Monday, 17 October 2016

வனி வேந்தர்கள்








கல்வெட்டுகளிலும் மற்றும் ஆவணங்களிலும் "வன்னிய அரசர்களைப்" பற்றி குறிப்பிட "வனி வேந்தர்" என்ற சொல்லாட்சியும் வழக்கத்தில் இருந்திருக்கிறது என்பதை அறியமுடிகிறது. திருச்சி திருவெள்ளறை கல்வெட்டு (S.I.I Vol XII, No. 48), பல்லவ மகாராஜா நந்திவர்மனை :-
".....ல்லவ மாமறைத் தொன்றி வனி வெந்தன்"
என்று குறிப்பிடுகிறது. இதற்கு சரியான விளக்கம் என்பது "பல்லவ மாமறைத் தோன்றிய வன்னிய வேந்தன்" என்பதாகும்.
இதை மெய்ப்பிக்கும் விதமாக மற்றொரு சான்றும் காணக்கிடைக்கிறது (Foreign Notices of South India, K.A. Nilakanta Sastri, University of Madras, Page - 153) :-
கி.பி. 1283-ஆம் ஆண்டில் கேரளாவுக்கு விஜயம் செய்த சீன யாத்ரீகன் "யாங்-திங்-பி" (Yang Ting-pi), சேர வம்சத்து கொல்லம் அரசர்களை "வனி" என்று குறிப்பிட்டுள்ளார்கள் (Yang Ting-pi sent on a new mission to Kulam and other states. He was also entrusted with a golden badge for Wa-ni, King of Kulam).
எனவே மேற்குறிப்பிட்ட சான்றுகளின் மூலம் "வனி வேந்தர்" என்று குறிப்பிடப்படுபவர்கள் "வன்னிய வேந்தர்களே" ஆவார்கள்.
கேரளத்து சேர அரசர்கள் தங்களை கீழ் கண்டவாறு குறிப்பிடுவதாக, கவிச் சிங்கம் ராஜரிஷி அர்தநாரீச வர்மா ஐயா அவர்கள், க்ஷத்ரியன் இதழ் 1931 நவம்பர் 7 இல் குறிப்பிட்டுள்ளார்கள் :-
"ஸ்ரீ பத்மநாபதாச வஞ்சிபால கிரீடாதிபதி குலசேகர வன்னி சுல்தான் ஸ்ரீ ......... வர்ம மஹாராஜா"
எனவே கேரள அரசர்கள் "வன்னியர்கள்" என்பது உண்மையாகிறது. அதைப்போலவே நந்திவர்ம பல்லவனும் "வன்னிய வேந்தன்" ஆவான்.

No comments:

Post a Comment