கும் "குப்புஸ்வாமி சாஸ்திரி ஆராய்ச்சி நிறுவனத்தாரால்" 1996 ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது.
அந்த மான்மியத்தில் "வீரவர்ம சோழன்" என்னும் ஒரு சோழ மன்னனைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அச் சோழ மன்னன் சிதம்பரத்தில் உள்ள "பிச்சாவரத்தை ஆட்சி செய்தவன்" என்ற குறிப்பையும் தருகிறது. அது :-
"நீ வருந்தாதே உன்னைக் கடவுள் பாதுகாப்பார் என்று ஆசார்யர் அருளிச்செய்ய, அதில் நம்பிக்கை பிறவாமல் அவள் பிச்சபுரமென்னும் ஸமீபஸ்தலத்தில் அந்நாள் அரசு புரிந்திருந்த வீரவர்மா என்னும் சோழனிடத்திற்போய் முறையிட்டாள்". (பார்த்தவன மான்மியம், பக்கம் - 220).
"ஆசார்யரும் வீரவர்ம சோழனைப் பார்த்து இவளது ஜீவனத்தின்பொருட்டு நிலங்களை மானியமாக விட்டுக்கொடுக்கக்கடவாய் என்று ஆஞ்ஞாபிக்க, அரசனும் ஆங்ஙனம் செய்வேன் என்று ஆசார்யரை வணங்கி அனுமதி பெற்றுக்கொண்டு பிச்சபுரம்போய்ச் சேர்ந்தான்." (பார்த்தவன மான்மியம், பக்கம் - 222).
"உமாபதிசிவாசார்யர் சிதம்பரத்தின் தென்கிழ்த்திசையதாகிய ராஜேந்திரபுரம் என்னும் கொற்றங்குடியில் தம்பொருட்டு வீரவர்ம சோழனால் கட்டப்பட்ட மடாலயத்தில் சீடர்களோடு வசித்தார்." (ராஜேந்திரபுர மான்மியம், பக்கம் - 239).
"சோழனும் அது கேட்டு அவர்களோடு கூடிக் கொற்றங்குடியில் வந்து ஆசார்யரை வணங்கி ஸ்வாமீ பெற்றான் சாம்பானது செய்தி சிறிது அறிவேன். அவனது செய்திமுழுதையும் தேவரீர் அருளிச்செய்தல் வேண்டும் என்று அஞ்சலியஸ்தனாய் நின்று கேட்டான்." (ராஜேந்திரபுர மான்மியம், பக்கம் - 247).
எனவே, மேற்குறிப்பிட்ட பிச்சாவரம் சோழ அரசன், "வீர வர்ம சோழன்" என்பது உண்மையாகும். மேலும் அச் சோழ அரசனுக்கு "வர்மா" என்ற பட்டப் பெயர் இருப்பதால், அவன் "க்ஷத்ரிய சமூகத்தவன்" என்பது உண்மையாகும்.
நால்வருணத்தைப் பற்றி "ராஜேந்திரபுர மான்மியம்" மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது :-
"பிராம்மண க்ஷத்திரிய வைசிய சூத்திர ரென்னும் நான்கு வருணத்தாருள் உமாபதிசிவாசார்யரது பிரஸாதத்தினாலே பதமுக்தி பரமுக்திகளை அடைந்து கிருதார்த்தர்களானோர்கள் பல்லோர்" (பக்கம் - 253, ராஜேந்திரபுர மான்மியம்).
"அற்புததரமாகிய உமாபதிசிவாசார்யரது சரித்திரம் நூறு சுலோகங்களால் இயற்றப்பெற்றமைந்தது. இதனைப் பிராமணன்றான் க்ஷத்திரியன்றான் வைசியன்றான் சூத்திரன்றான்" (பக்கம் - 255, ராஜேந்திரபுர மான்மியம்).
நால்வருணத்தைப் பற்றி தில்லை வாழ் அந்தணர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதில் "க்ஷத்ரிய வருணம்" என்பது "வீர வர்ம சோழனின்" வருணமாகும். இதன் மூலம் தெரியவரும் உண்மை என்னவென்றால், பிச்சாவரம் சோழ மன்னர்கள் "க்ஷத்ரிய வருணத்தவர்கள்" என்பதாகும்.
சோழ வம்சத்தவர்கள் "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பதை "தில்லை வாழ் அந்தணர்களே" தங்களது சமஸ்கிருத மான்மியங்களில் மிகத் தெளிவாக சொல்லிவிட்டார்கள்.

1 comment:

  1. வணக்கம் ஐயா. ராஜேந்திரபுர மான்மியம் நூலை எப்படிப் பெறுவது? எங்கு கிடைக்கும்?

    ReplyDelete