Sunday, 16 October 2016

வன்னிய இனத்து படைத் தளபதி வாணகோவரையன் சுத்தமல்லன் முடிகொண்டான்

முனைவர் இல. தியாகராஜன் அவர்கள், எழுதிய "கடந்தையார் வரலாறு" என்ற கட்டுரையை, சரித்திர செம்மல் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், தான் எழுதிய "திருக்கடந்தை வரலாறும் உரையும்" என்ற நூலில் பதிப்பித்திருக்கிறார்கள்.





சோழர்களிடம் குறுநிலமன்னர்களாக இருந்த "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தைச் சேர்ந்த "கடந்தையார்கள்", தங்களை "வங்கார முத்தரையன்" என்று கல்வெட்டில் குறிப்பிட்டார்கள் என்பதை கட்டுரையில் தெரிவித்த முனைவர் இல. தியாகராஜன் அவர்கள், "வாணகோவரையன் சுத்தமல்லன் முடிகொண்டானைப்" பற்றி மிக முக்கிய குறிப்பை தந்துள்ளார்கள். அது :-
"அரியலூர் மாவட்டம், கோயில் பாளையம், சோழீசுவரர் கோயிலை, முதலாம் குலோத்துங்க சோழனின் (கி.பி. 1070 - 1107) 37-வது ஆட்சி ஆண்டில் (கி.பி. 1107) 'வாணகோவரையன் சுத்தமல்லன் முடிகொண்டான்' என்னும் 'வன்னிய இனத்து படைத் தளபதியால்' கட்டப்பெற்றதாகும் என்று குறிப்பிடுகிறார் முனைவர் இல. தியாகராஜன் அவர்கள்.
தம் இனத்து முன்னோரால் கட்டப்பெற்ற கோயில் பாளையம் சோழீசுவரர் கோயிலுக்கு 15 சந்தி விளக்குகளையும் மற்றும் பல நற்காரியங்களையும் செய்தவர் "கடந்தை சேந்தன் ஆதித்தனான இராஜ ராஜ வங்கார முத்தரையன்" என்ற குறுநிலமன்னர் என்பதை இரண்டாம் இராசாதிராச சோழரின் கல்வெட்டு (கி.பி. 1170) ஒன்று குறிப்பிடுவதாக முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள்".
எனவே, முனைவர் இல. தியாகராஜன் அவர்கள், "வன்னிய இனத்து படைத் தளபதி" என்று குறிப்பிட்ட "வாணகோவரையன் சுத்தமல்லன் முடிகொண்டான்" என்பவரே கலிங்கத்துப் போரில் (கி.பி. 1112) பங்குபெற்றவர் ஆவார்.
இவரது முழுப்பெயர் "சுத்தமல்லன் முடிகொண்டானான விருதராசபயங்கர வாணகோவரையன்" என்பதாகும். இவரது தந்தையின் பெயர் "வாணகோவரையன் சுத்தமல்லன் உத்தம சோழனான இலங்கேஸ்வரன்" என்பதாகும்.
கலிங்கத்து போரில் பங்குபெற்ற "சுத்தமல்லன் முடிகொண்டனான விருதராசபயங்கர வாணகோவரையன்" என்பவரே "பள்ளி சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்" என்பவராவார். இவரைப்பற்றி, அரியலூர் மாவட்டம், சென்னிவனம் தீர்க்கபுரிஸ்வரர் கோயிலில் இருக்கும் இரண்டாம் குலோத்துங்க சோழனின் கி.பி. 1137 ஆம் ஆண்டு கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகிறது. (ஆவணம், இதழ்-20, பக்கம் 65 & 66).
இவரது தந்தையான "வாணகோவரையன் சுத்தமல்லன் உத்தம சோழனான இலங்கேஸ்வரன்" என்பவரும் "பள்ளி" (வன்னியன்) என்றே கல்வெட்டில் குறிப்பிடப்பட்டார்கள். அவரது பல்வேறு பெயர்கள் வருமாறு :-
"ஸ்ரீ மதுராந்தக சதுர்வேதிமங்கலத்துப் பள்ளி செங்கேணி சாத்தன் சோழனான சேனாபதிகள் வாணராஜர்" (S.I.I. Vol-V, No.1003, Line-2).
"வீரசோழனான வாணராஜர்" (S.I.I. Vol-V, No.1003, Line-3).
"சுத்தமல்லன் சோழ குல சுந்தரனான கங்கைகொண்டசோழ வாணகோவரையன்"

4 comments:

  1. Chozha nattu chathriyan, i have the following questions on the statement that Vanavarayan being vanniyan,

    * Vanathirayar belong to right hand faction valangai migaman there is inscriptional evidence available for this, palli belong to left hand idangai jati idangai migama,

    * Mavali vanar's are mentioned as Agamudayar in the chinnamannur, pandiya and in the kongu pattayam's the kannakan kootahar pattayam as an elaborate mention about them and it clearly confirms them to be agamudayar's, or agamudaya vellalar. I think you did not study the entire work of Mr Thiyagarajan wherein he is giving explanation on the agamudyar are vanithirayars and he as given inscriptional evidence that says the Malaiyamans are mentioned as agamudayar, agambattathevan, certain inscription say the vanithirayars are vellalars and gangar's i.e gangain pillai azhagiya pillai vanthirayar, karunakara thondaiman inscriptions says vallancheri udaiyan vellalan annai, as per the command of vellala so this makes it clear that the vanathirayars are agamudyars/thuluva vellalar.

    ReplyDelete
    Replies
    1. சேனாபதி வாணராஜர்
      -----------------------------------

      முதலாம் குலோத்துங்கச் சோழனின் தளபதிகளுள் வாணர் குல சேனாபதியான "வாணகோவரையன் சுத்தமல்லன் உத்தம சோழனான இலங்கேஸ்வரன்" என்பவர் முக்கியமானவர் ஆவார்.

      இவரது மகன் "வாணகோவரையன் சுத்தமல்லன் முடிகொண்டான்" என்பவரே, கி.பி.1112 ஆம் ஆண்டில் கலிங்கத்து போருக்கு சென்றவர் ஆவார். புலவர் ஜெயம்கொண்டார் அவர்கள் கலிங்கத்துப்பரணியில் இவரைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள் :-

      "வாசி கொண்டரசர் வாரணங்கவர
      வாணகோவரையன் வாண்முகத்
      தூசி கொண்டுமுடி கொண்ட சோழனொரு
      சூழி வேழமிசை கொள்ளவே"

      முனைவர் எம். எஸ். கோவிந்தசாமி அவர்கள் வாணர்கள் பற்றிய ஆய்வில் (The Role of feudatories in Later Chola History) ஒரு முக்கிய குறிப்பினை கொடுத்துள்ளார்கள். முதலாம் குலோத்துங்கச் சோழனின் வாணர் குல சேனாபதியான :-

      "வாணகோவரையன் சுத்தமல்லன் உத்தம சோழனான இலங்கேஸ்வரன்"

      என்பவருக்கு (சுத்தமல்லன் முடிகொண்டானின் தந்தை) "சுத்தமல்லன் சோழ குல சுந்தரனான கங்கைகொண்டசோழ வாணகோவரையன்" என்ற பெயரும் இருக்கிறது என்று குறிப்பிட்டுவிட்டு :-

      "பள்ளி செங்கேணி சாத்தன் சோழனான சேனாபதி வாணராஜர்"

      என்பவரும் முதலாம் குலோத்துங்கனின் தளபதியாக இருந்தார். இவர் தான் "சுத்தமல்லன் இலங்கேஸ்வரனா" என்று தெரியவில்லை என்று கருத்து தெரிவித்தார்கள் (Copy attached with this article).

      அரியலூர் மாவட்டம், சென்னிவனம் தீர்க்கபுரிஸ்வரர் கோயிலில் இருக்கும் இரண்டாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு ஒன்று (கி.பி. 1137) "பள்ளிச் சேந்தந் சுத்தமல்லனாந வாணகோவரையந்" என்ற "வாணர் குல குறுநிலமன்னரைப்" பற்றி குறிப்பிடுகிறது (ஆவணம், இதழ்-20, பக்கம் 65 & 66, முனைவர் இல. தியாகராஜன் அவர்கள்).

      "பள்ளி சுத்த மல்லனான (கி.பி. 1137)" இவரே "சுத்த மல்லனான முடிகொண்டான் (கி.பி. 1112)" என்று தெரியவருகிறது. அதாவது "சுத்த மல்லன் இலங்கேஸ்வரனின்" மகன் என்று தெரியவருகிறது.

      முனைவர் எம்.எஸ். கோவிந்தசாமி ஐயா அவர்களுக்கு, இப்போது தெரியவந்திருக்கும் "பள்ளி சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன் (கி.பி. 1137)" என்ற சான்று அப்போது கிடைத்திருந்தால், ஆம் :-

      "வாணகோவரையன் சுத்தமல்லன் உத்தம சோழனான இலங்கேஸ்வரன்" என்பவரே

      "பள்ளி செங்கேணி சாத்தன் சோழனான சேனாபதி வாணராஜர்" என்று சொல்லியிருப்பார்கள்.

      வாழ்க இந்த "சுத்த மல்லர்களான வாணகோவரையர்களின்" வரலாறு.

      Delete
  2. ஆசிரியர் திரு கிருழ்ணமூர்த்தி எழுதிய திருகடந்தை வறலாரும் உறையும் என்ற நூல் பெற முகவரி தேவை

    ReplyDelete
  3. அனைத்தும் & ஆதிமனிதர்கள் என வாழ்ந்த சங்கத் தமிழ் மல்லர் மக்கள் வழிதோன்றல்கள்.

    ReplyDelete