பண்டைய மகாபாரதம் அக்னி புத்திரனான சம்புவைப் பற்றி குறிப்பிடுகிறது. இதுவே மிகப் பழமையான சான்றாகும். மேலும், சங்கத் தமிழ் புறம் - 201 பாடலிலும் அக்னியில் தோன்றிய வேளிர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வடபால் முனிவர் என்ற சம்பு மாமுனிவரின் அக்னிகுண்டத்தில் தோன்றியதால் "சம்பு புத்திரர்கள்" எனப்பட்டனர்.
மகாபாரதம், ஆரண்ய பருவம், 220-வது அத்தியாயம், மார்க்கண்டேய சருக்கம், 5-வது ஸ்லோகம் :-
"அக்நிச்சாபி மநுர்நாம ப்ரஜா பத்யமகாரயத்
சம்புமக்நி மதப் ராஹீ : பிராம்மணா வேதபாரகா : "
சம்புமக்நி மதப் ராஹீ : பிராம்மணா வேதபாரகா : "
விளக்கம் : வேதத்தில் மிகவல்ல பிராமணர்கள் சம்பு என்ற அக்னி புத்திரனுடைய பிரதாபங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள்.
அக்னியே அரசகுடிகளின் மூலமாகும். இதை மகாபாரதம் உறுதிப்படுத்துகிறது. மகாபாரதம், ஆதிபருவம், காண்டவதகன சர்க்கம் 231-வது அத்தியாயத்தில், மண்டபால மகரிஷி என்பவர் அக்கினியைப் பற்றி கிழ்க்கண்டவாறு புகழ்ந்துள்ளார் :-
"ஓ அக்கினியே ! நீதான் இரண்டு
அஸ்வினிகளாகவும் இருக்கிறாய் !
நீயே சூரியன் ! நீயே சந்திரன் !
நீயே வாயு ! "
அஸ்வினிகளாகவும் இருக்கிறாய் !
நீயே சூரியன் ! நீயே சந்திரன் !
நீயே வாயு ! "
மேலும் தமிழ் இலக்கியமான விஸ்வபுராண சாரம் "சம்புமா முனிவன் வேள்வி தழல் தருமரபில் வந்தோன்" என்று குறிப்பிடுகிறது. சோழர் கால பல கல்வெட்டுகள் "சம்பு குலத்தவர்களான வன்னியர்கள்" பற்றி குறிப்பிடுகிறது.
கி.பி. 1463 ஆம் ஆண்டின் செப்பு பட்டயம், விஜயநகர வேளிர் குல அரசர் மல்லிகார்ஜுன தேவ மகாராயரை "சம்புமா முனியார் யாகத்தில் அவதரித்தானவர்" என்று குறிப்பிடுகிறது.
சிலர் பல கேள்விகளை கேட்கிறார்கள். எங்கள் குடிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு பெயர்கள் தான் இருக்கிறது, அரச குடிகளுக்கு மட்டும் ஏன் பல்வேறு பெயர்கள் இருக்கிறது என்று கேட்கிறார்கள். அரசகுடிகள் "மகா புருஷர்கள்" ஆவார்கள். எனவே அவர்களுக்கு பல்வேறு நாமங்கள் இருப்பது இயல்பானதேயாகும். மேலும் அரசகுடிகளின் பல்வேறு கிளை குடிகளும் "அக்னி புராணத்தை" அவர்களின் குல முனிவர்களின் பெயராலும் வழங்கினர். குறிப்பாக "வசிஷ்டர்", "காசியப", போன்றோர். ஆனால் அடிப்படை என்பது "தீயவைகளை அழிப்பதற்காக க்ஷத்ரியர்கள் புனித அக்னியில் தோன்றினார்கள்" என்பதாகும்.
இந்த உயர்குடி "அக்னி பிறப்பு" என்பது இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் இருக்கிறது. இஸ்லாமியர்களின் புனித நூலான "திருக்குரானிலும்" இதுபற்றி சொல்லப்பட்டுள்ளது.
----- xx ----- xx ----- xx -----
No comments:
Post a Comment