Monday, 17 October 2016

கல்லாடம் குறிப்பிடும் வேந்தர்கள் மற்றும் வேளிர்களான வன்னியர்கள்






கல்லாடனார் என்ற பழம்பெரும் தமிழ்ப் புலவர் "கல்லாடம்" என்ற அற்புதமான இலக்கியத்தைப் படைத்து இருக்கிறார். திருவள்ளுவரின் சமகாலத்து இலக்கியமாக "கல்லாடம்" கருதப்படுகிறது. இதில் "வேந்தன்" என்று குறிப்பிட "வன்னியர்" என்ற சொல்லையே புலவர் கல்லாடனார் அவர்கள் பயன்படுத்திஇருக்கிறார். குறிப்பாக "நாற்படை வன்னியர் ஆக்கிய பெருமான்" மற்றும் "நாற்படை வேந்தன் பாசறை" போன்றவைகளாகும். கல்லாடம் செய்யுள் - 37 மிக முக்கியமான குறிப்பை தருகிறது. அது :-
"கருமுகிற் கணிநிறத் தழற்கட் பிறையெயிற்
றிருதரு குட்டி யாயபன் னிரண்டினைச்
செங்கோன் முளையிட் டருணீர் தேக்கிக்
கொலைகள வென்னும் படர்களை கட்டுத்
திக்குப்பட ராணை வேலி கோலித்
தருமப் பெரும்பயி ருலகுபெற விளக்கு
நாற்படை வன்னிய ராக்கிய பெருமான்"
அருமை உறவினரும் வரலாற்று ஆய்வாளருமான திரு. மணிபாரி அண்ணன் அவர்களும் நானும் இந்த செய்யுளை நன்கு ஆய்ந்து ஆலோசித்து கீழ்கண்ட விளக்கத்தை கொடுத்துள்ளோம் :-
1. கருமுகிற்கணி - கருமையான மேகத்தில் சிவந்த பழம்போல தோன்றும் சூரியன்.
2. நிறத்தழற் - சிவந்த தீ.
3. கட்பிறை - சந்திரன்
4. எயிற்று அரிதரு - பன்றியாகிய திருமால் வழிவந்த
5. குட்டி ஆயப் பன்னிரண்டினை - 12 பன்றியாகிய வேளிர்கள்
6. செங்கோல் முளையிட்டு - அரசுகள் தோற்றுவித்து
7. அருள்நீர் தேக்கி - தர்மநீதியை மனதில் நிறுத்தி
8. கொலை களவு படர்களை - கொலையையும் திருட்டையும் பரவாமல்
9. எட்டுத் திக்குப்படர் ஆணை வேலிகோலித் - கொலை திருட்டு போன்றவற்றை பரவாமல் தடுக்க எட்டு திசையிலும் அரசாணை என்னும் வேலியைபோட்டு தடுத்து.
10. தருமப் பெரும் பயிர் உலகு பெற - தருமமாகிய நீதியை உலகம் பெருவதற்காக
11. விளைக்கும் - (தருமநீதியை) உருவாக்கும்
12. நாற்படை வன்னியர் ஆக்கிய பெருமான் - திருமால் நான்கு படைகளை உடைய வன்னியர்களாகிய அரசர்களை உருவாக்கினார்.
"சூரிய குல அரசர்கள், அக்னி குல அரசர்கள், சந்திர குல அரசர்கள் மற்றும் வேளிர்களுக்கு செங்கோல் ஏந்திய அரசாட்சியை தோற்றுவித்து, அவர்களுக்கு தரும நீதியை மனதில் நிறுத்தி, கொலை திருட்டு போன்றவற்றை பரவாமல் தடுக்க எட்டு திசையிலும் அரசாணை என்னும் வேலியை போட்டு தடுத்து, தருமமாகிய நீதியை உலகம் பெருவதற்காக அதை உருவாக்கி, யானை குதிரை தேர் மற்றும் காலாட்படை என்னும் நான்கு படைகளையுடைய வன்னியர்களாகிய வேந்தர்களை திருமால் உருவாக்கினார்"
எனவே கல்லாடத்தின் மூலம் தெரியவரும் கருத்து என்னவென்றால் வேந்தர்களும் வேளிர்களும் "வன்னிய சமூகத்தவர்கள்" என்பதாகும்.
இதைப்போன்ற ஒரு சான்றைத்தான், கி.பி. 12 - 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த உரையாசிரியரான புலவர் நச்சினார்க்கினியர் அவர்கள், தொல்காப்பியப் பாயிரவுரையிலும் மற்றும் தொல்காப்பிய அகத்திணையியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் குறிப்பிடுகிறார்கள்.
எனவே வேந்தர்களும் வேளிர்களும் திருமாலாகிய கண்ணனின் மரபினர்கள் (நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழியினராகிய வேந்தர்களும் வேளிர்களும்) என்பதும் அவர்கள் "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தவர்கள்" என்பதும் முற்றிலும் உண்மையாகிறது.
வாழ்க வன்னியர்களாகிய வேந்தர்களும் வேளிர்களும்.

No comments:

Post a Comment