Wednesday, 26 October 2016

புவி ஆளப்பிறந்த க்ஷத்ரியர்கள்

பிச்சாவரம் சோழ மன்னர்கள் தங்களை "க்ஷத்ரியர்கள்" என்றே ஆவணங்களில் குறிப்பிட்டனர். சோழர்களுக்கு திருமுடிசூட்டும் தில்லைவாழ் அந்தணர்கள், வன்னியர்களான பிச்சாவரம் சோழ அரசர்களை "சக்கரவர்த்தி" என்றே அழைத்தனர். எனவே "சக்கரவர்த்தி" என்றால் "க்ஷத்ரியர்" என்பதாகும். சமஸ்கிருத மான்மியங்களான பார்த்தவன மான்மியத்திலும், ராஜேந்திரபுர மான்மியத்திலும், பிச்சாவரம் சோழ அரசன் "வீர வர்ம சோழன்" அவர்கள் "வர்மன்" (க்ஷத்ரியன்) என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்.




நூற்றுக்கணக்கான சோழர் காலக் கல்வெட்டுகள், வன்னிய அரசர்களான (பள்ளி) "காடவராயர்", "சம்புவராயர்", "நீலகங்கரையர்" போன்றோரைப் பற்றி குறிப்பிடுகின்றன :-
"சகலபுவனச் சக்கரவர்த்தி" என்றும்
"சகலலோகச் சக்கரவர்த்தி" என்றும்
"ராஜகம்பீரன்" என்றும்
"அரசகளாலையன்" என்றும்
"புவிஆளப்பிறந்தன்" என்றும்
"அச்சலவீமன் அரசர் தலைவன்" என்றும் குறிப்பிடுகின்றன.
இவர்கள் அனைவரும் "சோழ வேந்தர்களுக்கு" மிகவும் நெருங்கிய "உறவுக்காரர்கள்" ஆவார்கள். கி.பி. 12 ஆம் நூற்றாண்டில், இரண்டாம் இராசாதிராச சோழனின் (கி.பி. 1163 - 1178) ஆட்சிக் காலத்தில் சோழர்களின் தலைமை படைத் தளபதியாக (Commander-in-Chief for Cholas Army) விளங்கிய வன்னியனான (பள்ளி) "எதிரிலிச் சோழ சம்புவராயன்" அவர்கள், காஞ்சிபுரத்து கல்வெட்டில் சோழ மன்னர்களை பற்றி குறிப்பிடும்பொழுது "எங்கள் வம்சத்தவர்கள்" என்றே குறிப்பிடுகிறார்கள்.
தில்லைச் சிற்றம்பலவாணருடைய ஏகபக்தனான "மூன்றாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி. 1178 - 1218) அவர்கள், தனது மகளை வன்னியனான (பள்ளி) "சகலபுவனச் சக்கரவர்த்தி காடவராய கோப்பெருஞ்சிங்கப் பல்லவன்" அவர்களுக்கு, தில்லை நடராஜர் கோயிலில் வைத்து திருமணம் செய்துகொடுத்தார்கள் என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது. க்ஷத்ரியனான சோழ மன்னன் தனது மகளை ஒரு "க்ஷத்ரியனுக்கு" தான் திருமணம் செய்து கொடுப்பான் என்பது வரலாறு ஆகும்.
"க்ஷத்ரிய மங்கையரை" மட்டுமே சோழர்கள் தங்களது "பட்டத்தரசியாக" கொண்டிருந்தனர் என்பது வரலாறாகும். பிற்காலச் சோழப் பேராசை தோற்றுவித்த "விஜயாலய சோழன்" (கி.பி. 848 - 881) அவர்களின் மகனான "ஆதித்த சோழன்" (கி.பி. 871 - 907) அவர்கள், வன்னியர்களான காடவராயர் வம்சத்தைச் சேர்ந்த "காடுவெட்டிகள் திரிபுவனமாதேவி வயிரியக்கன்" என்ற "க்ஷத்ரிய மங்கையை" திருமணம் செய்துக்கொண்டார்கள்.
முதலாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி. 1070 - 1120) அவர்கள், வன்னியர்களான காடவராயர் வம்சத்தைச் சேர்ந்த "காடவன் மாதேவி", "கம்பமாதேவி" ஆகியோரை திருமணம் செய்துகொண்டார்கள்.
வன்னியர்களான நீலகங்கரையர் வம்சத்தை சேர்ந்த "நீலகங்கன் அச்சலவீமன் அரசர் தலைவன்" அவர்கள், தனது மகள் "வில்லன் மாதேவியை", முதலாம் குலோத்துங்கச் சோழனின் மகனுக்கு திருமணம் செய்துகொடுத்தார்கள் என்று திருவல்லம் கல்வெட்டு (கி.பி. 1092) தெரிவிக்கிறது. முதலாம் குலோத்துங்கச் சோழனின் மகனான "வீர சோழ தேவர்" அவர்கள் "வேங்கி நாட்டின்" (சாளுக்கிய நாடு) அரசர் ஆவார்கள்.
எனவே வன்னியர்களான "சோழர்கள்", "காடவர்கள்", "சம்புவராயர்கள்", "நீலகங்கரையர்கள்" அனைவரும் "க்ஷத்ரியர்கள்" ஆவார்கள். நம்மவர்கள் இதையெல்லாம் தெரிந்து பெரும் மகிழ்ச்சி, கொள்ளவேண்டும். நம் முன்னோர்கள் பெரும் புகழோடு வாழ்ந்ததைப் போல நாமும் வாழவேண்டும்.
க்ஷத்ரியர்கள் மட்டுமே சோழ மன்னர்களின் சத்யவிழாவினை கொண்டாடவேண்டும். மற்றவர்கள் க்ஷத்ரியர்களின் சதய விழாவினை கொண்டாடுவது என்பது நகைச்சுவையான செயலாகும்.
----- xx ----- xx ----- xx -----

No comments:

Post a Comment