Monday, 17 October 2016

வன்னியர்களான பங்களநாட்டு கங்கர்களின் உறவினர்களான பொத்தப்பிச் சோழர்கள்

தமிழகத்தின் இன்றைய "போளூர்", "திருவண்ணாமலை" போன்ற பகுதிகளை பல்லவர்கள், ராஷ்டிரகூடர்களின் காலங்கள் முதல் சோழர்களின் காலங்கள் வரை அரசாட்சி செய்தவர்கள் "பங்கள நாட்டு கங்கரையர்கள்" என்ற அரச மரபினர்கள் ஆவார்கள்.





இவர்கள் திருவண்ணாமலை கோயிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் கிளிகோபுர கல்வெட்டில் :-
"பங்களனாட்டுக் கூத்தாடுந் தெவன் பிரதிவிகங்கன் வந்னிய மாதெவன் அழகிய சொழநென்" (S.I.I. Vol-VIII, No.137, Line - 2).
கூத்தாடுந் தெவன் பிரதிவிகங்கன் வந்நிய மாதெவன் அழகிய சொழநென்" (S.I.I. Vol-VIII, No.137, Line - 5). என்று குறிப்பிடப்பட்டார்கள்.
பங்களநாட்டு கூத்தாடும் தேவன் பிரித்விகங்கன் வன்னிய மாதேவனின் மற்றொரு பெயர் "சோழேந்திர சிம்ம பிரித்விகங்கன்" என்பதாகும். இவருடைய மகனது பெயர் :-
"சீய கங்கனான சிறைமீட்டப் பெருமாள்"
என்பதாகும். இவர் பெரும் பராக்கிரமசாலியாக இருந்திருப்பர் என்பதை இவரது பெயரான "சிறைமீட்டப் பெருமாள்" என்பதிலிருந்தே தெரியவருகிறது. எதிரிநாட்டு சிறையை தாக்கி உடைத்து, தனது ஆட்களை மீட்க எவ்வளவு துணிவு வேண்டும் என்பதை நினைத்து பாருங்கள். அத்தகைய பெரும் ஆற்றல் மிக்கவராக, வன்னிய குல சிங்கம் "சீய கங்கன் சிறைமீட்டப் பெருமாள்" அவர்கள் இருந்திருக்கிறார்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மேல்பாடி என்ற ஊரில் இருக்கும் மூன்றாம் ராஜ ராஜ சோழனின் கல்வெட்டு ஒன்று (கி.பி. 1223), கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது :-
"சிறைமிட்ட பெருமாளான சியகங்கதெவர் மாமன் மதுராந்தகப் பொத்தப்பிச்சொழன் புடொலியரசன் இத் திருமண்டபம் செய்வித்தென் பொத்தப்பிச்சொழன் புடொலிஅரசன் புவிமெ லெத்திசையுஞ் செல்லு எழில் மெற்பாடி மெய்த்தவத்தாற் சொளென்திரசிங்கநாயகற்குத் துகவமணிவாள் எந்து மண்டபம் செய்தான்" (S.I.I Vol-IV, No.317).
மேற்குறிப்பிட்ட கல்வெட்டில் குறிப்பிடும் செய்தி என்னவென்றால் :-
"சிறைமீட்டப் பெருமாளான சீயகங்க தேவர் அவர்களின் மாமன் பொத்தப்பிச் சோழன் புடோலி அரசன் அவர்கள், மேல்பாடி இறைவனின் மெய்தவத்தால் சோழேந்திர சிங்க நாயகருக்கு துகவமணிவாள் ஏந்தும் மண்டபம் செய்வித்தான்" என்பதாகும்.
சிறைமீட்டப் பெருமாளான சீயகங்க தேவர் அவர்களின் தந்தையார் பெயர் தான் "சோழேந்திர சிங்க நாயகர்" என்பதாகும். அதாவது "பங்களநாட்டு கூத்தாடும் தேவன் பிரித்விகங்கன் வன்னிய மாதேவனான சோழேந்திர சிம்ம பிரித்விகங்கன்" என்பதாகும். இவரது பெயரில்தான் பொத்தப்பிச் சோழன் புடோலி அரசன் அவர்கள், "துகவமணிவாள் ஏந்தும் மண்டபம்" செய்வித்தார்கள்.
பொத்தப்பிச் சோழனான புடோலி அரசனின் அக்காளை "பிரித்விகங்கன் வன்னிய மாதேவன்" திருமணம் செய்திருக்கவேண்டும். எனவே தான் பொத்தப்பி சோழன் அவர்கள், சிறைமீட்டப் பெருமாளான சீயகங்க தேவரின் "மாமன்" என்று கல்வெட்டில் குறிப்பிடுகிறார்கள். அதாவது "தாய் மாமன்" என்று குறிப்பிடுகிறார்கள்.
சங்க கால கரிகால் சோழனின் மரபினனான பொத்தப்பிச் சோழன் புடோலி அரசன் அவர்கள், தனது அக்காளின் கணவர் (மாமன்) பிரித்விகங்கன் வன்னிய மாதேவனின் பெயரில் "துகவமணிவாள் ஏந்தும் மண்டபம்" செய்திருக்கிறார்கள்.
"துவக மணி வாள் ஏந்து மண்டபம்" என்பது என்னவென்று தெரியவில்லை. அநேகமாக "வெற்றி வாள் ஏந்தும் மண்டபமாக இருக்கவேண்டும்". பொத்தப்பிச் சோழனின் மாமன் "வன்னிய மாதேவன்" அவர்கள், போரில் பெரும் வெற்றி கொண்டதின் காரணத்தினால் "வெற்றி வாள் ஏந்தும் மண்டபம்" செய்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.
மேற்குறிப்பிட்ட தெளிவான சான்றுகளின் மூலம், சங்க கால கரிகால் சோழனின் வழிவந்தவர்களான பொத்தப்பி சோழர்களும் (தெலுங்கு சோழர்கள்), வேளிர் வழி வந்த பங்களநாட்டு கங்கரையர்களும், "வன்னிய குல க்ஷத்ரிய சமூதாயத்தைச்" சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது.
எனவே, சங்க கால கரிகால் சோழனின் மரபினர்கள் "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது மேற்குறிப்பிட்ட சித்தூர் மேல்பாடி கல்வெட்டின் மூலம் உறுதியாகிறது.
கரிகால் சோழனின் மரபினர்கள் "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்னும் பட்சத்தில், க்ஷத்ரிய சிகாமணி ராஜ ராஜ சோழனின் மரபினர்களும் "வன்னிய குல க்ஷத்ரியர்களே" என்பதும் உண்மையாகும். ஆதலால் தான் "சோழர்களின் குல தெய்வ கோயிலான சிதம்பரம் நடராஜர் கோயிலில்" பிச்சாவரம் சோழ அரசர்களுக்கு திருமுடி சூட்டப்படுகிறது.
----- xx ----- xx ----- xx -----

No comments:

Post a Comment