Monday, 17 October 2016

சோழர்கள் காலத்தின் அத்தி மல்லர்கள்

"அத்தி" என்ற காஞ்சிபுரத்தின் மல்லர்கள், "அத்தி மல்லர்கள்" என்று வழங்கப்பட்டனர். அதாவது காஞ்சிபுரத்தின் தலைவர்கள் என்றும் வீரர்கள் என்றும் வழங்கப்பட்டனர். ராஜசிம்ம வர்ம பல்லவன், "மாமல்லன்" என்று வழங்கப்பட்டான்.
மேற்குறிப்பிட்ட கருத்து உண்மைதான் என்பதை "செங்கேணி அத்தி ஆண்டானான விக்கிரம சோழ சம்புவராயனின்" பெயர் மூலம் உறுதியாகிறது. அதாவது "அத்தி" என்ற "காஞ்சிபுரத்தை" ஆண்ட காரணத்தினால் "அத்தி மல்லர்" என்றும் "அத்தி ஆண்டான்" என்றும் வழங்கப்பெற்றனர். பல்லவர்களான வன்னியர்களின் புனித நகரமாக காஞ்சிபுரம் கருதப்படுகிறது.
வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்து மரபினர்களான சம்புவராய மன்னர்கள் "அத்தி மல்லர்கள்" என்று சோழர்கள் காலத்து கல்வெட்டில் குறிப்பிடப்பட்டனர் :-
"செங்கேணி சம்புவராயன் நாலாயிரவன் அத்திமல்லனான இராஜேந்திர சோழ சம்புவராயன் (A.R.E. No. 422 of 1922).
"செங்கேணி வீரசோழன் அத்திமல்லனான குலோத்துங்கசோழச் சம்புவராயன்" (A.R.E. No. 254 of 1919).
"செங்கேணி அம்மையப்பன் அத்திமல்லனான விக்கிரம சோழ சம்புவராயன்" (S.I.I Vol - VII, No. 119).
"அத்தி மல்லன் பல்லவாண்டானான குலோத்துங்க சோழ சம்புவராயன்"
(S.I.I Vol - VIII, No.106).
"செங்கேணி அத்திமல்லன் வீராண்டானான எதிரிலி சோழ சம்புவராயன்" (S.I.I Vol - VIII, No.106).
"அத்திமல்லன் சம்பு குலப் பெருமாளான ராஜகம்பீர
சம்புவராயன் (S.I.I Vol-I, No.74).
எனவே, வன்னியர்களான சம்புவராய மன்னர்கள் "அத்தி மல்லர்கள்" (காஞ்சியின் தலைவர்கள்) ஆவார்கள்.


சித்திரமேழி மெய்க்கீர்த்தி கல்வெட்டு

வரலாறு தெரியாத சிலர் வன்னியர்களை பார்த்து க்ஷத்ரியர்கள் கிடையாது என்றும் தமிழ்நாட்டில் க்ஷத்ரியர்களே கிடையாது என்றும் சொல்கிறார்கள். மேலும் அவர் சொல்வது என்னவென்றால், வன்னியர்கள் "க்ஷத்ரியர்" என்கிற பதத்தை பயன்படுத்தக்கூடாதாம். எனவே அவரது பார்வைக்கு இந்த "ஆவூர் கல்வெட்டை" சமர்ப்பிக்கிறேன்.

"சித்ரமேழி மெய்க்கீர்த்தி (வேளாளர் குலம் பற்றியது) திருவண்ணாமலை, ஆவூர் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் தங்களைப் பூமிதேவியின் புத்திரர்கள் என்றும் சித்ரமேழியைத் (கலப்பை) தெய்வமாக வணங்குபவர்கள் என்றும் பசுக்களை வளர்த்து ஜீவனம் செய்பவர்கள் என்றும் செந்தமிழ், வடகலை (சமஸ்கிருத) நிபுணர்கள் என்றும் தர்மத்தை வளர்க்கின்ற 'நான்காவது வர்ணத்தவர்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளனர் :-
"ஸ்வஸ்திஸ்ரீ மதாம் பூமி புத்ரானாம் ஸ்ரீ மத் கோஷிர ஜீவிநாம் ஸர்வ்வ லோக ஹிதார்த்தாய ஸித்ர மேளஸ்ய ஸாஸநம் ஜெயதா ஜக தர்மே தத் பாலநம் ரா ஸ்ரீ பூஷணம் ஸாஸநம் ஸ்ரீ புத்ராணாம் சதுர் குலோத்பவம் ஸ்ரீ பூமி தேவிக்கு மக்களாகி னிக
ழ் செந்தமிழ் வடகலை தெரிந்து உணர்ந்து நீதி கேட்டு நிபுணராகி நறுமலர் வாடா திருமகள் புதல்வர் எத்திசைக்கும் விளக்காகி யின் சொல்லால் இநிதளித்து வன் சொல்லால் மரங்கடிந்து சதுற் சாகர மண்டலத்துச் சந்திராதித்யவரை இநிதோங்க
வரதராசன் காற்றசைப்ப வருணராசன் நீற்றெளிப்பத் தேவராசன் திசைவிளக்க எத்திசை மகளிரு மினிது வீற்றிருப்பத் தெங்கும் தேமாஞ் சோலையும் வாழையுங் கமுகும் வளர்கொடி முல்லையும் பூவையுங் கிள்ளையும் பொலிவோடுங் கெழுமி வாட்டமின்றிக் கூட்டம் பெருகி யறம்
வளரக் கலிமெலியப் புகழ் பெருக புரை பணியத் திசை யனைத்துஞ் செவிடுபடாமல் செங்கோலே முன்னாகவுஞ் சித்திரமேழியே தெய்வமாகவுஞ் செம்பொற் பசும்பையே வேலியாகவும் க்ஷமை யிலேடுங் கருணை யெய்திச் சமைய தன்ம மினிது நடாத்தி உத்தம நிதியுயர் பெருங்கீர்த்தி முத்தமிழ்
மாலையு முழுதுமுணர்ந்த சித்திரமேழிப் பெரிய நாட்டார்களும் வியாபாரிகளும் வைத்து சகல புவன சக்கரவத்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு 32-ஆவது மேஷ நாயற்று பூர்வ பக்ஷத்து ப்ரதமையும் திங்கள் கிழமையும் பெற்ற திருவாதிரையில் பெண்ணை வடகரை
செங்குன்ற நாட்டு சேதிமண்டலத்து ஆவூரில் உடையார் திருவகத்தீசுர உடைய னாயனார்க்கு பெரிய நாட்டவர்களும் வியாபாரிகளும் நாயனார் வன்னியநார் ஆனா மானாபரணச் சேதியராயர் திருமேனி கலியாண திருமேநியாக இன்னாயனார் திருவகத்தீசுரமுடைய நாயநார் திருவெழுச்சிக்கு"
(A.R.E. No.290 of 1919), (Pallavan Kopperunjingan, 1274 A.D), (ஆவூர் அகத்தீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை மாவட்டம்).
திருவண்ணாமலை ஆவூர் கல்வெட்டில் குறிப்பிடப்படும் "சகல புவன சக்கரவத்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவர்" மற்றும் "வன்னியநார் ஆனா மானாபரணச் சேதியராயர்" ஆகியோர் "வன்னிய குல க்ஷத்ரிய அரசர்கள்" ஆவார்கள். இவர்கள் வெள்ளாளர் உட்பட அனைத்து குடிகளுக்குமான அரசர்கள் ஆவார்கள் என்பது மேற்குறிப்பிட்ட கல்வெட்டால் உண்மையாகிறது.
எனவே வன்னியர்கள், சகல புவனச் சக்கரவர்த்திகளான "க்ஷத்ரியர்கள்" என்பது கல்வெட்டு சான்றின் மூலம் முற்றிலும் உண்மையாகிறது.

----- xx ----- xx ----- xx -----

தமிழ்நாடு காத்த பெருமான்

கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் "தமிழ் நாட்டை காப்பாற்றியவன்" என்றும் "ஒரு தாய் தன்னுடைய குழந்தையை பேணுவதைப் போல செந்தமிழை வாழவைக்க பிறந்தவன்" என்றும் சோழர்கள் காலக் கல்வெட்டில் குறிப்பிட்டவன் "காடவன் கோப்பெருஞ்சிங்கப் பல்லவன்" ஆவான் :-


"தமிழ் நாடு காத்த பெருமான்"
"பேணு செந்தமிழ் வாழப்பிறந்த காடவன்"
இவரைப்போல வேறு எந்த அரசர்களும் இவ்வளவு பெருமையாக தமிழைப் பற்றி கல்வெட்டில் குறிப்பிட்டது கிடையாது. பாண்டியர்களும் தங்களது செப்புப்பட்டயங்களில் தமிழைப் பற்றி பெருமையாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
"சகல புவனச் சக்கரவர்த்திகளான காடவன் கோப்பெருஞ்சிங்க பல்லவனுக்கு", தமிழர்களின் கட்சி" என்று சொல்லப்படும் "நாம் தமிழர் கட்சியினர்" விழா கொண்டாடுவார்களா ?
ஒருபோதும் கொண்டாடமாட்டார்கள். ஏனென்றால் காடவன் கோப்பெருஞ்சிங்க பல்லவன், வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் விழா கொண்டாடமாட்டார்கள்.
பலருக்கு விழா எடுக்கும் "நாம் தமிழர் கட்சியினர்" வன்னிய அரசர்களுக்கு விழா எடுக்கமாட்டார்கள் என்பதே உண்மையாகும்.
இதை நாம் தமிழர் கட்சியில் உள்ள வன்னியர்களும் நன்றாக அறிவார்கள். இதுதான் "தமிழர்" என்று குறிப்பிட்டுக்கொள்ளும் பல கட்சிகளின் நிலையாகும்.
வாழ்க தமிழ்.
----- xx ----- xx ----- xx -----

முதுபெரும் வேளிர்களின் ராஜ்யமான ஸ்ரீமத் வன்னிய கங்க ராஜ்யம்

முதுபெரும் வேளிர் மன்னர்களான கங்கர்களைப் பற்றி முனைவர் திரு. நாகசாமி அவர்கள் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறார்கள் :-
"கங்கர்கள் கொங்கணம் என்னும் கன்னடப் பகுதியை ஆண்டதால் கன்னட அரசர்கள் என்றும் கூறுவர். உண்மையில் கங்கர்கள் தமிழ் முதுகுடி மக்களே. முதுபெரும் வேளிர்களில் ஒருவரே கங்கர் எனச் சங்க இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன. அகநானூற்றில் உள்ள ஒரு பாடல் 'நன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி துன்னரும் கடுந்திறல் கங்கன் கட்டி' (அகம்.44) என்று கங்க அரசனைக் கூறுகிறது. இவன் சோழ மன்னனோடு பொருது தோற்றுப் போயிருக்கிறான். கொங்காணம் என்ற பகுதியின் தலைவன் நன்னன் என்றும், அவன் தமிழ்க்குடிமகன் என்றும் சங்க இலக்கியங்களிலிருந்து அறிகிறோம். கங்கர் குடியினர் சங்க காலத்திற்குப்பிறகு கொங்காணத்தைத் தமதாக்கிக்கொண்டு, படிப்படியாகப் பெங்களூர், தலைக்காடு, கோலார் பகுதிகளைப் பிடித்து, ஒரு பேரரசை நிறுவினார்கள். இருப்பினும் தமிழகத்துடனேயே சிறந்த தொடர்பு கொண்டிருந்தனர். இவர்களில் சில அரசர்களுக்குப் பல்லவ அரசர்கள் முடிசூட்டியுள்ளார்கள்."








இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த கங்கர்களைப் பற்றிய பல கல்வெட்டுகள் கர்நாடக பகுதிகளில் காணக் கிடைக்கின்றன. கோலார் மாவட்டம் சிட்லகட்டா தாலுக்காவில் உள்ள கி.பி. 1278 ஆம் ஆண்டின் தமிழ் கல்வெட்டு ஒன்று கங்கர்களை "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்று குறிப்பிடுகிறது (Epigraphia Carnatica, Vol - X, No. 110). மேலும் அதே கோலார் பகுதியில் உள்ள கி.பி. 1273 ஆம் ஆண்டின் தமிழ் கல்வெட்டு ஒன்று கங்கர்களின் பகுதியை "வன்னியகட்டம்" என்று குறிப்பிடுகிறது (Epigraphia Carnatica, Vol - X, No. 242).
கி.பி. 10 ஆம் நூற்றாண்டின் கன்னட கல்வெட்டு ஒன்று (Epigraphia Carnatica, Vol - V, No. 24, Arkalgud Taluk) கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது :-
".............Svasti Nitimargga Kongunivarmma dharmma-maharajadhiraja Kolala-pura-paramesvara Nandagiri-natha srimat-Nanniya-Ganga rajyam"
"...........ஸ்வஸ்திஸ்ரீ நீதிமார்க்க கொங்கணி வர்ம தர்ம மஹாராஜாதிராஜ கோலாலபுர பரமேஸ்வர நந்தகிரி நாத ஸ்ரீமத் நன்னிய கங்க ராஜ்யம்"
என்று குறிப்பிடுகிறது. "ஸ்ரீமத் நன்னிய கங்க ராஜ்யம்" என்பது "ஸ்ரீமத் வன்னிய கங்க ராஜ்யம்" என்பதாகும். கன்னட மொழியில் "வன்னிய" என்பது "நன்னிய" என்று பயின்று வந்துள்ளது.
கங்கர்களின் கிளைமரபினர்களான "பங்களநாட்டு கங்கரையர்களும்" மற்றும் "நீலகங்கரையர்களும்" தங்களை ஆவணங்களில் "வன்னிய மாதேவன்" என்றும் "வன்னிய நாயன்" என்றும் "பள்ளி" என்றும் "சம்பு குல வேந்தன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே, முதுபெரும் வேளிர் மரபினர்களான கங்கர்கள் என்பவர்கள் "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தவர்கள்" என்பது சான்றுகளின் மூலம் உறுதியாகிறது.
மேலும், சங்க கால வேளிர் குடி அரசரான "செங்கண்மாத்துவேள் நன்னன் சேய் நன்னன்" அவர்களும் கங்கர் வழி வந்த வன்னிய குல க்ஷத்ரிய அரசர் ஆவார்கள். இன்றைய திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள "செங்கம்" பகுதியை தனது தலைநகராக கொண்டு சங்க காலத்தில் நன்னன் அவர்கள் அரசாட்சி செய்தார்கள். சங்க கால இலக்கியமான "மலைபடுகடாம்" என்பது இவர் மேல் பாடப்பட்ட நூலாகும்.
----- xx ----- xx ----- xx -----
வன்னியர் குல க்ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்த உடையார் பாளையம் அரசர்களும், கடலங்குடி உடையார் அரசர்களும் தங்களை "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்றே ஆவணங்களில் குறிப்பிடுகிறார்கள். உடையார் பாளையம் அரசர்கள் தங்களை "கங்கநூஜா வம்சத்தை சேர்ந்த பார்கவ கோத்திரத்தார்கள் என்றும் நெருப்பு கடவுள் சந்ததியில் உதித்த வன்னிய குலத்தவர்கள்" என்று தங்களது வம்சாவழி பட்டியலில் குறிப்பிட்டுள்ளார்கள். (The Udaiyar Palayam Chieftains refer them as Bargava Gotram in Ganganooja Family that took its origin from Vanniya Kulam (the family of the God of Fire).
----- xx ----- xx ----- xx -----

ஹோய்சால யாதவ குல வன்னி புத்திரர்

ஹோய்சால அரசர்கள் "பண்டைய வேளிர் மரபினர்கள்" ஆவார்கள். இவர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள "துவாரா சமுத்திரத்தை" தங்களது தலைநகராக கொண்டு ஆண்டுவந்தார்கள். திருவண்ணாமலை இவர்களது இரண்டாம் தலைநகராகும். சாளுக்கியர்கள் மற்றும் ராஷ்டிரகூடர்களின் உறவினர்களான இவர்கள் பல கலைமிகு கோயில்களையும் காட்டியுள்ளார்கள். இவர்கள் தங்களை "சந்திர குலத்து யது வம்சத்து யாதவர்கள்" என்று குறிப்பிடுகிறார்கள்.













கர்நாடக மாநிலம் பேலூர் கல்வெட்டு ஒன்று (Epigraphia Carnatica, Vol - V, No. 15) ஹோய்சால மன்னர்களை :-
"யாதவ குல வன்னி புத்திரர்" (Yadava-kuladolu Hempan e-vannipudo) என்று குறிப்பிடுகிறது.
இதைப்போலவே, ஹோய்சால அரசர் வீரராமநாத தேவரின் (கி.பி. 1291), கர்நாடக கோலார் மாவட்ட தமிழ் கல்வெட்டு ஒன்று (Epigraphia Carnatica, Vol - X, No. 28) கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது :-
"உலகுய்யவந்த பெருமாளுக்கு முன்நாள் வன்னியர் காலம் தொடங்கி இந் நாயனாருக்கு இவ் ஊரில்"
என்று குறிப்பிடுகிறது. ஹொய்சளர்களின் குல கடவுளான சென்னகேசவ பெருமாளுக்கு வன்னியர் காலம்முதல் பலவிதமான கொடைகள் வழங்கப்பட்டது என்பதையும், அழகியாளன் என்பவனும், அரசர் வெற்றியடைய வேண்டி தானம் கொடுத்துள்ளான் என்பதையும் மேற்குறிப்பிட்ட கல்வெட்டு தெரிவிக்கிறது. இது "கர்நாடக மாநிலத்தில் ஹோய்சால வன்னிய அரசர்கள் ஆட்சி செய்ததைப்" பற்றி மிகத்தெளிவாக குறிப்பிடுகிறது.
ஹோய்சால அரசர் வீரராமநாத தேவர் அவர்கள், திருவண்ணாமலையை ஆட்சிசெய்த ஹோய்சால அரசர் மூன்றாம் வீர வல்லாள தேவருக்கு "சித்தப்பா" ஆவார்கள்.
கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் அருணாச்சலபுராணம், ஹோய்சால மூன்றாம் வீரவல்லாள தேவரை "வன்னி குலத்தினில் வரு மன்னா" என்றும் "அனல் குலத்தோன்" என்றும் குறிப்பிடுகிறது.
ஹோய்சால அரசர் மூன்றாம் வீரவல்லாள தேவர் அவர்கள், "வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தைச்" சேர்ந்த மன்னர் என்பதால் தான் அவருக்கு ஆண்டுதோறும் திருவண்ணாமலையில் வன்னியர்களால் விழா கொண்டாடப்படுகிறது.
இதைப்பற்றி "கூடல் இருவாட்சி புலவர்" என்பவர், அரியலூர் மழவராய அரசர்களின் மேல் பாடிய "திருக்கைவளம்" என்ற இலக்கியத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள். திருக்கைவளம் என்னும் நூல் வன்னியர்களின் புகழினைப் பற்றி பாடும் நூலாகும்.
இத்தகைய அடிப்படை சான்றுகளின் மூலம் "ஹோய்சால அரசர்கள் வன்னிய குலத்தவர்கள்" என்று மிகத் மிகத் தெளிவாக தெரியவருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் நானும், அருமை நண்பர் திரு. அண்ணல் கண்டர் அவர்களும், மதிப்பிற்குரிய அண்ணன் திரு. சோழன் குமார் வாண்டையார் அவர்களும், ஹோய்சால மூன்றாம் வீர வல்லாள தேவரின் விழாவிற்கு சென்றிருந்தோம்.
எம்பெருமான் அண்ணாமலையார் அவர்கள் ஹோய்சால வீர வல்லாள தேவருக்கு மகன் என்ற காரணத்தினால் அவருக்கு (உற்சவமூர்த்திக்கு) முடிச்சூட்டு விழாவின் போது "ராஜ அலங்காரம்" செய்யப்படுகிறது. வன்னியர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ளவேண்டும். அப்போது அண்ணாமலையார் அவர்களுக்கு செங்கோல் கொடுக்கப்படுகிறது. முடிச்சூட்டும் சமயத்தில் "கோயில் பிராமணர்கள்" அண்ணாமலையார் அவர்களைப் பார்த்து கீழ் கண்ட வாசகத்தை சொல்கிறார்கள் :-
"க்ஷத்ரிய சமூகத்தார் எல்லோரும் உங்களுடைய முடிச்சூட்டு விழாவுக்கு வந்திருக்கிறார்கள்"
என்று சொல்கிறார்கள். அண்ணாமலையாரின் தந்தை வீர வல்லாளன் என்ற காரணத்தினால் (அருணாச்சலபுராணம்) தந்தை இறந்தவுடன், அண்ணாமலையாருக்கு திருமுடிச்சூட்டப்படுகிறது. அதாவது திருவண்ணாமலைக்கு ராஜாவாக திருமுடிச்சூட்டப்படுகிறது. முடிச்சூட்டுக்கு முன்னாள் அண்ணாமலையார் அவர்கள் தன்னுடைய தந்தைக்கு "கௌதம நதிக்கரையில் திதி கொடுக்க கோயிலில் இருந்து மேளதாளத்துடன் செல்கிறார்கள். இது பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. அண்ணாமலையார் கௌதம நதிக்கரைக்கு வந்தவுடன், வேட்டு வெடிக்கப்பெற்று அவருடைய வருகையைப் பற்றி "சம்மந்தனூர் வன்னிய கவுண்டர் மக்களுக்கு" தெரிவிக்கிறார்கள்.
அதன்பிறகு அண்ணாமலையாருக்கு சம்மந்தம் கட்ட (16 வது நாள்) "சம்மந்தனூர் வன்னிய குல க்ஷத்ரியர்கள்" மேளதாளத்துடனும் சீர்வரிசையுடனும் வந்து சிறப்பிக்கிறார்கள். தீர்த்தவாரி நடைபெறுகிறது. சம்மந்தனூர் வன்னிய மக்கள் கொடுத்த புத்தாடையை அண்ணாமலையார் உடுத்திக்கொண்டு கோயிலுக்கு புறப்படுகிறார்கள். திருவண்ணாமலை கோயில் பிராமணர்களும், வல்லாள மகாராஜா மடாலயத்தாரும் இதை நடத்துகிறார்கள். வன்னியர்களுக்கு கோயில் சார்பில் விருந்து கொடுக்கப்படுகிறது.
இது ஏதோ இன்று நடைபெறுவதல்ல, சுமார் 700 ஆண்டுகளாக நடைபெறுகிறது. ஹோய்சால வீர வன்னிய வல்லாள மகாராஜா அவர்கள் திருவண்ணாமலை கோயிலுக்கு செய்த பல நன்மையினால் அவருக்கும் அவருடைய "வன்னிய சமூகத்தாருக்கும்" இத்தகைய மாபெரும் சிறப்புக்களை பிராமணர்கள் செய்கிறார்கள். இந்து சாம்ராஜ்ஜியம் காப்பதற்காக ஹோய்சால வீர வன்னிய வல்லாள மகாராஜா அவர்கள் தன்னுடைய இன்னுயிரை தந்துள்ளார்கள். முஸ்லிம்கள் இவரது தோலை உரித்து மதுரையில் தொங்கவிட்டார்கள்.
உலகிலேயே அண்ணாமலையாருக்கு சம்மந்தம் கட்டும் சமூகம் நமது ஹோய்சால வன்னிய குல க்ஷத்ரிய சமூகம் தான் என்பது நமக்கெல்லாம் மிகப்பெரும் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.
நம்முடைய அரசியல் தலைவர்கள் இத்தகைய விழாக்களில் கலந்துகொண்டால் இந்த விழாவானது உலகளவில் பேசப்படும். அது நமக்கு நன்மையை கொடுக்கும்.
வாழ்க ஹோய்சால வீர வன்னிய குல மன்னர்களின் புகழ்.
----- xx ----- xx ----- xx -----

பல்லவ மாமறைத் தோன்றிய வன்னி வேந்தன்

திருச்சி திருவெள்ளறை கல்வெட்டு (S.I.I Vol XII, No. 48), பல்லவ மகாராஜா நந்திவர்மனை "பரத்வாஜ கோத்திரம் பிரம்ம க்ஷத்ரிய குலோத்பவம்" என்று குறிப்பிடுகிறது. அதாவது பல்லவ அரசர்களை "க்ஷத்ரிய குலோத்பவம்" (க்ஷத்ரிய குலத்தவர்கள்) என்று குறிப்பிடுகிறது.




மேலும் அக் கல்வெட்டு ".....ல்லவ மாமறைத் தொன்றி வனி வெந்தன்" என்று குறிப்பிடுகிறது. இதற்கு சரியான விளக்கம் என்பது "பல்லவ மாமறைத் தோன்றிய வன்னி வேந்தன்" என்பதாகும். இதன் மூலம் பல்லவ அரசர்கள் "வன்னியர்கள்" என்பதும் "பிரம்ம க்ஷத்ரியர்கள்" என்பதும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது.
மேலும் அக் கல்வெட்டு பல்லவர்களின் உறவினர்களாக கீழ்கண்ட அரசர்களைப் பற்றி தெரிவிப்பதை குறிப்பால் உணரமுடிகிறது :-
"மாற்பிடுகிளங்கொவெளான் சாத்தன் செ. . . . . . தன் மாமன் பரசிராமன் திருமருமான் பெரு . . . . . . செல்லிக்கொமான் மல்லவாந் தொண்மறவ"
{மாற்பிடுகு இளங்கோ வேளான் சாத்தன் தன் மாமன் பரசுராமன் திருமருமகன் கொல்லிக் கோமான் மழவன் தொண் மறவன்}
கொடும்பாளூர் இருக்குவேளிர் "மாற்பிடுகு இளங்கோ வேளான் சாத்தனுடைய" மாமன் பரசுராமன் என்றும், பரசுராமனுடைய மருமகன் "கொல்லிக் கோமான் மழவன் தொண் மறவன்" என்றும் குறிப்பிடுகிறது.
இதன்மூலம் தெரியவருவது என்னவென்றால், கொடும்பாளூர் இருக்குவேளிர்களும், கொல்லி மழவர்களும் உறவினர்கள் என்பதாகும். கொல்லி மழவர்கள் தங்களை "தொண் மறவன்" என்று அழைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதாவது வீரன் என்று.
கேரள அரசர்களான பழுவேட்டரையர்களும் தங்களை "கண்டன் மறவன்" என்று அழைத்துக்கொண்டனர். பழுவேட்டரையர்களின் உறவினர்களாக கொல்லி மழவர்கள் இருந்துள்ளனர் என்பதை சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. பழுவேட்டரையன் மறவன் கண்டனின் மாமன் என்று "மழவர் கொங்கணி சென்னி நம்பியார்" என்பாரைக் கிழப்பழுவூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது :-
"பழுவேட்டரையர் மறவன் கண்டநார்
மாமடிகள் மழவர் கொங்கணி
செந்நி நம்பியார் வைத்த விளக்கு ஒன்று" (S.I.I. Vol-XIX, No.237)
----- xx ----- xx ----- xx -----

யதுகுல யாதவ வம்சத்தினரான ஸ்ரீ கண்டீரவ மைசூர் உடையார்களும் வன்னி மரமும்

ஹொய்சால நாடான "மைசூரில்" இன்று இருக்கும் யதுகுல "மைசூர் உடையார்கள்" என்பவர்கள் ஹொய்சாளர்களின் சமூகத்தவர்களே ஆவார்கள். இவர்கள் தங்களை "யாதவர்கள்" என்று குறிப்பிடுகிறார்கள். எனவே இவர்கள் "பண்டைய வேளிர் வம்சத்தவர்கள்" ஆவார்கள்.
இவர்களின் சின்னமும் "கண்ட பேரண்டமாகும்". அது இன்று "கர்நாடக அரசின் சின்னமாக" விளங்கிவருகிறது. மைசூர் உடையார்கள் தங்களை "ஸ்ரீ கண்டிரவன்" என்றும் குறிப்பிடுகிறார்கள். இப் பெயரானது வேளிர் குல அரசன் "கண்டீரக் கோப்பெருநள்ளியின்" பெயரை நமக்கு நினைவுப்படுத்துகிறது.






வேளிர் குல மைசூர் உடையார்கள் தாங்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் "தசரா விழாவில்", தங்களது வம்சத்து மரமான "வன்னி மரத்திற்கு" மிகச் சிறப்பான பூஜைகளையும் வழிபாடுகளையும் செய்கிறார்கள்.
வேளிர் குல மைசூர் உடையார்களின் வன்னி மரம் பூஜை என்பது "தசரா விழா" துவங்குவதற்கு முன்னர் நடைபெறுகிறது. வன்னி மரம் அமைந்திருக்கும் பகுதி என்பது "வன்னி மண்டபம்" என்று அழைக்கப்படுகிறது. அந்த இடத்தின் சாலைப் பெயர் கூட "வன்னி மண்டபம் சாலை" (Banni Mandapam Road) என்று அழைக்கப்படுகிறது.
இந்த "வன்னி மண்டபம்" என்பது "மைசூர் அரண்மனையில்" இருந்து 04 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த "வன்னி மண்டபம்" மைசூர் உடையார்களின் சொத்தாகும். இதை மிகச் சிறப்பாக அவர்கள் பராமரித்து வருகிறார்கள்.
வேளிர் குல மைசூர் உடையார்கள் என்பவர்கள் "வன்னிய குல க்ஷத்ரிய" சமூகத்தவர்கள் ஆவார்கள். வன்னிய குல ஹொய்சாளர்களின் வம்சத்தினர்கள் தான் "மைசூர் உடையார்கள்" ஆவார்கள்.
தசரா விழா என்பது "க்ஷத்ரியர்கள்" கொண்டாடும் மிகச் சிறப்பான விழாவாகும். வன்னியர்கள் "விஜயதசமி" நாளன்று "அம்பு குத்தி விழா" கொண்டாடிவருகிறார்கள். சங்க காலத்தில் இவ் விழாவானது, வேளிர் குல மழவர்களான வன்னியர்கள் கொண்டாடிய "பூந்தொடை விழாவாகும்".
அதேபோல வேளிர் குல "வன்னியர்களும்", "சுருதிமான் மூப்பனார்களும்" மற்றும் "நத்தமான் உடையார்களும்", தமிழகத்தின் க்ஷத்ரியர்களாக ஒன்றினையும் காலமும் நிச்சயமாக வரும்.
----- xx ----- xx ----- xx -----
நன்றி : கர்நாடக மாநில வன்னிய குல க்ஷத்ரிய சங்கத்தை சேர்ந்த நமது வன்னிய சமூகத்து உறவினர் திரு. வெங்கடேசன் (என்கிற) அரசு அவர்கள், கங்கர்கள் வன்னியர்கள் என்பதை படித்து மிகவும் பாராட்டினார்கள். இன்றும் "Banni Gatta" பகுதியில் வன்னியர்களே பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் தெரிவித்தார்கள். மேலும் கங்கர்களுக்கு "பெருமாள்" என்ற பெயர் வழங்கப்பட்டது என்றும் அவர்கள் பண்டைய தமிழர்களே என்றும் சொன்னார்கள். மேலும் மைசூர் உடையார்களின் வன்னி மரம் பூஜையைப் பற்றியும் சொன்னார்கள்.
----- xx ----- xx ----- xx -----