Monday, 17 October 2016

கல்யாணி சாளுக்கியர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்த வன்னிய குல அரசர்கள்

"வன்னிய ரேவன்" என்ற அரசன், இரண்டாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறான் (S.I.I Vol - III, No. 29, page 58 & 59). இந்த வன்னிய ரேவன் என்பவன் "ஹைஹெய மகாமண்டலேஸ்வரன் ரேவரசன்" ஆவான் என்றும், அவன் கி.பி. 1054 - 1055 ஆம் ஆண்டு கல்வெட்டில் குறிப்பிடப்படும் முதலாம் சோமேஸ்வரனின் குறுநில மன்னனாவான் என்றும் டாக்டர் பிளீட்ஸ் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். (Dr. Fleets Kanarese Dynasties, second edition, page-439). ஆஹவமல்லா (முதலாம் சோமேஸ்வரன்) என்பவன் "மேலைச் சாளுக்கிய" அரசன் ஆவான் (Kalyani Chalukyas). மேலைச் சாளுக்கிய அரசன் முதலாம் சோமேஸ்வரன் இறந்த பிறகு அவனது பிள்ளைகள் "இரண்டாம் சோமேஸ்வரன்" மற்றும் "ஆறாம் விக்கிரமாதித்யன்" ஆகியோர் அரசாட்சிக்கு வந்தனர்.













கல்யாணி சாளுக்கிய அரசன் ஆறாம் விக்கிரமாதித்யனின் (கி.பி. 1076 - 1126) குறுநில மன்னர்களாக "வன்னிய குல அரசர்கள்" இருந்தார்கள் என்பதை மராட்டிய மாநில கல்வெட்டு ஒன்று கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது (Inscription of Siddhugi, Hottul, District Nander - Indian Archaeology 1958-59, a review) :-
"Written in Nagari characters of circa 11th century, the inscription records the construction of a siva temple by siddhugi, a subordinate of the rulers of the Vahni-kula, who were themselves apparently feudatories of the chalukyas of kalyana".
"கி.பி. 11 ஆம் நூற்றாண்டில் நகரி எழுத்தில் எழுதப்பெற்ற கல்வெட்டு ஒன்று, வன்னி குல அரசர்களுக்கு அதிகாரியாக இருந்த சித்துகி என்பவன் சிவன் கோயில் ஒன்றை கட்டினான் என்றும், இந்த வன்னி குல அரசர்கள் கல்யாணி சாளுக்கியர்களின் கீழ் குறுநில மன்னர்களாக விளங்கினார்கள்" என்பதை தெரிவிக்கிறது.
மேற்குறிப்பிட்ட கி.பி. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த மராட்டிய மாநில கல்வெட்டு, வன்னிய அரசர்களை "வன்னி குலம்" என்று மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது. மேலும் இக் கல்வெட்டு தெரிவிப்பது என்னவென்றால், வன்னிய குல அரசர்கள் மேலைச் சாளுக்கியர்களுக்கு குறுநில மன்னர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதாகும். கல்வெட்டு குறிப்பிடும் "வன்னிய குல அரசர்களின்" வம்சத்தில் இருந்து வந்தவன் தான் "வன்னிய ரேவன்" என்ற அரசன் ஆவான்.
கல்யாணி சாளுக்கியர்களின் கீழ் குறுநில மன்னர்களாக இருந்த "வன்னி குல அரசர்கள்", அநேகமாக அவர்களது வம்சத்தவர்களாக இருக்கவேண்டும். ஏனென்றால் இவர்கள் இருவரும் "யது வம்சத்து யாதவர்கள்" ஆவார்கள்.
எனவே மேற்குறிப்பிட்ட மிகத் தெளிவான கல்வெட்டு சான்றின் மூலமாக, ஹைஹெய வம்சத்து மன்னன் (Haihayas) வன்னிய ரேவன் என்பவன் "வன்னிய குல க்ஷத்ரிய சமூதாயத்தைச்" சேர்ந்தவன் ஆவான் என்பது முற்றிலும் உண்மையாகிறது. ஹைஹெயர்கள் என்பவர்கள் "யது வம்சத்தை" (யாதவர், சந்திர குலம்) சேர்ந்த "விதிஹோத்திர கோத்திரத்தினர்கள்" ஆவார்கள்.
வட இந்தியாவை ஆட்சிபுரிந்த, அக்னி (வன்னிய) குல க்ஷத்ரியர்களான காலச்சூரிகளும், "சேதி என்னும் ஹைஹெயர்கள்" ஆவார்கள். இவர்கள் தங்களை "சம்பு குலத்தவர்கள்" என்று கல்வெட்டில் குறிப்பிடுகிறார்கள்.
வன்னியர்களின் அரசாட்சி என்பது தென்னிந்தியாவில் மட்டும் இருந்திருக்கவில்லை, அது வட இந்தியாவிலும் இருந்திருக்கிறது என்பதை மராட்டிய மாநில கல்வெட்டு நமக்கு மிகத் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.
----- xx ----- xx ----- xx -----
வன்னி குல அரசர்களுக்கு அதிகாரியாக இருந்த சித்துகி என்பவன் கட்டிய சித்தேஸ்வரா கோயில் என்பது, வன்னிய குல அரசர்கள் கட்டிய கோயிலாகும். இக் கோயில் சாளுக்கியர்களின் கலைவடிவமாகும். இத்தகைய கலைவடிவத்தைத்தான் சாளுக்கியர்களின் உறவினர்களான "வன்னிய ஹொய்சாளர்களும்" கடைப்பிடித்தார்கள்.
----- xx ----- xx ----- xx -----

No comments:

Post a Comment