தென்னிந்திய வரலாற்றில் பள்ளி என்று குறிப்பிடப்படும் வன்னியர்கள் பற்றிய வரலாற்று தொகுப்பே இந்த இணைய பக்கம் . இன்றைய காலகட்டத்தில் அரச பெருமைக்கு ஆசைப்பட்டு பல்வேறு சாதியினரும் வன்னியர் என்பதை ஒரு பொதுவான பட்டதாகவும் அந்த சொல்லை கொண்டு தங்களை அரச குலத்தவராகவும் நிறுவ முயற்சிக்கின்றனர் ஆனால் வன்னியர் என்ற சொல்லானது தமிழகத்தின் க்ஷத்ரிய வம்சத்தவர்களான பள்ளி என்று அழைக்கப்படும் வன்னிய குல க்ஷத்ரியர்களை மட்டுமே குறிப்பதாகும் .
ஆனால் இந்த 'வன்னியர் ' என்ற சொல்லை ஒரு பொதுவான பட்டமாக மாற்றி வன்னியர்களை பள்ளி என்று சொல்லி வெள்ளையர் காலத்திற்கு பின்பே பள்ளிகள் தங்களை வன்னியர் என்று அழைத்து கொள்ள தொடங்கினர் என்று பொய்யான தகவலை பரப்பிவருகின்றனர் சில கயவர்கள் .
அவர்களின் பொய் கூற்றுக்களை உடைத்து இந்த தென்தமிழகத்தை ஆண்ட க்ஷத்ரியர்களே பள்ளி எனும் வன்னியர்கள் என்பதை ஆதாரங்களுடன் நிறுவுவதே இந்த இணைய பக்கத்தின் நோக்கம்
புறநானூற்றில் பள்ளி
"சுள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடை பொத்திய வளைவிறகு ஈமத்து
ஒள்ளழல் பள்ளி பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை"---- புறம் 245
களரியம்=போர்;பறந்தலை=போர்நடக்கும் இடம்.வெள்ளிடை பொத்திய =வெள்ளாடை போர்த்திய.வளைவிறகு ஈமத்து ஒள்ளழல்= வளைவாக அடுக்கப்பட்ட ஈமத்தீயில். பள்ளி=அரசன். பாயல்=பாய்ந்து படுத்து. சேர்த்தி=அரசன் உடலுடன் சேர்ந்தார்போல். ஞாங்கர்=மேல். மாய்ந்தனள் மடந்தை= பள்ளியின் மனைவியாகிய பள்ளிச்சி/அரசி இறந்தாள்.
போர்களத்தே விறகுகள் கொண்டு செல்லப்பட்டு வளைவாக அடுக்கப்பட்டிருக்கும் விறகில் வெள்ளுடைபோர்த்தப்பட்டு ஈமத்தீயில் எரிந்துகொண்டிருக்கும் பள்ளி/அரசனின் மேல் பாய்ந்து உயிர் விட்டாள் பள்ளிச்சி/அரசி.
பள்ளி ஆண்பால்
பள்ளிச்சி பெண்பால்.
Super ji
ReplyDeleteNice work hat off to u
ReplyDelete