புறநானூறு பாடலில் வரும் "வடபால் முனிவன் தடவினுள் தோன்றி வேளிர்கள்" என்பதற்கு உரைவேந்தர் ஒளவை துரைசாமிப் பிள்ளை ஐயா அவர்கள், "நான்கு மலைகளுக்கு நடுவே உள்ள நிலப்பரப்பில் தோன்றிய வேளிர்கள்" என்று விளக்கம் கொடுத்தார்கள். ஆனால் உண்மையில் "வடபால் முனிவனது ஓமகுண்டத்தில் தோன்றிய வேளிர்கள்" என்பது தான் அர்த்தமாகும்.
"தடவு" என்பது "ஓமகுண்டத்தை" குறிக்காது என்றும் அது "நான்கு மலையின் நடுவில் இருக்கும் ஒரு நிலப்பரப்பை குறிக்கும்" என்று உரைவேந்தர் ஐயா அவர்கள் குறிப்பிட்டார்கள்.
தடவு என்பதற்கு சிலப்பதிகாரம் கீழ்கண்ட சான்றுகளை கொடுத்துள்ளது என்று அருமை நண்பர் திரு. கார்த்திகேயன் அவர்கள் தனது பதிவில் குறிப்பிட்டார்கள். அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.
வடதிசை மருங்கின் மறைகாத் தோம்புநர்,
தடவுத்தீ யவியாத் தண்பெரு வாழ்க்கை
காற்றூ தாளரைப் போற்றிக் காமினென - (250 கால்கோள் காதை)
தடவுத்தீ யவியாத் தண்பெரு வாழ்க்கை
காற்றூ தாளரைப் போற்றிக் காமினென - (250 கால்கோள் காதை)
கால மன்றியும் நூலோர் சிறப்பின்
முகில்தோய் மாடத் தகில்தரு விறகின்
மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து
நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு
குறுங்கண் அடைக்குங் கூதிர்க் காலையும் - (100 ஊர்காண் காதை)
முகில்தோய் மாடத் தகில்தரு விறகின்
மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து
நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு
குறுங்கண் அடைக்குங் கூதிர்க் காலையும் - (100 ஊர்காண் காதை)
"தடவுத்தீ", "தடவுநெருப்" என்று சிலப்பதிகாரம் மிகத் தெளிவாக குறிப்பிடுவதால், "தடவு" என்பது "ஓமகுண்டம்" என்ற பொருளில் வரும். எனவே புறம் பாடலில் வரும் "வடபால் முனிவன் தடவினுள் தோன்றி வேளிர்கள்" என்பதற்கு மிகச் சரியான விளக்கம் என்பது "வடபால் முனிவனது யாககுண்டத்தில் தோன்றிய வேளிர்கள்" என்பதாகும்.
உரைவேந்தர் ஒளவை துரைசாமிப்பிள்ளை ஐயா அவர்கள் எல்லாம் தெரிந்தவர் ஆவார். ஆனால் தெரிந்திருந்தும் அவர் தவறான விளக்கம் கொடுத்துள்ளார் என்பதே வேதனையாகும்.
இதற்கு காரணம் "வன்னியர்கள் மிகவும் ஏழ்மையாக இருக்கிறார்கள்", இவர்களைப் போய் "வேளிர்களின் வம்சாவழி" என்று சொல்வதா ? என்ற எண்ணம் மட்டுமே ஆகும். உண்மையில் சொல்லப்போனால் "கல்வெட்டு சான்றுகளே" எங்களை காப்பாற்றியது. அது எங்களை "சகல புவன சக்கரவர்த்திகள்" என்று சொன்னது. வரலாறு மறந்த சமூகம் எவ்வாறு கீழ்ப்படுத்த படும் என்பதற்கு "வன்னியர்களே" மிகச் சிறந்த உதாரணம் ஆவார்கள்.
புறம் பாடலில் மிகத் தெளிவாக "நானோ அந்தணன்", நீயோ வடபால் முனிவன் தடவினுள் தோன்றிய" என்று வேளிர் குல இருங்கோவேள் என்ற மன்னனைப் பற்றி புலவர் கபிலர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
வன்னியர்கள் வேளிர்கள் என்பது மிக மிக தெளிவாக குறிப்பிடப்படுவதால், அதுவும் சோழர்கள் காலத்து கல்வெட்டு சான்றுகள் மூலமாக குறிப்பிடப்படுவதால், புறம் பாடலில் வரும் வேளிர் குல இருங்கோவேள் மற்றும் அவனது முன்னோர்கள் எல்லாம் வன்னியர்களே ஆவார்கள் என்பது மிகவும் உறுதியாகும். எங்களது வரலாற்றுப் புகழினைப் பற்றி எங்களுக்கே மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. எப்படியெல்லாம் எங்களது முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி நினைக்கும்போது எங்களுக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.
ஒருகாலத்தில் பெரும் புகழோடு விளங்கிய எங்களது வன்னிய சமூதாயம் சென்ற 18, 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் மிகவும் கீழ்நிலைக்கு சென்றது என்பது காலத்தின் கோலமாகும்.
----- xx ----- xx ----- xx -----
வேள் என்பதற்கும் வெள் என்பதற்கும் பொருள் முறையே இறை நீர் ஆகும் வேளாளர் என்பதற்கும் வெள்ளாளர் என்பதற்கும் முறையே இறையாண்மை வேளாண்மை என்று பொருள்படும்.இங்குதான் சிலர் சித்துவிளையாடுகின்றனர்.இலக்கியத்தில் வரும் வேளாளன் என்பதை வெள்ளாளன் என்று திரித்து பொருள் கூறி பள்ளிகள் வெள்ளாளர்களிடம் அடிமைகளாக இருந்தவர்கள் என்று கதை கூறுகிறார்கள்.இதுபோன்றே நிறைய எழுத்து வித்தியாசத்தையும் ஒலி வித்தியாசத்தையும் பயன்படுத்தி Tlu Reaserch & studies என்ற Blogல் பள்ளி என்ற சொல்லுக்கு வெவ்வேறு பொருள்கூறி இருட்டடிப்பு செய்துள்ளார்கள்.
ReplyDeleteவேளாளர்கள் சூத்திரர்கள் என்பதை ஏரெழுபது தெளிவாகக் குறிப்பிடுகிறது
DeleteArumai nanba
ReplyDelete