Tuesday 1 November 2016

பிரம்ம க்ஷத்ரியர்களான பங்களநாட்டு கங்கரையர்கள்


கங்கரையர்கள் என்ற அரச மரபினர்கள் பண்டைய வேளிர் மரபினர்கள் ஆவார்கள். கங்கர்கள் பல கிளை மரபினர்களாக விளங்கி தென்னிந்தியாவை சிறப்புடன் ஆட்சி செலுத்தினார்கள். குறிப்பாக தமிழகத்தில் "பங்களநாட்டு கங்கரையர்கள்" என்றும் "நீலகங்கரையர்கள்" என்றும் இவர்கள் தங்களது ஆட்சியை செலுத்தினார்கள். இவர்கள் "வேள்வி தீயில் பிறந்த க்ஷத்ரியர்கள்" ஆவார்கள். கங்கு என்றால் "நெருப்பு" மற்றும் "தீ" என்று பொருள்படும்.











கர்நாடக மாநிலத்தில் கங்கர்கள் வெகுசிறப்பாக ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பது அவர்களின் பல தமிழ்க் கல்வெட்டுகளில் இருந்து நமக்கு தெரியவருகிறது. கங்கர்கள் தங்களை :-
"Kuvalalapura Paramesvaran" (Lord of the city of Kolar), (குவலாளையப்புரத்து பரமேஸ்வரன். இது இன்று கோலார் என்று வழங்கப்படுகிறது).
"Ganga Kulodbhavan" (Descendant of Ganga Kulam), (கங்கை குலத்தவர்கள்).
"Kaveri Vallaban" (Lord of Kaveri), (காவேரித் தலைவன்).
"Nandigiri Nathan" (Lord of Nandi Hills), (நந்திமலைத் தலைவன்) என்று குறிப்பிட்டனர்.
கங்கர்கள் கோலார் நாட்டினை ஆண்டவர்கள் என்பதனை அவர்களின் கல்வெட்டுகள் நமக்கு தெரிவிக்கிறது :-
"Vira Ganganallur on the hill called Muchukunda-giri near Kuvalalam of the Kuvalala-Nadu in Ganga Mandalam" (Epigraphia Carnatica, Vol-X, No.120, Tamil Inscription, 1216 A.D) "கங்க மண்டலத்து குவலாளைய நாட்டு, குவலாளையம் அருகில் இருக்கும் முசுகுந்தகிரி என்ற மலைமீது இருக்கும் வீர கங்கநல்லூர்."
கங்க மன்னர்களின் பல பெயர்கள் அவர்களின் தமிழ்க் கல்வெட்டில் இருந்து தெரியவருகிறது. அவை :-
"உத்தமச் சோழ கங்கன்" (Uttamach Chola Gangan).
"விக்கிரம கங்கன்" (Vikkrama Gangan).
"வேதுமாற பாணனான உத்தமச் சோழ கங்கன்" (Vedummara Banan (alias) Uttama Chola Gangan).
"வீர சோழ கங்கனான உத்தமச் சோழ கங்கன்" (Vira Chola Gangan (alias) Uttamach Chola Gangan).
"பிரம்ம க்ஷத்ரிய கங்கப் பெருமாள் தேவன்" (Brahma Kshatriya Ganga Perumal Devan).
"கூத்தாடும் தேவர்" (Kuttadum Devar) போன்றவைகளாகும்.
கோலார் தாலுக்காவில் உள்ள கி.பி. 1273 ஆம் ஆண்டின் தமிழ் கல்வெட்டு ஒன்று (Epigraphia Carnatica, Vol-X, No.242), உத்தம சோழ கங்கர் பதிம தேவர் மகன் கங்கப்பெருமாள் அவர்கள், "வன்னிய கட்டத்திற்காக" இறைவன் தாமோதரப் பெருமாளுக்கு தானம் கொடுத்துள்ள செய்தியைப் பற்றி குறிப்பிடுகிறது. கங்கர்கள் வன்னியர்கள் என்பதால் தான் "வன்னிய கட்டளையை" ஏற்படுத்தி இறைவனுக்கு தானம் கொடுத்துள்ளர்கள்.
இதைப்போலவே, கர்நாடக மாநிலம் சித்தலகட்டா தாலுக்காவில் உள்ள கி.பி. 1278 ஆம் ஆண்டின் தமிழ் கல்வெட்டு ஒன்று (Epigraphia Carnatica, Vol-X, No.110) கங்க குல மன்னர்களை "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்று தெரிவிக்கிறது. அது :-
"Brahma Kshatriya Gangap perumal devar magan" (The Brahma Kshatriya Gangap perumal devar's son), (பிரம்ம க்ஷத்ரிய கங்கப் பெருமாள் தேவர் மகன்).
எனவே கர்நாடக மாநிலத்தில் உள்ள கங்க குல அரசர்கள் தங்களை "வன்னியர்கள்" என்றும் "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்றும் குறிப்பிட்டனர். கர்நாடக பகுதிகளில் உள்ள இவர்களின் பல கல்வெட்டுகள் தமிழ் மொழிலேயே உள்ளதால், கங்கர்கள் பண்டைய தமிழர்கள் என்பது நமக்கு தெளிவாக தெரியவருகிறது. தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலான "தொல்காப்பியத்திற்கு" பிறகு பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட "நன்னூல்" என்ற இலக்கண நூலுக்கு ஆதரவுத் தந்தவர் கோலார் பகுதியை ஆட்சிசெய்த "அமராபரண சீய கங்கன்" என்ற கங்க மன்னர் ஆவார்.
இன்றைய "போளூர்", "திருவண்ணாமலை" போன்ற பகுதிகளை பல்லவர்கள் காலம் முதல் சோழர்கள் காலம் வரை அரசாட்சி செய்தவர்கள் "பங்கள நாட்டு கங்கரையர்கள்" என்ற அரச மரபினர்கள் ஆவார்கள். இவர்கள் தங்களை திருவண்ணாமலை கோயிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் கிளிகோபுர கல்வெட்டில் :-
"பங்களனாட்டுக் கூத்தாடுந் தெவன் பிரதிவிகங்கன் வந்னிய மாதெவன் அழகிய சொழநென்" (S.I.I. Vol-VIII, No.137, Line - 2).
கூத்தாடுந் தெவன் பிரதிவிகங்கன் வந்நிய மாதெவன் அழகிய சொழநென்" (S.I.I. Vol-VIII, No.137, Line - 5). என்று குறிப்பிட்டார்கள்.
பங்கள நாட்டு கங்கரையர்களின் கிளை மரபினர்களான "நீலகங்கரையர்கள்" என்ற அரச மரபினர்கள், இன்றைய "பல்லாவரம்", "திரிசூலம்", "பம்மல்", "அனகாபுத்தூர்", "திருநீர்மலை", "தாம்பரம்", "மணிமங்கலம்", "திருக்கச்சூர்", "திருக்கழுகுன்றம்", "செங்கல்பட்டு", "காஞ்சிபுரம்", "திருமொழிசை", "பூந்தமல்லி", "நீலாங்கரை" போன்ற பகுதிகளை சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் காலங்களில் சிறப்புடன் ஆட்சி செய்தார்கள். இவர்கள் தங்களை கல்வெட்டுகளில் "பள்ளி" என்றும் "வன்னிய நாயன்" என்றும் "சம்பு குல வேந்தன்" என்றும் குறிப்பிட்டார்கள் :-
"திருச்சுரத்துக் கண்ணப்பன் தூசி ஆதி நாயகன் நிலகங்கரெயன் வன்னிய நாயநான உத்தமநிதிக்கண்ணப்பன்" (S.I.I. Vol-III, No.36, Line - 6, Manimangalam).
"இவ் வன்னியனாயனான உத்தமநிதிக் கண்ணப்பர் பக்கல் வெண்டும் பொன் கொண்டு" (S.I.I. Vol-III, No.36, Line - 9, Manimangalam).
சென்னை தாம்பரம் அடுத்துள்ள மணிமங்கலம் வைகுந்த பெருமாள் கோயிலில் இருக்கும் பாண்டியர் காலக் கல்வெட்டுகள் மணிமங்கலத்தை நீலகங்கரையர்களின் "பண்ணை" என்று குறிப்பிடுகிறது :-
"நம்முடைய பண்ணைத்தொட்டம்" (S.I.I. Vol-VI, No.263).
"பிள்ளையார் நிலகங்கையர் பண்ணையாய எங்களுரில்" (S.I.I. Vol-VI, No.262).
இதைப்போலவே, மணிமங்கலம் கைலாசநாதர் கோயிலில் இருக்கும் ஸ்ரீ வீர பிரதாப அச்சுததேவ மகாராயர் கல்வெட்டு :-
"மணிமங்கலம் வண்டுவராபதி எம்பெருமான் பாடிவெட்டை கங்கராஜாவின் மண்டபமும்" (S.I.I. Vol-VI, No.273).
என்று குறிப்பிடுகிறது. நீலகங்கரைய மன்னர்கள் கட்டிய மண்டபத்தை "கங்கராஜாவின் மண்டபம்" என்று விஜயநகர கல்வெட்டு மிகத் தெளிவாக தெரிவிப்பதால், வன்னியர்களான நீலகங்கரையர்கள் "கங்க குல அரச மரபினர்கள்" என்பது உண்மையாகிறது. இதை மெய்ப்பிக்கும் விதமாக "சோழ கங்க தேவன்" என்ற "நீலகங்கரைய மன்னரைப்" பற்றிய பல கல்வெட்டுகள் திருநீர்மலை கோயிலில் உள்ளது.
கங்க குல அரசர்களை கர்நாடக மாநிலக் கல்வெட்டு "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்று மிகத் தெளிவாக தெரிவிப்பதால். வன்னியர்கள் "பிரம்ம க்ஷத்ரியர்கள்" ஆவார்கள் என்பது தெளிவாகிறது. இதைப்போலவே வன்னியர்களான பல்லவர்களும் மற்றும் கேரள அரசர்களின் உறவினரான "அனந்தபத்மநாபனும்" தங்களை "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்றே ஆவணங்களில் குறிப்பிட்டனர். இவர்கள் அனைவரும் "பண்டைய வேளிர் அரச வம்சத்தினர்கள்" ஆவார்கள்.
வன்னியர் குல க்ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்த உடையார் பாளையம் அரசர்களும், கடலங்குடி உடையார் அரசர்களும் தங்களை "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்றே ஆவணங்களில் குறிப்பிடுகிறார்கள்.
உடையார் பாளையம் அரசர்கள் தங்களை "கங்கநூஜா வம்சத்தை சேர்ந்த பார்கவ கோத்திரத்தார்கள் என்றும் நெருப்பு கடவுள் சந்ததியில் உதித்த வன்னிய குலத்தவர்கள்" என்று தங்களது வம்சாவழி பட்டியலில் குறிப்பிட்டுள்ளார்கள். (The "Udaiyar Palayam Chieftains" refer them as "Bargava Gotram in Ganganooja Family that took its origin from Vanniya Kulam (the family of the God of Fire).
எனவே வன்னியர்கள் "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்பது மேற்குறிப்பிட்ட அடிப்படை சான்றுகளின் மூலம் மிகத் தெளிவாக தெரியவருகிறது. வன்னியர்கள் கர்நாடகத்தின் மிகப் பெரும் பகுதியான கோலார் நாட்டை ஆண்டிருக்கிறார்கள் என்பது வன்னியர்களுக்கு கிடைத்த மிகப் பெரும் பெருமையாகும். வாழ்க வன்னியர்களான கங்க குல அரசர்களின் புகழ்.
----- xx ----- xx ----- xx -----

1 comment: