வரலாற்று அறிஞர் திரு. நொபோரு கராஷிமா அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகில் உள்ள திருக்கச்சூர் கல்வெட்டை பற்றி கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்கள் :-
"A Tirukkachchur inscription recording the attrocities of five Brahmana brothers, deplores the fact that these brothers ceased to observe the normally good behaviour of Brahmans and Vellalas and instead began to behave badly in the manner of lower jatis. This statement indicates social co-operation and co-ordination that existed between the two upper communities" (Page - 107, Ancient to Medieval, South Indian Society in Transition, Noboru Karashima).
"Though no communities properly called Kshatriyas have existed in South India, we are able to regard the Vellalas, who were the dominant caste, as having played the role of Kshatriya in ancient and medieval Tamil country. A good example of Brahmana / Vellala co-ordination can be seen in the Tirukkachchur inscription" (Page - 111, Ancient to Medieval, South Indian Society in Transition, Noboru Karashima).
"திருக்கச்சூர் பாண்டியர் காலக் கல்வெட்டு பதிவு செய்திருக்கும் செய்தியானது, சில பிராமணர்களும் வெள்ளாளர்களும் தங்களுடைய உயர்குடிகளுக்கு உரியதான நற்பண்புகளில் தங்களை ஈடுபடுத்தாமல், கீழ்ஜாதிகளின் செயல்களைப் போல மிக மோசமான செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். இந்த செய்தியானது தெரிவிக்கு கருத்து என்பது, இரண்டு உயர்குடி சமூகத்தவர்களான பிராமணர்கள் மற்றும் வெள்ளாளர்களிடம் சமூக ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் நிலவியிருக்கிறது என்பதாகும்".
"தென்னிந்தியாவில் க்ஷத்ரியர் என்ற ஒரு சமூதாயம் இருந்திருக்கவில்லை என்றாலும், பண்டைய மற்றும் மத்தியகாலக் கட்டத்தில் வெள்ளாளர் என்ற வலிமையான சமூதாயம் க்ஷத்ரியர்களின் பங்கினை வகித்திருக்கிறார்கள் என்று நம்மால் கருதமுடிகிறது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக பிராமணர் / வெள்ளாளர் ஒற்றுமையை திருக்கச்சூர் கல்வெட்டு குறிப்பிடுவதாக அறிஞர் திரு. நொபோரு கராஷிமா அவர்கள் தெரிவிக்கிறார்கள்".
அறிஞர் திரு. நொபோரு கராஷிமா அவர்கள், தெளிவாக ஒன்றை குறிப்பிடுகிறார்கள். பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் வெள்ளாளர்கள் என்ற சமூதாயத்தினார்கள் இருந்திருக்கிறார்கள் என்றும் தென்னிந்தியாவில் க்ஷத்ரியர் என்ற ஒரு சமூதாயம் இருந்திருக்கவில்லை என்றும் வெள்ளாள சமூகத்தவர்களே க்ஷத்ரியர்கள் செய்யவேண்டிய பணிகளை செய்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள். அவர் குறிப்பிடும் கருத்து என்பது ஏற்புடையது அல்ல.
சோழர்களை "க்ஷத்ரியர்கள்" கிடையாது என்று யாருமே சொல்ல முடியாது. மணிமேகலை சோழர்களை "க்ஷத்ரியர்கள்" என்று குறிப்பிடுகிறது. மறைந்துபோன சங்கத் தமிழ் நூல் செயிற்றியம் "அரசர் ஜாதி" என்று குறிப்பிடுகிறது. அன்பில் செப்புப்பட்டயத்தில் சுந்தர சோழன் "க்ஷத்ரியர்களில் முதன்மையானவன்" என்று குறிப்பிடப்படுகிறான்". மேலும் சோழ மன்னர்கள் அனைவரும் "ராஜகேசரி வர்மன்" என்றும் "பரகேசரி வர்மன்" என்றும் பல கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார்கள். "வர்மன்" என்பது க்ஷத்ரியர்களை குறிப்பிடும் பதமாகும்.
இப்போது திருக்கச்சூர் கல்வெட்டின் நிலையைப் பற்றி பார்ப்போம். கி.பி. 1263 ஆம் ஆண்டைச் சேர்ந்த இக் கல்வெட்டு, "உத்திபாக்கம் ஆன ஆதிநாயகச் சதுர்வேதிமங்கலம்" என்று குறிப்பிடுகிறது. இந்த "ஆதிநாயகச் சதுர்வேதிமங்கலத்தில்" தான் மிக கீழான செயல்களில் ஈடுப்பட்ட 05 பிராமணர்களும் இருந்திருக்கிறார்கள்.
இந்த "ஆதிநாயகச் சதுர்வேதிமங்கலத்தில்" பிராமணர்களுடன் வெளாளரும் இருந்திருக்கிறார்கள் என்பதை கல்வெட்டு குறிப்பிடுகிறது. "ஆதிநாயகச் சதுர்வேதிமங்கலம்" என்ற பெயரில் அமைந்த சதுர்வேதி மங்கலமானது, நீலகங்கரையர்கள் என்ற "வன்னிய குல க்ஷத்ரிய" மன்னர்களின் பெயரில் அமைந்த சதுர்வேதி மங்கலமாகும்.
தொண்டைமண்டலத்தில் சோழர், பாண்டியர், தெலுங்கு சோழர் காலத்தில் ஆட்சிசெய்த நீலகங்கரையை மன்னர்கள் தங்களை "பள்ளி" என்றும் "வன்னிய நாயன்" என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிட்டார்கள்.
வன்னியர் செப்பேடுகள் இவர்களை "நிலங்கரை குலையா படையாச்சி" என்றும் "நீலகங்கராயர்" என்றும் "வில்வீர பராக்கிரமரான ருத்திரப் பள்ளியார் குமாரராகிய நீலகங்கன்" என்றும் குறிப்பிடுகிறது. தமிழ்நாடு அரசு கீழ்த்திசைச் சுவடிகள் வெளியிட்ட இடங்கை வலங்கையர் வரலாற்றில் நீலகங்கரையர்களை :-
"சர்வ ஜீவ தயாபரனான வில்வீர பராக்ரமனான ருத்ரப் பள்ளியார் குமாரராகிய நீலகங்கன் வஜ்ரபாகன் கங்கபரிபாலன் சம்புகுல வேந்தன்"
என்று குறிப்பிடுகிறது. இவர்களைப் பற்றி நான் 2009 ஆம் ஆண்டில் "நீலகங்கரையர் வரலாறு" என்ற விரிவான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறேன். மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் "திருச்சுரக் கண்ணப்பன் ஆதிநாயகன் பஞ்சநதி வாணனான இராச இராச நீலகங்கரையன்" என்ற மன்னர் தொண்டைமண்டலப் பகுதியில் ஆட்சிப்புரிந்தார்கள். இவர் :-
"திருச்சுரத்து குலோத்துங்க சோழக் கண்ணப்பன் ஆதிநாயகன் பஞ்சநதி வாணனான ராஜ ராஜ நீலகங்கரையன்"
"திருச்சுரத்துக் கண்ணப்பன் தூசி ஆதிநாயகன் நீலகங்கரையன் வன்னிய நாயனான உத்தமநீதிக் கண்ணப்பன்"
"ஆதி நாயன் நீலகங்கரையன் உள்ளாரில் நல்லான் கலிங்கத்தரையன்"
"குலோத்துங்க சோழ கண்ணப்பன் தூசி நீலகங்கரையன் ஆதிநாதன் உள்ளாரில் நல்லான்"
என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறார்கள். இவர் "ஆதிநாயகன்", "ஆதிநாதன்", "ஆதிநாயன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளார்கள். இவர் செய்த நற்காரியங்களைப் பற்றி திருக்கச்சூர் கச்சபரேஸ்வரர் கோயிலில் உள்ள இரண்டு கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. எனவே "உத்திபாக்கம் ஆன ஆதிநாயகச் சதுர்வேதிமங்கலம்" என்பது இவர் ஏற்படுத்திய சதுர்வேதிமங்கலமாகும்.
இவரைப்போலவே இவரது வம்சத்தில் வந்த "பஞ்சநதி வாணன் நீலகங்கரையன் நல்லநாயனான சோழ கங்கதேவன்" என்ற அரசர் "பஞ்சநதிவாணச் சதுர்வேதி மங்கலத்தை" ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதை திருமொழிசை ஜகன்நாதப் பெருமாள் கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது.
நீலகங்கரையை மன்னர்களைப் போலவே வன்னியர்களான சம்புவராய மன்னர்களும், வேதம் வல்ல பிராமணர்களுக்கு பல சதுர்வேதிமங்கலங்களை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள் :-
"சம்புகுலப் பெருமாள் அகரமான இராஜ கம்பீரச் சதுர்வேதிமங்கலம்"
"செய்யாற்று வென்றான் சதுர்வேதிமங்கலம்",
"ஸ்ரீ மல்லி நாதச் சதுர்வேதிமங்கலம்",
"வீரகம்பீர சதுர்வேதிமங்கலம்",
"ஸ்ரீமத்ராஜநாராயணச் சதுர்வேதிமங்கலம்"
போன்ற பல சதுர்வேதிமங்கலங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதை கல்வெட்டுகளின் மூலம் அறியமுடிகிறது. எனவே வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்து மன்னர்களான நீலகங்கரையர்கள் ஏற்படுத்திக்கொடுத்த "ஆதிநாயக சதுர்வேதி மங்கலத்தில்" தான் திருக்கச்சூர் பாண்டியர் காலக் கல்வெட்டு குறிப்பிடும் பிராமணர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது சான்றுகளின் மூலம் உண்மையாகிறது.
சோழர்கள் காலத்தில் க்ஷத்ரியர்களாக இருந்தவர்களே பெரும்பாலும் "சதுர்வேதி மங்கலங்களை" ஏற்படுத்தமுடியும் என்பது நியதியாகும். எனவே "ஆதிநாயக சதுர்வேதி மங்கலத்தை" ஏற்படுத்திய நீலகங்கரையை மன்னர்கள் "வன்னியர் சமூகத்தைச்" சேர்ந்தவர்கள் என்பதும் அவர்கள் "க்ஷத்ரியர்கள்" என்பதும் உறுதியாகிறது.
நீலகங்கரைய மன்னர்கள் க்ஷத்ரியர்கள் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக "அரசகளாலையன்" என்றும் "நீலகங்கன் அச்சலவீமன் அரசர் தலைவன்" என்றும் "புவிஆளப்பிறந்த ஆமூர் நீலகங்கரையன்" என்றும் குறிப்பிடப்பட்டனர்.
"அச்சல வீமன்" என்பது "வேளிர்களான மலையமான்களைப்" பற்றி குறிப்பிடுவதாகும். எனவே தான் இவர்கள் "பஞ்சநதி வாணர்கள்" என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். இதை உறுதிப்படுத்தும் விதமாக, நீலகங்கரைய மன்னர் ஒருவரை "புவனேகவீரன் சமரகோலாகலன்" என்ற விருதுபெற்ற வாணகோவரையன், "மிழலைக் கூற்றத்து அம்மான் நீலகங்கரையர் உடன் கற்பிக்கையில்" என்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கல்வெட்டில் குறிப்பிடுகிறான். அதாவது நீலகங்கரையை மன்னரை தன்னுடைய "தாய்மாமா" என்று வாணகோவரையன் குறிப்பிடுகிறான். மேலும் நீலகங்கரைய மன்னர்கள் "கங்கர்கள்" என்று தெரியவருவதால், இவர்கள் பண்டைய "வேளிர் குல கங்கர்களின்" வழிவந்தவர்கள் ஆவார்கள்.
நீலகங்கரைய மன்னர்களின் "புவி ஆளப்பிறந்தவன்" என்ற பெயரானது "க்ஷத்ரியர்" என்பதை குறிப்பிடும் பதமாகும். க்ஷத்ரியர் என்பவர்கள் இந்த புவியை / புவனத்தை / லோகத்தை ஆட்சிசெய்வதற்கே பிறந்தவர்கள் என்பதாகும். சோழர்கள் காலத்தில் சம்புவராயர்கள், காடவராயர்கள் போன்ற மன்னர்கள் "புவனம் ஆளப்பிறந்த சக்கரவர்த்திகள்" என்றும் "லோகம் ஆளப்பிறந்த சக்கரவர்த்திகள்" என்றும் குறிப்பிடுவது என்பது "ஆட்சி செய்யப்பிறந்த க்ஷத்ரியர்கள்" என்று உரிமையோடு குறிப்பிடுவதாகும்.
மேலும் நீலகங்கரைய மன்னர்கள் சோழர்களுடன் திருமணஉறவை கொண்டிருந்தார்கள். முதலாம் குலோத்துங்க சோழனின் மகன் வீரசோழ தேவர் அவர்கள், "வில்லவன் மாதேவியை" தனது பட்டத்தரசியாக கொண்டிருந்தார்கள். இந்த "வில்லவன் மாதேவி", நீலகங்கன் அச்சலவீமன் அரசர் தலைவனின் மகளாவார்கள்.
மேற்குறிப்பிட்ட சான்றுகளின் மூலம் நீலகங்கரைய மன்னர்கள் "வன்னியர் சமூகத்தைச்" சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் "க்ஷத்ரியர்கள்" என்பதும் தெளிவாகிறது. அறிஞர் திரு. நொபோரு கராஷிமா அவர்கள், தென்னிந்தியாவில் க்ஷத்ரியர்கள் இல்லை என்று தெரிவித்த கருத்து ஏற்புடையது அல்ல என்பது உண்மையாகிறது.
திருக்கச்சூர் கல்வெட்டில் குறிப்பிடப்பெற்ற ஆட்சியாளர்களான "வாணராயன்" மற்றும் "முனையதரையர்" என்பவர்கள் தான் முதலில் குற்றம் செய்த பிராமணர்களுக்கும் வெள்ளாளர்களுக்கு தண்டனை வழங்கியவர்கள் என்று தெரியவருவதால், க்ஷத்ரியர்களே பிராமணர்களுக்கு தண்டனை வழங்கியிருக்கமுடியும் என்பது உண்மையாகும். வாணர்கள் தங்களை "பள்ளி" என்றும் "வன்னியர்" என்றும் குறிப்பிடுகிறார்கள். மேலும் வாணகோவரையனின் "தாய்மாமன்", நீலகங்கரைய மன்னன் ஆவான் என்பதை காஞ்சிபுரம் கல்வெட்டு தெரிவிக்கிறது.
முடிகொண்ட சோழ சதுர்வேதி மங்கலத்து கல்வெட்டுகளில், வன்னியர்கள் "முனையதரையன்" என்று குறிப்பிடப்படுகிறார்கள். விஜயநகர காலக் ஏலவானாசூர் கல்வெட்டில், வன்னிய மன்னர்களான "பரூர் கச்சியராயர்கள்", 63 நாயன்மார்களில் ஒருவரான நரசிங்கமுனையத்தரைய நயினாரை "எங்கள் நயினார்" என்று குறிப்பிடுகிறார்கள். பரூர் கச்சியராயர்களின் முன்னோர்களான காடவராயர்களும், சோழர்கள் காலக் கல்வெட்டில் தங்களை "முனையத்தரையன்" என்று குறிப்பிட்டனர்.
எனவே மேற்குறிப்பிட்ட அடிப்படை சான்றுகளை வைத்து பார்க்கும்பொழுது, திருக்கச்சூர் பாண்டியர் காலக் கல்வெட்டில், வன்னிய நீலகங்கரைய மன்னர்களால் ஏற்படுத்தப்பட்ட ஆதிநாயக சதுர்வேதிமங்கலத்தில் வாழ்ந்த, குற்றம் செய்த சில பிராமணர்களுக்கும் வெள்ளாளர்களுக்கும் தண்டனை கொடுத்தது க்ஷத்ரியர்களான வன்னியர்களே ஆவார்கள். மேலும் அக் கல்வெட்டில் உயர்சாதி என்று குறிப்பிடப்பட்டவர்கள் "பிராமணர்கள்" மட்டுமே என்பதை அறிஞர்கள் கருதவேண்டும். பிராமணர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் குற்றம் ஏதும் செய்யாமல் சிறைப்படுத்தப்பட்டதை பற்றி மூன்றாம் ராஜ ராஜ சோழனின் "மன்னார்குடி" மற்றும் "திருமண்டங்குடி" கல்வெட்டுகளை அறிஞர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.
----- xx ----- xx ----- xx -----
This comment has been removed by the author.
ReplyDeleteபள்ளிக்கும் கங்கர்கும் என்ன சம்பந்தம் ??? கங்கர்கள் வேளாளர்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தி கங்கர்கள் ஆண்ட பகுதியை வெள்ளாள நாடு என்று அழைக்கப்பட்டதற்க்கு கல்வெட்டுகள் உண்டு, சமரகோலாகலன் என்று அழைக்கப்பட்ட வணனன் வேளாளன் என்று திருவிளையாடல் புராணம் சொல்கிறது, வானவராயர்கள் தங்களை வேளாண் என்றும் அகமுடையார் என்றும் அழைத்துக்கொண்டதற்கு கல்வெட்டுகள் கொங்கு பட்டயம் முதலிய சான்றுகள் உண்டு , மேலும் வாணாதிராயர் தங்களை வலங்கை சாத்தியினர்க குறித்துள்ளார்கள்
ReplyDeleteசம்பந்தம் இல்லாதவர்களை கோருவது அடுத்தவன் initial கு ஆசைப்படும் செயல்
பிள்ளை சுந்தரபாண்டிய வான்கோவராயர் கல்வெட்டு
கொங்கு பட்டயம்
சின்னமன்னுர் கல்வெட்டுகள் நேரடியாக வாணாதிராயர்களை அகமுடையார்கள் என்று தெளிவாக குறிப்பிடுகிறது
பெய்வளை விந்தை சேர்ந்த பிரதாப மார்த்தாண் டப்பேர்த்
தெவ்வடு சிலையான் றேர்விக் கிரமகஞ் சுகன்றே ரார்போர்
வௌவிய சமர கோலா கலனெனும் வாகை வேலான்
அவ்விய மவித்த சிந்தை யதுலவிக் கிரம னென்பான்.
- திருவிளையாடல் புராணம்
சமரகோலாகலன்
ஸ்வஸ்தி ஸ்ரீ கட்டானை பருமற்கி யாண்டு நாற்பத்தைந்தாவது பெரும் / பாணிளவரைசர் வேளால நாடாள பெருமுகை கலியட / க்கியார் சேவகன் கட்டிய விச்சன் / புலிக் குத்திப் பட்டான்
குத்தி - ஆய்தத்தால் குத்திக் கொன்று; பட்டான் - புலியிடம் காயம் பட்டு இறந்தான்
கங்க மன்னன் ஸ்ரீ புருஷன் எனும் கட்டாணை பருமனுடைய நாற்பத்தைந்தாவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 773) அவருக்கு அடங்கிய பாணன் பெரும்பாண் இளவரைசர் வேளால நாட்டை ஆள அவருக்கும் அடங்கிய பெருமுகை ஆளும் வேள் கலியடக்கி என்பவருடைய படைஆள் கட்டிய விச்சன் என்பவன் ஊரில் புகுந்து அச்சுறுத்தி வந்த புலியை ஆய்தத்தால் குத்திக் கொன்று தானும் காயம் பட்டதால் வீர சாவடைந்தான். கலியடக்கி என்றால் போர் அடக்கி என்று பொருள்.
வேளாண் என்றால் வேளிரை குறிக்கு சூத்திர ஜாதி வேளாளர்களைக் குறிக்காது
ReplyDeleteஅப்படியா அப்போ வேளாண் குடி என்றால் என்ன ? பள்ளி சூத்ர சதி என்பதற்கு பல ஆதாரம் உண்டு , முதலில் குடிப்பள்ளிக்கு அர்த்தம் என்ன குடியான பள்ளி தானே பின் எப்படி சத்திரியர்.... நீங்க நொப்ரு கரஷிமாவை விட அல்லது ராகவா ஐயங்காரை விட பெரிய தொல்லியல் அறிஞ்சரா ? வெள்ளாளர்கள் கங்கை குலத்தவர்கள் என்று கம்பனின் திருக்கை வழக்கத்தில கங்கை குலந்தழைக்கக் ... என்னும் வரிகள் சொல்லும் கங்கைக்குலத்தவர் யார் என்று 8௮ம் நூற்றாண்டில் தங்களை சத்திரியர் என்று அறிவித்த வாணர் குலம் தங்களை கணக்கன் கூட்டத்தார் பட்டயத்தில் வெட்டுமாவெலி அகம்படியான் கருதுமுனை தீண்டாக் காராளன் என்கிறது காராளன் என்றால் யார் ஊழ்வித்து உண்ணும் வேலணை குறிக்கும் இதறக்குமேலும் என்னசொல்வ்து , தரமங்கலத்தை ஆண்ட கட்டி முதலிகள் தங்களை வெள்ளாளர் என்று கல்வெட்டில் பதித்து உள்ளனர் உங்கள் சதுர்வர்ணபடி அரசன் எப்படி சூத்ரன் ?.............
Deleteசிலையெலுபது கம்பரால் எழுதப்பட்டது என்பது உண்மைதான அது முழுக்க முழுக்க வன்னியருக்காக எழுதப்பட்டவை....
Delete