வரலாறு தெரியாத சிலர் வன்னியர்களை பார்த்து க்ஷத்ரியர்கள் கிடையாது என்றும் தமிழ்நாட்டில் க்ஷத்ரியர்களே கிடையாது என்றும் சொல்கிறார்கள். மேலும் அவர் சொல்வது என்னவென்றால், வன்னியர்கள் "க்ஷத்ரியர்" என்கிற பதத்தை பயன்படுத்தக்கூடாதாம். எனவே அவரது பார்வைக்கு இந்த "ஆவூர் கல்வெட்டை" சமர்ப்பிக்கிறேன்.
"சித்ரமேழி மெய்க்கீர்த்தி (வேளாளர் குலம் பற்றியது) திருவண்ணாமலை, ஆவூர் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் தங்களைப் பூமிதேவியின் புத்திரர்கள் என்றும் சித்ரமேழியைத் (கலப்பை) தெய்வமாக வணங்குபவர்கள் என்றும் பசுக்களை வளர்த்து ஜீவனம் செய்பவர்கள் என்றும் செந்தமிழ், வடகலை (சமஸ்கிருத) நிபுணர்கள் என்றும் தர்மத்தை வளர்க்கின்ற 'நான்காவது வர்ணத்தவர்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளனர் :-
"ஸ்வஸ்திஸ்ரீ மதாம் பூமி புத்ரானாம் ஸ்ரீ மத் கோஷிர ஜீவிநாம் ஸர்வ்வ லோக ஹிதார்த்தாய ஸித்ர மேளஸ்ய ஸாஸநம் ஜெயதா ஜக தர்மே தத் பாலநம் ரா ஸ்ரீ பூஷணம் ஸாஸநம் ஸ்ரீ புத்ராணாம் சதுர் குலோத்பவம் ஸ்ரீ பூமி தேவிக்கு மக்களாகி னிக
ழ் செந்தமிழ் வடகலை தெரிந்து உணர்ந்து நீதி கேட்டு நிபுணராகி நறுமலர் வாடா திருமகள் புதல்வர் எத்திசைக்கும் விளக்காகி யின் சொல்லால் இநிதளித்து வன் சொல்லால் மரங்கடிந்து சதுற் சாகர மண்டலத்துச் சந்திராதித்யவரை இநிதோங்க
வரதராசன் காற்றசைப்ப வருணராசன் நீற்றெளிப்பத் தேவராசன் திசைவிளக்க எத்திசை மகளிரு மினிது வீற்றிருப்பத் தெங்கும் தேமாஞ் சோலையும் வாழையுங் கமுகும் வளர்கொடி முல்லையும் பூவையுங் கிள்ளையும் பொலிவோடுங் கெழுமி வாட்டமின்றிக் கூட்டம் பெருகி யறம்
வளரக் கலிமெலியப் புகழ் பெருக புரை பணியத் திசை யனைத்துஞ் செவிடுபடாமல் செங்கோலே முன்னாகவுஞ் சித்திரமேழியே தெய்வமாகவுஞ் செம்பொற் பசும்பையே வேலியாகவும் க்ஷமை யிலேடுங் கருணை யெய்திச் சமைய தன்ம மினிது நடாத்தி உத்தம நிதியுயர் பெருங்கீர்த்தி முத்தமிழ்
மாலையு முழுதுமுணர்ந்த சித்திரமேழிப் பெரிய நாட்டார்களும் வியாபாரிகளும் வைத்து சகல புவன சக்கரவத்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு 32-ஆவது மேஷ நாயற்று பூர்வ பக்ஷத்து ப்ரதமையும் திங்கள் கிழமையும் பெற்ற திருவாதிரையில் பெண்ணை வடகரை
செங்குன்ற நாட்டு சேதிமண்டலத்து ஆவூரில் உடையார் திருவகத்தீசுர உடைய னாயனார்க்கு பெரிய நாட்டவர்களும் வியாபாரிகளும் நாயனார் வன்னியநார் ஆனா மானாபரணச் சேதியராயர் திருமேனி கலியாண திருமேநியாக இன்னாயனார் திருவகத்தீசுரமுடைய நாயநார் திருவெழுச்சிக்கு"
(A.R.E. No.290 of 1919), (Pallavan Kopperunjingan, 1274 A.D), (ஆவூர் அகத்தீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை மாவட்டம்).
திருவண்ணாமலை ஆவூர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் "சகல புவன சக்கரவத்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவர்" மற்றும் "வன்னியநார் ஆனா மானாபரணச் சேதியராயர்" ஆகியோர் "வன்னிய குல க்ஷத்ரிய அரசர்கள்" ஆவார்கள். இவர்கள் வெள்ளாளர் உட்பட அனைத்து குடிகளுக்குமான அரசர்கள் ஆவார்கள் என்பது மேற்குறிப்பிட்ட கல்வெட்டால் உண்மையாகிறது.
எனவே வன்னியர்கள், சகல புவனச் சக்கரவர்த்திகளான "க்ஷத்ரியர்கள்" என்பது கல்வெட்டு சான்றின் மூலம் முற்றிலும் உண்மையாகிறது.
----- xx ----- xx ----- xx -----
//ஸ்வஸ்திஸ்ரீ மதாம் பூமி புத்ரானாம் ஸ்ரீ மத் கோஷிர ஜீவிநாம் ஸர்வ்வ லோக ஹிதார்த்தாய ஸித்ர மேளஸ்ய ஸாஸநம் ஜெயதா ஜக தர்மே தத் பாலநம் ரா ஸ்ரீ பூஷணம் ஸாஸநம் ஸ்ரீ புத்ராணாம் சதுர் குலோத்பவம் ஸ்ரீ பூமி தேவிக்கு மக்களாகி னிக//
ReplyDeleteஇதற்கு அர்த்தம் நான்கு வர்ணமாக உதித்தவன் என்று பொருளே தவிர நான்காம் வர்ணத்தினான் என்பது அல்ல பூமா தேவியின் புத்திரர்கள் (பூபாலன், பூபன் ), கங்கைக்குலத்துமண், சிதரமேழி பெரிய நாட்டார் , உடையார், தொண்டைமான் என்பது வேளாண் குலத்தை குறிப்பவையே (கங்கை குலத்தவர் பிரமசத்திரியர் என்று கோலார் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன 8அம் நூறாண்டில் சத்திரியர் என்று அறிவித்த வாணர்குலத்தார் மெய்க்கீர்த்தி அவர்தம்மை கங்கைக்குலத்துமண் என்கிறது நாணன் கட்டி வேளிர் மரபை சார்ந்த தரமங்கலத்தை ஆண்ட கட்டி முதலியார்கள் தங்களை வெள்ளாளன் என்று குறித்துளர்கள், கம்பர் அவர்கள் கருணாகர தொண்டைமானை வேளாண் வீரன் என்று திருக்கைவழக்கத்தில் போற்றுவர் கருணாகர தொண்டைமானின் கல்வெட்டும் அவனை வேளாண் என்று கூறுகிறது, சிவகங்கை சீமையையாண்ட மருது பாண்டியர்ககளை வனவீர மதுரை புராணம் உடையார் வேல் யதுகுல பூபன் என்று போற்றுகிறது யதுகுளம் என்பது வேளிரை குறிக்கும் இப்படி பல சான்றுகள் உள்ளன, எனவே வேளாண் குலத்தை வெறும் நான்காம் வர்ணத்தில் மட்டும் சேர்க்கமுடியாது