வரலாறு சரியாக தெரியாத சிலர் சோழர்கள் காலக் கல்வெட்டுகளில் பயின்று வரும் "பள்ளி" என்ற சொல்லானது ஒருபோதும் ஜாதியைப் பற்றி குறிப்பிடாது என்று சொல்லுகின்றனர் . ஆனால் அது மிகவும் தவறானதாகும்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டம், திருவடிசூலம் ஞானபுரிஸ்வரர் கோயிலில் உள்ள விக்கிரம சோழன் (கி.பி.1128) காலத்திய கல்வெட்டு ஒன்று "வன்னிய நாடாழ்வார்" பற்றி குறிப்பிடுகிறது. அவர் "புலிப்பாக்க நாடாழ்வான்" என்பவர் ஆவார்.
"இவ்வூர் இருக்கும் பள்ளி புலிப்பாக்க நாடாழ்வான்"
(காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள், தொடர் எண் : 19/1998, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை), (A.R.E. No.339 of 1908).
----- xx ----- xx ----- xx -----
உத்திரமேரூர், வயலக்காவூர் ஸ்ரீ வாகீசுவரர் கோயிலில் உள்ள இரண்டாம் இராஜ ராஜ சோழன் (கி.பி.1168) காலத்திய கல்வெட்டு ஒன்று "வன்னிய நாடாழ்வார்" பற்றி குறிப்பிடுகிறது. அவர் "சிபாத நாடாழ்வான்" (ஸ்ரீபாத நாடாழ்வான்) என்பவர் ஆவார். அவருடைய மகன் பெயர் "செல்வப் பிள்ளை" என்பதாகும்.
"இவ்வூரில் இருக்கும் பள்ளிகளில் சிபாத நாடாழ்வான் மகன் செல்வப்பிள்ளை"
(காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள், தொடர் எண் : 62/2005, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை), (A.R.E. No.250 of 1922).
----- xx ----- xx ----- xx -----
எனவே நாட்டை ஆண்டப் "பள்ளிகள்" என்பவர்கள், "வன்னிய குல க்ஷத்ரிய" சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
----- xx ----- xx ----- xx -----
No comments:
Post a Comment