Monday, 17 October 2016

முதுபெரும் வேளிர்களின் ராஜ்யமான ஸ்ரீமத் வன்னிய கங்க ராஜ்யம்

முதுபெரும் வேளிர் மன்னர்களான கங்கர்களைப் பற்றி முனைவர் திரு. நாகசாமி அவர்கள் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்கள் :-
"கங்கர்கள் கொங்கணம் என்னும் கன்னடப் பகுதியை ஆண்டதால் கன்னட அரசர்கள் என்றும் கூறுவர். உண்மையில் கங்கர்கள் தமிழ் முதுகுடி மக்களே. முதுபெரும் வேளிர்களில் ஒருவரே கங்கர் எனச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடல் 'நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி துன்னரும் கடுந்திறல் கங்கன் கட்டி' (அகம்.44) என்று கங்க அரசனைக் கூறுகிறது. இவன் சோழ மன்னனோடு பொருது தோற்றுப் போயிருக்கிறான். கொங்காணம் என்ற பகுதியின் தலைவன் நன்னன் என்றும், அவன் தமிழ்க்குடிமகன் என்றும் சங்க இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். கங்கர் குடியினர் சங்க காலத்திற்குப்பிறகு கொங்காணத்தைத் தமதாக்கிக்கொண்டு, படிப்படியாகப் பெங்களூர், தலைக்காடு, கோலார் பகுதிகளைப் பிடித்து, ஒரு பேரரசை நிறுவினார்கள். இருப்பினும் தமிழகத்துடனேயே சிறந்த தொடர்பு கொண்டிருந்தனர். இவர்களில் சில அரசர்களுக்குப் பல்லவ அரசர்கள் முடிசூட்டியுள்ளார்கள்."








இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த கங்கர்களைப் பற்றிய பல கல்வெட்டுகள் கர்நாடக பகுதிகளில் காணக் கிடைக்கின்றன. கோலார் மாவட்டம் சிட்லகட்டா தாலுக்காவில் உள்ள கி.பி. 1278 ஆம் ஆண்டின் தமிழ் கல்வெட்டு ஒன்று கங்கர்களை "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்று குறிப்பிடுகிறது (Epigraphia Carnatica, Vol - X, No. 110). மேலும் அதே கோலார் பகுதியில் உள்ள கி.பி. 1273 ஆம் ஆண்டின் தமிழ் கல்வெட்டு ஒன்று கங்கர்களின் பகுதியை "வன்னியகட்டம்" என்று குறிப்பிடுகிறது (Epigraphia Carnatica, Vol - X, No. 242).
கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் கன்னட கல்வெட்டு ஒன்று (Epigraphia Carnatica, Vol - V, No. 24, Arkalgud Taluk) கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது :-
".............Svasti Nitimargga Kongunivarmma dharmma-maharajadhiraja Kolala-pura-paramesvara Nandagiri-natha srimat-Nanniya-Ganga rajyam"
"...........ஸ்வஸ்திஸ்ரீ நீதிமார்க்க கொங்கணி வர்ம தர்ம மஹாராஜாதிராஜ கோலாலபுர பரமேஸ்வர நந்தகிரி நாத ஸ்ரீமத் நன்னிய கங்க ராஜ்யம்"
என்று குறிப்பிடுகிறது. "ஸ்ரீமத் நன்னிய கங்க ராஜ்யம்" என்பது "ஸ்ரீமத் வன்னிய கங்க ராஜ்யம்" என்பதாகும். கன்னட மொழியில் "வன்னிய" என்பது "நன்னிய" என்று பயின்று வந்துள்ளது.
கங்கர்களின் கிளைமரபினர்களான "பங்களநாட்டு கங்கரையர்களும்" மற்றும் "நீலகங்கரையர்களும்" தங்களை ஆவணங்களில் "வன்னிய மாதேவன்" என்றும் "வன்னிய நாயன்" என்றும் "பள்ளி" என்றும் "சம்பு குல வேந்தன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே, முதுபெரும் வேளிர் மரபினர்களான கங்கர்கள் என்பவர்கள் "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தவர்கள்" என்பது சான்றுகளின் மூலம் உறுதியாகிறது.
மேலும், சங்க கால வேளிர் குடி அரசரான "செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னன்" அவர்களும் கங்கர் வழி வந்த வன்னிய குல க்ஷத்ரிய அரசர் ஆவார்கள். இன்றைய திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள "செங்கம்" பகுதியை தனது தலைநகராக கொண்டு சங்க காலத்தில் நன்னன் அவர்கள் அரசாட்சி செய்தார்கள். சங்க கால இலக்கியமான "மலைபடுகடாம்" என்பது இவர் மேல் பாடப்பட்ட நூலாகும்.
----- xx ----- xx ----- xx -----
வன்னியர் குல க்ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்த உடையார் பாளையம் அரசர்களும், கடலங்குடி உடையார் அரசர்களும் தங்களை "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்றே ஆவணங்களில் குறிப்பிடுகிறார்கள். உடையார் பாளையம் அரசர்கள் தங்களை "கங்கநூஜா வம்சத்தை சேர்ந்த பார்கவ கோத்திரத்தார்கள் என்றும் நெருப்பு கடவுள் சந்ததியில் உதித்த வன்னிய குலத்தவர்கள்" என்று தங்களது வம்சாவழி பட்டியலில் குறிப்பிட்டுள்ளார்கள். (The Udaiyar Palayam Chieftains refer them as Bargava Gotram in Ganganooja Family that took its origin from Vanniya Kulam (the family of the God of Fire).
----- xx ----- xx ----- xx -----

No comments:

Post a Comment