ஹொய்சால நாடான "மைசூரில்" இன்று இருக்கும் யதுகுல "மைசூர் உடையார்கள்" என்பவர்கள் ஹொய்சாளர்களின் சமூகத்தவர்களே ஆவார்கள். இவர்கள் தங்களை "யாதவர்கள்" என்று குறிப்பிடுகிறார்கள். எனவே இவர்கள் "பண்டைய வேளிர் வம்சத்தவர்கள்" ஆவார்கள்.
இவர்களின் சின்னமும் "கண்ட பேரண்டமாகும்". அது இன்று "கர்நாடக அரசின் சின்னமாக" விளங்கிவருகிறது. மைசூர் உடையார்கள் தங்களை "ஸ்ரீ கண்டிரவன்" என்றும் குறிப்பிடுகிறார்கள். இப் பெயரானது வேளிர் குல அரசன் "கண்டீரக் கோப்பெருநள்ளியின்" பெயரை நமக்கு நினைவுப்படுத்துகிறது.
வேளிர் குல மைசூர் உடையார்கள் தாங்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் "தசரா விழாவில்", தங்களது வம்சத்து மரமான "வன்னி மரத்திற்கு" மிகச் சிறப்பான பூஜைகளையும் வழிபாடுகளையும் செய்கிறார்கள்.
வேளிர் குல மைசூர் உடையார்களின் வன்னி மரம் பூஜை என்பது "தசரா விழா" துவங்குவதற்கு முன்னர் நடைபெறுகிறது. வன்னி மரம் அமைந்திருக்கும் பகுதி என்பது "வன்னி மண்டபம்" என்று அழைக்கப்படுகிறது. அந்த இடத்தின் சாலைப் பெயர் கூட "வன்னி மண்டபம் சாலை" (Banni Mandapam Road) என்று அழைக்கப்படுகிறது.
இந்த "வன்னி மண்டபம்" என்பது "மைசூர் அரண்மனையில்" இருந்து 04 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த "வன்னி மண்டபம்" மைசூர் உடையார்களின் சொத்தாகும். இதை மிகச் சிறப்பாக அவர்கள் பராமரித்து வருகிறார்கள்.
வேளிர் குல மைசூர் உடையார்கள் என்பவர்கள் "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தவர்கள் ஆவார்கள். வன்னிய குல ஹொய்சாளர்களின் வம்சத்தினர்கள் தான் "மைசூர் உடையார்கள்" ஆவார்கள்.
தசரா விழா என்பது "க்ஷத்ரியர்கள்" கொண்டாடும் மிகச் சிறப்பான விழாவாகும். வன்னியர்கள் "விஜயதசமி" நாளன்று "அம்பு குத்தி விழா" கொண்டாடிவருகிறார்கள். சங்க காலத்தில் இவ் விழாவானது, வேளிர் குல மழவர்களான வன்னியர்கள் கொண்டாடிய "பூந்தொடை விழாவாகும்".
அதேபோல வேளிர் குல "வன்னியர்களும்", "சுருதிமான் மூப்பனார்களும்" மற்றும் "நத்தமான் உடையார்களும்", தமிழகத்தின் க்ஷத்ரியர்களாக ஒன்றினையும் காலமும் நிச்சயமாக வரும்.
----- xx ----- xx ----- xx -----
நன்றி : கர்நாடக மாநில வன்னிய குல க்ஷத்ரிய சங்கத்தை சேர்ந்த நமது வன்னிய சமூகத்து உறவினர் திரு. வெங்கடேசன் (என்கிற) அரசு அவர்கள், கங்கர்கள் வன்னியர்கள் என்பதை படித்து மிகவும் பாராட்டினார்கள். இன்றும் "Banni Gatta" பகுதியில் வன்னியர்களே பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் தெரிவித்தார்கள். மேலும் கங்கர்களுக்கு "பெருமாள்" என்ற பெயர் வழங்கப்பட்டது என்றும் அவர்கள் பண்டைய தமிழர்களே என்றும் சொன்னார்கள். மேலும் மைசூர் உடையார்களின் வன்னி மரம் பூஜையைப் பற்றியும் சொன்னார்கள்.
----- xx ----- xx ----- xx -----
No comments:
Post a Comment