Monday, 17 October 2016

கொல்லி மழவர் வல்வில் ஓரியை தவறாக உரிமைகொண்டாடுவோர்

மழவர் பெருமகன் மாவேள் ஓரி, மழவர் குலமான வேளிர் குலத்தினில் பிறந்தவன் என்பதை சங்கத் தமிழ் இலக்கியமான நற்றிணை மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது. வல்வில் ஓரி சேர மன்னனின் மரபினன் ஆவான்.






இவரைப்போலவே வேளிர் குல அதியமானை "நெடுவேல் மழவர் பெருமகன்" என்று புறநானூறு குறிப்பிடுகிறது. அதியமான் சோழர்கள் காலக் கல்வெட்டில் "கேரள அரசன்" என்றும் "சேர அரசன்" என்றும் குறிப்பிடப்படுகிறான். மேலும் அதியமான்கள் தங்களை "பள்ளிகள்" என்று கல்வெட்டில் குறிப்பிடுகிறார்கள்.
எனவே மழவர்களான "அதியமானும்", "வல்வில் ஓரியும்", வன்னிய குல க்ஷத்ரிய சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முற்றிலும் உண்மையாகிறது.
வேளிர் குடியான மழவர் குடியில் இருந்து பிறந்த வல்வில் ஓரி மன்னனை, தங்களது வம்சத்தவர்கள் என்று தவறாக கருதி விழாவும் எடுத்துவருகிறார்கள் சிலர்.
நாம் இப்போது மன்னர் வல்வில் ஓரி அவர்களை "வேளிர் குடியில் தோன்றிய மழவர்" என்று சொல்லும்போது அவர்களுக்கு மிகப்பெரும் அதிர்ச்சி ஏற்படுகிறது. வரலாற்றை சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பதால் வரும் தவறுகள் இவை.
உடனே இதிலிருந்து தப்பிப்பதற்காக அவர்கள் "மழவர்" என்பதற்கு "இளமையான வீரர்கள்" என்று பொருள் சொல்கிறார்கள்". அதாவது மழவர்கள் என்றால் ஒரு இனம் (குலம்) கிடையாதாம். அது "இளமையான வீரர்களை மட்டுமே குறிக்க பயன்படுமாம்".
"கொல்லி மழவர்" என்றால் "கொல்லி மலையில் வாழும் மன்னன் பெற்றிருந்த இளம் வீரர்கள் கொண்ட படையாம்.
அதுபோலவே "மழவர் கோன் பெற்ற செம்பியன் மாதேவி" என்றால் "இளம் வீரர்களை பெற்றிருந்த அரசர் பெற்ற செம்பியன் மாதேவியாம்".
அப்படியென்றால் "மழவராயன் கட்டில்", "மழவராயன் அரியணை" என்றால் "இளம் வீரர்கள் படுக்கும் கட்டில், அரியணை" என்று பொருள் வருமா ?
"மழப்பாடி" என்றால் "இளம் வீரர்கள் தங்கும் இடம் என்று பொருள் வருமா " ?
"மழவூர்" என்றால் "இளம் வீரர்கள் வாழும் ஊர் என்று பொருள் வருமா" ?
"மழநாடு" என்றால் "இளம் வீரர்கள் வசிக்கும் ஊர் என்று பொருள் வருமா" ?
"மழவராய கோத்திரம்" என்றால் "இளம் வீரர்களின் கோத்திரம் என்று பொருள் வருமா" ?
"மழவர் குலம்" என்றால் "இளம் வீரர் வீரர்களின் குலம் என்று பொருள் வருமா" ?
"மழவர் பெருமகன் மாவேள் ஓரி", "நெடுவேல் மழவர் பெருமகன் அதியமான்" போன்றவர்கள் "வேளிர்கள்" (வேள்) என்று குறிப்பிடப்படுகிறார்கள்.
புறநானூறு பாடல் 201, "இருங்கோவேள்" என்ற மன்னனை "வேளிர் குல மன்னன்" என்று குறிப்பிடுகிறது.
எனவே "வல்வில் ஓரி" என்ற மன்னன் "வேளிர் குலத்தவன்" ஆவான்.

2 comments:

  1. புறநானூறு 152 படிங்க ஓரி யார்னு தெரியும்

    ReplyDelete
  2. வேளிர் குலத்தினில் என்றால் குயவர் குலத்தவர் என்று அல்லவா பொருள் . எல்லாம் தமிழ்மொழியாக இருக்கும் போது என்னதற்கு அந்நிய மொழி தெலுங்கு தாகம்

    ReplyDelete