Wednesday, 26 October 2016

வன்னி குடி உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழ தேவர்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்ப்பேட்டை வட்டத்தில் உள்ள ஏலவானாசூர்க்கோட்டை கோயிலில் உள்ள முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டு ஒன்று (கி.பி.1025) கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது :-
"ஸ்வஸ்திஸ்ரீ திருமந்நி வளர இருநிலமடந்தையும் எந்நும் ஸ்ரீ மைக்கீர்த்தி எழுதி உடையார் ஸ்ரீராஜேந்தரசோழ தேவற்கு யாண்டு 13 ஆவது ராஜராஜப்பாண்டி நாட்டுக் கீழ்ச்செம்பி நாட்டு வந்நி குடி உடையார் ஸ்ரீ ராஜேந்திர தேவர் அதிகாரிகள் கிழவந் சதுர நாராயந வாநவந் மூவேந்த வேளார்" (A.R.E No.135 of 1906).
சோழ பெருவேந்தன் முதலாம் ராஜேந்திர சோழன் அவர்கள், "வந்நி குடி உடையார்" (வன்னி குடி உடையார்) என்று கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறார். இந்த மிக முக்கியமான சான்று என்பது முதலாம் ராஜேந்திர சோழன் அவர்களை, "வன்னிய குலத்தவர்" என்பதை உறுதிப்படுத்துகிறது.
வன்னி குடி உடையார் ஸ்ரீ ராஜேந்திர சோழனின் அதிகாரிகள் ராஜராஜப்பாண்டி நாட்டுக் கீழ்ச்செம்பி நாட்டில் இருந்ததை மேற்குறிப்பிட்ட கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும் அக் கல்வெட்டு "வன்னி குடி" என்பதைப் பற்றியும் தெரிவிக்கிறது. அதாவது "வன்னிய இன மக்களைப்" பற்றி தெரிவிக்கிறது. ஏற்கனவே திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கல்வெட்டுகள் மலையமான் மன்னர்களை "வன்னிய மக்கள் நாயன்" (வன்னிய மக்களின் தலைவன்) என்று குறிப்பிடுகின்றன.
இதன் மூலம் சோழ பெருவேந்தர்களும் அவர்களின் உறவினர்களான மலையமான்களும் "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உண்மையாகிறது. எனவே தான் வன்னியர்களான பிச்சாவரம் சோழ மன்னர்களுக்கு தில்லை வாழ் அந்தணர்கள் திருமுடிசூட்டுகிறார்கள். சோழ மன்னர்களுக்கு மட்டுமே திருமுடிசூட்டுபவர்கள் அவர்கள்.
சோழ மன்னர்களும் அவர்களின் வம்சத்தினர்களும் "வன்னிய குல க்ஷத்ரியர்கள்" என்பது மேற்குறிப்பிட்ட ஏலவானாசூர்க்கோட்டை கல்வெட்டின் மூலம் உறுதியாகிறது.
----- xx ----- xx ----- xx -----







No comments:

Post a Comment