Monday, 17 October 2016

சோழர்கள் காலத்தின் அத்தி மல்லர்கள்

"அத்தி" என்ற காஞ்சிபுரத்தின் மல்லர்கள், "அத்தி மல்லர்கள்" என்று வழங்கப்பட்டனர். அதாவது காஞ்சிபுரத்தின் தலைவர்கள் என்றும் வீரர்கள் என்றும் வழங்கப்பட்டனர். ராஜசிம்ம வர்ம பல்லவன், "மாமல்லன்" என்று வழங்கப்பட்டான்.
மேற்குறிப்பிட்ட கருத்து உண்மைதான் என்பதை "செங்கேணி அத்தி ஆண்டானான விக்கிரம சோழ சம்புவராயனின்" பெயர் மூலம் உறுதியாகிறது. அதாவது "அத்தி" என்ற "காஞ்சிபுரத்தை" ஆண்ட காரணத்தினால் "அத்தி மல்லர்" என்றும் "அத்தி ஆண்டான்" என்றும் வழங்கப்பெற்றனர். பல்லவர்களான வன்னியர்களின் புனித நகரமாக காஞ்சிபுரம் கருதப்படுகிறது.
வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்து மரபினர்களான சம்புவராய மன்னர்கள் "அத்தி மல்லர்கள்" என்று சோழர்கள் காலத்து கல்வெட்டில் குறிப்பிடப்பட்டனர் :-
"செங்கேணி சம்புவராயன் நாலாயிரவன் அத்திமல்லனான இராஜேந்திர சோழ சம்புவராயன் (A.R.E. No. 422 of 1922).
"செங்கேணி வீரசோழன் அத்திமல்லனான குலோத்துங்கசோழச் சம்புவராயன்" (A.R.E. No. 254 of 1919).
"செங்கேணி அம்மையப்பன் அத்திமல்லனான விக்கிரம சோழ சம்புவராயன்" (S.I.I Vol - VII, No. 119).
"அத்தி மல்லன் பல்லவாண்டானான குலோத்துங்க சோழ சம்புவராயன்"
(S.I.I Vol - VIII, No.106).
"செங்கேணி அத்திமல்லன் வீராண்டானான எதிரிலி சோழ சம்புவராயன்" (S.I.I Vol - VIII, No.106).
"அத்திமல்லன் சம்பு குலப் பெருமாளான ராஜகம்பீர
சம்புவராயன் (S.I.I Vol-I, No.74).
எனவே, வன்னியர்களான சம்புவராய மன்னர்கள் "அத்தி மல்லர்கள்" (காஞ்சியின் தலைவர்கள்) ஆவார்கள்.


No comments:

Post a Comment