Monday, 17 October 2016

இராஷ்டிரகூட மன்னன் கன்னரதேவன் சோழர் மரபில் தோன்றிய மன்னன்

பிற்கால சோழப் பேரரசை தோற்றுவித்த "விஜயாலய சோழனின்" (கி.பி. 848 - 881) மகன் முதலாம் ஆதித்த சோழன் (கி.பி. 871 - 907) ஆவான்.




முதலாம் ஆதித்த சோழனுக்கு பட்டத்தரசிகள் இருவர் இருந்தார்கள். மூத்தவள் "இளங்கோப்பிச்சி" ஆவாள். இந்த அம்மையார், இராஷ்டிரகூட மன்னன் இரண்டாம் கிருஷ்ணனின் மகள் ஆவார்கள்.
பல்லவ அரசி "காடுவெட்டிகள் திரிபுவனமாதேவி வயிரியக்கன்" என்பவள், முதலாம் ஆதித்த சோழனின் மற்றொரு பட்டத்தரசி ஆவார்கள். இந்த அம்மையார் "காடவ கோப்பெருஞ்சிங்கனின் முன்னோர்" ஆவார்கள். எனவே இந்த அம்மையார் "வன்னிய குல க்ஷத்ரிய சமூதாயத்தைச்" சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
முதலாம் ஆதித்த சோழனுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் பெயர் "முதலாம் பராந்தக சோழன்", இளையவன் பெயர் "கன்னர தேவன்". கன்னர தேவன் "இளங்கோப்பிச்சியின்" வயிற்றில் பிறந்த மகன் ஆவான்.
மூத்தவன் என்பதால் "பராந்தக சோழன்", சோழ பேரரசுக்கு பட்டம் ஏற்றான். இவன், "பல்லவ அரசி காடுவெட்டிகள் திரிபுவனமாதேவி வயிரியக்கன்" அவர்களின் மகன் ஆவான் என்று கருதப்படுகிறது.
ஆனால், இராஷ்டிரகூட மரபில் வந்த இளங்கோப்பிச்சி அவர்கள், "பராந்தக சோழன்" அரியணை ஏற்றதை ஏற்கவில்லை போலும். அரசியார் இளங்கோப்பிச்சி அவர்கள், மூத்த பட்டத்தரசி என்பதால், தன்னுடைய மகன் "கன்னரதேவனே" சோழ அரியணைக்கு பட்டம் ஏற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள் போலும்.
ஆனால் அது நடக்காமல் போகவே, "யது குல யாதவ மரபில்" வந்த அரசியார் இளங்கோப்பிச்சி அவர்கள், தன்னுடைய தாய்நாடான கர்நாடக மாநிலம் சென்று, தனது மகன் கன்னரதேவனை "இராஷ்டிரகூட பேரரசுக்கு அரசன் ஆக்கினாள்".
எனவே கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்த சோழனின் மகன் கன்னர தேவனே "இராஷ்டிரகூட பேரரசின் மன்னனாக" இருந்தான்.

2 comments:

  1. சோழர்கள் பள்ளிகள் என்று எதை வைத்துக் கூறுகிறீர். இந்த வரலாறு கள்ளர்களுக்கானது. இதைத்திருடி வன்னியர் என்கிறீர்கள். இந்த பட்டங்களைக்கொண்டவர்கள் அனைவரும் கள்ளர்களாக இப்போதும் வாழ்கிறார்கள். குறிப்பாக காடவராயர் பள்ளிஎன்கிறீர். காடவராயர் எந்த ஊரில் பள்ளிகளாக இப்போது வாழ்கிறார்கள்? நான் காடவராயர் பட்டம்கொண்டவன்.ஊர் காடவராயன்பட்டி நாங்கள் கள்ளர்கள்தான். கள்ளர்குல அரசர்கள் எல்லோரையும் பள்ளிகள் உரிமை கோருவது தவறு.

    ReplyDelete