மல்லர்" என்ற சொல்லானது "வீரர்களை" குறிக்கும் சொல்லாகும். குறிப்பாக அது "மல்யுத்த வீரர்களை " குறிக்க பயன்பட்டது. சிறந்த மல்யுத்த வீரனான "ராஜ சிம்ம பல்லவன்" பெயரில் அமைந்ததே "மாமல்லபுரமாகும்". நந்தி வர்ம பல்லவன், "காடவ குல நந்திவர்ம பல்லவ மல்லன்" என்று குறிப்பிடப்பட்டான்.
சோழர்கள் காலத்தில் பல கல்வெட்டுகளில் "மல்லர்" என்ற சொல்லானது அக்னி குல க்ஷத்ரியர்களான "வன்னியர்களையும்" மற்றும் "சுருதிமான்களையும்" குறிக்க பயன்பட்டது :-
"இருங்கோளர் பிரிதிவீபதி அமணிமல்லன்"
(கி.பி. 992, ராஜராஜ சோழன், விருத்தாசலம்)
(கி.பி. 992, ராஜராஜ சோழன், விருத்தாசலம்)
"இருங்கோளக்கோனார் அமணிமல்லன் சுந்தரச்சோழர்"
(கி.பி. 1014, ராஜராஜ சோழன், விருத்தாசலம்)
(கி.பி. 1014, ராஜராஜ சோழன், விருத்தாசலம்)
"பள்ளி அமணிமல்லன் பள்ளிகொண்டனான மறவாட்டுமலை"
(கி.பி. 1050, ராஜாதிராஜ சோழன், விருத்தாசலம்)
(கி.பி. 1050, ராஜாதிராஜ சோழன், விருத்தாசலம்)
"பள்ளி சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்"
( கி.பி. 1137, விக்கிரம சோழன், அரியலூர்)
( கி.பி. 1137, விக்கிரம சோழன், அரியலூர்)
இவரது மற்றோரு பெயர் "வாணகோவரையன் சுத்தமல்லன் முடிகொண்டான்" என்பதாகும். இவரது தந்தையின் பெயர் "சுத்தமல்லன் சோழகுல சுந்தரனான கங்கைகொண்டசோழ வாணகோவரையன்" (வாணகோவரையன் சுத்தமல்லன் உத்தம சோழனான இலங்கேஸ்வரன்) என்பதாகும்.
"சுருதிமான் நக்கன் சந்திரனான ராஜமல்ல முத்தரையன்"
(கி.பி. 1015, ராஜேந்திர சோழன், ஊட்டத்தூர்)
(கி.பி. 1015, ராஜேந்திர சோழன், ஊட்டத்தூர்)
"ஊட்டத்தூர் நாடு உடையான் மல்லன் சியனான பிரம்மாதிராய முத்தரையன்"
(கி.பி. 1243, மூன்றாம் ராஜராஜ சோழன், ஊட்டத்தூர்)
(கி.பி. 1243, மூன்றாம் ராஜராஜ சோழன், ஊட்டத்தூர்)
வன்னியர் என்ற பெயரில் தெலுங்கர் ஆகி , தமிழின வரலாறு திருட்டு போல அல்லவா உள்ளது.
ReplyDelete