கங்கைகொண்ட சோழபுரத்தை ஆட்சிசெய்த சோழ பெருவேந்தன் இரண்டாம் ராஜாதிராஜ சோழனை (கி.பி.1163 - 1178), வன்னிய குல மன்னரான எதிரிலிச் சோழ சம்புவராயர் அவர்கள் கல்வெட்டில் :-
"சோழராஜ்யத்துக்கு ராஜாவாநார் அவர்கள் பரிபாலிப்பது எங்கள் வம்சத்து தர்ம்மம் பரிபாலிப்பது" (S.I.I. Vol-VI, No.456, Kancheepuram Inscription).
என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது, சோழ வம்சத்து ராஜா அவர்கள் சம்புவராயர்களின் வன்னிய குல வம்சத்து "க்ஷத்ரிய தர்மத்தை" பரிபாலிக்கிறார் என்று குறிப்பிடுகிறார்கள்.
மேலும் இரண்டாம் ராஜாதிராஜ சோழன் அவர்கள், முதலாம் குலோத்துங்கச் சோழனின் வம்சத்தவர் (சாளுக்கிய வம்சத்தவன்) ஆவார். பல்லவர்களான சம்புவராயர்கள் தங்களை "யது வம்சத்து யாதவர்" (சந்திர குல க்ஷத்ரியர்கள்) என்றும் "சாளுக்கியர்" என்றும் குறிப்பிடுகிறார்கள்.
ஒருவேளை இந்த காரணத்தில் தான் என்னவோ, எதிரிலி சோழ சம்புவராயர் அவர்கள் சோழ மன்னர்களை "எங்கள் வம்சத்தவர்கள்" என்று குறிப்பிடுகிறார் போலும்.
தமிழுக்காக தன்னுயிரை கொடுத்த காடவ வேந்தனான நந்திவர்ம பல்லவனை, நந்தி கலம்பகம் "சந்திர குல பிரகாசன்" (பாடல்-39) என்றும் "நந்தி வீர வன்னி" (பாடல்-47) என்றும் குறிப்பிடுகிறது. இதைப்போலவே திருச்சி மாவட்டம் திருவெள்ளறை கல்வெட்டும், பல்லவ மன்னன் நந்தி வர்மனை "பல்லவ மாமறைத் தோன்றி வனி வேந்தன்" என்று குறிப்பிடுகிறது.
இதன் மூலம் பல்லவர்கள் "பண்டைய வேளிர்" மன்னர்களின் வழிவந்தவர்கள் என்பது உண்மையாகிறது. முதலாம் குலோத்துங்கச் சோழனின் உடையாளூர் கல்வெட்டு ஒன்று, வன்னிய மன்னர்களான கச்சிராயர்களை (காடவர்கள்) "வேளிர்" என்று மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.
No comments:
Post a Comment