சங்கத் தமிழ் புறநானூறு பாடலில் (பாடல் 201 & 202) குறிப்பிடப்படும் "துவாரகை நகரம்" என்பது மகாபாரதத்தில் குறிப்பிடப்படும் "துவாரகை நகரமாகும்". அந்த நகரத்தினை கடல் அழித்துவிட்டது. அந்த நகரம் சிந்து சமவெளிப் பகுதியின் அங்கமாகும்.
வேளிர் குல அரசன் "இருங்கோவேள்" அவர்களின் முன்னோர்கள் மேற்குறிப்பிட்ட நகரத்தில் இருந்து வந்தவர்கள் என்று சங்கத் தமிழ் புலவர் கபிலர் அவர்கள் மிகத் தெளிவாக புறம் பாடலில் குறிப்பிடுகிறார்கள்.
பிற்காலத்தில் ஆட்சிசெய்த ஹோய்சால அரசர்களும் தங்களை சந்திர குல யாதவர்களான ராஷ்டிரகூடர்களைப் போலவே வடஇந்தியாவின் யது குல யாதவர்களின் வம்சாவழியினர் என்று தெரிவிக்கிறார்கள் :-
The Hoysalas also claim their descent from "Yadukula" i.e,, Lunar race of the North India, like those of the Rashtrakutas of the Yadavas.
ஹோய்சால அரசர்களே தங்களை வடஇந்தியாவில் இருந்து வந்த "யது குல யாதவர்கள்" என்று குறிப்பிடுகிறார்கள். எனவே புறம் பாடல் குறிப்பிடும் "துவாரகை" என்பது "சிந்து சமவெளி பகுதியின் துவாரகையாகும்" என்பது உண்மையாகிறது.
----- xx ----- xx ----- xx -----
No comments:
Post a Comment