Sunday, 16 October 2016

வீர சோழனின் மகனான வீர சம்பன்

வாணர்களின் தலைநகராக விளங்கிய வேலூர் மாவட்டம், திருவல்லத்தில் உள்ள சமஸ்கிருத கல்வெட்டு (கி.பி. 1314) ஒன்று "வீர சம்பா" என்ற சம்புவராய மன்னனைப் பற்றி குறிப்பிடுகிறது (Epigraphia Indica, Vol-III, No.12, page-70) :-
"(Verse 1.) The glorious king Vira-Champa, who used to win victories at the time of the completion of sleep, (and) who was the son of the glorious Chola King, - having speedily conquered all the hostile kings in battle, - caused to be built with their treasures, by an ascetic, called Jnanatman, a mandapa, named Bhadra (i.e. auspicious), which affords delight to Siva, the lord of Sri-Valla.
(Verse 2.) During a space of time which fell in the Saka year (expressed by the chronogram) tungasrika (i.e. 1236), the holy lord Jnanamurti erected the everlasting (and) very lofty mandapa, named Bhadra, for Sambhu (siva), the lord of Sri-Valla, who is resplendent with a creeper-like coil of hair, that is adorned with a multitude of excellent serpents, the celestial river (Ganga), and the crescent of the moon.
"Verse 3.) Having built this mandapa, named Bhadra, for Sambhu, and having bestowed (on it) the (other) named Nidravasanavijayi (mandapa), the holy Jhanamurti also erected on its side a shrine (alaya), (called) Nayaka-Siva, in the very prosperous city of Valla."








மிகவும் புகழ்பெற்ற அரசனான வீர சம்பா, தூங்கியெழும் நேரத்திற்குள் எதிரிகளை வென்று பல வெற்றிகளை குவிப்பவன் (நித்ராவசான விஜயீ) என்றும் அவன் புகழ் பெற்ற சோழ அரசனின் மகன் என்றும் போர்க்களத்தில் எதிரிமன்னர்களை மிகஎளிதில் வெற்றி கொள்பவர் என்றும் எதிரிமன்னர்களிடம் இருந்து கவர்ந்த செல்வதை ஞானாத்மன் என்னும் துறவியிடம் கொடுத்து திருவல்லத்தில் உறையும் நாயகனான சிவபெருமானுக்கு ஒரு மண்டபத்தை கட்டுவித்தார்கள் என்றும் அந்த மண்டபத்தின் பெயர் "பத்ர மண்டபம்" (அழகிய மண்டபம்) என்றும் "நித்ராவசான விஜயீ மண்டபம்" என்றும் வழங்கப்பட்டது. மேலும் துறவி ஞானாத்மன் அவர்கள் "நாயக்க சிவாலயம்" என்றும் கோயிலையும் "நித்ராவசான விஜயீ மண்டபத்தின்" அருகில் கட்டினார்.
இந்த "நாயக்க சிவாலயம்" என்ற பெயரானது, வன்னிய மன்னனான "வீர சம்புவராயனின்" பெயராகும் என்றும் அவர் "நாயக்கன்" என்ற பெயரிலும் விளக்கியிருக்கிறார். "நித்ராவசான விஜயீ" என்பது வீர சம்புவராயனின் பெயராகும்.
வன்னிய குல மன்னனான "வீர சம்பனின்" மற்றொரு சமஸ்கிருத கல்வெட்டு, காஞ்சிபுரம் அருளாளப்பெருமாள் (வரதராஜ பெருமாள்) கோயிலில் உள்ளது. கி.பி. 1314 ஆம் ஆண்டைச்சார்ந்த இக் கல்வெட்டு கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது (Epigraphia Indica, Vol-III, No.12, page-71) :-
"In (the time after) the Saka king, which was measured by the years (expressed by the chromogram) tungasrika (i.e. 1236), the glorious Champa, who used to be victorious in battle at the completion of sleep, who was the son of the glorious Vira-Chola, whose desires were fulfilled, (and) the strength of whose arms well-known, gave a new (and) everlasting car (pushyaratha) to the god who resides on the Elephant-mountain. Let (him) be victorious for a long time ! (This verse) was composed by his minister Vanabhid".
"மிகவும் புகழ்பெற்ற அரசனான வீர சம்பா, தூங்கியெழும் நேரத்திற்குள் எதிரிகளை வென்று பல வெற்றிகளை குவிப்பவன் என்றும் அவன் புகழ் பெற்ற வீர சோழ அரசனின் மகன் என்றும் அவனுடைய எண்ணங்கள் நிறைவேறும்படி, நன்குஅறியப்பட்ட அவனுடைய வெற்றியையுடைய தோள்வலிமையானது அழியாத புஷ்யரதத்தை (தேர்) இறைவனுக்கு வழங்கியது என்றும் வெற்றி திருமகள் என்றென்றும் அவனுடனேயே இருக்கட்டும்.
வன்னிய மன்னன் வீர சம்பனின் அமைச்சர் வனபீத் என்பவர் இந்த கவியை இயற்றினார்கள்". வன்னிய மன்னர்களான சம்புவராயர்கள் "சமஸ்கிருத புலவர்களையும்" ஆதரித்திருக்கிறார்கள் என்பதை பற்றி அறியமுடிகிறது.
மேற்குறிப்பிடப்பட்ட "திருவல்லம்" மற்றும் "காஞ்சிபுரம்" சமஸ்கிருத கல்வெட்டுகள் "வீர சம்பா" என்ற மன்னனை குறிப்பிடுகிறது. இவர் வன்னிய குல க்ஷத்ரிய சமூதாயத்தைச் சேர்ந்த மன்னர் ஆவார்கள். விரிஞ்சிபுரம் கல்வெட்டு இவரை "வீர சம்பனான எதிரிலிச் சோழ சம்புவராயர்" என்றும் திருப்புக்குழி கல்வெட்டு "சம்பு குலோத்துங்கன் சம்புவராயர் வீர சம்பன்" என்றும் குறிப்பிடுகின்றன.
சம்புவராய மன்னர்களை "சம்பன்" என்று வந்தவாசி மடம் கல்வெட்டு குறிப்பிடுகிறது :-
"சம்பரைன் பலவழித்துச் சம்பனையும் கைக்கொண்டு" (சம்புவராயர்களின் அரண்கள் பலவற்றையும் அழித்து சம்புவராயனையும் வெற்றிகொண்டு) (A.R.E. No.286 of 1919).
"திருவல்லம்" மற்றும் "காஞ்சிபுரம்" சமஸ்கிருத கல்வெட்டுகள் "வீர சம்பனின்" தந்தையாக "வீர சோழன்" என்பவரை குறிப்பிடுகிறது. சம்புவராய மன்னர்கள் "வீர சோழன்" என்ற பெயரையும் பெற்றிருக்கிறார்கள் என்பதை சான்றுகள் குறிப்பிடுகின்றன.
சம்புவராய மன்னர்களும், சோழ மன்னர்களும் "ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்" என்பதை காஞ்சிபுரம் திருவாலீஸ்வரர் கோயிலில் உள்ள இரண்டாம் ராஜாதிராஜ சோழனின் கல்வெட்டு (கி.பி.1171) உறுதிப்படுத்துகிறது.
குலசேகர பாண்டியனுக்கும், இலங்கை படைக்கும் போர் நடைபெற்றது. இப் போருக்கு சோழர்கள் பாண்டியர்களுக்கு படை உதவி செய்தார்கள். எதிரிலிச் சோழ சம்புவராயன் தலைமையிலான சோழர் படைகள் பாண்டியர்களுக்கு உதவியது. இப் போருக்கு தலைமை வகித்த வன்னிய அரசனான "எதிரிலிச் சோழ சம்புவராயன்", இலங்கை படைகளை தோற்கடித்து அப் போரில் வென்றார்கள். இதைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு தான் காஞ்சிபுரத்தில் உள்ள திருவாலீஸ்வரர் கோயிலில் உள்ளது (கி.பி.1171). அதில் எதிரிலிச் சோழ சம்புவராய அரசர், இரண்டாம் ராஜாதிராஜ சோழனை கிழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்கள் :-
"சோழராஜ்யத்துக்கு ராஜாவாநார் அவர்கள் பரிபாலிப்பது எங்கள் வம்சத்து தர்ம்மம் பரிபாலிப்பது"
(S.I.I. Vol-VI, No.456), (Line-47&48, page-98), (Kanchipuram, Tiruvalisvara temple inscription), (Select Inscriptions of Tamil Nadu, Serial No : 117 : 7), (Department of Archaeology, Govt of Tamil Nadu).
இக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் செய்தி என்னவென்றால், "சோழ ராஜா ஆட்சிசெய்யும் தர்மமானது எங்கள் க்ஷத்ரிய வம்சத்து தர்மமாகும்" என்று வன்னிய அரசரான எதிரிலிச் சோழ சம்புவராயர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். "எங்கள் வம்சத்து தர்மம்" என்பது "எங்கள் க்ஷத்ரிய வம்சத்து தர்மம்" என்பதாகும்.
சோழ மன்னர்கள் தங்களை "க்ஷத்ரியர்கள்" என்று கல்வெட்டுக்களிலும் செப்புபட்டையங்களிலும் சொல்லியிருக்கிறார்கள். சோழர்கள் காலத்தில் குறுநில மன்னர்களாக இருந்த வன்னியர் சமூகத்தை சேர்ந்த "சம்புவராய அரசர்கள்" தங்களை "சகல லோக சக்கரவர்த்திகள்" என்றும் "ஆளப்பிறந்தவன்" (ஆட்சி செய்வதற்கே பிறந்த க்ஷத்ரியன்) என்றும் பல கல்வெட்டுகளில் குறிப்பிடுகிறார்கள். இது அவர்களை "க்ஷத்ரியர்கள்" என்பதை உறுதிப்படுத்துகிறது. இதைப் போன்ற புகழ் மிகும் கீர்த்திகளை "க்ஷத்ரிய அரசர்கள்" மட்டுமே அக் காலத்தில் பயன்படுத்தமுடியும் என்பது நியதியாகும். இது தான் உண்மையுமாகும்.
மேற்குறிப்பிட்ட கல்வெட்டின் மூலம் தெரியவரும் செய்தி என்னவென்றால், சோழ மன்னர்களும் மற்றும் சம்புவராய மன்னர்களும் ஒரே வம்சத்தவர்கள் ஆவார்கள். அதாவது "க்ஷத்ரிய வம்சத்தவர்கள்" ஆவார்கள்.

2 comments:

  1. சோழன் சூரிய குலம் என்ன சொல்லவருகிறீர் என்றே தெரியவில்லை ஏதோ பிதற்றல் போல் உள்ளது பல்லவராயன் கள்ளன்

    ReplyDelete
  2. அட கள்ளா முதலில் சத்திரியன் என்று நிருபித்து காமி நீதிமன்றத்தில்....💁😃
    நீ நீதிமன்றத்துக்கு போன சூத்திரன் என்று தெரிந்து விடும் 😃🤭☺️🤞 வரலாறு ஒரு போதும் மாறாது....😌 ஏற்கனவே எழுத பட்டாணி விட்டது 🥳🔥

    ReplyDelete